படத்துடன் தெரிவதே இல்லை,

ஹாய் தோழிகளே,
என் computer ல் அறுசுவை சமையல் குறிப்புக்களிலும் சரி,கைவினை பகுதியிலும் சரி,படத்துடன் தெரிவதே இல்லை, வெறும் கட்டங்களாக தான் தெரிகிறது,தமிழ் எழுத்துகள் தெரிகிர்றது,படங்களுடன் பார்க்க என்ன வழி, தெரிந்தால் சொல்லுங்கள் தோழிகளே.

ஹலோ சசி எனக்கும் இதே பிரச்சனை இருந்தது நான் கூகுளில் போய் Latha Tamil Font சர்ச்பண்ணி Download பண்ணினேன் பிறகு எனக்கு எழுத்துக்கள் தெரிந்தது

இந்த பிரச்சனைக்கும் Latha font ற்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புகின்றேன். இதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். உங்கள் ப்ரவுசரில் இமேஜ் லோடிங் ற்கு அனுமதி இல்லாமல் இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் அறுசுவை மட்டுமில்லாது, எந்த ஒரு தளத்தில் உள்ள படங்களும் ஓபன் ஆகாது. இதற்கு நீங்கள் ப்ரவுசர் செட்டிங்க்ல் இமேஜ் லோடிங் ஐ எனேபிள் செய்ய வேண்டும்.

மெமரி பிரச்சனை இருந்தாலும் சில நேரங்களில் படங்கள் ஓபன் ஆகாது. கட்டம் கட்டமாக வரும் இடத்தில் மவுசை நகர்த்தி, ரைட் கிளிக் செய்து, show image என்ற ஆப்சனை கிளிக் செய்து பாருங்கள். படங்கள் வரலாம். இப்போது பயன்படுத்தும் ப்ரவுசரைத் தவிர, வேறு ஒரு ப்ரவுசரை இன்ஸ்டால் செய்து அதே பிரச்சனை வருகின்றதா என்பதை சோதித்துப் பாருங்கள். நீங்கள் தற்போது பயன்படுத்துவது என்ன ப்ரவுசர் என்பதையும் தெரிவியுங்கள். உதவ முயற்சிக்கின்றேன்.

மேலும் சில பதிவுகள்