கண்ணம்மா... இது புத்தம் புதிது !!!

நிறைய தலைப்புகள் அறுசுவையில் கொண்டு வந்தாச்சு. இப்போ எனக்கு தெரிஞ்சு பெண்களை ரொம்ப அட்ராக்ட் பண்ண கூடிய விஷயம் ஒன்னு... அதை பற்றி பேசுவோமா???!!!

என்ன விஷயம்??? கண்டு பிடிச்சீங்களா??? இப்ப மார்க்கெட்'ல இருக்க கூடிய புது புது பொருட்கள்.... புது புது ஆடைகள்.... லேட்டஸ்ட் ஃபேஷன்.... லேட்டஸ்ட் ட்ரென்ட்.... வீட்டை அலங்கரிக்க, நம்ம அலங்கரிக்க... இப்படி புதுசா இருக்க விஷயங்களை பற்றி பேச தான் இந்த இழை. :)

இதை பற்றி பேச என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு.... கண்டிப்பா எல்லாருமே வாங்கறோமோ இல்லையோ, இன்னைக்கு மார்க்கெட் ட்ரென்ட் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். பயன்படுத்தும் ஹேர் பின்னில் இருந்து ஆடை வரை... அதை பற்றி தெரிஞ்சவங்க இங்க சொல்லும்போது நாமும் தெரிஞ்சுக்குவோம்!!! ;)

இப்போ மார்கெட்டில் புதுசு புதுசா நிறைய நைட்டி ப்ராண்டு வந்துருச்சு. குடும்ப பெண்ணா உணர வைக்க நைட்டி தேவைப்படுது போல..... ;) இப்போ விகாஸ், பொம்மீஸ், ஜூலியட், மங்கை, ராசாத்தி, பொன்னீஸ், நாசுரல் இப்படி ஏகப்பட்ட ப்ராண்டு கிடைக்குது. விலை 300 - 1000 சாதாரணமா. இன்னும் விலை அதிகமா கூட இருக்கு. ;( நைட்டிக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா???!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் போன முறை ஊருக்கு போன போது மதுரை போத்தீசில் ஒரு நைட்டியை ரொம்ப ஆசையா செலக்ட் பண்ணினேன். விலையை பார்த்ததும் மயங்கிவிழாத குறைதான் அதிகமில்லை ஜஸ்ட் 1800 ரூபாய்தான் :(. நல்ல கறுப்பு நிறத்தில் அழகான எம்பிராய்டரி செய்த நைட்டி. ஆனால் அவ்வளவு விலை கொடுத்து நைட்டி வாங்கணுமான்னு யோசிச்சு வாங்காம வந்துட்டேன்.

ஆனால் தூத்துக்குடி போயிருந்த போது உறவினர் கடைக்குப் போனோம். அங்ஏ புதிய மாடல் நைட்டி பார்த்துக்கிட்டு இருந்தபோ தூரத்தில் ஹேங்கரில் நல்ல அழகான ஸ்கைப்ளூகலரில் துப்பட்டாவோடு ஒரு சுடிதார் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து நைட்டியெல்லாம் அப்படியே போட்ட்உட்டு அந்த சுடிதாரைப் பார்க்க போனேன். பக்கத்தில் போன பின் தான் தெரிஞ்சுது அது சுடிதார் இல்லை நைட்டின்னு :(.

இப்போ நம்ப ஊர் மக்கள் நைட்டி போட்டுட்டு மேலே கொஞ்சமும் மேட்சிங்கா இல்லாம டவல் போட்டுட்டு போறாங்க இல்ல அவங்களுக்காக துப்பட்டாவோட இப்போ நைட்டிகள் வருதாம். அன்னிக்கு நானும் என் அண்ணியும் அண்ணாவும் சிரித்த சிரிப்புக்கு அளவே இல்லை :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சென்னையில் டிசைனர் சாரிகள் வாங்க நல்ல கடைகள் சொல்ல முடியுமா? பட்ஜெட் அதிகம் கிடையாது. 1000-2000 இதுக்குள்ளதான்.

கவி, மதுரைக்கு வந்திருந்தீங்களா?(போயிருந்தீங்களா) எனக்கு பிறந்த ஊர் ஞாபகம் வந்துடுச்சு.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆமா சீதாம்மா! நான் இந்தியா வரும் போதெல்லாம் மதுரை விஜயம் நிச்சயம் உண்டு. என் நாத்தனார் அங்கேதான் இருக்காங்க. பெரும்பாலும் என் ஷாப்பிங் எல்லாம் மதுரையில்தான். குறைந்தது ஒரு வாரமாவது டேரா போட்டு ஷாப்பிங் பண்ணுவேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சீதாம்மா, செளகார்பேட்டை பக்கம் போயிருக்கீங்களா? அங்கே டிசைனர் சாரிக்கு நிறைய கடைகள் இருக்கும். நிறைய டிசன்சும் இருக்கும். விலையும் அதிகம் பர்சை கடிக்காது. மார்வாடி மக்கள் அதிகம் இருக்கும் பகுதி அதனால் அங்கே டிசைனர் சாரி கடைகளை அதிகம் பார்க்கலாம்.புடவை விலை குறைவாக இருந்தாலும், அதற்கு மேட்சிங் வளையல் விலை தான் அதிகமிருக்கும். நான் ரிசப்ஷன் சாரி ஒன்றை அங்கே தான் டிசைன் செய்ய தந்தேன் நல்ல ஒயின் கலரில் சமிக்கியும், மணிகளும் கொடுத்து டிசைன் பண்ணியிருந்தார்கள். மிகவும் அழகாக இருந்தது. ப்ளைன் சாரி எடுத்து கொடுத்து டிசைன் செய்ய சொன்னாலும் செய்வார்கள். துணிகளும் அங்கேயே கிடைக்கும். வீட்டிற்கு கட்டும் தினப்படி உபயோகத்திற்க்கு சாரிகளும் மிகக்குறைந்த விலையில் நல்ல தரமாகவே கிடைக்கிறது. ஒருமுறை விஜயம் செய்து பாருங்க (அப்புறம் என்கிட்ட பேசவே மாட்டீங்க ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி,

ஸ்டைல் ஒன் கடைக்குப் போய் பார்க்கிறேன். சுடிதார் ரகங்கள் பார்க்க வேண்டியிருக்கு. கஸ்தூரிபாய் நகர் ஸ்டேஷனில் இறங்கினால், நடக்கிற தூரம்தான்.

கவி,

மதுரையில் முன்பு தேவாங்கர் சத்திரம்னு ஒரு இடம் இருந்தது. நூல் சேலைகள், குறைந்த விலையில், நிறைய வெரைட்டி கிடைக்கும். இப்ப அந்தக் கடையைக் காணோம். தேர் முட்டி தெரு அருகில், ஒரு சந்தில், ஒரு பெரிய கடை - அங்கேயும் துண்டுகள், வேஷ்டிகள் எல்லாம் நன்றாக இருக்கும்.

கல்பனா,

கண்டிப்பாக போய்ப் பார்க்கிறேன். இங்கே பெரிய கடைகளில் விலை அதிகமான வெரைட்டிகள் நிறைய இருக்கு. என் பட்ஜெட்டுக்குள் வரலை. நீங்க சொன்ன இடத்தில் பார்த்துட்டு, (வாங்கிட்டு) வந்து சொல்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

கவிசிவா... இப்பலாம் நைட்டி, உள்ளாடைகள் எல்லாம் 1000'கு மேலே சொல்வது அதிகமா போச்சு!!! இதுக்கா இவ்வளவுன்னு தல சுத்துது!!!

சீதாலஷ்மி... கல்பனா சொன்ன இடம் நானும் கேட்டிருக்கேன். முயற்சி செய்து பாருங்க. கூடவே ரங்கனாதன் தெருவில் கூட இதுக்குன்னு ஒரு கடை இருக்குனு நினைக்கிறேன். வசு எங்கயோ ரொம்ப கம்மி விலையில் சூப்பர் சூப்பரா எடுத்திருந்தா. கேட்டுட்டு உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன். :) ஸ்டைல் ஒன் போய் பாருங்க, தரமா இருக்கும்.

கல்பனா.... இங்கையும் காம்மெடியா??? ;(( ரிசைன் பண்ணிடாதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மறக்காமல் சொல்லுங்க, வனிதா. ஒரு கிஃப்ட் கொடுக்கறதுக்காக வாங்க வேண்டியிருக்கு. அதனாலதான் இவ்வளவு தூரம் யோசிச்சு, பாத்து, வாங்கணும்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி.... கல்பனா சொன்ன மாதிரி சௌகார்பெட்'ல மின்ட் ஸ்ட்ரீட் தான் வசு'வும் சொல்றா. அங்க தான் சுப்பரா கிடைக்கும், விலையும் கம்மின்னு சொல்றா. அதனால் நீங்க யோசிக்கவே வேண்டாம், கிளம்புங்க அங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொசு தொல்லைக்கு இப்பலாம் யாரும் பழைய மேட், காயில், லிக்கியுட் எல்லாம் பயன்படுத்துவதில்லை போலும். மார்கெட்டில் இப்ப இதெல்லாம் பவர் இல்லாம போச்சு. இப்ப லேட்டஸ்ட் கொசுக்கு பேட். டப் டப் டப்ன்னு அடிச்சுடலாம். டீப் ஃப்ரை ஆயிடுது நம்மை கடித்த கொசு. ;(

போன வருஷம் வரைக்கும் சீனாது(YPD) வந்துட்டு இருந்தது. இப்ப புதுசா நம்ம கோயம்புத்தூர் கம்பனி(UMS - Zap) ஒன்னு போடுது. ஒரு வருடம் காரன்டியோட. தரமா இருக்கு. அது மட்டுமில்லை... சீனாது கரன்ட்டுல சார்ஜ் செய்வது. அத்தனை பாதுகாப்பு இல்லை. இது பேட்டரி போட்டு பயன்படுத்துவது. அதனால் பயன்படுத்தாதப்போ கழட்டி வெச்சுட்டா ரொம்ப பாதுகாப்பு குழந்தைங்க இருக்க வீட்டில் கூட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்