கண்ணம்மா... இது புத்தம் புதிது !!!

நிறைய தலைப்புகள் அறுசுவையில் கொண்டு வந்தாச்சு. இப்போ எனக்கு தெரிஞ்சு பெண்களை ரொம்ப அட்ராக்ட் பண்ண கூடிய விஷயம் ஒன்னு... அதை பற்றி பேசுவோமா???!!!

என்ன விஷயம்??? கண்டு பிடிச்சீங்களா??? இப்ப மார்க்கெட்'ல இருக்க கூடிய புது புது பொருட்கள்.... புது புது ஆடைகள்.... லேட்டஸ்ட் ஃபேஷன்.... லேட்டஸ்ட் ட்ரென்ட்.... வீட்டை அலங்கரிக்க, நம்ம அலங்கரிக்க... இப்படி புதுசா இருக்க விஷயங்களை பற்றி பேச தான் இந்த இழை. :)

இதை பற்றி பேச என்ன இருக்குன்னு கேக்குறவங்களுக்கு.... கண்டிப்பா எல்லாருமே வாங்கறோமோ இல்லையோ, இன்னைக்கு மார்க்கெட் ட்ரென்ட் என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவோம். பயன்படுத்தும் ஹேர் பின்னில் இருந்து ஆடை வரை... அதை பற்றி தெரிஞ்சவங்க இங்க சொல்லும்போது நாமும் தெரிஞ்சுக்குவோம்!!! ;)

இப்போ லேட்டஸ்ட் வெளியீடு நாதெள்ளா'வின் "பீகாக் கலெக்ஷன்". முழுக்க முழுக்க எனாமல் வேளைப்பாடு கொண்டது. பார்க்க அழகாக தான் இருக்கிறது. குரைந்த 2 பவுனில் இருந்து துவங்குகிறது. பென்டன்ட், கம்மல் மட்டும் உள்ளது, முழு செட்டாகவும் உள்ளது. அதே போல் தான் "Floral Collections" நகைகளும். பார்க்க அழகாகவே உள்ளது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, எங்க வயித்தெரிச்சலை கிளப்பறதுன்னு முடிவோட வந்திருக்கீங்களா? அதுவும் நாடு விட்டு நாடு வந்திருக்கற என்னை மாதிரி ஆளுங்களாம் இந்த அதிர்ச்சியான செய்தியை எப்படி தாங்கிப்போம் :(

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வைர நகைகள் வாங்கும் முன் என்ன என்ன கவனிக்க வேண்டும்??அதிலும் காரட் எல்லாம் இருக்குன்னு சொல்றாங்க??உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

ரீம்... நான் எதை பார்த்தும் வைரத்தை தேர்வு செய்ததில்லை. காரனம் அதிக கேரட் கொண்ட வைரங்கள் நான் வாங்குவதில்லை. வனக்கும் சிறு வைரமானாலும் தனிஷ்க் போன்ற கடைகளில் வாங்குவதால் நம்பிக்கையோடு வாங்கி விடுவேன். இருப்பினும் இப்போது சில நாட்கள் முன் வைரம் பற்றி தெரிந்து கொண்ட சில தகவல்களை உங்களுக்கு சொல்கிறேன்:

1. வைரம் வாங்கும் முன் அதன் "Certificate" உள்ளதா என்று விசாரியுங்கள். இது தான் வைரத்தின் தரம், எடை(carat - இது வைரத்தின் எடையை சொல்வது. karat - தங்கத்தின் தரத்தை சொல்வது. ), கட், கலர் எல்லா தகவலையும் சரியாக கொடுக்கும்.

2. Certificate என்பது வைரத்தின் 4 அம்சங்களை கொண்டு அதை மதிப்பீடு செய்து கொடுப்பது. (Cut, Color, Clarity, Carat)

3. ஒரு நல்ல வைரம் என்பது நிறமே இல்லாத நல்ல கட்'ம், க்ளாரிட்டியும் கொண்டது.

4. இவற்றை பல அனுபவம் உள்ளவர்கள் கண்டரிந்து அந்த வைரத்தை மதிப்பிட்டு certificate கொடுப்பார்கள்.

5. நம்ம ஊரில் GIA (Gemological Institute of America)certificate உள்ள வைரங்கள் கிடைக்கின்றன. அதுவே உலகில் முதல் தரம் வாய்ந்த வைரம் என்றும் சொல்கிறார்கள்.

6. பொதுவாக வைரத்தில் ஒரு carat என்பது 200 மில்லி. இது வைரத்தின் அளவை குறிக்கும். இதை வைத்தே வைரத்தின் விலை.

7. certificate'ல் இருக்கும் தரம் பற்றிய தகவல் வைத்து எந்த கடையில் எந்த தரம் உள்ள வைரம் என்ன விலை என்று நீங்க ஒப்பிடூ பார்த்து வாங்கலாம்.

8. தனிஷ்க் போன்ற கடைகளில் சொல்வது "Precious Stone என்றால் 18 karat தங்கத்தில் தான் பதிப்போம்". ஏன் என்றால் அதில் பதித்தால் கல் விழாது என்றும், தங்கத்துக்கு நல்ல finishing, கல்லுக்கு நல்ல பளபளப்பும் கிடைக்கும் என்றும் அவர்கள் சொல்வார்கள். இது நான் ஒசூரில் இருக்கும் தனிஷ்க் நகை செய்யும் இடத்தில் ஒருவர் சொல்லி கேட்டது.

9. நம்ம ஊரில் வைரம் போட தோஷம் உண்டு என்பார்கள். அதனால் இத்தனை Carat'கு மேல் உள்ள வைரங்கள் போட கூடாது என்றும் சொல்வார்கள். அது அவர் அவர் ஜாதகத்தை பொருத்ததுன்னு சொல்றாங்க. நான் அதை பார்த்ததும் இல்லை, அந்த அளவு பெரிய வைரங்கள் வாங்கியதும் இல்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்பனா... ஏன் வயித்தெரிச்சல்??? நீங்க வரும் போதாவது வாங்கலாம், நாங்க இங்கயே இருந்தாலும் வாங்க முடியுறதில்லை. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, நல்ல தரமான முத்து செட் சென்னையில் எங்கு கிடைக்கும், எப்படி வாங்கணும், எவ்வளவு விலை அளவுகோல் இருக்கும் இதையெல்லாம் கொஞ்சம் சொல்ல முடியுமா. வாங்கலாம்னு நினைக்கிறேன் ஆனால் விவரங்கள் தெரியலை. நீங்க இந்த விசயத்தில் தேர்ந்தவர், அதான் கேட்கிறேன்.

தோழிகளே, யாருக்கு இதை பற்றி தெரிஞ்சாலும் கொஞ்சம் சொல்லுங்க பா.

இதுவும் கடந்து போகும்.

முத்து செட் என்றால் எதை கேட்கிறீங்கள்? தங்கத்தில் முத்து உள்லதா, வெறும் முத்தா? எனக்கு இதை பற்றி அதிகம் தகவல் தெரியல யோகலக்ஷ்மி... மன்னிச்சுடுங்க. விசாரித்து அவசியம் சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மதுரையில் அல்லது கோவையில் எங்கு "FEEDING CHUDIDHARS" கிடைக்கும்?

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

பீடிங் சுடிதாரை தேடுவதை விட நமது சுடிதாரை முன்னாள் பட்டன் /ஜிப் வைத்து தைத்து கொள்ளலாம் .இப்பொது எல்லோருக்கும் இது பெசனாக உள்ளது ,நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாமே...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

வணக்கம் அஸ்வதா நலமா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மேலும் சில பதிவுகள்