கண்ணம்மா... இது புத்தம் புதிது !!!

நிறைய தலைப்புகள் அறுசுவையில் கொண்டு வந்தாச்சு. இப்போ எனக்கு தெரிஞ்சு பெண்களை ரொம்ப அட்ராக்ட் பண்ண கூடிய விஷயம் ஒன்னு... அதை பற்றி பேசுவோமா???!!!

என்ன விஷயம்??? கண்டு பிடிச்சீங்களா??? இப்ப மார்க்கெட்'ல இருக்க கூடிய புது புது பொருட்கள்.... புது புது ஆடைகள்.... லேட்டஸ்ட் ஃபேஷன்.... லேட்டஸ்ட் ட்ரென்ட்.... வீட்டை அலங்கரிக்க, நம்ம அலங்கரிக்க... இப்படி புதுசா இருக்க விஷயங்களை பற்றி பேச தான் இந்த இழை. :)

இதை பற்றி பேச என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு.... கண்டிப்பா எல்லாருமே வாங்கறோமோ இல்லையோ, இன்னைக்கு மார்க்கெட் ட்ரென்ட் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். பயன்படுத்தும் ஹேர் பின்னில் இருந்து ஆடை வரை... அதை பற்றி தெரிஞ்சவங்க இங்க சொல்லும்போது நாமும் தெரிஞ்சுக்குவோம்!!! ;)

உங்களுக்கு தெரிஞ்ச புது விஷயங்கள் பற்றி சொல்ல வாங்க இங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாருக்கும் பிடிச்ச பட்டு புடவையில் ஆரம்பிக்கலாம்... இங்க இருக்க தகவல் முழுக்க முழுக்க எனக்கு தெரிஞ்சதை வெச்சும், பார்த்ததை வெச்சும் சொல்லிருக்கேன்... தப்பா இருந்தா தெரிஞ்சவங்க அவசியம் சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்கறேன்.

இந்த தீபாவளிக்கு நம்ம ஊர் ஸ்பெஷல்... வெயிட் கம்மியான மென்மையான பட்டு புடவைகள். "Flylit Silks" "Soft Silks"... என்று வித்தியாசமான பெயர்களில் எல்லா ஜவுளியிலும் (நல்லி, போதீஸ், ஆர்.எம்.கே.வி, சென்னை சில்க்ஸ்) கிடைக்குது. இந்த பட்டில் என்ன விஷேஷம்? பட்டு கட்டிகிட்டு ஒரு வேலையும் பார்க்க முடியல, யாரு தூக்கிட்டு நடக்குறதுன்னு கேட்பவர்களுக்கு சரியான சாய்ஸ். அது மட்டுமில்லை இதில் வரும் கலர்ஸ்'ம் அதிகம். ட்ரென்டியான டிசைன்ஸ், கலர்ஸ், லைட் வெயிட்... விலை... 5000 - 7000 வரை. (கொஞ்சம் அதிகம் தான்!!! ஆனால் 10000 கொடுத்து எடுத்து கட்டாம பெட்டியில் வைக்கிறதுக்கு இது பரவாயில்லை ;) என்று சிலர் சொல்கிறார்கள்.)

இந்த தீபாவளிக்கு மிஸ் பண்ணிருந்தா கவலை வேண்டாம், பொங்கலுக்கு எடுத்துடலாம் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொதுவா இந்த ரெடிமேட் மிக்ஸ் எதுவும் சரியா வராது, நம்ம வீட்டில் செய்வது போல் டேஸ்ட் இருக்காது. ஆனா புதுசா வந்திருக்க MTR Rava Idly Mix வாங்கி பாருங்க. "Breakfast... "னு போட்டு வருதே, அந்த பேக். உண்மையிலேயே சூப்பர். வீட்டில் செய்வது போல் சுவை, செய்வதும் சுலபம். இன்னும் அதில் வரும் உப்புமா மிக்ஸ் நான் பயன்படுத்தி பார்க்கல. யாராது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு பட்டு புடவைனு சொன்னதும் இந்த பக்கமா வந்துட்ட ... எந்த வகை புடவை வந்தாலும் , பெண்களுக்கு பட்டு மேல ஒரு தனி விருப்பம் இருக்கும். இப்போ மார்க்கெட்-ல புதுசா நிறய வகை வந்துஇருக்கு... இதபத்தி பேசலமே

கயத்ரி இளங்கோவன்!!!

Be Honest

வனிதா! நல்லா இருக்கீங்களா? நான் MTR இல் வடை மிக்‌ஷ் ரை பன்ணி இருக்கன், ரொம்ப ரேஷ்டி...
அத்துடன் நான் மசாலா அயிட்டங்களும் பாவிக்கிறேன், Natoinal, Priya மீன் மசாலா, சிக்கன் மசாலா, ரொம்ப நல்லா வருது.
எனக்கு குலாப்யமூன் மிக்‌ஷ் எது பெஷ்ட் என்று யாராவது சொல்லுங்கப்பா.....

ஹாய் வனிதா எப்படியிருக்கிங்க,தீபாவளி நல்லகொண்டாடினின்களா.இப்ப மேட்டருக்கு வரேன் பெனாரஸ் சேலைகள் இப்ப ரொம்ப பாஷனா இருக்கு.நீங்க சொல்வதும் போல கணமும் அதிகமா இருப்பதில்லை.கட்டுவதற்கும் எளிதாயிருக்கு.முன்பெல்லாம் பெனாரஸ் என்றால் வெயிட் அதிகமாயிருக்கும்.பாவாடை தாவணி சேலைகள் தான் இப்ப டிரெண்டில் இருக்கு.சேலையின் பாதி நெட் துணியிலும்,பாதி பெனாரஸ் துணியிலும் வருகிறது. வுடுத்தினால் பாவாடை தாவணி போட்டது போல இருக்கு.அழகாவும் இருக்கிறது.இதன் விலையும் 2000 ரூபாயிலிருந்து இருக்கிறது.வெறும் பெனாரஸ் என்றால் 2000 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது இதன் விலை.

ஹாய் தர்சி
நல்லா இருக்கிங்களா, நான் ஆசிர்வாத் குலோப்ஜாமுன் மிக்ஸ் செய்து உள்ளேன்,ரொம்ப நல்லா வரும்,MTR அம்மா செய்து சாப்பிட்டுள்ளேன்,அதுவும் நல்லா இருக்கு.ஒரே ஒரு டிப்ஸ்:செய்வதர்க்கு மாவு பிசயும்போது ஒரு 1spoon சர்க்கரை பாகு,1 spoonபால் செர்த்து பிசைந்தால் சுவை கூடும்.
ஹாய் வனிதா
எப்படி இருக்கிங்க பேசி ரொம்ப நாள் ஆச்சு, நல்ல தலைப்பு.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் ரிஷ்வானா! ( பேர் சரியா)
நான் நல்லா இருக்கன், நீங்கள் எப்படி?
நன்றி,ஆசிர்வாத் எல்லா இடமும் கிடைக்குமா? ரைபண்ணிப்பார்க்கிறேன்.
என்ணையில் பொரித்தெடுத்து சீனிப்பாகில் போடனுமா? நான் முதல் தடவை ரைபண்ணப்போறன்.

தர்சி

தர்சி, ரிச்வானா... கண்டிப்பா நானும் வடை மிக்ஸ் ட்ரை பண்றேன். இதுவரை பயன்படுத்தினதில்லை. குலாப்ஜாமூன் நானும் தான் அதிகம் பயன்படுத்தினேன். இரண்டுமே நல்லா இருக்கும். நான் எதுவும் சேர்த்தது கூட இல்லை... சும்மா தண்ணீரில் பிசைந்து சுட்டு எடுத்து பாகில் போடுவேன். நல்லா தான் இருந்தது. இனி செய்யும்போது ரிஸ்வானா சொன்ன மாதிரி முயற்சி செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி. :0

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

காயத்ரி... அவசியம் வந்து சொல்லுங்க உங்களுக்கு தெரிஞ்ச புது வகை எல்லாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்