பிறந்தநாள் வாழ்த்துக்கள் - 5

அன்புள்ள தோழீகள் அனைவரும் இங்கு வந்து உங்கள் வாழ்த்தை தெரிவிக்கவும்

பவி சொன்னதால் இந்த புதிய இழையை ஆரமித்துள்ளேன். தயவு செய்து இங்கு வந்து உங்கள் பதிவை போடவும்.

வாழு இல்லை வாழவிடு

தவமணி அண்ணா அவர்களுக்கு நவம்பர் 21ம் தேதி பிறந்த நாள்.முன்பே வாழ்த்த வேண்டாமா.வாழ்த்தலாம் வாங்க நண்பர்களே.
அன்பான தவமணி அண்ணா அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.நீங்கள் வாழ்வில் இன்று போல என்றும் பல வளங்களை பெற்று வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

வாழ்த்துக்கள் கூறி, ஆரம்பித்து வைத்த தோழி அம்முலு அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றிகள்.

கல்ப்ஸ்,
///அன்பின் உருவம், நகைச்சுவை சிகரம், கதைகளின் பிறப்பிடம், கொஞ்சும் இலங்கை தமிழ் கிள்ளை, எங்கள் அன்பிற்க்கும், நேசத்திற்க்கும் பாத்திரமான, அன்புத்தோழியும், சகோதரியுமான\\\
அடைமொழி பாராட்டு......அட அப்படியா? ஆனாலும் இது ரொம்ப ஓவர் கல்பனா.நன்றி,நன்றி உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

திவ்யா, மீரா,கவிசிவா,பாத்திமா,மகேஸ்வரி,நித்திலா,கர்சா உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றிகள்.

தேன்மொழி, என்ன கவிதையில் வாழ்த்தா?மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

சுகந்தி, உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
இன்று இந்திரா காந்தி பிறந்த நாளா? அட இரட்டிப்பு சந்தோசம்.

சாந்தினி, யாழினி,மஞ்சுளா,ரீனா, ஸ்ரீமதி,எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

சுமி,இன்று என்ன ஸ்பெசல் என்றுதானே கேட்கின்றீர்கள்.
பரிசுப் பொருட்டகள், சாப்பாடு இவையெல்லாம் வளமையானதுதான்.
அதைவிட......
எனது பிறந்த நாளுக்கு, அறுசுவை அன்பு உறவுகள் வாழ்த்தினார்களே அதுதான் பெரிய ஸ்பெசல்.
எனது வேலைத்தளத்தில் (இந்த நாட்டு)எனது தோழிக்கும் இன்றுதான் பிறந்த நாள்.
எனது நெருங்கிய வட்டத்துள் நவம்பரில் மட்டும் பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் கிட்டத்தட்ட 30 பேர்.
எனது பிறந்த நாள் அன்றுதான் இந்திராகாந்தியும் பிறந்தார்.(சுகந்தி சொல்லித் தெரியும்)
அப்புறம் நான் இருக்கும் இடத்தில் பனிமழை பெய்ததில் இன்று மட்டும் ஒரு அடி உயரத்துக்கு வந்தது.காலநிலை பகல் -5c, இரவு-8c.

பவித்திரா, வாழ்த்து கண்டு சந்தோசம் அடைகின்றேன்.
வயசெல்லாம் கேக்க கூடாது. முப்பதத் தாண்டலைன்னா நம்பவா போறீங்க.

ராதா,வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

உங்கள் எல்லோருடைய வாழ்த்துக்களும் கண்டு மனம் தழுதழுக்கிறது.
கண்ணீர் விழிம்பில் முட்டி நிற்கிறது எனக்கு இத்தனை சொந்தங்களா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் தோழிஸ்,

எத்தனையோ பேருக்கு பிறந்தநாள் வந்திருக்கும்... இனிமே வரும் ...நான் இந்த பகுதியை பார்த்திருக்கேன் ஆனால் பதிவு தான் போட்டதில்லை...
இன்று எனது குட்டி செல்லத்திற்கு பிறந்தநாள்!!! நானும் இங்கே வாழ்த்து சொல்லிகிறேன். HAPPY B'DAY MY SWEET LITTLE HEART...
இழை தொடங்கியவர்களுக்கு எனது நன்றி.

உமா,
எப்படி இருக்கீங்க?உங்க குட்டி பையனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளங்களும்,நலன்களும் பெற்று நிறைவாய் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

உமா உங்க செல்லத்துக்கு பிறந்தநாளா, உங்கள் செல்வத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லி விடுங்கள்..... குட்டி நீ நினைப்பது எல்லாம் நடந்து, எல்லா பெரும் புகழும் பெற வாழ்த்துக்கள்...........

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நம்ம அறுசுவை யின், lovable couples ல ஒரு ஜோடி, நம்ம லதாவினீ.... அவங்களுக்கு இன்னைக்கு ஆறாவது திருமணநாள்.....
இதே அன்போடும், அரவணைப்போடும் பல்லாண்டு, எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.....

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உமா உங்க குட்டி பையனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளங்களும்,நலன்களும் பெற்று நிறைவாய் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.

அன்பான லதா வினீத் இருவருக்கும் எனது மனம் கனிந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.நீங்கள் இன்று போல வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

லதாவினீ,உஙகளுக்கு என்னோட் மனமாற்ந்த திருமண நாள் வாழ்துக்கள்,நீங்கள் என்றும் இதே அன்புடன் வாழவேன்டும் என்று இறைவனெ வேண்டுகிறேன்

மேலும் சில பதிவுகள்