சில பயனுள்ள தகவல்கள்!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது."

இங்கே www.textbooksonline.tn.nic.in சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

துணை நடிகை ஷோபனா தற்கொலை

சென்னை, ஜன. 10: சென்னை கோட்டூர்புரத்தில் திரைப்பட துணை நடிகை ஷோபனா (32) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த விவரம்: கோட்டூர்புரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயராம். இவரது மகள் ஷோபனா.

இவர் "சில்லுன்னு ஒரு காதல்', "நகரம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள "இளைஞன்' படத்திலும் ஷோபனா நடித்துள்ளார்.

இதுதவிர தனியார் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை தொடர்களிலும் இவர் நடித்து வந்தார்.

உடல்நல பாதிப்பு காரணமாக சில நாள்களாக படப்பிடிப்புக்கு செல்லாமல் இவர் வீட்டில் ஓய்வு எடுத்துவந்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை ஷோபனாவை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவரது தாயார் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார்.

சிறிது நேரத்தில் திரும்பிவந்து பார்த்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் ஷோபனா இறந்து கிடந்தாராம்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த கோட்டூர்புரம் போலீஸôர், ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி 11.1.11

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

shobana comedy nadipil kalakiyavar, vazhkaiyil inum niraya padangal nadithu nirya makkalai sirikavaika mudiyamal ponathuku varunthukiren

Be happy

ஒன்று முத‌ல் ப‌ன்னிரெண்டாம் வ‌ரையுள்ள‌ CBSC புத்த‌க‌ங்க‌ளும் இணைய‌த்தில் வெளீயாகியுள்ள‌து
....
http://www.ncert.nic.in/NCERTS/textbook/textbook.htm

http://ncertbooks.prashanthellina.com/

அகில‌ இந்திய‌ அள‌வில் தேர்வுக்கு த‌யாராகினால் இந்த‌ புத்த‌க‌ங்க‌ளில் இருந்து தான் கேள்விக‌ள் கேட்க‌ப்ப‌டும்...

ஐ.ஏ.எஸ், ஐ,பி.எஸ் தேர்வுக்கு உங்க‌ள் வீட்டில் யாராவ‌து த‌யாராகினால் அவ‌ர்க‌ளீட‌ம் கூறுங்க‌ள்

தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்:
தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்:
நலம் பெறுங்கள்

கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம் மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும்.

இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்

ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.

எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.

* சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

* பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.

ஆரோக்கிய எடை:

உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு "உயரம் (செ.மீ.,ல்) - 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.
எண்ணை தெரிந்து கொள்வது: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம்.

மன நிம்மதி:

மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த 2010ம் ஆண்டில், பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள். * நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் "லிப்டை' உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல் வது போன்றவை நல்லது.
* நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.
* பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமலர்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

If anyone met with fire accident or people born with problems in their ear,nose and mouth can get free Plastic surgery done at kodaikanal pasam hospital,From 23rd March to 04th april 2011 by German doctors.Everything's is free.Contact no:045420-240668,245732.

Helping hands are better than praying lips.If some one can get helped by you.
தோழிகளே இது என் கணவருக்கு இ மெயில் வந்தது.யாருக்காவது,உதவுமா என்று பாருங்கள்.

குழந்தைகளுக்கு ஸ்லோகம் கற்றுக்கொடுக்க விரும்பினால் உங்களுக்கு உதவும் வெப்சைட் http://www.slokakids.com/ இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நாமும் பல ஸ்லோகங்கள் கற்றுகொள்ளலாம் .

காதலர் தினத்துக்காக ஒரு கோடி ரோஜாக்களை உலகக் காதலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது ஓசூர்.
பிப்ரவரி 14. காதலர் தினம். உலகமே கொண்டாடும் உற்சாகத் திருவிழாவாக மாறிவிட்ட இந்த தினத்தின் முக்கிய அடையாளமே ரோஜாக்கள்தான்.

காதலர்கள் அன்பைப் பறிமாறிக் கொள்ள ரோஜாக்களைத்தான் தூதாக அல்லது குறியீடாக அனுப்புகிறார்கள்.

எனவே ஏராளமான ரோஜாக்கள் இந்த நாளில் தேவைப்படுகின்றன. இதற்காக ஒசூரிலிருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஆசியாவிலேயே மிகப் பெரிய ரோஜா கொய்மலர் ஏற்றுமதி மண்டலம் ஒசூர் வட்டம் அமுதகொண்டபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு 250 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசு நிறுவனமான டிட்கோ, நசீம் அகமது அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து டான்ஃபுளாரா ரோஜா மலர் ஏற்றுமதி மண்டலம் அமைத்துள்ளது.

டான்ஃபுளாரா மூலம் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் அரபு நாடுகளுக்கு விமானம் மூலம் ரோஜா ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சாதாரண நாட்களில் ஒரு ரோஜா பூவின் விலை ரூ. 2. அதுவே காதலர் தினத்தில் ஒரு பூவின் விலை ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. 10 பூக்கள் கொண்ட ஒரு கொத்து ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் இங்கிருந்து ஒரு கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரோஜா

ரோஜாக்கு பின்னால இத்தனை கதை இருக்கு.. எனக்கு தெரியாம போனது ஷேம் ..;(

ரம்யா உடனே ஆர்டர் செய் .: நன்றி யோ

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் தவறு செய்தால் என்ன தண்டனை? : தேர்வுத்துறை எச்சரிக்கை

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஈடுபடும் 16 விதமான குற்றங்களையும், அதற்கான தண்டனையையும் தேர்வுத்துறை வெளியிட்டு எச்சரித்துள்ளது.
மாணவர் தன்னிடம் உள்ள துண்டுச் சீட்டு, புத்தகங்களை தாமாக முன்வந்து கண்காணிப்பாளரிடம் தந்தால், தலைமை கண்காணிப்பாளர் ஒரு முறை எச்சரித்து விடலாம். அதே தவறை மீண்டும் செய்தால், தேர்வு அறையில் இருந்து வெளியேற்றலாம்.
தடை செய்யப்பட்ட தேர்வு பொருட்கள் இருப்பதை கண்காணிப்பாளர் கண்டறிந்தால், எழுத்துப்பூர்வமான விளக்கம் பெற்ற பின், மாணவர், தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவார்.
"காப்பி'யடித்தால், தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்படுவார். ஓர் ஆண்டு வரை தேர்வு எழுத முடியாது. ¨
பிட் அடித்து பிடிபட்டால், அந்த தேர்வு மார்க் ரத்து செய்யப்படும். இருமுறை தேர்வு எழுத அனுமதியில்லை.
மாணவர் மற்றும் அவரை சார்ந்தவர் கண்காணிப்பாளரை தவறான நோக்கில் அணுகினால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத தடை.
ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு ரத்து மற்றும் வாழ்நாள் தடை விதிக்கப்படும். விடைத்தாளில் தேவையற்ற வார்த்தை எழுதுதல், இயக்குனர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதுதல் போன்ற குற்றங்களுக்கு, குறிப்பிட்ட பாடம் மற்றும் அனைத்து தேர்வும் ரத்து செய்யப்படும்.
கண்காணிப்பாளருடன் அறைக்குள்ளும், வெளியேயும் தகராறு செய்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத முடியாது.
தேர்வு நேரத்தில் அறைக்கு வெளியே வினாத்தாளை தந்தால், மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை.
பிடிபட்ட பின் தலைமை கண்காணிப்பாளர் சொல்வதை கேட்காமலிருந்தால், குறிப்பிட்ட காலம் வரை தேர்வு எழுத அனுமதி கிடையாது.
விடைத்தாளுக்குள் பிட் இருப்பது திருத்தும் போது தெரிய வந்தால், தேர்வு ரத்து.
மற்றொரு மாணவரின் விடைத்தாளை மாற்றினால், ஐந்து ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை.
விடைத்தாளில் பெயர், இன்ஷியல், வேறு குறியீடு எழுதினால், மாணவரிடம் எழுதி வாங்கிய பின் மன்னிப்பு, அல்லது அந்த தேர்வு மட்டும் ரத்து செய்யப்படும்.
தேர்வு அறைக்குள் வினாத்தாளை அடுத்தவர் மீது வீசினால் அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும்.
¨
ஆசிரியருக்கும் தண்டனை : பிட் அடிக்கும் மாணவனுக்கு மட்டுமின்றி, தேர்வறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியருக்கும் இனி தண்டனை வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தேர்வு அறையில் மாணவன் பிட் அடிப்பது கண்டறியப்பட்டால், அங்கு கண்காணிப்பு பணியில் இருக்கும் ஆசிரியர் மீது, "17ஏ, 17பி' பணியாளர் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தினமலர்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

i'm dhavamani. today only i come to tis site. i married 3 years till now i'm not get a child becoz i've a water stone in ovary. now my weight 72 kg, my age 24.,please any body tel mehow to reduce my weight.

மேலும் சில பதிவுகள்