பாகற்காய் குழம்பு

தேதி: November 2, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (6 votes)

 

பாகற்காய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
வெல்லம் - 6 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

பாகற்காய், வெங்காயம், தக்காளி அனைத்தையும் நறுக்கி வைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதில் நறுக்கின வெங்காயம், பாகற்காய், தக்காளி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், சாம்பார் பொடி சேர்த்து லேசாக பிரட்டவும். இதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
கடைசியாக வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கசக்கிற பாவக்காயை அழகான பூவை அடுக்கி வைச்ச பொக்கே மாதிரி ப்ரசண்ட் பண்ணியிருக்கீங்க, பாக்கவே சூப்பரா இருக்கு;-)

Don't Worry Be Happy.

வனிதா,

பாகற்காய் குழம்பு,ரெசிப்பி வித்தியாசமா இருக்கு.

என்னவருக்கு பாகற்காய் சம்பந்தமான உணவு கிழமையில் ஒரு முறை என்றாலும் சமைத்தே ஆகவேண்டி யுள்ளது. ஏனென்றால் அவர் ஒரு "சுகர் பேசன்ட்".எப்படி செய்தாலும் விரும்பி சாப்பிடுவார்.

வெல்லம் சேர்க்காமல் சமைக்க முடியாதா???? சேர்க்காமல் சமைத்தால் கசப்புத் தன்மை தெரியுமா?

கண்டிப்பா செய்துட்டு பதிவு போடுறேன்.நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வனிதா, பாகற்காய் குழம்பு அநியாயத்துக்கு அழகா இருக்கு பா. பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு. பார்த்து ரசிச்சுட்டு பிறகு செய்து பார்த்துட்டு சொல்றேன் பா. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா மேடம்,

பாகற்காய் குழம்பு அழகா இருக்கு கண்டிப்பாக ஒரு நாள் செய்து பார்கிறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பாவக்காய்க்குழம்பு பாக்கவே நல்லா இருக்கு. புளி தேவை இல்லையா.
பாவக்கான்னா கசப்புத்தான் அதோடகுணம். எப்படிப்பண்ணினாலும் லேசாக
லேசான கசப்புச்சுவை இருக்கத்தானே செய்யும்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு மிக்க நன்றி :)

ஜெயலக்ஷ்மி... மிக்க நன்றி. படிச்சதும் அப்படியே பொக்கே கொடுத்த மாதிரி இருக்கு ;)

யோகராணி... மிக்க நன்றி. அவசியம் செய்து கொடுங்க. வெல்லம் சேர்க்காம செய்யலாம் கசப்பு பிடிக்கும் என்றால். வெல்லம் சுகருக்கு அத்தனை தீமை இல்லை என்றே நினைக்கிறேன்.

கல்பனா... பார்த்து ரசிச்சுட்டு மெதுவா செய்துட்டு சொல்லுங்க ;) மிக்க நன்றி.

கவிதா... அவசியம் சொல்லுங்க. மிக்க நன்றி :)

கோமு... மிக்க நன்றி. புளி தேவை இல்லை. கசப்பும் சுவை தானே... அதோட இனிப்பும் சேர்ந்தா இன்னும் சுவை தான். செய்து பாருங்க கண்டிப்பா பிடிக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Nice

மிக்க நன்றி. உங்க பேரில் எனக்கு ஒரு தோழி இருந்தார். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா