கண்ணம்மா... இது புத்தம் புதிது !!!

நிறைய தலைப்புகள் அறுசுவையில் கொண்டு வந்தாச்சு. இப்போ எனக்கு தெரிஞ்சு பெண்களை ரொம்ப அட்ராக்ட் பண்ண கூடிய விஷயம் ஒன்னு... அதை பற்றி பேசுவோமா???!!!

என்ன விஷயம்??? கண்டு பிடிச்சீங்களா??? இப்ப மார்க்கெட்'ல இருக்க கூடிய புது புது பொருட்கள்.... புது புது ஆடைகள்.... லேட்டஸ்ட் ஃபேஷன்.... லேட்டஸ்ட் ட்ரென்ட்.... வீட்டை அலங்கரிக்க, நம்ம அலங்கரிக்க... இப்படி புதுசா இருக்க விஷயங்களை பற்றி பேச தான் இந்த இழை. :)

இதை பற்றி பேச என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு.... கண்டிப்பா எல்லாருமே வாங்கறோமோ இல்லையோ, இன்னைக்கு மார்க்கெட் ட்ரென்ட் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். பயன்படுத்தும் ஹேர் பின்னில் இருந்து ஆடை வரை... அதை பற்றி தெரிஞ்சவங்க இங்க சொல்லும்போது நாமும் தெரிஞ்சுக்குவோம்!!! ;)

ரொம்ப நன்றி அக்கா....நான் ட்ரை பனிட்டு சொல்றேன்....புகை ரொம்ப இருக்குமா ??

அடையாரில் ஒரு துணி கடை... "Style One" திரந்து 3 வருடம் தான் ஆகிறது. தி.நகர் கூட்டத்துக்கு பயந்தவங்க இங்க வரலாம். கொஞ்சம் விலை அதிகம்... ஆனாலும் தரம் நிச்சயம். வெரைட்டி அதிகம். குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும்(எல்லா ப்ராண்டும் இருக்கு) கேட்கவே வேண்டாம்... ரொம்ப சூப்பர். நான் 3 வருஷமா இங்க துணி எடுக்கும் அனுபவத்தில் சொல்ரேன்... இதுவரை சென்னையில் தி.நகரில் கிடைக்காத தரமான பல வித்தியாசமான டிசைன்ஸ் இங்க குழந்தைகளுக்கு கிடைக்குது. பெண்களுக்கு புடவை அதிகம் இருக்காது, ஆனால் மாடர்ன் ட்ரெஸ், சுடிதாரெல்லாம் நிறைய கொட்டி கிடக்கு. உங்களுக்கு பக்கமா இருந்தா விசிட் அடிச்சு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் பிரண்ட்ஸ் சமீபத்தில் நேரு காலர் வைத்த சுடிதார் ஒன்னு எடுத்தேன்.அந்த டிரஸ் எனக்கு கம்பர்ட்டா இல்லை.டிரஸ் முன்பு முழுவதும் எம்ப்ராய்டரி வொர்க் இருக்கும்.விலை 1000 ரூபாய். காலர் கழத்து எனக்கு பிடிக்கவில்லை.கழுத்தை நெரிப்பது போல இருக்கிறது. காலரை மட்டும் எடுத்துவிட்டு நார்மல் நெக் தைக்க முடியுமா.விலை கொடுத்து எடுத்து வேஸ்ட் ஆகாமல் போட்டு கொள்ள ஆசைபடுகிறேன்.இங்கு நிறைய டைலர்ஸ் இருப்பீர்கள் எனக்கு ஐடியா கொடுங்க.

தோழிகளே, திருவான்மியூர் சிக்னலில் 'Cotton World' அனைத்து காட்டன் ரெடிமேட் துணிகளும் கிடைக்கும். எதை எடுப்பது எதை விடுப்பது என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு ரகங்கள் இருக்கும். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் நிறைய கலெக்ஷன்ஸ் இருக்கு. நான் ஜீன்ஸ், டாப்ஸ், நைட்டிஸ், குட்டிங்களுக்கு ட்ரெஸ் எல்லாம் அங்க தான் எடுப்பேன். நியாயமான விலை தான். அடையாறிலும் இதற்கு கிளை உண்டு. தற்போது பெண்களுக்கும், சிறுமிகளுக்கு அழகு சாதன பொருட்கள் பிரிவும் உள்ளது. காலணிகள்,சூட்கேஸ்,ஹேண்ட் பேக்,பர்ஸ் ஐட்டங்களும் கிடைக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுந்தரி அந்த நெக் ஸ்டிச் மட்டும் பிரிச்சு எடுத்துடுங்கபா. நெக்க எடுத்துட்டு கடைல கொடுத்து அந்த இடத்தை ஓவர் லாக் செய்து வாங்கிக்கோங்க பார்க்க ரெளண்டு நெக் போலவே இருக்கும்.

HAI MADURAI GIRLS .I AM ALSO MADURAI GIRL.BEST WISHES FOR ALL

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

கல்பனா... நீங்க சொன்ன கடைக்கு நானும் போயிருக்கனே ;) என்னை எப்பவாது பார்த்தீங்களா??? திருமணத்துக்கு முன்னாடி இருந்தே அங்க போனது உண்டு. அப்போலாம் அது ரொம்ப குட்டி கடை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, நான் கடைக்கு வந்த போது, நீங்க உங்களை அறிமுகம் செய்திருந்தா தெரிஞ்சுட்டு இருந்திருப்பேன். நீங்க சொல்லவே இல்ல.. இப்ப அந்த கடை 5 மாடி இருக்கும்னு நினைக்கறேன் பா. மாமியார் வீட்ல இருந்தா அங்க தான் ஷாப்பிங்க பண்ணுவேன். நமக்கு இந்த கடை, அந்தக்கடைன்னு செண்டிமென்டெல்லாம் இல்ல. டிசைன் எங்க நல்லாருந்தாலும் நுழைஞ்சிடுவேன் :) ஆத்துக்கார் பாடு தான் திண்டாட்டம் :(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யாழினி உங்க ஐடியாவிற்க்கு மிக்க நன்றி.நீங்க சொன்னபடி தைத்து பார்க்கிறேன்.

இன்னும் ஒரு புது கடை... "Hi Style" OMR'ல இருக்குங்க. போய் பாருங்க.... விலை கன்டிப்பா ரொம்ப அதிகம் இல்லை. ஆனா நிறைய வெரைட்டி இருக்கு. புடவைக்கு போகாதீங்க. ஆண்கள், குட்டீஸ், மாடர்ன் லேடீஸ் ஆடைகள்னா போக வேண்டிய இடம். முக்கியமா மிக்ஸ் அன்டு மேட்ச் நிரைய கலரஸ், நிறைய குர்தாஸ் கிடைக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்