சில பயனுள்ள தகவல்கள்!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது."

இங்கே www.textbooksonline.tn.nic.in சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

யோகா தேன் சுத்தமான தேன் எங்கு கிடைக்கும் (அ)டாபர் ஹனி யூஸ் பன்னலாமா, எனக்கு வயிறு,கால் கெண்டக சதை (இடுப்புக்கு கீழ்) ரொம்ப சதை உள்ளதுஅதற்க்கு தேன் யூஸ் பன்னலாமா?

வாழு இல்லை வாழவிடு

சுமி, இந்தியாவில் சுத்தமான தேன் எங்கு கிடைக்கும் என தெரியல்லையே.

மற்றும் உங்கள் ^_^ குறைப்பதற்கு உமாவின் ஆலோசனையில் போய் கேட்டு பயன்பெறுங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சிறு துணுக்குகள்

இவைகளையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்

மெல்லிய இசை கடுமையான வேலையைக் கூட எளிமையாக மனத்திருப்தியுடன் செய்து முடிக்க உதவும். பேரிரைச்சல் மன அமைதியை இழக்கச் செய்யும் என்கிறது நியூயார்க் நகரில் மேற்கொண்ட ஆராய்ச்சி. இரைச்சல் கேட்போரின் மூச்சுக்குழாயிலும் ஆபத்தை விளைவிக்கக் கூடுமாம். இனிய இசையே உற்பத்தித் திறனுக்கு வித்திடும்.

குயில் ஒரு புத்திசாலியான பறவை. அது தனக்காக ஒரு கூட்டை கட்டிக் கொள்வதில்லை. அதனால் முட்டையிடும் காலங்களில் தனது முட்டைகளை வேறு பறவைகளின் கூடுகளில் போட்டுவிடும். கூட்டின் சொந்தக்காரப் பறவை தனக்கே தெரியாமல் குயிலின் முட்டையையும் அடைகாக்கும். குஞ்சு பொறித்தவுடன் குஞ்சாக இருக்கும் குயில் இன்னும் பொறிக்காமல் இருக்கும் மற்ற முட்டைகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிவிடும். ஆனாலும் கூட்டின் சொந்தக்காரப் பறவையானது குயில் குஞ்சினையும் தமது குஞ்சாகவே பாவிக்கும்

நகம் நாள் ஒன்றுக்கு 0.1மில்லி மீட்டர் வளரும். நகத்திற்கு உணர்ச்சி கிடையாது. ஏனெனில் உணர்வு நரம்புகள் இல்லை. ஆனால் புதிய செல்கள் உற்பத்தியாகும்.

சாதாரணமாக அமிலத்தில் வைரங்கள் கரையாது. அதிக சூடுபடுத்தினால் மட்டுமே கரையும்.

ஆக்டோபசி என்ற மீன் இனத்தைப் போன்று ராட்சச கைகளைக் கொண்ட கலாமர் என்ற கடல் மீன் வகை பிரான்ஸ் நாட்டு மர்சேய் என்ற ஆழ்கடல் பகுதியில் அதிகம் கிடைக்கிறது. ஐரோப்பிய மக்கள் விரும்பி உண்ணும் இந்தப் பெரிய மீன் அவ்வளவு எளிதில் வலைகளில் சிக்காது. சமீபத்தில் பிடிக்கப்பட்ட இந்த மீன் ஒன்றின் நீளம் மட்டும் மூன்று மீட்டர்.

பீகார் மாநிலத்தை முன்பு மரக நாடு என்று அழைத்தார்கள்.

பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய முதல் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்தான். கதையின் பெயர் டேவிட் காப்பர் ஃபீல்டு.

சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்தம். இதனைத் தொகுத்தவர் அர்ஜன் தேவ் என்பவர். இவர் ஐந்தாவது குரு.

விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல் நாடு இந்தியா. 1929ம் ஆண்டு இதற்கென ஒரு செட் சிறப்பு தபால் தலைகளை இந்தியா வெளியிட்டது.

அமெரிக்காவில் உள்ள கூர்லி இயந்திர நிறுவனத்தினர் 1907ம் ஆண்டு துணி துவைக்கும் இயந்திரத்தினைக்(வாஷிங் மெசின்) கண்டு பிடித்தனர்.

பயணிகள் ரயில் போக்குவரத்து முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு தொடங்கப் பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ், அலெக்சாண்டர், ரிமன் கியோர் 1850ம் ஆண்டு குளிர்சாதனப் பெட்டியைக்( ப்ரிட்ஜ்) கண்டு பிடித்தனர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த மார்கோனி என்பவர் 1895ம் ஆண்டு வானொலிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெயர்டு என்பவர் 1926ம் ஆண்டு தொலைக் காட்சிப் பெட்டியைக் கண்டுபிடித்தார்.

மிக்க நன்றிகள்-ilakkijan

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அன்பு உறவுகளே,
இப்பொழுது எங்கு பார்த்தாலும்
எங்கு கேட்டாலும் டையட் அல்லது
உணவு கட்டுபாடு எதுக்கென்றால்
உடல் ஆரோக்கியத்திற்கு பதில்

இது ஒரு ஸ்டைலா இல்லை உண்மையா

இதோ உங்களுக்கு இந்த சுட்டி

http://www.halls.md/body-mass-index/bmi.htm

உயரத்திற்கு ஏற்ற பருமனா
சோதித்து பாருங்கள்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சென்னை மாநகராட்ச்சி ஆண்லைனில் சான்று பெறுவதை கண்டோம். பிறப்பு மற்றும் இற்ப்பு எங்கு நிகழ்ந்ததோ அந்த பகுதியை சார்ந்த மாநகராட்ச்சியில்- நகராட்ச்சியில்-பேரூராட்சியில்-ஊராட்ச்சியில் தான் பதிவுசெய்யப்படும். அங்குதான் நீங்கள் சான்றிதழ்கள் பெற இயலும். அதுவும்கூட பதிவேடுகள் முதல் இரண்டு வருடங்கள் பிறப்பு இறப்பு பதிவாளரிடமும் அதன்பின் அப்பதிவேடுகள் ஊராட்ச்சி என்றால் வட்டாச்சியரிடமும் பேரூராட்ச்சி செயலலுவலிரிடமும் நகராட்ச்சி மாநகராட்ச்சி ஆணையிரிடமும் இருக்கும் உரிய கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்

யோகராணி அவர்களே நலமா...?
மிகவும் அவசியமிக்க அதிக தகல்களை இந்த பக்கத்தில் கொடுத்து கொண்டிருக்கின்றீர்கள்.எல்லாமே மிகவும் பயனுள்ளதாகும்.நான் எப்படி இத்தனை நாள் இந்த பக்கத்தை பார்க்காமல் விட்டேன் என்று தெரிய வில்லை.

ஆனாலும் லேட்டாக பார்த்தாலும் காலத்தால் அழியாத தகவல்களை அல்லவா தந்திருக்கின்றீர்கள்.எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தேனின் சிறப்பம்சங்கள்.தேன் மிகவும் உடம்பிற்க்கு நல்லது என்பதை அறிவோம்.ஆனாலும் இவ்வளவு நன்மைகள் உண்டு என்பதை திட்டவட்டமாக நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.இதை அறிவித்த உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.(வாயால் தான் என்கிறீர்களா....)

chennai text book online என்ற பகுதியை பத்து நாட்கள் முன்புதான் ஒரு தோழியின் உதவியோடு கண்டுபிடித்து பார்த்தேன். மிகவும் பயனுள்ள பக்கம்.அதையும் நீங்கள் இங்கே சொல்லி இருப்பது மிகவும் நன்று.

இன்னும் நிறைய சொல்லி இருக்கின்றீர்கள்.எங்கு தான் போய் இவ்வளவு செய்திகளையும் சேகரிப்பீர்கள் என்று தெரியவில்லை.இது போன்ற நல்ல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் க்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

http://www.tn.gov.in/dge/

மஞ்சுளா, முதலில் மன்னியுங்கள், உங்கள் கேள்வியை நான் பார்க்கவே இல்லை. மேலே உள்ள தளத்தில் போய் பாருங்கள், blueprint கிடைக்கும். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்
பவித்ரா

56 பார்வையற்ற மாணவர்கள், வருகிற டிசம்பர் 14-ம் தேதி, ஹத்ராபாத்தில் DCA தேர்வு எதிர்கொள்கிறார்கள்... அவர்களுக்கு தேர்வு எழுத எழுத்தர்கள்(scribes) தேவை... விரும்புவோர், கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்...

Exam Date: December 14th 2010
College venues: Hyderabad
Contact - Pavuluri Maruthi @9293123652

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

வீட்டுக் கடன் வழங்கியதில் சிபிஐ அதிரடி; ரூ. 42,750 கோடி மோசடி கண்டுபிடிப்பு

புதுடெல்லி: வீட்டுக் கடன் வழங்கியதில் ரூ. 42,750 கோடி மோசடியை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இதில் முக்கிய அதிகாரிகள் சிக்குகின்றனர். இதில் 2 ஆயிரம் கோடி வீட்டுக் கடன் பெற தகுதியில்லாத போலி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வழங்குவதில் அதிகார துஷ்பிரயோகம் செய்து பல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரநாயர் மற்றும் பொதுத்துறை வங்கியைச் சேர்ந்த மூன்று உயரதிகாரிகள் உட்பட 8 பேரை சிபிஐ நேற்றுமுன் தினம் கைது செய்தது.

இவர்களில் இடைத் தரகர்களாக செயல்பட்ட தனியார் நிதிநிறுவனங்களின் அதிகாரிகளும் அடங்குவர். வீட்டுக்கடன் வழங்கப்பட்ட பெரும்பான்மையான தொகை தகுதியான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 2 ஆயிரம் கோடி, ரியல் எஸ்டேட் நடத்தாத போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது விசாரணை யில் தெரியவந்துள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் அந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தற்போது ரூ. 42 ஆயிரத்து 750 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. முழுமையாக ஆவணங்களை சரி பார்த்த பின்னர் தான் துல்லியமாக கூற முடியும் என்று சிபிஐ அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

எல்ஐசி வீட்டுக் கடன் திட்டத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் அதிகாரியான சுரேஷ் கட்டானி, பண விவகாரங்களில் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் சர்மா ஆகியோர் இந்த மோசடிக்கு பின்னணியில் ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ள தாக தெரிகிறது. இவர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு இடைத்தரகர் களாக இருந்துள்ளனர்.

இவர்கள் தான் கடன் தொகையை நிர்ணயிப்பது, அதை வழங்குவது ஆகிய பணிகளை செய்துள் ளனர். இவ்வாறு மோசடி செய்யப்பட்ட தொகை பங்குச்ச ந்தைகளில் எந்தெந்த நிறுவனங் களின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக மும்பை பங்குச்சந்தை யில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து வருமானவரித்துறையினரும் இந்த மோசடியில் இறங்கியவர்கள் எப்படி வரிஏய்ப்பு செய்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக 17 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது சிபிஐ போலீசார் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த மோசடி குறித்து விவாதிக்க மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி தலைமையில் நிதித்துறை அதிகாரிகள் கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இதில் மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டுள்ள பொதுத்துறை வங்கி அதிகாரிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மும்பையில் எல்ஐசி சேர்மன் டி.எஸ். விஜயன் கூறுகையில், “ வீட்டுக் கடன் நிர்வாக அமைப்பில் எந்த குறைபாடும் இல்லை. சில உயரதிகாரிகள் தவறாக நடந்திருக்கலாம். எல்ஐசியின் சொத்துகளுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. நாங்களும் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். இதற்கிடையே மூத்த பொதுமேலாளர் சந்திரசேகர் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா கூறுகையில், “ இந்தியாவில் உள்ள வங்கி நிதி வளத்துடன் ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவானது. இந்த விவகாரத்தை மிகப் பெரிய அளவில் பெரிதுபடுத்த தேவையில்லை என்றார்.

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் மற்றும் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய வீட்டு வசதிக் கடன் குறித்த விவரங்களை நிதி அமைச்சகம் கோரியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் திடுக் கிடும் தகவல்கள் அம்பலமாகும் என்றும், இதில் தொடர்புடைய முக்கிய அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தினகரன் 26.11.2010

தற்பொழுதய செய்தி வீட்டு வசதி கடனை வங்கிகள் மூலம் பெற்ற பணத்தினை பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்கள் வீடு கட்டுவதற்கு பயன்படுத்தாமல் பங்குசந்தையில் பல்லாயிரம் கோடிக்கு முதலீடு செய்துள்ளதை சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளனர்.....

கலைஞர் செய்திகள்..
__________________

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வாழ்கையின் வெற்றிக் கோட்பாடுகள்;

* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்னையாக இருந்தாலும் அதை அழகா கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் தாழ்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்கதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டுதலையும் சொல்ல மறவதீர்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்