உடல் எடை அதிகரிக்க வழி சொல்லுங்க

நான் ஒல்லியாக இருக்கிறேன்,என் உடல் எடை அதிகரிக்க எதேனும் வழி சொல்லுங்க

தோழி மதுமதி முதலில் ஒல்லியாக உள்ளதாக நினைத்து கவலைப்பட வேண்டாம்.கவலை நோயின் முதல் காரணி . தினமும் எட்டு மணி தூங்க வேண்டும் .மதியம் சாபிட்டுவிட்டு இரண்டு மணி தூங்க வேண்டும் .கர்ட் + நெய் மதியம் சேர்க்கவும் .பால் சேர்ந்த நல்ல இனிப்பு கலை சாப்பிடவும் .வாரம் ஒரு முறை நல்ல brand ஐஸ்கிரீம் சாப்பிடவும் .மீதி நேரம் கிடைக்கும் போது பதிவு இடுகிறேன் by சௌமியன்

மதுமதி நல்லா இருக்கீங்களா?
நமக்கெல்லாம் எப்படி எடை குறைப்பது என்று பிரச்சனை:)
எங்கேயோ படித்தது: பாலில் காய்ந்த திராட்சை ஊரப்போட்டு இரவில் பருகினால் எடை அதிகரிக்கும் என்று.
கொளுப்பு அதிகமான உணவுகள் அதிகம் எடுக்கும் போது எடை அதிகரிக்குதோ இல்லையோ தெரியாத நோய்யெல்லாம் வரிசையில் வரும்.
தரமான உணவுகள் எடுத்துக்கோங்க, நன்றாக பால் குடிங்க, சிலருக்கு பரம்பரையில் மெலிதானவர்கலா இருப்பினம், என்னோட அக்காவும் சரியான ஒல்லி ஆனால் ரொம்ப பலசாலி, அதுதானே வேணும். கவலைப்படாதீங்க...

///எங்கேயோ படித்தது: பாலில் காய்ந்த திராட்சை ஊரப்போட்டு இரவில் பருகினால் எடை அதிகரிக்கும் என்று.///
அப்படியா தர்சி நானும் முயற்சிக்க போறேன். நான் இதுவரை பாலில் தேனை கலந்து தான் சாப்பிட்டுகிட்டு இருந்தேன் ஆனாலும் ஒரு மாற்றமும் இல்லை. இதையாவது செய்வோம்.

வெள்ளை சுண்டல் கடலையை இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சரி மஞ்சு மேடம் இதையும் முயற்சி செய்றேன் காலைல் கொண்டைகடலை இரவில் திராட்சை போட்ட பால் எப்படியும் 4 அல்லது 5 கிலோ ஏறனும் 2011ல பார்க்கலாம்.

udal edai athikarikka poosanikkaayin, dry seeds, saappidalaam.athaavathu ularntha poosani, vithaiyin ullirukkum paruppai , saappittaal nanraaha wait podum. ok take care..........

வாழு, வாழவிடு..

Hi,
I had the same problem before joining the medical college. My dad (Doctor) advised and made me to eat Mysore pak everyday so i got the seat in medical college as well as enough weight.By the by you didnt mention your weight you have now and your dream weight.
All the best.

ஹாய் தோழிஸ்
இந்த குறிப்பு நான் அரட்டை பகுதியில் தந்தது, உங்களுக்கு உதவுமே என்று இந்த இழையில் சேர்க்கிறேன்..
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி (கவனிக்க பல் துலக்கி) பின் பழைய சாதத்தில் (அதான் பா முந்தின நாள் மீந்த சாதத்தில் நீர் ஊற்றி வைப்போமே அதேதான்) கட்டி தயிர் சேர்த்து சாப்பிட்டு பின் திரும்பவும் உறங்கி விட வேண்டும் (1 மணி முதல் உங்கள் வசதிக்கு ஏற்ப)... இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்தாலே உங்கள் கன்னம் அழகாக உப்பி உடல் எடை கூடுவதை உணர முடியும்.. மகா ஒல்லியான என் தோழி இவ்வாறு செய்து உடல் எடையை திருமணத்திற்காக கூட்டினாள்...

இந்த குறிப்பு சைனஸ் பிரச்சனையை உள்ளவர்கள் செய்யாமல் இருப்பது நல்லது...

நான் ஒல்லியாக இருக்கிறேன்,என் உடல் எடை அதிகரிக்க எதேனும் வழி சொல்லுங்க

நான் ஒல்லியாக இருக்கிறேன்,என் உடல் எடை அதிகரிக்க எதேனும் வழி சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்