கோஸ் பொரியல்

தேதி: November 9, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

1. கோஸ் - 1/4 கிலோ
2. பச்சை மிளகாய் - 2
3. எண்ணெய் - 2 தேக்கரண்டி
4. கடுகு - 1/2 தேக்கரண்டி
5. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. உப்பு
8. கறிவேப்பிலை


 

கோஸ், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய், கோஸ் சேர்த்து வதக்கி பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
வெறும் கடாயில் கடலைப்பருப்பு, சீரகம் வறுத்து பொடிக்கவும்.
கோஸ் வெந்ததும் இந்த பொடியை தூவி எடுக்கவும்.


விரும்பினால் தேங்காய் துருவலும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வாணி வாசு
நீங்கள் தந்துள்ள கோஸ் பொரியல் தேங்காய் இல்லாமலே சுவையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தைரியமாகச் சாப்பிடலாம். நன்றி.
எஸ்.ஏ.பூரணி

AnbE Sivam

பூரணி... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இஞ்சிக்குழம்புக்கு, பெஸ்ட் காம்பினேஷன் இந்த கோஸ்பொரியல்தான்.

கோமு... மிக்க நன்றி. நிறைய குறிப்பை செய்து பார்த்து சொல்லி சந்தோஷபடுத்திடீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Kose poriyal super ra erunthathu akka
Today special kose poriyal than

Easy ya eruku akka pantrathuku
Taste ty yavum erunthathu
Diferent taste akka

ML