கண்ணம்மா... இது புத்தம் புதிது !!!

நிறைய தலைப்புகள் அறுசுவையில் கொண்டு வந்தாச்சு. இப்போ எனக்கு தெரிஞ்சு பெண்களை ரொம்ப அட்ராக்ட் பண்ண கூடிய விஷயம் ஒன்னு... அதை பற்றி பேசுவோமா???!!!

என்ன விஷயம்??? கண்டு பிடிச்சீங்களா??? இப்ப மார்க்கெட்'ல இருக்க கூடிய புது புது பொருட்கள்.... புது புது ஆடைகள்.... லேட்டஸ்ட் ஃபேஷன்.... லேட்டஸ்ட் ட்ரென்ட்.... வீட்டை அலங்கரிக்க, நம்ம அலங்கரிக்க... இப்படி புதுசா இருக்க விஷயங்களை பற்றி பேச தான் இந்த இழை. :)

இதை பற்றி பேச என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு.... கண்டிப்பா எல்லாருமே வாங்கறோமோ இல்லையோ, இன்னைக்கு மார்க்கெட் ட்ரென்ட் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். பயன்படுத்தும் ஹேர் பின்னில் இருந்து ஆடை வரை... அதை பற்றி தெரிஞ்சவங்க இங்க சொல்லும்போது நாமும் தெரிஞ்சுக்குவோம்!!! ;)

நானும் அந்த புடவை ஃபோட்டோவில் பார்த்தேன்.
நான் வாங்கியது ப்ரொக்கேட் பார்டர் வைத்த சாரி. ரொம்ப லைட்டா இருக்குது. ஊருக்கு வந்து காமிச்சால் இதுவா வாங்கின பழைய ஃபேஷன் ஆச்சேன்னு சொல்லாம இருந்தா சரி :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அம்மாடியோவ் கோயம்பத்தூர் ஆர் எம் கேவி ல குட்டீஸ் செக்‌ஷனுக்குள்ள நுழஞ்சுபார்த்தா இந்த மசக்களி, அனார்க்களி இன்னும் எத்தன் நாளக்கி இதயே வெச்சிருப்பாங்களோ தெரியல?
வெலய கேட்டா 4000 அட சாமி இந்த களிய வாங்கிற காசில ராகி வாங்கி களி கிண்டுனா ஒரு கிராமமே சாப்பிடலாம். இப்பிடியே துணிக்கடைக்காரங்கள பணக்காராக்கி நாம ஏழையாவே இருக்க வேண்டியதுதான்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்