சமைத்து அசத்தலாம் - அசத்தலான பகுதி - 1

நம் தோழி அதிரா துவக்கி வைத்து ரேணுகா துணையுடன் வெற்றி பெற்ற சமைத்து அசத்தலாம் புது பொலிவுடன் மீண்டும் நமக்காக இதோ... அறுசுவையில்.

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

Indra.S.Pillai - 27
mythilibabu - 27
thayaparan vagitha - 26
sumathi_thiru - 26

இவற்றில் இருந்து வரும் 15ஆம் தேதி முதல் 21அம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது கணக்குபிள்ளை யாழினி.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

தோழிகளே நாம் முன்பு பேசியது போல் சமைத்து அசத்தலாம் பகுதி துவங்கி விட்டோம். யாழினி... எங்க இருந்தாலும் ஓடி வாங்கோ. தோழிகளே தினம் சமைப்பதை தினம் சொல்லி போடுங்க இங்க.... கணக்கு எடுக்கும் யாழினிக்கும் சுலபமா இருக்கும்... பார்க்கும் தோழிகளும் போட்டி போட்டுக்கொண்டு இன்னும் நிறைய சமைப்பார்கள். சமைத்து பார்த்த குறிப்புகளுக்கு அவர் அவர் குறிப்புகளில் பின்னூட்டமும் கொடுங்க... தோழிகளை ஊக்குவிப்பதும், பல காலமாக யாரும் காணாத குறிப்புகளை தூசு தட்டுவதுமே இந்த பகுதியின் முக்கிய காரணம். :) அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த பகுதிக்கு யார் வேண்டுமானாலும் அனுப்பலாமா நான் எங்கு எப்படி அனுப்புவது விவரமாக கூறவும்.

வாழு, வாழவிடு..

தோழி... நீங்க நான் குறிப்பிட்டிருக்கும் 4 உறுப்பினர்கள் குறிப்பில் இருந்து இந்த வாரம் விருப்பமான குறிப்புகள் எல்லாம் செய்து பார்த்து என்ன குறிப்பு, யாருடையது நீங்கள் செய்தது போன்றவற்றை இங்கே குறிப்பிடவும். அதே போல் குறிப்பு தந்தவருக்கும் அவருடைய குறிப்பின் கீழ் பின்னூட்டம் கொடுக்கவும். விரும்பினால் அந்த குறிப்புகளை படிப்படியாக படம் எடுத்து, இவருடைய குறிப்பு என்று சொல்லி "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு வெளியிட அட்மினுக்கு நீங்கள் அனுப்பலாம். வாரம் முடியும் போது நீங்கள் மொத்தம் எத்தனை குறிப்புகள் செய்து பார்த்திருக்கிறீங்கள் என்று கணக்கு எடுத்து அதிக குறிப்புகள் சமைத்தவருக்கு வெற்றி மாலை சூடப்படும். :) புரிந்ததா??? யார் வேண்டுமானாலும் இந்த பகுதியில் கலந்துக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி தோழியே நீங்கள் கேட்டவுடன் விளக்கம் அழித்ததர்க்கு..

வாழு, வாழவிடு..

ஆகா...........ஆரம்பிச்சாச்சா?பல மாதங்களுக்குப் பின் மீண்டும் தூசிதட்டி இந்த இழை தொடங்கியதை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.

ஆரம்பித்து வைத்த நம்ம வனிக்கும், நடத்தப் போகும் கணக்குபிள்ளை யாழினிக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

நானும் இந்த சமையல் அரசிகள் நால்வரினதும் சமையல்களில் இருந்து முடியுமானவரை சமைக்கவுள்ளேன்.
மீண்டும் சந்திக்கலாம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இடையூறுக்கு வறுத்தப்படாதீர்கள் எனக்கு ஒரு சந்தேகம் நான் எப்படி தனியாக கேள்வி எதுவும் இருந்தால் எப்படி பதிவு போடுவது நான் புதுசு அதான் கேட்கிரேன் கூறவும் இடையூறுக்கு மன்னிக்கவும்......ருக்சானா

வாழு, வாழவிடு..

ருக்சன!
இது சமைத்து அசத்தும் பகுதி. இதில் இப்படியான கேள்விகளுக்கு பதில் போடுவது தவறு.இருந்தாலும் நீங்கள் புதிது என்றபடியால் சொல்கின்றேன்.

முதலில் முகப்புக்குப் போய் அங்கே மன்றம் என்னும் பக்கத்தை கிளிக் பண்ணி, அதில் எந்த வகையான சந்தேகம் உங்களுடையது என தெரிவு செய்து அங்கே
"புதிய கேள்வி சேர்க்க" என வலதுபக்க மேல் முலையில் இருக்கும் அதை கிளிக் பண்ணி உங்கள் கேள்விகளை சேருங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஆம் தவறுதான் தோழி இனிமேல் செய்யமாட்டேன் மீண்டும் என் நன்றிகள் உஙகளுக்கு ஆனால் அது போல் இல்லை என் பக்கத்தில் ஏன்? மன்னிக்கவும் நீங்கள் புதிய பதிவு போடுங்கள்............

வாழு, வாழவிடு..

எஙகப்பா யாரையும் காணோம்??? சீக்கிரம் வாங்க... நேரம் ஆயிடுச்சே!!!

இன்று என்னுடைய காலை சமையல்:

இந்திரா - வெங்காய சட்னி
மைதிலி பாபு - புதினா துவையல்

கணக்கு.... சரியா கணக்குல வெச்சுக்கனும். சரியா??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம கணக்கை காணோம்... யாழினி... யாழினி... யாழினி... யாராவது பார்த்தா அழைத்து வாங்க இந்த பக்கம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்