7 மாதக்குழந்தை motion problem

என்னுடைய குழந்தைக்கு 7 மாதம் முடிந்தது. அவளுக்கு 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் தான் குடுத்தேன். இப்பொழுது தான் கொஞ்சம் இட்லி, கஞ்சி சாப்பிட்டு பழகுறா. அவளுக்கு 5 or 6 times motion loosa போகும். 2 weeks முன்னாடி dr கிட்ட கேட்டதுக்கு அது normal தான் motion green color ல போனா மட்டும் hospital வாங்கன்னு சொன்னாங்க. இப்ப ஒரு 5 days ஆ motion சில சமயம் green color ல இருக்க மாதிரி இருக்கும் அடுத்த time பார்த்துட்டு hospital போகலாம்னு பார்த்தா yello color ல இருக்கும். இன்று காலை green color la motion இருந்ததால doctor கிட்ட கூட்டிட்டு போய் motion test பண்ணி பார்த்தா குழந்தைக்கு ஜீரண சக்தி சுத்தமா இல்லை குடல் பழுத்து இருக்கு தாய்ப்பால் கூட குடுக்க கூடாதுனு சொல்லிட்டாங்க. இட்லி மற்றும் அரிசி கஞ்சி குடுக்க சொன்னாங்க. பாப்பா பால் குடிக்காம இருந்து பழக்கம் இல்லாததால் அழுதுகிட்டே இருக்கா. அவளாக தூங்கி பழக்கம் இல்லை பால் குடித்துகிட்டு தான் தூங்குவா. doctor பால் குடுத்தீங்கன்னா motion இன்னும் அதிகமாகும் admit பண்ணி trips போடவேண்டியது தான் என்று சொல்கிறார். friends யாருக்காவது இதைப் பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன். மிகவும் கவலையாக உள்ளது.

சில குழந்தைகளுக்கு சில சமயம் பச்சையாக இருக்கும் ..அது பெரிய ப்ரச்சனை எல்லாம் இல்லை...இப்படி திடீர்னு தாய்ப்பாலை கூட நிறுத்த சொன்னால் அது என்னவோ எனக்கு சரியா படல...வெஉம் தாய்ப்பால் மட்டும் கொடுங்கன்னு சொன்னா கூட தேவலை

இது என்னவோ எனக்கு டவுட்டா இருக்கு...வேறொரு நல்ல மருத்துவரிடமும் சென்றுபாருங்கள்..

தளிகா சொல்வதைப் போல் வேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.
என் பையனுக்கு இதே பிரச்சனை ஏழு மாதத்தில் வந்தது. நான் தாய்ப்பால் மட்டும் தந்ததால் சிலசமயம் திட உணவு குறைவால் இப்படி ஆகலாம் திட உணவு அளவை அதிகபடுத்த சொன்னார் மருந்துவர். குழந்தை எடை எப்படி அதிகரிக்கிறது?

எனக்கும் பத்து மாத குழந்தை இருக்கிறான்,இதே பிரச்சனை வந்தது...அதெல்லாம் நார்மல் தான்.ஒன்னும் பயப்பட தேவை இல்லைன்னு டாக்டர் சொனங்க..என் பையனுக்கு தொடர்ந்து இருவது நாள் பச்சை யும் மஞ்சளும் ஆ மாறி மாறி கொஞ்சம் கொஞ்சம் அஹ போகும்..எதாவது சாப்பிட குழந்தைக்கு குடுதுடே இருக்கனும்...நீங்க வேற ஒரு நல்ல டாக்டர் ஆ பாருங்களேன் தோழி..பயபடதிங்க..இது நார்மல் தான்..

எனக்கு 4 மாத baby இருக்கு என் பையனுகும் இதே pboblem தான். அப்பொ அப்பொ 5 r 6 சிரகம் பொட்டு water கொதிகா வைத்து பால் ல காலது குடுபேன். சரியஅ அய்டும்.
நிரய water குடிக குடுகா சரியா அய்டும். பயப்டதிக

மிக்க நன்றி thalika, VidhyaSaravnan,vidhyab4u and rionz.
doctor நல்லவர் தான். நாங்கள் தான் தப்பு செய்து விட்டோம். பாப்பாக்கு motion lighta green colora இருக்கும் போதே doctor கிட்ட போயிருக்கணும்.
குழந்தைகளுக்கு loose motion ஆச்சுன்னா நிறைய time தாய்ப்பால் குடுக்கிறதை நிறுத்தி அரிசி கஞ்சி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி கஞ்சி நிறைய குடுத்து கொஞ்சமா பால் குடுக்கணும்.
நான் பாப்பாக்கு புதுசா குடுத்த சாப்பாடு தான் ஒத்துக்கலைன்னு maximum தாய்ப்பால் தான் குடுத்துட்டு இருந்தேன். அதனால பால் அவளுக்கு ஜீரணிக்க முடியாம குடல் புண் ஆக ஆரம்பிச்சிடிச்சி.
நான் பால் குடுக்க ஆரம்பிக்கவும் motion போயிருவா. அப்பவே dr கிட்ட கேட்டிருக்கணும்
இப்ப நேற்று பால் நிறுத்தியதில் இருந்து இன்னும் motion போகல. motion ஒரு time சரியா போனதும் பால் குடுக்க சொல்லியிருக்கார்.
ரொம்ப அழுதா ஒரு time குடுக்க சொல்லியிருக்கார். குடல் ரொம்ப infect ஆகி இருக்காம். இப்ப பால் தொடர்ந்து குடுத்தால் பால் அலர்ஜி மாதிரி வந்திரும் so ஒரு 2 days wait பண்ண சொல்லியிருக்கார்.

எனக்கு 8 மாத குழந்தை உள்ளது. அவனுக்கு எப்பொழுதும் Green color motion போகும். Its very rare to see his poo in yellow color.அதற்கு எங்கள் Pediatrician சொன்ன பதில், அவனுக்கு சீக்கரம் Digest ஆவது தான் காரணம். அது மட்டும் இல்லாது அவன் சாப்பிடும் உணவில் அதிக இரும்பு சத்து இருந்தாலும் பச்சை நிறத்தில் தான் வெளியே போகும் என்று சொன்னார்.இதை நினைத்து பயபட வேண்டாம் என்று சொன்னார்.

மேலும் சில பதிவுகள்