சில பயனுள்ள தகவல்கள்!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது."

இங்கே www.textbooksonline.tn.nic.in சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

SMS மூலம் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்

புதுடில்லி: SMS என்றழைக்கப்படும் குறுஞ்செய்தி மூலம் பணம் அனுப்பும் வசதி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பணம் செலுத்தும் அமைப்பு மூலம் இந்த வசதி நாட்டிலுள்ள செல் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் செல் போன் வைத்திருக்கும் நபர், தனது வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். இதற்கு இனைய வசதி தேவையில்லை. இது வரை ஒரே வங்கிக்கிடையே மட்டும் பணம் பரிமாற்ற வசதி இருந்து வந்தது. தற்போது நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதியுடன், ஒரு வங்கியின் கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப முடியும். ஸ்டேட் வங்கி, HDFC, ICICI, Axis வங்கி ஆகிய வங்கிகள் இத்திட்டத்தில் இனைந்துள்ளன. மேலும் 7 இந்திய வங்கிகள் திட்டத்தில் சேருவதற்கான வழிவகைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நேரம்.காம் 01.12.2010
__________________

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இந்தியா ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் பிரிக்கப்பட்டது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது எனக் குறிக்கிறது.இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மூன்றாவது வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப் படுத்தும்.

இந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது பின் மண்டலங்கள்:
1 - தில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர்(பாகிஸ்தான்-ஆளுமை கீழுள்ள காசுமீர் உட்பட), சண்டிகார்
2 - உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம்
3 - இராசத்தான், குசராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி
4 - மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுக்கர்
5 - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்
6 - தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி
7 - ஒரிசா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்
8 - பீகார், சார்க்கண்ட்
9 - இராணுவ அஞ்சலகம்(APO) மற்றும் கள அஞ்சலகம் (FPO)முதல் இரு இலக்கங்கள் அஞ்சல் வட்டம்
11 தில்லி
12 and 13 அரியானா
14 to 16 பஞ்சாப்
17 இமாச்சலப் பிரதேசம்
18 to 19 சம்மு & காசுமீர்
20 to 28 உத்திரப் பிரதேசம்
30 to 34 இராசத்தான்
36 to 39 குசராத்
40 to 44 மகாராட்டிரம்
45 to 49 மத்தியப் பிரதேசம்
50 to 53 ஆந்திரப் பிரதேசம்
56 to 59 கர்நாடகம்
60 to 64 தமிழ்நாடு
67 to 69 கேரளம்
70 to 74 மேற்கு வங்காளம்
75 to 77 ஒரிசா
78 அசாம்
79 வடகிழக்கு இந்தியா
80 to 85 பீகார் மற்றும் சார்க்கண்ட

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நிறைய உபயோகமான தகவல் கொடுக்குரீங்க
நன்றி

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

குழந்தை பிறக்க உதவியது அய்போன்

உலகம் முழுவதும் உள்ள இன்றைய இளைஞர்களிடம் அய்பாட், அய்போன் இல்லாமல் இருப்பதில்லை என்று கூறலாம். இவை சில சமையங்களில் இளைஞர்களின் நேரத்தை வீணாக் கினாலும் ஒரு சில நேரங்களில் தக்க நண்பனாக இருந்து உதவி செய்கிறது. அந்தவகையில் லண்டனைச் சேர்ந்த இளைஞர் கிரிஸ் கோர்பீல்டு. இவர் எப்போதும் அய்போனுடனே காணப்படுவார் என்று அவ்வட்டாரங்கள் சொல்கின்றனர்.

இந்த நிலையில் இவரின் அய் போன் பெண் நண்பரின் பிரசவத்திற்கு உதவி செய்துள்ளது. இவரின் பெண் நண்பர் ஜென்னி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந் துள்ளார். சம்பவத்தன்று இவருக்கு பிரசவ வலி ஏற் பட்டுள்ளது. மருத்து வரிடம் கூட்டிச் செல்ல நினைத்தால் வெளியே செல்லமுடியாத அளவிற்கு பனிபொழிந்து கொண் டிருந்தது. இதனையடுத்து கிரிஸ் தன்னிடம் இருந்த அய்போன் மூலம் இன் டெர்நெட் கனெக்சன் தந்து அதில் குழந்தை பிறப்புகுறித்த இணைய தளத்தை தொடர்பு கொண்டார். அதில்கூறியபடி நண்பர் ஜென்னிக்கு உதவி செய்தார். முடிவில் அழ கான குழந்தை பெர்ரிஜா பிறந்தது. தக்க சமயத்தில் உதவி செய்த அய் போனுக்கு தான் இந்த நன்றி என கிரிஸ் கூறியதாக இங்கி லாந்தில் வெளி வரும் சவுத்போர்ட்டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளி யிட்டுள்ளது.

இது போன்ற மின் உபகரங்கள் வீண் என்று சொல்பவர்கள் கூட வாங்கி பயக்கொள்ளும் வகையில் இந்த செய்தி அமைந்துள்ளது. சரியான நேரத்தில் இணையதளத்தை பயன்படுத்தி கொண்டு செயல் பட்டதால் ஓர் அரிய நன்மை விளைந்தது அல்லவா. நன்றி : yahoo news.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

புத்தாண்டில் ஒரு அதிசயம்: பிறந்தது விசேஷச குழந்தை

புதியாய் பூத்த புத்தாண்டே பல அதியசங்களை கொண்டதாக உள்ளது. இந்நிலையில் புத்தாண்டில் மேலும் ஒரு விந்தையான நிகழ்வாக ஒரு விசேஷச குழந்தை பிறந்தது.

கோலாகலமாக புத்தாண்டு கொண்டாடப்பட்ட வேளையில், குஜராத் மாநிலத்தில் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்தது.இதில் அதிசயம் என்னவென்றால், அக்குழந்தை பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் என எல்லாமே 1 தான்.

அதாவது, 1.1.11 அன்று இரவு 1மணி 11 நிமிடத்தில் இக்குழந்தை பிறந்தது. இக்குழந்தையும் அதன் வாழ்க்கையில் முதல் இடத்தைப் பெற வாழ்த்துக்கள்.

நடிகை மீனாவுக்கும் அன்று பெண்குழந்தை பிறந்ததாமே..

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கோடநாடு எஸ்டேட் சாலையை பொது மக்கள் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி : நீலகிரி மாவட்டம் கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், காமராஜர் நகர் மக்கள் பல ஆண்டுகளாக சென்று வந்த பாதையை கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் அடைத்தது. இதை எதிர்த்து கோடநாடு பஞ்சாயத்து தலைவர் பொன்தோஸ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சர்மா, அனில்தவே ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.வில்சன் ஆஜராகி, ‘’கோடநாடு எஸ்டேட் பங்களாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்குகிறார். இதனால் எஸ்டேட் நுழைவு வாயிலை எஸ்டேட் நிர்வாகம் அடைத்து வைத்துள்ளது,

இதனால் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி இந்த பாதையை திறந்த விட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை நிர்வாகம் அமல்படுத்த மறுத்துள்ளது, எனவே பொதுமக்கள் எஸ்டேட் அமைந்துள்ள பாதையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

அதை கேட்ட நீதிபதிகள், ‘‘பொதுமக்கள் எஸ்டேட் நுழைவு வாயிலை பயன்படுத்த ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது, இதை தற்போது உறுதி செய்கிறோம், பொதுமக்கள் தொடர்ந்து இந்த பாதையை பயன்படுத்தலாம், இதற்கு நிர்வாகம் தடை செய்யக் கூடாது, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் மாதம் தள்ளிவைக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.
....தினகரன் 04.1.11

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஈரானில் 7 பேர் தூக்கிலிடப்பட்டனர் போதைபொருள் கடத்தியதற்காக கைதானவர்கள்

ஈரானில் 7 பேர் 5 கிலோ முதல் 100 கிலோ வரையான போதைபொருள்களை கடத்தியதற்காக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அந்த நாட்டு கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அதன்படி அவர்கள் 7 பேரும் கெர்மான்ஷா நகர சிறைக்குள் நேற்று காலை தூக்கிலிடப்பட்டனர்.

இதற்கு மனித உரிமைக்குழு கண்டனம் தெரிவித்து உள்ளது. உலகிலேயே ஈரானில் தான் அதிகம் பேர் தூக்கிலிடப்படுவதாக அது குற்றஞ்சாட்டி உள்ளது. ஈரானில் 1979-ம் ஆண்டு முதல் இஸ்லாமிய சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின்படி கொலை, கள்ளக்காதல், கற்பழிப்பு, கொள்ளையடித்தல், போதைபொருள் கடத்தல், மதத்துவேஷம் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

....தினத்தந்தி 4.1.11

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வைரமுத்துவின் இணையதளம் இணையப் பூங்கா அறிமுகம்

--------------------------------------------------------------------------------

இணையப்பூங்கா

Code:
http://inayapoonga.com/இணையப்பூங்கா என்னும் பெயரில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அறிவுக் கருவூலங்களை வெளிப்படுத்தும் இணைதயளம் 2011 சனவரி 2 ஆம் நாள் பொன்மாலைப் பொழுதிலிருந்து செயல்பட உள்ளது.

இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் திரைப்பாடல்கள் வழியாகவும், படைப்பு நூல்கள் வழியாகவும், மேடைப்பேச்சுகள் வழியாகவும் தமிழுக்குச் சிறப்பு சேர்த்தவர் கவிப்பேரரசர் வைரமுத்து ஆவார். இவரின் பன்முகப் பணிகளை இனி உலகத் தமிழர்கள் தடையில்லாமல் இணையம் வழியாக அறிந்து மகிழலாம்.

கவிப்பேரரசர் அவர்கள் தமிழகம் முழுவதும் இணையதளச் சிறப்புகளைத் தொடர்ந்து மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட உள்ளார்கள். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் தமிழ் இணைய அறிமுகத் தேவையை வலியுறுத்தி இனிப் பேசவும் எழுதவும் உள்ளார்கள்.

தமிழ் இணையத்துறையில் ஆக்கப்பணிகளுக்கு உதவ முன்வந்துள்ள கவிப்பேரரசர் அவர்களை வணங்கி வரவேற்பதுடன், அவர்கள் புகழ்பரப்பும் இணையதளம் உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் தமிழ்மணம் பரப்பவேண்டும் என்ற வேட்கையையும் வெளிப்படுத்துகின்றேன்.

இணையப் பூங்கா இணையதளம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ' ஆயிரம் பாடல்கள் ' புத்தக வெளியீட்டு விழா(02.01.2011,சென்னை) நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்போடு தன் பணியினைத் தொடங்குகின்றது.

மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஆயிரம்பாடல்கள் நூலினை வெளியிட திரு.ரஜினிகாந்த், திரு.கமல்ஹாசன் இருவரும் முதல் படியினைப் பெற்றுக்கொள்கின்றனர். தமிழ்த்திரையுலகமே கலந்து கொள்ளும் திரை இலக்கியத் திருவிழாவாகச் சென்னையில் இது நடைபெற உள்ளது. உலகத் தமிழர்களின் இல்லங்களுக்கு இணையப்பூங்கா நேரலையாக நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

இணையப்பூங்காவின் மற்ற உட்பிரிவுகளான கவிஞரின் பக்கம், கண்மணிப்பூங்கா, திரைப்பூங்கா, (வெள்ளித்திரை-சின்னத்திரை), இசைப்பூங்கா, அரசியல் பூங்கா, இலக்கியப்பூங்கா, கவிதைப் பூங்கா, அங்காடிப் பூங்கா, கட்டுரைப் பூங்கா,சமுதாயப் பூங்கா, போன்றவை தைத் திருநாளிலிருந்து செயல்படும்.
..தட்ஸ் தமிழ் 29.12.2010

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

என்னுடைய திருமண சான்றிதழில் என் தந்தையின் பெயர் தவறாக உள்ளது. இதை திருத்த வேண்டும். எங்கு சென்று இதை திருத்த வேண்டும்?

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

அமெரிக்கா மாணவர்களுக்கு கபடி கற்று தரும் இந்திய ஆசிரியர்

ஹூஸ்டன்: இந்தியாவின் புகழ்பெற்ற விளையாட்டான கபடி விளையாட்டினை அமெரிக்க மாணவர்களிடம் அறிமுகப்படுத்தி அதனை பிரபலபடுத்தி வருகிறார் இந்தியர் ஒருவர். அஜெய்குமார் நாயார் என்ற ஆசிரியர் தென்ஆப்ரிக்காவில் ஆன்டிரியோடிக் நகரில் ஆங்கில இலக்கிய பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் அவ்வப்போது அவரிடம் படித்து வரும் அமெரிக்க மாணவர்களுக்கு கபடி விளையாட்டினை கற்று கொடுத்து வந்தார். தென்ஆப்ரிக்காவி்ல் ஜோஹன்ஸ் நகரில் உள்ள மத்திய பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆர்வமுடன் கபடியினை கற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க சென்ற இவர் அங்கும் கபடி விளையாட்டு மட்டுமின்றி, உணவு கலாச்சார பற்றியும் மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், தென்ஆப்பிரிக்காவில் அமெரிக்க மாணவர்களிடம் கபடி கற்று கொடுத்தது நல்ல அனுபவமாக இருந்தது. அமெரிக்காவில் ஜனவரி 28-ம் தேதி வரை இருப்பேன், பிறகு இந்தியா திரும்புகிறேன். *கெவின்கான்னூர் என்பவர் தான் எனது குரு என்றும், இந்திய பண்பாடு மற்றும் உணவு வகைகள் எனக்கு ஆச்சர்யத்தினை தருகி்ன்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் 11.1.11

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்