கர்ப்பதடை பற்றிய சந்தேகம்

குழந்தை பிறந்த உடன் தான் கர்ப்பதடை செய்வார்களா?குழந்தை பிறந்து 2,3 மாதம் கழித்து கூட கர்ப்பதடை செய்வார்களா?தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தரவும்.

பிரசவமான்தும் செய்வார்கள்..அல்லது மாதங்களோ வருடங்களோ கழித்து கூட செய்வார்கள்...ஆனால் பிரவசம் முடிந்த கைய்யோடு என்றால் மொத்தமாக ஒரு ரெஸ்ட் எடுக்கலாம் தனியா மெனக்கெட வேண்டாம் என்று தான் அப்பவே செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்

ஹாய் தோழிகளே...
எல்லோரும் நலமா...தொந்தரவுக்கு மன்னிக்கவும்..எனக்கு ஒரு வயசுல ஒரு குட்டி பையன் இருக்கான்..அவன் சிசேரியன் பண்ணி பிறந்தான்....இன்னும் ஒரு வருஷம் இடைவெளியாவது வேணும்னு நினைக்கிறோம்... டாக்டர் கிட்ட கேட்டா copper T போட சொல்லராங்க..ஆனா அது சிலருக்கு ஒத்துக்காதுநு சொல்லறாங்க.. அதனால எனக்கு பயமா இருக்கு...நான் இன்னைக்கு டாக்டர் கிட்ட போய் காப்பர் T பத்தி கேட்டேன்..அவங்க ஒரு injection எழுதி கொடுத்து இருகாங்க...இது 90 நாளுக்கு ஒரு முறை போடணும் நு சொன்னங்க..இது side effects எதுவும் இருக்காதுன்னு சொன்னாங்க...ஆனா periods மட்டும் 3 மாதம் அல்லது 6 மாதம் கழித்து ஆகும் நு சொல்லராங்க...ப்ளீஸ் இது பத்தி தெரிஞ்சா யாரவது சொல்லுங்களேன்...இது நல்லதா??

SaranyaBoopathi

கருத்தடைக்கு பெஸ்ட் மல்டிலோட் காப்பர்_டி தான் மூன்று வருடமோ ஐந்து வருடமோ தேவையானதை வைத்துக்கொள்ளலாம்

மேலும் சில பதிவுகள்