********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா? செல்வமா?

அறுசுவை வானில் நட்சத்திரங்களாக ஒளிவீசிக் கொண்டிருக்கும் அன்பு தோழர் - தோழிகளே ! உங்களுக்கு என் முதற்கண் வணக்கம் உரித்தாகுக. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதை போல அனைவரும் தீபாவளி பண்டிகைக்கு விதவிதமாக பலகாரங்களை சுவைத்து மகிழ்ந்து இப்போது அவற்றை ஜீரணிக்க லேகியம் சாப்பிட்டு கொண்டிருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களுக்கு லேகியத்திற்க்கு அவசியமே இல்லை. இதோ நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த பட்டிமன்றத்தை தொடங்கிவிட்டேன். இதில் வாதங்களை தட்டச்சு செய்யும் போதே உங்களுடைய ஜீரணக் கோளாறு நீங்கி விடும் :) (தலைப்பை தந்த தோழி மேனகாவுக்கு நன்றி)

இதோ பட்டியின் தலைப்பு :-

$$$$$$$--------- $$$$$$$---------$$$$$$$--------- $$$$$$$---------$$$$$$$

உலகில் சிறந்தது கல்வியா? செல்வமா?

$$$$$$$--------- $$$$$$$---------$$$$$$$--------- $$$$$$$---------$$$$$$$

பட்டியின் புதியவர்கள் கவனத்திற்கு :-

1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

தோழிகளே - தோழர்களே வாருங்கள். உங்கள் வாதங்களை இடியென முழங்கி, மின்னலென தாக்கி,மழையென பொழிவீர். ஜல் புயல் சென்னையை தாக்கியது போல, உங்கள் வாதப் புயல்கள் பட்டியை தாக்கவேண்டும்.அதில் நனைய காத்திருக்கிறேன் :)

நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து இடி, மின்னல், மழையில் நனைய காத்திருக்கும் நடுவருக்கு பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்

உங்கள் வாழ்த்துக்கு நன்றி கீதா. விரைவில் உங்களை வாதங்களுடன் எதிர்பார்க்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

முதலில் நடுவருக்கும், தலைப்பை வழங்கிய மேனகாவுக்கும் எனது வாழ்த்துக்கள். சிறந்த தலைப்பு, எந்தப்பக்கம் என ஒரு முடிவுக்கு வந்தபின் வாதங்களுடன் வருகிறேன். பட்டி கலையை கட்ட மீண்டும் ஒரு முறை நாட்டாமைக்கு வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்.

நடுவர் அவர்களே, இன்றைய காலகட்டத்துக்கு தேவையான தலைப்புத்தான்...

தலைப்பு குடுத்த மேனகா அவர்களுக்கும் வாத்துக்கள்.

முழங்கவிருக்கும் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

என் கருத்துக்களுடன் நாளை வருகிறேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நடுவருக்கும், நாட்டாமைக்கும் வாழ்த்து கூறிய யோகலஷ்மிக்கு நன்றி. வாதங்களுடன் உங்களை வரவேற்க காத்திருக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யோகராணி, உங்களை பட்டிக்கு அன்புடன் வரவேற்கிறேன். சீக்கிரம் வாதங்களோட வாங்க. வாழ்த்துக்கு நன்றி.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவருக்கும் தோழிகளுக்கும் என் அன்பான வணக்கங்கள்.

நடுவருக்கு ஏன் இந்த சந்தேகம்?! கண்டிப்பாக கல்விதான் சிறந்தது.

கல்விதான் நிலையானது. பஞ்ச பூதங்களாலும் அழிக்க முடியாததுன்னு ஒன்னு இருக்குன்னா அது ஒருவன் பெற்ற கல்விதான். செல்வம் இன்று ஒருவனிடம் என்றால் அது நாளை மற்றொருவனிடம். செல்வோம் செல்வோம் என்று இருப்பதால்தான் அது செல்வம். நிலையற்றது. நிலையற்றது எப்படி சிறந்ததாக இருக்க முடியும்.

செல்வம்தான் சிறந்ததுன்னா ஏனுங்க எல்லாரும் குழந்தைகளைப் படிக்க வைக்கணும்னு நினைக்கறாங்க? ஏன்னா சாதாரண ஏழையிலிருந்து பணக்காரன் வரை அத்தனை பேருக்கும் தெரியும் கல்வியின் அருமை பெருமை.

கம்பன் புகழ் இன்று வரை நிலைத்திருக்க காரணம் அவர் கற்ற கல்வியும் அதனால் அவர் படைத்த கம்பராமாயணமும்தானே தவிர செல்வமல்ல! அந்த காலத்தில் உள்ள பணக்காரனின் பெயர் இந்த அளவுக்கு நிலைத்திருக்கிறதா?

கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கல்வியை லாக்கரில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. செல்வம் அப்படி இல்லை. அதிகமா இருந்தாலும் பிரச்சினை இல்லைன்னாலும் பிரச்சினை. அதிகமா இருந்தா புள்ளை குட்டிகளை கடத்திட்டுப் போய் பணப் பறிக்கரானுங்க. சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. இல்லைன்னா புவாவுக்கே லாட்டரி அடிக்க வேண்டியிருக்கு.

ஆனா கல்வி இருக்குப் பாருங்க எத்தனைப் படித்தாலும் படிக்கப் படிக்கச் சிறப்புதான். ஏட்டுக் கல்வி பயிலவில்லைன்னாலும் அனுபவக் கல்வி மூலம் முன்னேறி விடலாம். அதுதாங்க கல்வி.

இன்னிக்கு உலகமே இந்தியாவைப் பார்த்து பயப்படுவதும் வியப்பதும் இந்தியாவிடம் இருக்கும் பொருட்செல்வத்தைப் பார்த்து அல்ல. இந்தியர்களின் கல்வி அறிவையும் மூளையையும் பார்த்துதான். இன்னிக்கு உலகம் பூராவும் இந்தியர்கள் இருக்காங்கன்னா அதுக்குகாரணம் பொருட்செல்வம் இல்லை நடுவரே! நம்மிடம் இருக்கும் கல்வி! நம் பெற்றோர் நமக்குக் கொடுத்த கல்வி!

எதிரணி சொல்லப் போகும் செல்வம் இதுக்குப் பின்னாடிதான். அதனால் கல்வியே சிறந்ததுன்னு என் முதல் சுற்று வாதத்தை நிறைவு செய்கிறேன். மீண்டும் வருவேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்!

பின்குறிப்பு: இந்த முறை பக்கம் பக்கமாக தோழிகள் வாதம் செய்து நடுவரைத் திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்க்களுக்கு என் வணக்கம்.

செல்வமே சிறந்தது,ஏன்னா நமக்கு வாழ்க்கைக்கு பொருள்யீட்ட,தேவையானவற்றை வாங்க செல்லவம் தேவை.

என்னதான் படித்திருந்தாலும் சாப்பிடறதுக்கு உணவு காசு கொடுத்துதான் வாங்க வேண்டும்,சும்மா எவரும் கொடுக்க மாட்டாங்க.நீங்க சொல்லற கல்வியை கற்க இந்த செல்வம் வேண்டும்.

எதிர் அணியில் சொன்னார்கள் கல்வியே சிறந்து என்று, அதற்கு எதற்க்கு எல்லோரும் வெளிநாட்டில் வேலை செய்ய போகிறார்கள். ஏன் என்றால் அங்கு கிடைக்க கூடிய அதிகப்படியான சம்பளம்.

இதில் இருந்து புரியவில்லையா செல்வமே சிறந்த என்று.

வாழு இல்லை வாழவிடு

பட்டி மன்றத்திற்கும், நடுவரான நாரதர் அவர்களுக்கும், முழங்கப்போகும் வாத வித்தகர்களுக்கும் வாழ்த்துக்கள். நாரதர் என்று சொன்னது கல்வியா, செல்வமா, வீரமா என்ற திரைப்படத்தின் பாதிப்புதானே தவிர நடுவர் கோபம் கொள்ளக் கூடாது.

அன்புடன்
THAVAM

வாம்மா... மின்னல். உங்களத்தான் காணோமேன்னு நைட்டு முழுக்க தூங்காம தேடிட்டு இருந்தேன் :) இனி என் பாடு திண்டாட்டம் :(

//நடுவருக்கு ஏன் இந்த சந்தேகம்?! கண்டிப்பாக கல்விதான் சிறந்தது// எல்லாரும் பணங்காசுன்னு செல்வத்து பின்னாடி போறதால நானே கொழம்பி போய்ட்டேன் அதேன் :)

//செல்வம் இன்று ஒருவனிடம் என்றால் அது நாளை மற்றொருவனிடம். செல்வோம் செல்வோம் என்று இருப்பதால்தான் அது செல்வம்// செல்வத்துக்கு இப்புடி ஒரு எக்ஸ்பிளனேஷன் இருக்கா? நமக்கு தெரியாம போச்சே.

//செல்வம்தான் சிறந்ததுன்னா ஏனுங்க எல்லாரும் குழந்தைகளைப் படிக்க வைக்கணும்னு நினைக்கறாங்க?//வாஸ்தவம் தான் செல்வம் தான் பெருசுன்னா ஏன் படிக்க அனுப்புறாங்க?

//கம்பன் புகழ் இன்று வரை நிலைத்திருக்க காரணம் அவர் கற்ற கல்வியும் அதனால் அவர் படைத்த கம்பராமாயணமும்தானே தவிர செல்வமல்ல//இது பாயிண்டு.... கம்பர நமக்கு எப்படி தெரியும்? கம்பராமாயணத்த எழுதனதால தானே?

//கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..அதிகமா இருந்தா புள்ளை குட்டிகளை கடத்திட்டுப் போய் பணப் பறிக்கரானுங்க. சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது//படிச்சவனுக்கு எங்க போனாலும் தனி மரியாதையே இருக்கு. சமீபத்துல கோவை குழந்தை கடத்தல், கொலைன்னு நடுவர ரொம்பவே அப்செட் பண்ணின சம்பவம் :( பணம், பொணமாக்க கூட தயங்குறதில்லை போல.

//ஏட்டுக் கல்வி பயிலவில்லைன்னாலும் அனுபவக் கல்வி மூலம் முன்னேறி விடலாம்//இந்தியர்களின் கல்வி அறிவையும் மூளையையும் பார்த்துதான்//அதானே ஏட்டுக் கல்வி இல்லைனாலும், அனுபவக்கல்வில வாழ்க்கைய ஒப்பேத்திக்கலாம். செல்வத்துல இதெல்லாம் நடக்குமா? வெளிநாட்டுக்காரவங்களே நம்ம மூளைய பார்த்து என்னமா பீதி அடைஞ்சு போயிருக்காங்கன்னு இவங்களுக்கு எங்க தெரிய போகுது :)

//இந்த முறை பக்கம் பக்கமாக தோழிகள் வாதம் செய்து நடுவரைத் திக்கு முக்காடச் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் :-)//
இந்தாம்மா கவிசிவா, வந்தோமா ஏதோ பேசினோமான்னு போய்கிட்டே இருக்கோனும். அத வுட்டுட்டு இப்பிடி போட்டுக்குடுக்குற வேலயெல்லாம் பார்க்கப்படாது. சொல்லிட்டேன்..ஆமா ;))

எதிரணிகாரர்களே, கவிசிவா தன் வாதத்தை மின்னலென தாக்கி தொடங்கி வைத்துவிட்டார். அவருக்கு பதில் சொல்ல உங்க யாருக்காவது தில் இருக்கா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்