அவரைக்காய் மசாலா

தேதி: November 8, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (6 votes)

 

அவரைக்காய் - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
பூண்டு - இரண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
அரைக்க:
தேங்காய் பூ - 2 தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி


 

வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
அவரைக்காயை கழுவி நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு தூவி நறுக்கின அவரைக்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். ஏற்கனவே அவரைக்காய் வதக்கியதால் சீக்கிரம் வெந்துவிடும்.
காய் வெந்ததும் அரைத்த தேங்காய், மிளகு, சோம்பு விழுது சேர்க்கவும்.
நன்கு கொதித்தவுடன் உப்பு, காரம் சரிப்பார்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.
சுவையான அவரைக்காய் மசாலா தயார். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாக்கவே ஆசையா இருக்கு!

இரவுக்கு இது தான் :)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹர்ஷா, எப்படியிருக்கீங்க பா? சீதாம்மா சொல்லி தான் நீங்க கர்ப்பமா இருக்கற விஷயமே தெரியும் பா. வாழ்த்துக்கள். உடம்பை பார்த்துக்குங்க. சுகப்பிரசவமாக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

அவரைக்காயை பாக்குறது அம்மாவ பாக்குற மாதிரி இருக்குப்பா. இங்கெல்லாம் அவரைக்காயை நினைச்சுக் கூட பார்க்க முடியாது. உங்கள மாதிரி தோழிகள் குறிப்பு தந்தீங்கன்னா அதுல பார்த்துக்க வேண்டியதுதான். மிகவும் வித்தியாசமான குறிப்பு. நான் இந்தியா போனதும் செய்து பார்த்து, உங்களுக்கு என்னை நினைவிருந்தால் பதில் தருகிறேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோன்ற அசத்தலான குறிப்பை தரவும் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும்,அறுசுவை குழுவினருக்கும் எனது நன்றிகள்.

ஆமி,
முதல் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.கண்டிப்பா செய்து பாருங்க.பதிவுக்கு நன்றி.

கல்ப்ஸ்,
உங்க வாழ்த்துக்கும்,அன்புக்கும் ரொம்ப நன்றி.
எனக்கு முருங்கைக்கீரை கிடைக்காதது போல்,உங்களுக்கு அவரைக்காயா?அவரைக்காய் கிடைக்கும் போது செய்து பாருங்க பா.பதிவுக்கு நன்றி.

ஹர்ஷா எப்படி இருக்கீங்க...?
முதலில் நீங்கள் தாயானதற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.

அவரைக்காய் மசாலா பார்க்கவே நன்றாக உள்ளது.தேங்காய் சேர்க்காமல் தான் செய்துள்ளேன்.அதுவும் பிரட்டினாற் போல் தான் செய்வோம்.இது போன்றும் அவரைக்காய் வாங்கும் போது செய்து பார்த்துவிடுகிறேன்.
வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் ஹர்ஷா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

முதல் நீங்கள் தாயக போவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்பொழுது தான் உங்களின் இந்த குறிப்பை செய்து சாப்பிட்டு விட்டு வருகிறேன்......நமக்கு எங்கு அவரைக்காய் எப்பொழுதாவது தான் கிடைக்கிறது.....நீங்கள் கரெக்டா அந்த டைம் பார்த்து இந்த குறிப்பை அனுப்பி உள்ளீர்கள்.....வித்தியாசமான சுவையுடன் இருந்தது. ரொம்பவே நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அப்சரா,
உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க.நானும் முதலில் தேங்காய் இல்லாமல்,பொரியல் மட்டும் தான் செய்வேன்.இது ஒரு தோழியின் குறிப்பு.செய்து பார்த்தேன்.எனக்கு ரொம்ப பிடித்தது.நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.உங்க பதிவுக்கு நன்றி.

லாவண்யா,
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.இது இரண்டாவது குழந்தை.
அவரைக்காய் மசால் செய்து சாப்பிட்டு,பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.இங்கு NJ-ல்,அவரைக்காய் நிறைய கிடைக்கிறது.உங்களுக்கு கிடைக்காதா?உங்கள் பதிவுக்கு நன்றி.

mikavum nanru today lunch special my home.thank u aunty.

அவரைக்காய் மசால் செய்து பார்த்து,உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.உங்க பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி.நான் ஆன்ட்டி இல்லைங்க.சின்ன பொண்ணுதான்.

Nice reciepe veg masala dish thankx

Very tasty recipe. Thank you.