கண்ணம்மா... இது புத்தம் புதிது !!!

நிறைய தலைப்புகள் அறுசுவையில் கொண்டு வந்தாச்சு. இப்போ எனக்கு தெரிஞ்சு பெண்களை ரொம்ப அட்ராக்ட் பண்ண கூடிய விஷயம் ஒன்னு... அதை பற்றி பேசுவோமா???!!!

என்ன விஷயம்??? கண்டு பிடிச்சீங்களா??? இப்ப மார்க்கெட்'ல இருக்க கூடிய புது புது பொருட்கள்.... புது புது ஆடைகள்.... லேட்டஸ்ட் ஃபேஷன்.... லேட்டஸ்ட் ட்ரென்ட்.... வீட்டை அலங்கரிக்க, நம்ம அலங்கரிக்க... இப்படி புதுசா இருக்க விஷயங்களை பற்றி பேச தான் இந்த இழை. :)

இதை பற்றி பேச என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு.... கண்டிப்பா எல்லாருமே வாங்கறோமோ இல்லையோ, இன்னைக்கு மார்க்கெட் ட்ரென்ட் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். பயன்படுத்தும் ஹேர் பின்னில் இருந்து ஆடை வரை... அதை பற்றி தெரிஞ்சவங்க இங்க சொல்லும்போது நாமும் தெரிஞ்சுக்குவோம்!!! ;)

எப்படி இருக்கீங்க தோழிகள்?
இந்த இழை நல்லாப்போயிட்டிருக்கு, நாம இங்கு அடிக்கடி புடவை கட்டுவதில்லை,எப்பவாவது கோவிலுக்கு போனால் சரி,அதனால் புதிய டிசைன்,மாடல் ஒன்றும் தெரியாதுங்கோ....:)
இப்பதான் வந்து பார்த்தேன், வெளி நாடுகளில் இருப்பவர்களுக்கு நிச்சயமாக உபயோகப்படும் இந்த தகவல்கள்..

வனி mtr rava idli mix வாங்கிட்டேன் எப்படி செய்யனம்னு உங்க அனுபவத்தை சொஞ்சம் சொல்லுங்கோப்பா

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

வனிதாக்கா ரொம்ப பயனுள்ள இழையா ஆரம்பிச்சு இருக்கீங்க நம்ம தோழிகளும் அதை அழகா எடுத்து செல்றாங்க.
M.T.R ரவா இடலி மிக்ஸ் பத்திதான் ரொம்ப எல்லாரும் நல்லா சொல்லி இருக்கீங்க நானும் வாங்கி பாக்குறேன் நிச்சயமா.
அனார்கலி, மசக்கலி, ரசக்கலி இப்படி விதவிதமான "கலி"கள் தான் இந்த தீபாவளி பேஷன் ரோட்டுல யார பார்த்தாலும் சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரை எல்லாரும் இது மசக்கலி தான். மசக்கலி, ரசக்கலி கூட பரவாயில்லை இந்த அனார்கலி எனக்கு பிடிக்கலை. ஆனா பல பேர் அதை விரும்புறாங்க ஓவ்வொருதங்க ரசனையும் வித்தியாசப்படும்ல.

எல்லாரும் என்னென்னவோ சொல்றீங்க. இந்தவாட்டி ஊருக்குப் போகும் போது தேடிப் புடிக்கறேன் எல்லாத்தையும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி ரொம்ப நல்ல த்ரெட். இந்த த்ரெட் பார்த்துதான் என்ன என்ன புதுசா வந்து இருக்குனு தெரியுது. அனார்கலி தெரியும். இந்த மசக்கலிக்கும், ரசக்கலிக்கும் என்ன வித்தியாசம்.

இது வரை காஸ்லி சேலைகள் பற்றி தான் பார்த்தோம்.லோ பட்ஜெட் சேலைகளில் இப்போதைய ஃபேஷன் பற்றி பார்க்கலாம்.

நெட் சேலைகள் தான் இப்ப ரொம்ப ஃபேசனா இருக்கு.நெட் சேலைகளில் கோல்டன் ப்ரிண்ட் போட்டது இப்ப லேட்டஸ்ட் ட்ரென்ட்.இந்த சுப்பர் நெட் சேலைகள் குண்டாக இருப்பவர்கள் கட்டினாலும் அதிகமாக குண்டாக காட்டுவதில்லை.சூப்பர் நெட் சேலைகள் 350ரூ ஆரம்பித்து 1000ரூ வரை கிடைக்கிறது.நம் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்க வேண்டியது தான்.

அனார்கலி-
நான் இப்போ தான் உங்களிடம் முதன் முறைய பேசுறேன்..நல்ல இருக்கீங்களா வணி அக்க..(கூப்பிடலாம?)தெரிந்தால் சொல்லுங்க..நான் மார்ச் இல் இந்திய போறபோ எடுக்கறேன்..

அது என்ன நெட் சேலை சுந்தரி. நான் இதுவரை அப்படி எதுவும் பார்க்கலையே. நெட்னா ரொம்ப transparent ஆ இருக்காதாபா?

யாழினி கோட்டா சாரின்னு சொல்வாங்க.அதே மாடல் தான்.ஆனால் இப்ப கொஞ்சம் வெரைட்டியா வருது.காட்டன் சாரி போல தான் இருக்கும்.லுக் நல்லாயிருக்கும்.நாம் அழகா மடிப்பு வைத்து கட்டினால் நன்றாக இருக்கும்.கடையில் போய் பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கும்.

ஆங் சுந்தரி இப்ப தான் நியாபகம் வருது நான் இந்த முறை சாரி செக்ஷன்ல பார்த்தேன் கொஞ்சம் காட்டன் மிக்ஸ்டு ஆனா பேப்பர் போல இருக்கும் அத தான சொல்றீங்க சுந்தரி. அது ரொம்ப transparent ஆ இருக்குமோனுட்டு நான் எடுக்கலபா. விலையும் கூட reasonableஆ தான் இருந்துச்சு 560 இப்படி இந்த ரேஞ்சுலதான் இருந்துச்சு.

மேலும் சில பதிவுகள்