கண்ணம்மா... இது புத்தம் புதிது !!!

நிறைய தலைப்புகள் அறுசுவையில் கொண்டு வந்தாச்சு. இப்போ எனக்கு தெரிஞ்சு பெண்களை ரொம்ப அட்ராக்ட் பண்ண கூடிய விஷயம் ஒன்னு... அதை பற்றி பேசுவோமா???!!!

என்ன விஷயம்??? கண்டு பிடிச்சீங்களா??? இப்ப மார்க்கெட்'ல இருக்க கூடிய புது புது பொருட்கள்.... புது புது ஆடைகள்.... லேட்டஸ்ட் ஃபேஷன்.... லேட்டஸ்ட் ட்ரென்ட்.... வீட்டை அலங்கரிக்க, நம்ம அலங்கரிக்க... இப்படி புதுசா இருக்க விஷயங்களை பற்றி பேச தான் இந்த இழை. :)

இதை பற்றி பேச என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு.... கண்டிப்பா எல்லாருமே வாங்கறோமோ இல்லையோ, இன்னைக்கு மார்க்கெட் ட்ரென்ட் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். பயன்படுத்தும் ஹேர் பின்னில் இருந்து ஆடை வரை... அதை பற்றி தெரிஞ்சவங்க இங்க சொல்லும்போது நாமும் தெரிஞ்சுக்குவோம்!!! ;)

rasia_nisrina - நான் துபாய் யில் உள்ளேன்..லாங் டாப் தான் எடுதிங்கள? காறைகால் ல கிடைக்குத??மதுரை அங்கே எதாவது கடைகளில் கிடைக்குமா??தகவலுக்கு ரொம்ப நன்றி...ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்..:)

Mano Bharathy - ஹாய்..நீங்களும் மதுரை ஆ? ரொம்ப சந்தோசம்...நான் நல்ல இருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?வீட்ல எல்லாரும் சௌக்கியமா? மதுரை போத்தீஸ் ல பார்த்துட்டேன் கிடைகள..நான் ரொம்ப ஹைட்(173 cms ) லலிதா இன்னும் பார்கல..நெக்ஸ்ட் டைம் போரபோ பகறேன்..ரொம்ப நன்றி பதில் உடனே சொனதற்கு..

வித்யா & ரசியா... ஆமாம்பா அனார்கலி பேஷன் 1 வருடன் முந்தையது. வந்த வேகத்தில் காணாம போயிட்டுது. ஆனா சென்னையில் போதீஸ், ஆர். எம். கே. வி கடைகளில் இப்போதும் இருக்கு... ரொம்ப வெரைட்டி கிடைக்காது அவ்வளவு தான். நான் மைலாபூரில் ஒரு கடையில் எடுத்தேன்... லேடீஸ்'கு என்று ஒரு ஸ்பெஷல் ஷாப், சின்ன ஷாப்... கலக்ஷன்ஸ் செலெக்டெடா இருக்கும். பெயர் நினைவில்லை... கேட்டு சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்ரீமதி ... வெளிநாட்டு வாழ் மக்கள் இப்ப அதிகம் வாங்குவது கவரிங் நகைகள் தான். பாதுகாப்பா கொண்டு போக, வேலை ஆட்கள் வந்து போகும் இடத்தில் பயம் இல்லாம வைத்திருக்கன்னு பல காரணம். காரன்டீட் கோல்ட் ப்லேட்டட் இப்ப எல்லா இடத்திலும் கிடைக்குது. கொஞ்சம் நம்பகாமன இடத்தில் வாங்கினா பார்க்கவும் நல்லா இருக்கும், தரமும் இருக்கும்(நாராயணா, போதீஸ், கல்யாணி, ஜில் மில் இப்படி பல இடங்கள் இருக்கு). இனி வாங்கி குவிங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா வனிதா நரய வாங்க போரேன் எல்லா ட்ரஸ் கும் மேச்சிங்கோட வாங்கி குவிக்க போரேன் பாருங்க.

அன்புடன்
ஸ்ரீ

மனோ பாரதி... மிக்க நன்றி. :) உங்களை போல் எல்லாரும் வந்து தகவல் சொல்வதால் தான் பயனுள்ளதா அமையுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

sree new trend discuss panringala..tamilil type pana help panungapa

மீனு என்ன சிஸ்டம் வாங்கிடீங்களா

அன்புடன்
ஸ்ரீ

மீனா... இந்த பக்கத்தின் கீழே "அறுசுவை"ன்ற தலைப்புக்கு கீழே கடைசியா "தமிழ் எழுத்துதவி"னு ஒரு இழை இருக்கு. அதை க்லிக் பண்ணுங்க.. தனியா ஒரு "Tamil font help"னு page வரும். அதில் "தமிங்கிலத்தில் இங்கே டைப் செய்யவும்"னு ஒரு பெட்டி இருக்கும், அதில் தங்கிலிஷ் அடிங்க அதுக்கு ஒத்த தமிழ் வார்த்தை அதன் மேல் இருக்கும் பெட்டியில் வரும். காப்பி பண்ணி "Reply to comment" பேஸ்ட் பண்ணுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கீழே முக்கிய பிரிவு, மன்றம் அப்படின்னு இருக்கர லைன்ல அருசுவைன்னு இருக்கு பாருங்க அதுல கடைசில தமிழ் எழுத்துதவின்னு இருக்கு பாருங்க அதுல போய் டைப் பன்னுங்க

அன்புடன்
ஸ்ரீ

இன்னைக்கு எதை பற்றி பேசலாம்???

நம்ம போதீஸ்'ல இப்போ வந்திருக்க "LEGANGA SAREES" பற்றி?? அது ஒன்னுமில்லைங்க நம்ம பழைய மாடல் "LEHENGA CHOLI"ய புடவையா கட்டின மாதிரி இருக்கும். நல்ல முயற்சி இதை நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொண்டு வந்தது. lehenga choli'யில் "Fish Cut" என்று சொல்வார்கள்... முட்டு வரை சாதாரண கட்டும், கீழே ஒரு வகை 'V' கட்டும் வைத்த மாதிரி... அது போல் தான் இருக்கும் இந்த புடவை வகை. ஆரம்ப விலையே 9000!!! ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்