பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

நடுவரே

இன்னைக்கு நாடு முவதும் பேசப்படும் ஊழல் பத்தி உங்களுக்கு தெரியும். இப்பன்னு இல்ல. இதுலாம் காலம்காலமா இந்தியாவோட பாரம்பரியம் மாதிரி ரொம்ப காலமா இருக்கு. ஆனா அவங்களுக்கெல்லாம் இன்னும் போலீஸ் பாதுகாப்பு, அரசு செலவில் பராமரிப்பு. இன்னும் பத்திரிக்கையில் ஹீரோவா வலம் வருவார். தைரியமா நான் குத்தமே பண்ணலன்னு சொல்ல்வார். இதுவே தாலுகா ஆபிஸில் தாசில்தார் 1000 ரூபாய் வாங்கிட்டா அவர் பதவி அப்பவே போயிடும். முகத்துல கருப்பு துணி போட்டு பேப்பரில் பொஸ் கொடுப்பாங்க. லஞ்சம் வாங்குவதை நான் நியாயப்படுத்தவில்லை. அது தான் நம் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் விஷயம். இதன் மூலம் நான் சொல்வது அரசு ஊழியர்கள் பயந்துக்கொண்டு செய்யும் வேலையை கூட அரசியல்வாதிகள் தைரியமாக செய்கிறார்கள். காரணம் அவர்களை ஆதரிக்க அதிகாரவர்க்கம் உண்டு, எனவே தான் வரிப்பணமாய் நம் கையில் பிடிங்கிய பணம் சுவிஸ் வங்கிகளில் குமிகிறது.

அரசு ஊழியர்கள் இடைதரகர்கள் என புது விளக்கம் கொடுத்தது பார்க்கையில் நகைச்சுவையாக உள்ளது. அரசியல்வாதிய பாக்க எதுக்கு நடுவரே அரசு ஊழியர்களை கூப்பிடணும். அவங்களுக்கு இடைதரகர்களாய் செயல்படும் இன்னொரு அரசியல்வாதியை பிடிக்கணும்(முதலமைச்சர பாக்கணும்னா நம்ம தொகுதி அமைச்சர பாக்கணூம், நம்ம தொகுதி அமைச்சரப் பாக்கணும்னா நம்ம வார்ட் எம் சி யை பாக்கணும். இப்படியே இவங்களை பார்த்து நம் குறையை சொல்வதற்குள் நம் ஆயுசு முடிஞ்சு போயிடும்.

சட்டமன்றம், நாடாளுமன்றம் கூடுது. கூடும்முன்பே என்ன சதி செய்து இதை நடக்கவிடாமல் பண்ணலாம்னு எதிர்கட்சி செயற்குழு கூட்டம் கூட்டி முடிவெடுக்கும். எப்ப நியூஸ் திறந்தாலும் சட்டமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு, வெளிநடப்பு போன்ற செய்திகள். ஒருநாள் நாடாளுமன்றம் கூட கோடிகணக்குல செலவாகும், அனைத்தும் மக்களின் வரிப்பணம். அந்த நேரத்தில் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் எப்போதோ நாடு முன்னேறியிருக்கும். இப்படி கூட்டம் கூட்டி எப்பவாவது அரசு ஊழியர்கள் வெளிநடப்பு பண்ணியிருக்காங்களா? அவங்கவங்க நியாயமான கோரிக்கைகளை நிறையேற்ற தவறுவதும் அரசியல் வாதிகள் தான்.

போலீஸ்காரர்களை பார்த்தா நமக்கு பயம் தான் வருது இல்லைன்னு சொல்லல. ஆனா அந்த போலீஸ் மாநில அரசின் கட்டுப்பாட்டு கீழ் செயல்படும் துறை. தலை என்ன சொல்லுதோ அது தானே சிஸ்யன் செய்வாங்க. மேலிடம் கண்டிக்காம விட்டதால் தான் இந்த இழிநிலை நடுவரே! ஆகா போலீஸ் சொல்லி பிரோஜனம் இல்லை. அங்கேயும் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் தான். பாவம் அவங்க இன்னைக்கு எதிர்கட்சிக்காரங்களை மேலிடம் சொல்லி கைது பண்ணிட்டா போதும். அடுத்த தேர்தலில் எதிர்கட்சி ஆட்சி பிடித்தால் முதலில் கொடுக்கும் அறிவிப்பே காவல்துறையினர் இடமாற்றம். அதுவும் கைதுபண்ண போலீஸ் அதிகாரி தண்ணியிலா காட்டுல கேணி தேடிட்டு இருப்பார்.

//டீக்கடைக்கு போனா காசு கொடுக்க வேண்டாம். இன்னும் பேருந்தில் சொல்லவே வேண்டாம் போங்க, எல்லாமே ஃப்ரீ தான், டிக்கெட்டும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.//
இப்படிலாம் செய்து மக்களை சோபேறியாக்குவது யாரு? தனக்கு அடுத்த முறையும் ஓட்டு கிடைக்க இப்பவே மக்களை இலவசம் கொடுத்து மயக்குறாங்க நடுவரே!

சாலைகளில் விளம்பர போர்ட் வைக்க தடை. ஆனா அவங்கவுங்க வீட்டு விஷேஷங்களுக்கு ஊரே அதிர பெரிய பெரிய பேனர்கள்.

தமிழ்நாட்ல மின்சார பற்றாக்குறை போக்க தினமும் 4 மணிநேரம் கரண்ட் கட். ஆனா தினமும் நடக்கும் ஊர்வலம்,மேடைபேச்சு போன்றவர்றிற்கு தாராளமாக மின்சார விநியோகம்.

இப்படியே சொல்லிட்டே போகலாம் நடுவரே!

//லைன் மேனில் இருந்து அதிகாரி வரை//
கட்டளையிடுவது யாருங்க? மேலிடம் சொன்னா கீழே உள்ளவன் வேலை செஞ்சே தான் ஆகணும்.

//இன்று ஓட்டு போடும் பாதி பேரில் உள்ளவர்கள் அரசு அதிகாரிகளே. இந்த கள்ள ஓட்டெல்லாம் இவர்கள் அனுமதியின்றி நடக்க முடியுமா நடுவர் அவர்களே!! //
ஏங்க அவங்க பாட்டுக்கு ஒருமூலையில் இருக்காங்க. அவங்க எதுக்கு கள்ளஓட்டு போட சொல்ல போறாங்க. அவங்களூக்கு கிடைக்கும் வருமானமே தன் குடுமப செலவுக்கு சரியா இருக்கும். இதுல கள்ள ஓட்டுப்போட சொல்லி எப்படிங்க பணம் செலவு செய்யமுடியும். அங்கேயும் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் தான்.

//லீவ் நாளில் வேலை பார்த்ததுக்கு பணம் வந்தா போதும், நாடு எப்படி போனா எனக்கு என்ன //
இப்பலாம் சொந்த ஊரில் தேர்தல் பணிக்கு ஆட்களை அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க எந்த ஆள் எந்தகட்சின்னே அந்த அதிகாரிகளுக்கு தெரியாது. தனக்கு பணம் வந்தா போதும்னு வராங்க. அவங்கபாட்டுக்கு செய்யவே தன் வேலையை செஞ்சுட்டு போறாங்க. அவங்க என்ன ஸ்கேனா வச்சுருக்காங்க. இல்ல நான் கள்ள ஓட்டுபோடபோறேன்னு தலைல எழுதி ஒட்டிட்டு வராங்களா? எப்படிங்க கண்டுபிடிக்க முடியும்? வெளியே பணம் கொடுத்து உள்ள அனுப்புறவன் அரசியல்வாதி. இதுல ஏன் அதிகாரிகள் வந்து இழுக்குறாங்கன்னு தெரியல.

//சண்டைகளை வேடிக்கை பார்க்கும் பொருளாக தானே இன்று இருக்கிறார்கள். இதை டிவியில் படமெடுத்து போட்டும் அவர்கள் திருந்தியபாடில்லை.//
அந்த சண்டை நடக்கும் போது அரசுக்கு தெரியாமல் இல்லை. அல்லது அவர்கள் பெர்மிஷன் வாங்காமல் இல்லை. அப்படியே அவர்கள் வேடிக்கை பார்த்து அது நேரடி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் டீவியை பார்த்த அரசியல்வாதிகள் ஏன் ஒன்றும் சொல்லவில்லை.அந்த பிரச்சனை முடிந்து சும்மா பார்மாலிட்டிக்கு சின்னபுள்ளைய அதட்டுற மாதிரி தப்புன்னு செல்லமா முதுகுல தட்டுறாகளாம். அதுக்கு அப்பறம் பேச்ச காணாம். இதுல இருந்தே புரிய வேண்டாமா படித்தவர்களுக்கு? ஆட்டி வைப்பவர் இருக்க பொம்மை மேல் குறை சொல்லி என்ன பயன்?

எனவே நடுவரே நல்ல தீர்ப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

நன்றி வணக்கம்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

யம்மாடியோவ் பட்டி பக்கம் வரவே பயமா இருக்கே. ரவுடிங்கறாங்க கொலைகாரங்கறாங்க நடுவரை இப்பூடி பயமுறுத்தறாங்களே! எந்தப்பக்கம் தீர்ப்பு சொன்னாலும் ஒன்னு கைகால் போகும் இல்லேன்னா கிட்னி போகும் :(. நடுவருக்கு தலைமறைவாக சீக்கிரமா ஒரு இடத்தை கண்டுபிடியுங்கப்பா :)

தப்பு செய்யற அரசியல்வாதிக்கு பொய் சான்றிதழ் கொடுத்து தப்பிக்க வைக்கரதே இந்த அதிகாரிங்கதானே! குற்றம் செய்தவனை விட காப்பாற்றியவனுக்குத்தானே அதிக தண்டனை கொடுக்கணும். என்னப்பா சொல்றீங்க எதிரணியினரே!

//அரசியல்வாதி தப்பு செய்தால் அது எல்லோர்கண்ணில் படும் ஆனால் இந்த அரசு அதிகாரி தப்பு செய்தால் அது யாருக்கும் தெரியாது.//

ஆமாமா அரசியல்வாதி ஒருத்தன் மாட்டினா போதுமே செய்தித்தாளில் இருந்து வலைப்பூ வரை போட்டு நாறடிச்சுடுவாங்களே! அரசு அதிகாரின்னா யாருக்குத் தெரியும்? அப்போ அரசியல்வாதிதான் காரணம்னு சொல்றது மாயைதான்னு சொல்றாங்களா சுமி?! எதிரணியினரே அரசியல்வாதி மாதிரி நெஞ்சுவலின்னு நாடகம் போடாம வந்து பதில் சொல்லுங்கப்பா :)

ஆமாப்பா இந்த அதிகாரிங்க மாட்டிக்கிட்டு பணி இடை நீக்கம் (அதாங்க சஸ்பெண்ட் பண்ணுனதா சொல்லுவாங்களே அதுதான்) செய்யப்பட்டாலும் வேலையே செய்யாம சுகமா பதி சம்பளம் வாங்கிட்டு இருப்பாங்களே. அரசியல்வாதியால முடியுமா?

//இதிலிருந்து உங்களுக்கே தெரியும் யாரால் இந்த நாடு சீரழிகிறது என்று.//

சத்தியமா நடுவருக்கு இன்னும் புரியலை சுமி!

இன்னும் வாதங்களை பலமா எடுத்து வச்சா புரிஞ்சுக்கறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//நேற்று செய்தி பார்த்தீர்களா ஒரு IAS அதிகாரி minstry of interior ல் high rank ல் இருப்பவர் காசவாங்கிகிட்டு நக்சல்களுக்கு உளவு சொன்னத பற்றி
இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்//

ஒத்தை வரியில் குண்டை தூக்கிப் போட்டுட்டாங்க பொன்னி. இப்படிப்பட்ட அதிகாரி இருந்தா நாடு உருப்படுமா சொல்லுங்க எதிரணியினரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹி ஹி அரசியல்வாதிக்கு ஏற்கெனவே நிறைய பட்டம் இருக்குது. இதில் ஸ்ரீமதி வேற அள்ளி அள்ளி கொடுக்கறாங்க. நடுவர் மண்டைய பிச்சுக்கிட்டு இருக்கார் அவருக்கு ஏதாச்சும் கொடுக்கலாம்னு மனசு வருதா :(

யார் வாங்குவதில் யார் யாருக்கு எவ்வளவு சதவீதம்னு கணக்கு போட்டு சொல்லிட்டாங்கப்பா. 75சதவீதத்தை பிடுங்கறவந்தானே குற்றவாளி ... அய்யோ நான் சொல்லலீங்கோ அவங்க சொல்ராங்க அதை தூக்கி உங்க கோர்ட்டில் பந்து போடற மாதிரி போட்டிருக்கேன் அவ்வளவுதான் :). அடிச்சு வீசறதும் தடுத்து ஆடறதும் தவற விடறதும் எதிரணி கையில் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ருக்சானா அரசியல்வாதி நல்லவரா கெட்டவரான்னு நடுவரை குழம்ப வச்சுட்டாங்களே! மக்களே சீக்கிரமா வந்து நடுவரை தெளிவு படுத்துங்க :)

தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கறதுன்னா என்னான்னு தெரியணும்னா நடுவரா இருந்து பாருங்கப்பா நல்லாவே புரியும் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//நம் தமிழக அரசு கிராமங்களில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க சமத்துவ புரம் என்கிற பெயரில் வீடு கட்டி கொடுத்தார்கள்.அங்கு நடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.இந்த அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் இந்த வீடுகளை தன் சொந்த காரர்களுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இந்த வீடு கிடைக்க வருட வருமானம் மிகக்குறைவாக இருக்க வேண்டும்.இதற்கென்றே.......
இதிலிருந்து என்ன தெரிகிறது அரசியல் வாதிகள் நாட்டை முன்னேற்ற முயற்ச்சித்தாலும் இந்த அரசு உழியர்கள் விடுவதில்லை.இன்னும் இருக்கிறது இவர்களின் அட்டூழியங்கள்.//

இதெல்லாம் ரொம்ப அநியாயம். காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போன கதையால்ல இருக்கு.

சுந்தரி ஒவ்வொரு துறையிலும் இந்த அரசு அதிகாரிகள் அடிக்கற கொட்டத்தை புட்டு புட்டு வைக்கறாங்க. எதிரணி வந்து முடிஞ்சா பதில் சொல்லுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பிற்குரிய தாய்மார்களே, குழந்தைகளே, என் ரத்தத்தின் ரத்தங்களே ! எங்களாட்சியில் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள் என்பதை நானறிவேன். சரி,, சரி...நான் பேச்சுக்கு வருகிறேன்...

//வேர் சரியாக மண்ணில் பதியவில்லை என்றால் ஆலமரம் ஏது? சொல்லுங்க//
வேருக்கு ஊட்ட சத்துள்ள உரங்களை போட்டா அது ஏன் ஒழுங்க வேரூன்ற மாட்டேன்னு அடம் பிடிக்க போவுது நடுவரே !நான் இங்கே ஊட்ட சத்து உரம்னு சொன்னது அரசு அதிகாரிகளை தான். மரம் வச்சுட்டு ஊட்ட சத்து கூட தர வேணாங்க. தண்ணியவாவது காட்டனுமோல்லியோ... அதுவும் இல்லனா எப்பிடிங்க? பனைமரமா அது அனாதை மாதிரி ஆள் பராமரிப்பு இல்லாம வளர?

//பத்து பேர் கொண்ட குழுவுக்கு மாணவ தலைவன் எதற்காக?....இவங்க சரியா இல்லைன்னா ஏன் சமுதாயம் இந்த அளவுக்கு போச்சு?///நடுவர் அவர்களே, விதை நெல்லு நல்லாயிருந்தா முளைக்கிற பயிரும் நல்லாருக்கும். ஆக அந்த மாணவன் எங்கிருந்து நல்லவனாவோ/கெட்டவனாவோ வர்றான்னு பாருங்க. வீட்டுக்கு அடங்காத புள்ளைங்கள கூட்டிட்டு வந்து எங்க தலைமேல கட்டிட்டு அடங்கல, அடங்கலன்னு கடைசியா எங்களையே குறை சொல்றாங்க. 60 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்புல ஒரு மாணவன் சரியா படிக்கலைனா ஆசிரியர் படிக்காதவர், அதான் பையனுக்கு பாடம் சொல்லி தர தெரியலைன்னு சொல்ல முடியுமா?

//நமக்கு மேலே உள்ளவனே வாங்குறான்...அதனால் தான் நலப்பணி திட்டங்கள் செயல்படாமல் சீரழிகிறது//
நாங்க எல்லாம் நல்லவங்க தாங்க. இதை உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வைக்க வேண்டியிருக்கு ;) நம்ம மக்கள்கிட்ட கேட்டு பாருங்க எம்புட்டு நல்லது பண்ணியிருக்கோம்னு (??) லஞ்சம் வாங்க சொல்லி எங்க மனசை மாத்தினதே இவங்கள மாதிரி ஆளுங்க தான். மத்தபடி எங்க முகத்துல ஒரு கப் காபி தயாரிக்கற மாதிரி எப்பவும் பால் வடிஞ்சிட்டே இருக்கும். எங்களை போயி... இப்படி சொல்லிட்டீங்களே... அந்த கடவுள் எல்லாத்தையும் பார்த்துட்டுதேன் இருக்காரு..;))

//ஒரு பாலம் கட்டணும்னு கையெழுத்தாகி அதிகாரிக்கு தள்ளப்படுது....அதான் கட்டுன 2 வருஷத்துலையே பாலம் இடிஞ்சு போயிடுது//

நாங்க எல்லாம் பாலம் கட்ட நியாயமான தொகை தான் தந்து விடுறோம். நடுவுல இவங்க அமுக்கிட்டா நாங்க என்ன பண்ண முடியும்? கொடுத்த பாதி பணத்துலயே இந்த அமுக்கு அமுக்குறாங்கன்னா,முழு பணத்தையும் கொடுத்தா என்ன ஆகும்னு யோசிச்சீங்களா? மக்களே, எல்லாம் உங்க நன்மைக்காக பின்னாடி பயன்படட்டுமேன்னு நாங்க குவிஸ் வங்கில பத்திரமா வச்சிருக்கோம். பயப்படாதீங்க. நாங்க அதுக்கு காவலா இருப்போம். நடுவுல வர்ற இந்த அரசு அதிகாரிகளை நம்பி பணத்தை தராதீங்க. எதுவா இருந்தாலும் மேற்கொண்டு ஒரு லட்சமோ, ரெண்டு லட்சமோ வச்சு எங்ககிட்ட தாங்க ;)

//சமீபத்துல டெல்லில நடந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிழுந்த சம்பவம் ....சம்பாதிக்கலாம்னு நெனச்ச அந்த ஓனர் ஏனோதானோன்னு கட்டிட்டா போதும்னு விட்டுட்டான்//

இந்த அரசு அதிகாரிங்ககிட்ட கட்டிடத்தை மட்டும் கட்டுங்கன்னு காசு கொடுத்து விட்டா, கட்டிடத்துக்கு கீழ காவாயையும் (கால்வாய்) உட்டுட்டு வந்திருக்காங்க. இது யார் தப்புங்க? நாங்களா விட சொன்னோம். கட்டிடத்துக்கு கீழ தண்ணி நின்னா எப்படிங்க உறுதியா நிக்கும்? அட, நாங்களே தண்ணி அடிச்சா என்ன ஆட்டம் ஆடுவோம்னு உங்களுக்கே தெரியும் ;) அப்புறம் எப்படி கட்டிடம் தண்ணில ஆடாம நிக்கும். அதான் விழுந்துடுச்சி.நாங்களே எவ்வளவு பெரிய கால்வாய்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க... இது எங்க போய் முடியும்னே தெரியல... கட்சிப்பணி அழைக்கறதால நான் இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//ரேசன்கடையில் மக்களுக்கு வழங்க வரும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கள்ள மார்க்கெட்டுக்கு செல்கின்றன. தடுக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்க்கின்றது. எம் எல் ஏவுக்கு பங்குபணம் செல்லுகின்றது//

எல்லாவனும் கூட்டு களவாணிங்க வேற என்ன சொல்ல :(

//ஒரு அவசர சிகிச்சை என்று ஆம்புலன்சில் போய்க்கொண்டிருந்தால் எதிரே ஒரு முக்கிய பதவியில் இருக்கும் அரசியல்வாதி வந்தால் அவ்லோ தான் ஆம்புலன்சின் கதி அதில் இருந்த அந்த உயிறின் நிலைமை அவ்லோ தான் இது எவராலும் மருக்க முடியாத உண்மை.//

இதுக்கு மறுப்பு சொல்ல முடியுமா?

நடுவர் ரெண்டு பேருக்கும் ஆமாஞ்சாமி போட்டுட்டு எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆயிடலாமான்னு யோசிக்கறார் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

குழப்பவில்லை நடுவரே..
நீங்கள் பெட்டி ஏதும் எதிரணியிடம் வாஙி விடக்கூடாது அல்லவா.

அதான் தெளிவா இருக்கிங்களான்னு பாத்தேன்.
ரொம்ப தெளிவா இருக்கிங்க.. சும்மா ஹி ஹி ஹி ஹி....
இப்ப மேட்டருக்கு வருவோம்.
இந்த அரசியல்வாதியால் வரும் தேர்தலில் என்னை ஜெயிக்க வைத்தால் நாங்கள் இத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறி ..
அப்பாவி மக்களை ஏமாற்றி ஓட்டு பிச்சை வாங்குகிறார்கள்..

ஆனால் அதில் ஒன்றிரண்டை நிறைவேற்றி விட்டு. பின் அந்த தொகுதி பக்கமே வருவதில்லை..
இவர்கள் பிள்ளைகளோ படிப்பது ஆங்கில வழிகல்வியை ஆனால் மக்களையோ தமிழ்வ்ழியில் படிக்க கூறுகிறார்கள்.

இவர்கள் வழி எவன் எக்கேடு கெட்டால் என்ன ..
நாம் நல்லாயிருக்கனும் என்றுதான் ஒவ்வொறு அரசியல் வாதியும் நினக்கிறான் .

வாழு, வாழவிடு..

ரேசன்கடையில் மக்களுக்கு வழங்க வரும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கள்ள மார்க்கெட்டுக்கு செல்கின்றன. தடுக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்க்கின்றது. எம் எல் ஏவுக்கு பங்குபணம் செல்லுகின்றது//

அதை கொண்டு செல்வதே அரசு ஊழியர்கள் தானே.அங்கே வேலை செய்யும் அதிகாரி தன் கடமையை சரியாக செய்துயிருந்தால் இப்படி நடக்குமா?

இவ்வளவு ஏன். ரேசன் கடைகளில் வேலை செய்யும் அதிகாரி ரேசன் கார்டுகளில் பொய் கணக்கு எழுதுகிறார்கள்.1 கிலோ சக்கரை கொடுத்துவிட்டு 2 கிலோ என்று எழுதுகிறார்கள். அதை அவர்கள் வீட்டில் பயன்படுத்துகிறார்கள்.ஏன்! இன்னும் சொல்லபோனால் அதை அதிக விலையில் விற்க்கிறார்கள்

இப்போது தினந்தோறும் முட்டை திட்டத்தை அறிமுக படித்துயுள்ளாது.எத்தை பள்ளிகளில் தினமும் முட்டை வழங்குகிறார்கள்.?
ஏன் சிறுகுழந்தைகளுக்கு அங்கன்வாடி பள்ளிகள் அமைது சத்துவுணவு கொடுக்க சொல்லுகிறார்கள்.ஆனால் சத்தாண உணவு கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறிர்களா? இல்லை. மாறாக சத்துணவு ஊழியர்கள் தான் சத்தாகயிருக்கிறார்கள்.;)

நடுவர் அவர்களே! இப்படி பட்ட அரசு ஊழியர்கள் இருக்கும் வரை நாடு சீரழிந்து கொண்டேதான் இருக்கும்.

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்