எக் ஃப்ரைட் ரைஸ்

தேதி: November 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (13 votes)

 

1. பாசுமதி அரிசி - 1 கப்
2. முட்டை - 2
3. கோஸ் - கொஞ்சம்
4. கேப்சிகம் - 2 கலர்ஸ் கொஞ்சம்
5. மிளகு தூள் - தேவைக்கு
6. உப்பு - தேவைக்கு
7. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி (விரும்பினால்)
8. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி


 

அரிசியை கழுவி 1/2 மணி நேரம் கழித்து உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து வைக்கவும்.
முட்டையை லேசாக உப்பு சேர்த்து அடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய கோஸ், நறுக்கிய கேப்சிகம் சேர்த்து வதக்கவும்.
லேசாக வதக்கிய பின் முட்டையை ஊற்றி நன்றாக பிரட்டவும்.
முட்டை முழுவதும் வெந்ததும் வேக வைத்த சாதம் சேர்த்து பிரட்டவும்.
பின் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கி கடைசியாக விரும்பினால் எலுமிச்சை சேர்த்து எடுக்கவும்.


விரும்பினால் பாதி வெங்காயம் நறுக்கி காயுடன் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Will it be good without onions ??????

கண்டிப்பாக நன்றாகவே வரும். விரும்பினால் வெங்காயம் சேர்த்துக்கங்க. இல்லன்னா வெங்காய தாழ் கூட பயன்படுத்தலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா