யாராவது muscatல் இருக்கிறீர்களா....

ஹாய் தோழீஸ் எல்லாரும் நல்லா இருக்கிங்களா எனக்கு ஒரு சின்ன உதவி வேண்டும்,யாராவது muscatல் இருக்கிறீர்களா அங்கு என்ன இடம் சுற்றி பார்க்க உள்ளது, ஹோட்டலில் தங்குவதர்க்கு எவ்வளவு ஆகும், நம்ம ஊர் சப்பாடு கிடைக்குமா என்று சொல்லுங்களேன்,யாராவது துபாயிலிருந்து சென்று இருக்கிறீர்களா,அப்படினா அந்த அனுபவத்தையும் சொல்லுங்கள்......
eid holidaysக்கு நாங்களும் இன்னொரு friend familyயும் செல்லலாம் என்று இருக்கிறோம்......

அப்படியே ஒமான் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க, வீசா டீடெய்லும் சொல்லுங்க நாங்க சார்ஜா வீசால இருக்கோம்;-) மூணு நாள் லீவுல எங்கெல்லாம் போகலாம் என்பது பத்தியும் சொல்லுங்க.

ஷெரிஸ் உங்க இழைக்குள்ள பூந்து கேட்டுடேன்னு கோபப்படாதீங்க ;-)

Don't Worry Be Happy.

நான் இருக்கேன்பா, அடுத்த பதிவில் விபரம் போடுகிறேன். மஷ்கடோ,சலாலாவுக்கோ வாறீங்கள்.சலாலா மஷ்கட்டின் இன்னொரு state,ரொம்ப அழகான இடம்.gulf இல் இப்படி குளிரா என ஆச்சரியப்படுத்தும் இடம்....
நீங்கள் கேட்டவை அடுத்த பதிவில் சொல்கிறேன்.....

ஹாய்! நல்லா இருக்கீங்களா?

ஹோட்டல் விபரம் பற்றி கேட்டிருந்தீங்கள்
* hotel apartment-25Ro-35Ro(250dh-350dh)+with breakfast
நான் கூறியது அவறேசான ஹோட்டல் அபாட்மண்ட்,
இதைவிட குறைவு என்றால்,சுத்தம், வசதி என்பன பெரியளவில் எதிர்பார்க்கமுடியாது

*இந்தியன் சாப்பாட்டுக்கடகள் நிறைய இருக்கு,(சரவணபவன், ஹமாட்) இவை உங்களுக்கு தெரிந்தவை,
ஏனென்றால் நான் டுபாய்க்கு வந்தபோது இங்கு சாப்பிட்டுருக்கன்:)

நிரைய இடங்கள் பார்க்க இருக்கு...... டுபாயை விட ஓமான் இயற்க்கைத்தன்மை கூடுதலா இருக்கும்.
அழகான கடற்கரைகள் இருக்கு,கடலுக்குள் மலை,
மணல்த்திட்டுகள் இப்படி பார்க்க நல்லாவே இருக்கும்,( நம்ம சூர்யா சிங்கத்தில் இந்த இடங்களில் டூயட் பாடி இருக்கார்:):) )

Jabal Akhdar- ரொம்ப அழகான இடம், ஆனால் மஷ்கடில் இருந்து அதிக தூரம்,இங்கு இருந்து போக 5 hrs க்கு மேல ஆகும்
,இங்கு குளிர் மைனசில் கூடப் போகும்,,,போய்தங்கியும் வரலாம் ஃபமிலியாகப் போனால்.

நாங்கள் போன ஈத்துக்கு ”ஹந்தாப்” என்று ஒரு பீச்சுக்கு போனோம்,
மஷ்கட்டில்தான்,பாறைகளுக்கு நடுவாலை போட்டிங் போகக்கூடயமாதிரி, இங்கு வந்தால் மிஷ் பண்ணிடாதீங்க...

நிறைய இருக்கு ஞாபகப்படுத்தி சொல்லுறேன்...

யெயலக்‌ஷ்மி::
விசா ஒன்றும் பிரச்சனை இல்லை என நிணைக்கிறேன்.
gulf இல் எந்த இடத்துக்கும் போகலாம் என நினைக்கிறேன்,
நாங்கள் டுபாய்க்கு வந்தனாங்கள் ஒன்றும் பிரச்சனையில்லை....
வேறு ஏதாவது கேட்கனும் என்றால் கேளுங்க....ஓகேவா :)

ரொம்ப நன்றி தர்சி, உங்கள் பெயரை தெரிந்துக்கொள்ளலாமா.நான் ரொம்ப நல்லா இருக்கேன்.என் கணவர் internetல் search செய்த போது safeer plaza hotel apartmentல் ரூம் உள்ளதாக இருந்தது,30 OR அந்த ஹோட்டல் அபார்ட்மண்ட் சிட்டியில் உள்ளதா,இப்படி internetல் book செய்யலாமா...( eid நேரத்தில் நேராக வந்தால் room கிடைக்காது என்று நினைக்கிறேன்.).னீன்கல் சொன்ன இடம் எல்லம் பார்க்க ரொம்ப ஆசையாய் உள்ளது,

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

உடனே பதிலளித்தமைக்கு நன்றிபா;-)

நாங்க போன ரம்ஜானுக்கு ஒமான் வழியா அலெய்னுக்கு புறப்பட்டோம் ஆனா ஒமான்குள்ள ஒரு கேள்வியும் கேக்காம ஐடி கார்ட மட்டும் பாத்து அலொவ் பண்ணிட்டாங்க. ஆனா அலெய்னுக்குள்ள போக அங்கிருந்த இமிக்ரேசன்ல விடல. விசா கேட்டாங்க. யூ.ஏ.இக்குள்ள போறதுக்கு யூ.ஏ.இ. விசா உள்ள ஆளையே விடலை. ரொம்ப ஏமாற்றமா வந்த ஒமான் வழியாவே திரும்பி வந்தோம்;(

அதேமாதிரி ஒமானுக்குள்ள ரூட்ஸும் தெரியாது தெரிஞ்ச அரபில விசாரிக்கமுடிஞ்சாகூட அங்க என்ன இருக்கும்னு தெரியாததாலயும் ஒருவேளை ஊருக்குள்ள விசா இல்லாம போறது பிரச்சனையாயிருச்சுனா என்ன பண்றதுன்னு ஒரு பயத்திலேயும் உள்ளபோயி சுத்தி பாக்கறத கைவிட்டுட்டு திரும்பி வந்துட்டோம்;( நேரமும் குறைவா இருந்தது.

Don't Worry Be Happy.

நான் நல்லா இருக்கேன்.
எங்கட ரிலேட்டிவ்ஷ் போன ஈத்துக்கு ஓமானுக்கு வந்தவை, ஆனால் பிரச்சனை இருந்தமாதிரி தெரியலை, பிரச்சனை என்னெம்றால் இங்கு பொலிசில் இருப்பவைக்கு ஆங்கிலம் சுத்தமாத்தெரியாது....எப்படி விளங்கவைப்பது..
* AL Maha hotel apartment
*Damas hotel( இதை விசாரிச்சுப்பாருங்கோ) 30RO க்குள் தான் வரும்.
* AL Reef hotel
இவை என்க்கு தெரிந்தவை,ஓகே ரைப்:)

.jayalakshmi: ஓமானுக்கு வாறது பிரச்சனை இல்லை என்று நினைக்கிறன்,என்னுடைய கணவரிட்டை கேட்டிட்டுச் சொல்லிறன்,(office க்கு போட்டார்)

ஷெரிஷ்! ஹோட்டலில் புக் பண்ணுவதாக இருந்தால், முற்கூட்டியே செய்ங்க,
ஈத் ரைம் இல்லையா, நல்ல ரூம் கிடைக்காமல் போகலாம்,
நீங்க இந்தியாவா? நான் இலங்கை
. இங்கு 3 வருடங்களாக இருக்கோம்.

எனக்கு டுபாயை விட ஓமான் பிடித்திருக்கு:)

ஹாய் ரிஷ்வானா அஸ்ஸலாமு அலைகும் ப....எப்படி இருகிங்க....ரொம்ப நாள் ஆச்சு ப உங்க கிட்ட பேசி...நாங்க சலாலா போலாம்னு இருக்கொம் பா ..இன்ஷா அல்லாஹ் ...மஸ்கட் 2008 ல போனோம்...அங்க நாங்க நிஸ்வா போர்ட் ,ஹூதா கேவ்ஸ் ,பீச் ,ஸ்பீட் போடிங் போனொம் ப...ரொம்ப நல்ல இடம்.. சலாலா இதான் முதல் தடவை போரொம்...

hi tharsi

muscatல் 2bedroom hall என்ன rangeல் கிடைக்கும் என்று சொல்லுங்கள்.இன்னும் muscatல் 2 நாட்கள் தங்கி பார்க்கவேண்டிய இடங்களை பற்றி விவரமாக சொல்லுங்கள். நீங்கள் சொன்ன jabel akhdar 1 நாளில் சென்று பார்க்க முடியுமா.உங்களுக்கு தெரிந்த hotel apartmentஎதுவும் இருந்தால் சொல்லுங்கள் இங்கிருந்து book செய்ய முடியுமா என்று பார்கிறோம்.ரொம்ப கேள்விகேட்டுவிட்டேனா sorry:)
நான் இந்தியா, நான் muscat வருவது இதுதான் முதல் முறை,ஆனா hatta,musandam வந்திருக்கிறோம்

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

ஹாய் பர்ஜானா வலைகும்சலாம் நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்கே.laptop repair,அப்புறம் vacationபோயிட்டு வந்து பொண்ணுக்குட நேரம் சரியாஇருந்துச்சு அதனாலதான் அறுசுவை பக்கம் எட்டி பார்க்க முடியல........சலலாவில் இப்பொ நல்ல climateஆ...
muscatபோனதாக சொன்னீர்கள் அங்கே எந்த hotel apartmentல் தங்குனீங்க என்று சொல்லுறீங்களாபா....

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

மேலும் சில பதிவுகள்