ரீ சைக்ளிங் பொருட்கள்

பழைய பொருட்களை ரீ சைக்கிள் செய்து இன்னும் கொஞ்ச நாள் யூஸ் பண்ணினால் பணமும் மிச்சமாகும் நம் கைவினை திறனும் அதிகமாகும். தோழிகளே உங்களுக்கு தெரிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்

உபயோகித்த பழைய ஹேர் கிளிப் -ல் லேசாக சுரண்டிவிட்டு உங்களுக்கு பிடித்தமான் பேப்ரிக் கலர் அடித்து, கல், ஜமிக்கி ஒட்டி இன்னும் கொஞச நாள் உபயோகிக்கலாம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

பழய சாரி நைட்டி அந்தமாதிரி துணி ஏதாவது இருந்தால் அதை நீள நீளமா கிளிச்சு ஜட பின்னற்துமாதிரி பின்னி பிறகு அதை ரவுண்டா சுத்தி ஒவ்வொரு ரவுன்டேயும் ஊசி நூல் வெச்சு தக்கவும்,அழகான மிதியடி தய்யார்

ஹாய்,, நானும் வறேன் ப,,, பழைய ஓட்டையான பக்கெட்,குப்படப்ப போன்றவற்றில் சின்ன சின்ன செடிகள் வைக்கலாம்,, (புதினா செடி அவசரதிற்கு உதவும் அதனல பயன் படித்தி தூக்கி எறியவேண்டாம்..அதனால நட்டு வைக்கலாம்),, சாதாரண கல் வைத்த சாதா கம்பல்கள் பழையதானால் தூக்கிப்போடுவதற்கு முன்னால் கற்களை எடுத்துவைத்தால் விலைவுயர்ந்த சாதா நகைகலுக்கு கல் விழுந்தால் பயன் படுத்தலாம்,,,,துணிகள் வாங்கும் போது தரும் அட்டை பாக்சை எடுத்து வைத்து அலமரிகலில் பயன்படுத்தும் சின்ன சின்ன மசால டப்பாகலை வைக்க பயன் படுத்தலாம் இதனால் அலமாரிகல் பிசுப்பிசு ஆவதை தவிர்க்கலாம்,,, தவறக கூறி இருந்தால் மன்னிக்கவும்

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

தோழிகளே பழைய காட்டன் சேலைகளை தலையனை உள்ளுறையாக தைக்கலாம் ... கீழேவிழுந்து விரிவுற்ற ப்ளாஸ்ட்டிக் கப்களை ஜிகினா பேப்பர் சுற்றி ஒட்டி கிச்சனிள் ஸ்பூன்களை வைக்கப்பயன் படுத்தலாம்.... ///// அன்புடன் ருக்சானா.....

வாழு, வாழவிடு..

நன்றி தோழிகளே. ஷாப்பர்ஸ் பேக் (குச்சி பை), பழயதாகிவிட்டால் குச்சியை எடுத்துவிட்டு நான்கு மூலையிலும் ஒரு ஓட்டு தையல் போட்டு மிதியடியாக யூஸ் பண்ணலாம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

காலாவதியான மருந்து மாதிரகள் செடிக்கு ஒரமா போடலாம்

மன்னிக்கவேண்டும் ரீனா. இப்படி மாதிரைகளைச் செடிக்கு உரமாக்குவது சரிதானா? பாதகமான விளைவுகள் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறதே. செறிவு அதிகமாக இருந்து அதனால் செடி பட்டுப்போக வாய்ப்பு இருக்கிறது. நிலத்தில் உள்ள மண்புழுக்கள் மற்றும் உபயோகமான நுண்ணங்கிகள் இறந்து போக வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகள் இந்த இடத்தில் விளையாடவும் கூடும். தவிர... எந்தத் தாவரத்துக்கு என்ன உரம் தேவை, எது கூடாது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். எந்த மாத்திரையில் என்ன இருக்கிறது என்பதை எப்படித் தீர்மானிப்பது? இதற்கு மேல்... காலாவதியான மாத்திரையில் நச்சுத் தன்மைதான் இருக்கமுடியும் என்பது என் கருத்து. இவற்றைப் பாதுகாப்பான முறையில் அழிப்பதே நல்லது.

‍- இமா க்றிஸ்

இமாம்மா காலாவதியான ஊட்டச்சத்து மாத்திரைகளை செடிகளுக்கு போடலாம்னு கேள்விப் பட்டிருக்கேன். மற்றபடி ஆண்டிபயாட்டிக் வலி நிவாரணிகள் எல்லாம் தீங்கைதான் விளைவிக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்