சில பயனுள்ள தகவல்கள்!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது."

இங்கே www.textbooksonline.tn.nic.in சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Excellent Yogarani.

வணக்கம் நண்பர்களே..

ஆண்டு விழா பெயர்கள்

வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா என்றெல்லாம் விழாவிற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
25 ஆண்டு - வெள்ளி விழா
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயமாக வைக்க உத்தரவு

சென்னை: "தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் கோவையில் நடந்த பள்ளி மாணவர்கள் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த அவசர அறிக்கை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வி துறை இயக்குனர் பெருமாள் சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள், பெற்றோர், ஆசிரியர், பள்ளி வேன் டிரைவருடன் உடனடியாக கூட்டம் நடத்த வேண்டும். வேன் டிரைவர்களுக்கு பள்ளி நிர்வாகம் அடையாள அட்டை வழங்குவதுடன், மாணவர்களை அழைத்து வரும் டிரைவர்கள் குறித்த முழு விவரங்களையும் வைத்திருக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் அன்னிய நபர்களை அனுமதிக்கக் கூடாது. சந்தேகப்படும்படியான நபர்களை கண்டால், போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி நுழைவாயில் மற்றும் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அதேபோல், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் 02.11.2010

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

யோகாக்கா,
எப்படி இருக்கீங்க?எல்லாருக்கும் பயன்படற மாதிரியான தகவல்கள்,செய்திகள் கொடுத்திருக்கீங்க,கொடுத்திட்டே இருக்கீங்க.உங்களை எப்படி பாராட்டறதுனு யோசிச்சிட்டே இருக்கேன்....தீபாவளி எப்படி இருந்தது?உங்களுக்கு விஷ் பண்ணியிருந்தேன் நீங்க கவனிக்கலை போலிருக்கு.

அன்புடன்
நித்திலா

நித்திலா, உங்கள் அன்புக்கும், பாராட்டுக்கும் நன்றி.

ஏதோ என்னால முடிந்தது.

மற்ற நண்பர்களூம் இது போல பயனுள்ள திரிகளை இட்டால் நலம்.

பயனுள்ள தகவல்கள் ஒருங்கே தருவது நன்று.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நடிகர் கமல்ஹாசன் 56-வது பிறந்த நாள் விழா கருணாநிதி வாழ்த்து

சென்னை, நவ.8-

நடிகர் கமல்ஹாசன் 56-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வாழ்த்து கூறினார்.

பிறந்த நாள்

`உலக நாயகன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கமல்ஹாசன், 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி பிறந்தார். `களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் தனது 4-வது வயதில் திரை உலகிற்கு அறிமுகமானார். இதுவரை அவர், 214 படங்களில் நடித்து இருக்கிறார்.

பிறந்தநாளையொட்டி, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தொலைக்காட்சி நிலையம் அருகில் உள்ள அண்ணா கலையரங்கில் நடந்தது. இயக்கத்தின் கோவை மாவட்டப்பொறுப்பாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

20 ஏழைப்பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்ற 2 பேருக்கு 3 சக்கர சைக்கிள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்துக்கு 50 போர்வைகள், ஏழைப்பெண்களுக்கு கிரைண்டர், மிக்ஸிகள், ஏழை, மாணவ-மாணவிகள் 250 பேருக்கு நோட்டு, புத்தகம், சலவைத்தொழிலாளர் 5 பேருக்கு இஸ்திரி பெட்டி ஆகியவைகளை கமல்ஹாசன் வழங்கினார்.

தினத்தந்தி 08.11.2010

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கண்களை பாதுகாக்க

தொடர்ந்து கணினியில் வேலை செய்பவர்களுக்கும், அதிகமான நேரத்தை படிப்பதில் செலவிடும் நபர்களுக்கும் தூரப் பார்வை பறிபோகும் ஆபத்து ஏற்படும்.

அவ்வாறு பிரச்சினை எழாமல் இருக்க கணினில் வேலை செய்யும் போதும், படிக்கும் போதும் அரை மணி நேரம் இடைவெளியில் தூரமாக இருக்கின்ற பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தி, 30 நொடிகள் ஓய்வு கொடுக்க வேண்டும்.

வாகனத்தில் செல்லும் போது நம் கண்கள் மீது நேரடியாக வேகமாக அடிக்கும் காற்று படுவதைத் தவிர்ப்பது நல்லது. இது கண் இமைகளில் உள்ள நீர்த் திசுக்களை பாதிக்கும்.

மங்கலான இடத்தில் அதிக நேரம் படிப்பதைத் தவிர்க்கவும்.

ஏ.சி, வெண்டிலேட்டர் போன்றவற்றை முகத்துக்கு நேராக வைப்பதைத் தவிர்க்கவும். இவை கண்களுக்கு மிகவும் கெடுதலாகும்.

பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம், காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.

அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு உள்ள மருத்துவக் குணங்களைப் இப்போது பார்ப்போம். பயனடைவோம். முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும்.

நன்றி: வெப்துனியா

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

உங்களின் இந்த பகுதியை இப்பொழுதான் பார்த்தேன், இனி ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக பார்பேன், எதிர்பார்பேன். இந்த தகவல்களை தரும் உங்களுக்கு பாராட்டுக்கள் சொல்வதைவிட நன்றி சொன்னால் பொருத்தமாக இருக்கும். நன்றி நன்றி நன்றி

இதுவும் கடந்து போகும்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் காய்கறி வெங்காயம்.

இந்திய மொழிகளிலே மிகவும் பழமையானது தமிழ் மொழி.

ஒவ்வரு ஆண்டும் சுமார் 5 கிலோ உப்பை ஒரு மனிதன் உணவின்மூலமாக உட்கொள்கிறான்.

சுத்தமான தேனையும் நெய்யையும் செர்த்தால் கடும் விஷம் உண்டாகும்.

உலகில் அம்மாவின் பெயரில் முதல் எழுத்தை இன்சியலாகப் பயன்படுத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டவர்தான்.

சிற்ப்பிக்குள் புகுந்து கொள்ளும் மணல் துகள்களே நாளடைவில் முத்துக்களாகின்றன
__________________

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கோவை: கோவையில் இரு குழந்தைகளை கடத்தி கொலை செய்த மோகன்ராஜ்(25) என்கவுன்டரில் நேற்று கொலை செய்யப்பட்டார்.

புது தில்லி, நவ.9: இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டார்.

சென்னை, நவ.9: தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்தார்.

எந்த பள்ளியாவது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால் பார்வையாளராக இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

தினகரன் 10.11.2010

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்