கண்ணம்மா... இது புத்தம் புதிது !!!

நிறைய தலைப்புகள் அறுசுவையில் கொண்டு வந்தாச்சு. இப்போ எனக்கு தெரிஞ்சு பெண்களை ரொம்ப அட்ராக்ட் பண்ண கூடிய விஷயம் ஒன்னு... அதை பற்றி பேசுவோமா???!!!

என்ன விஷயம்??? கண்டு பிடிச்சீங்களா??? இப்ப மார்க்கெட்'ல இருக்க கூடிய புது புது பொருட்கள்.... புது புது ஆடைகள்.... லேட்டஸ்ட் ஃபேஷன்.... லேட்டஸ்ட் ட்ரென்ட்.... வீட்டை அலங்கரிக்க, நம்ம அலங்கரிக்க... இப்படி புதுசா இருக்க விஷயங்களை பற்றி பேச தான் இந்த இழை. :)

இதை பற்றி பேச என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு.... கண்டிப்பா எல்லாருமே வாங்கறோமோ இல்லையோ, இன்னைக்கு மார்க்கெட் ட்ரென்ட் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். பயன்படுத்தும் ஹேர் பின்னில் இருந்து ஆடை வரை... அதை பற்றி தெரிஞ்சவங்க இங்க சொல்லும்போது நாமும் தெரிஞ்சுக்குவோம்!!! ;)

தர்சி.. மிக்க நன்றி... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீரா கிருஷ்ணன்... அந்த பேக்'லயே சொல்லிருக்கும் பாருங்க. முதல்ல தயிர் விட்டு கொஞ்சம் நேரம் வைத்து மீண்டும் கலக்க சொல்லி இருந்ததா நியாபகம். அம்மா அதுல இருக்க முறையை அப்படியே தான் செய்தாங்க. செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழினி.. மிக்க நன்றி. வாங்கி பாருங்க. அனார்கலி, மசக்கலி, ரசக்கலி ... அனார்கலி, மசக்கலி போன வருடமே வந்தது.... இந்த வருடம் ரசக்கலி தான். அதுவும் க்ரஷ்டு மெட்டீரியல் இப்போ பேஷன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா... எப்போ ஊருக்கு??? தேடி பிடிக்கும்போது வனியை நியாபகம் வெச்சு ஒரே ஒரு நெட்டெட் சேலை, ஒரே ஒரு ரசக்கலி எடுத்துடுங்க... உங்களுக்கில்லை, வனிக்கு. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோஜா... மிக்க நன்றி.

அனார்கலி... ஷார்ட் ஸ்லீவ், அம்ப்ரெல்லா கட், மேல ஒரு டிசைன் கீழ ஒரு டிசைன் தான் ட்ரெடிஷனல் பேட்டர்ன்.

மசக்கலி.... சாதா அந்த காலத்து மிட் லெந்த் சுடி வித் நெட்டெட் ஸ்லீவ்.

ரசக்கலி... அனார்கலி + மசக்கலி. அனார்கலி போல் அம்ப்ரெல்லா கட், மசக்கலி போல் நெட்டெட் ஸ்லீவ். முக்கியமா இப்போ இதுல சாதா ஸ்லீவ் வெச்சு கூட வருது க்ரஷ்டு மெட்டீரியல்... அது ரொம்ப அழகு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுந்தரி... மிக்க நன்றி. இன்னைக்கு இதை பற்றி தான் பேசலாம்'னு நினைச்சேன்... நீங்களே சூப்பர் தகவலை சொல்லிட்டீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்யா... தாராளமா கூப்பிடலாம்... அனார்கலி மேலே ஒரு பாதி ஒரு பேட்டர்ன், கீழ் பாதி ஒரு பேட்டர்ன் இருக்கும். அம்ப்ரெல்லா கட். கேதெரிங் பேன்ட்ஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உலகம் மாறிகிட்டே போகுது. எல்லாருக்கும் அவசரம்... ரெடிமேட் பொருட்களில் இப்போ சாம்பராணியும் சேந்துடுச்சு. அதிசய சாம்பிரானினு ஒன்னு... அதுல கரி துண்டுகள் ஏற்றி மேலே தூள் தூவுவது போலவே பயன்படுத்தலாம்... கரி துண்டு ஒரு கப் போலவும், அதன் மேல் வைக்கும் சாம்பராணி ஒரு கப் ஷேப்'லையும் இருக்கும்... கீழே உள்ள கரி கப்பை தீயில் காட்டி அது சிவந்ததும் மேலே சாம்பராணி கப்பை வைத்தால் போதும். வெளிநாட்டில் இருக்கும் நம்மை போன்ற ஆட்களுக்கு இது சுலபம் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நன்றி அக்கா...அனார்கலி புல் டாப் எங்க கிடைக்குதுன்னு தெரிஞ்ச மறக்காம சொல்லுங்க கா....
சாம்ப்ராணி பேர் என்ன கா??அந்த சாம்ப்ராணி ல புகை நெறைய வருமா??ஏன்ன எனக்கு ஒரு வயசு பையன் இருக்கான் அதான் கேட்டேன்...துபாய் ல கிடைக்குமா அக்கா ??

அனார்கலி சென்னையில் எல்லா இடத்திலும் கிடைக்கும் வித்யா.

நான் பயன்படுத்துவது "Victory Athisaya sambrani". நிறைய ப்ராண்டு இருக்கு... துபாயில் இந்திய பொருட்கள் இருக்க இடத்தில் கேட்டு பாருங்க, கண்டிப்பா கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்