பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

தோழிகளே உங்கள் அனைவரின் ஆக்கப் பூர்வமான அனல்பறக்கும் வாதங்களை எதிர்பார்க்கிறேன் :).

அனைவரும் ஒரு முறை பட்டியின் பழைய விதிமுறைகளோடு புதிய விதிமுறையையும் கவனத்தில் கொண்டு வாதங்களை அள்ளி வீச வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நடுவருக்கு இப்பவே நடுங்குது. நடுவருக்கு யாரேனும் அன்பளிப்புகள் தர வேண்டும் என நினைத்தால் அவற்றை ரகசியமாக தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அது பட்டி தீர்ப்புக்கு பின் நடுவர் தலை மறைவாக வேண்டும் என்றால் அதற்கான நிதியாக பயன்படுத்திக் கொள்ளப் படும். மற்றபடி பட்டிமன்ற தீர்ப்பு அணிகளின் வாதத் திறமையை பொறுத்தே அமையும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நல்ல தலைப்பு...கொடுத்த அப்பாவுக்கு மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பா இந்த பட்டி விறுவிறுப்பா போகும் என்பதில் ஐயமில்லை.

அரசியல் வாதிகள் தான் காரணம் என்ற அணிக்கு வாதாட போகிறேன்!

வாதங்களோடு பிறகு வருகிறேன்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாங்க ஆமினா! அரசியல்வாதிங்கதான் காரணம்னு சொல்றீங்களா! மின்னல் வாதங்களோடு விரைவில் எதிர் பார்க்கிறேன் :)

பட்டி விறுவிறுப்பா போகும். நடுவருக்குத்தான் கிடு கிடுன்னு நடுங்கும் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

காலை வணக்கம் நடுவரே!

நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள். அப்பாவுக்கும் நன்றி, அப்பாவையும் வர சொல்லுங்கள்.

இருவருமே காரணம், ஆனாலும் பட்டியாச்சே நன்கு அலசி ஆராய்ந்து வாதத்தோடு வருகிறேன். அதெல்லாம் போகட்டும் முதலில் அப்படிக்கா வாங்க, இந்த பெட்டியும், நடுக்கத்துக்கு போர்வையும் ரகசியமா தரேன்:-)

அன்புடன்
பவித்ரா

மதிப்பிற்குரிய நடுவர் அவர்களுக்கு வணக்கம்.

பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும் தோழிகள், தோழர்கள், மற்றும் பார்வையிடும் அனைவருக்கும் வணக்கம்!

முதலில் இந்தத் தலைப்பைக் கொடுத்த திரு எம்.பி.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

மனசில் இருக்கிற ஆதங்ககளையும், கருத்துக்களையும் கொட்டித் தீர்க்க, ஒரு மேடை கிடைச்சிருக்கே, எத்தனையோ நாளாக சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லிடலாம்.

நல்ல வேளை, இன்றைய அரசியல்வாதிகள் யாரையும் தனிப்பட்ட முறையில் பெயர் சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஏன்னா, எல்லோரும் ஒரே குட்டையில் ஊறின மட்டையாகத்தானே இருக்காங்க.

நடுவர் அவர்களே, நீங்களும் அரசியல்வாதி ஆகிட்டீங்களா? பெட்டி கேக்க ஆரம்பிச்சுட்டீங்களே - அப்படின்னு கேக்கலாமான்னு நினைச்சேன். ஆனா, ரகசியமாகக் கொடுங்கன்னு நீங்க கேட்டதுல இருந்தே தெரியுது, இன்னும் நிறைய விஷயம் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியிருக்குன்னு!

இன்னிக்கு எந்த அரசியல்வாதிக்காவது நியாயம், தர்மம், மக்கள் சேவை, - இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியுமா? முதலில் இப்படிப்பட்ட சொற்கள் இருக்குன்னு கூட அவங்களுக்குத் தெரியாதே.

தப்பு செய்யறோமே, இது அசிங்கமாச்சேன்னு அவங்க ஏதும் கவலைப்படறாங்களா?

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி! இவங்க செய்யும் முறைகேடுகளினால் அத்தனை அரசு ஊழியர்களும் மௌன சாட்சியாக இருப்பதோடு, பல சமயங்களில் பலியாடுகளாகவும் ஆகி விடுகிறார்களே, இந்தக் கொடுமைய என்னவென்று சொல்ல!

நடுவர் அவர்களே, இது வருகைப் பதிவு. இன்னும் நிறைய கருத்துக்கள் உள்ளே பொங்கிக்கிட்டு(கொதிச்சுகிட்டு) இருக்கு.

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

தவறு செய்பவனும், தவறு செய்ய தூண்டுபவனும்....மே....... காரணம். அரசியம் வாதியை பார்த்து அதிகாரிகள் வாங்குகிறார்கள். அரசியல்வாதி பெட்டி பெட்டியாக வாங்குகிறான், அதிகாரி கட்டுக்கட்டாக வாங்குகிறார். பெரிய வித்தியாசம் இல்லை. பெட்டிக்கும், கட்டுக்கும் உள்ள வித்தியாசம் மட்டுமே.

( மூன்று அணியாக இருக்கலாம். 1) அரசியல்வாதி 2)அதிகாரிகள் 3) இருவருமே. )

அன்புடன்
கண்ணன், துபாய்.

வணக்கம் நடுவரே...
இந்த சூடான தலைப்பை குடுத்து அசத்திடிங்க..நன்றி..
அரசியல்வாதிகள் தான் முழு முதல் காரணம்..குப்பை குள்ள விழுந்த எல்லாமே குப்பை தான்..அரசியலும் அப்படிதான்..
எல்லாரும் வந்து பட்டி மன்றம் கலை கட்டட்டும்..அதுக்குள்ள யோசிச்சிட்டு வந்துடறேன்..தோழிகளே சீக்கிரம் வாங்க!!

இன்றைய நாட்டு நிலவரப்படி அறுமையான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் கவி.தலைப்பை கொடுத்த அப்பாவிற்க்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துவிடவும்.எந்த பக்கம் பேசுவது என குழப்பமாக இருக்கிறது.முடிவு செய்துவிட்டு பட்டிக்கு வருகிறேன்.

இன்றைய நாட்டு நிலவரப்படி அறுமையான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் கவி.தலைப்பை கொடுத்த அப்பாவிற்க்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துவிடவும்.எந்த பக்கம் பேசுவது என குழப்பமாக இருக்கிறது.முடிவு செய்துவிட்டு பட்டிக்கு வருகிறேன்.

நீட்டி முழக்கி பட்டியை ஆரம்பித்து விட்டீர்கள்
மேன்மை தங்கியோருக்கெல்லாம்,என் மென்மையான வணக்கம்.
கொஞ்சம் பொறுங்க.ஒரு சோடா குடிச்சிட்டு வர்றேன்.நான் பொங்கிப் பேசறதுக்கு அது உதவும்.(அப்பறம்,அரசியல்வாதிங்க மேல காலி பாட்டில வீசவும் ஒதவும்)
சூடான வாதம்.சுவையாகத் தொடரலாம்.

சிரிப்பே சிறந்த மருந்து

மேலும் சில பதிவுகள்