பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

//அரசியல்வாதி 5 வருடத்திற்குப் பின் திரும்ப அதே பதவிக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம் ஆனால் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் அப்படி அல்லவே! நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளின் பதவிக்காலம் அதிகமா இல்லை அரசு ஊழியர்களின் பதவிக்காலம் அதிகமா?//

அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகம்னு சும்மாவா சொன்னாங்க. உள்ள நுழைஞ்சுட்டா சாகற வரைக்கும் பிரச்சினையே இல்லையே! ஆனா அரசியல்வாதியை மக்களுக்குப் பிடிக்கலேன்னா தூக்கி எறிஞ்சுடுவாங்க. பெருந்தலைவரையே தோற்கடிச்ச மக்களாச்சே நம்ப மக்கள். ஜனநாயகத்தை புரிஞ்சுக்காம பேசறாங்களே இந்த எதிரணியினர் :)

//எலக்‌ஷன் கமிஷன் என்ற ஒன்று பல காலமாக இருந்து வருவது தான்.. ஆனால் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது அந்தப் பதவிக்கு வந்த திறமையான ஒரு அதிகாரிதான்.. .//

உண்மைதானே! அதுக்கு முன்னாடி இருந்த அதிகாரிங்க எல்லாம் டம்மி பீசா இருந்ததுனாலதானே அப்படி ஒரு அதிகாரி இருக்காருங்கறதே தெரியாம இருந்தோம். இதுல அரசியல்வாதி என்னப்பா தப்பு செய்தான். இவரு வந்ததும் அரசியல்வாதி கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டினாருல்ல. எல்லா அரசு அதிகாரியும் ஒழுங்கா இருந்தா... யோசிக்கவே நல்லா இருக்கே :). இதுக்கு சரியான பலம் வாய்ந்த அரசியல்வாதியை பற்றி வந்து சொல்லுங்க எதிரணியினரே!

மொத்தத்துல அரசு அதிகாரிக்கு சுயபுத்தியே கிடையாதுன்னு சொல்லி தன்னோட பக்கத்தை ஸ்ட்ராங்கா தாங்கிப் பிடிச்சுருக்காங்க சாந்தினி.
எதிரணியால முடிஞ்சா வந்து சரிஞ்ச உங்க பக்கத்தை வந்து நிமிர்த்தி வைங்கப்பா

அடடா சிண்டு முடியறது எவ்வளவு கஷ்டமா இருக்கு :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்ன நடக்குது இங்கே அரசியல்வாதின்னு சொன்னதும் என்னமா புரூடா விடராங்கப்பா இந்த அணியினர் :). வந்து வாதங்களை அள்ளி வைங்கள் விவசாய அணித் தலைவரே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹா பட்டி மன்றமா இல்லை மாநகராட்சி கூட்டமான்னு சந்தேகம் வந்திடுச்சே :)

சாக்கடையில் கொசு உற்பத்தியாகுதுன்னா சாக்கடையை சுத்தமாக்கணுமே தவிர சாக்கடையை மூட முடியுமான்னு கேட்கறாங்க சாந்தினி. முதலில் மருந்து தெளிச்சு கொசுவை ஒழியுங்கப்பா. அப்புறமா சாக்கடையை சுத்தப்படுத்தலாம்னு சொல்றாங்க.சரிதானே கொசு மொய்த்துக் கொண்டிருந்தால் சாக்கடையை க்ளீன் பண்ண முடியுமா :)

//ரௌடிகளை அடக்கி ஒடுக்கத்தானே காவல் துறை இருக்கு.. அவங்க அரசு ஊழியர்கள் தானே.. காவல்துறை தன் கடமையை உண்மையாலுமே ஒழுங்க செய்தா ரௌடி்கள் இருப்பார்களா இந்த நாட்டில்? அரசியல்வாதிக்கு கூஜா துக்கிற அதிகாரிகள் இருக்கிற வரை நாட்டில சீரழிவும் இருக்கவே செய்யும்..//

என்னங்க இது தன்னோட வேலையை செய்யாம அரசியல்வாதிக்கு கூஜா தூக்கிறவன் குற்றவாளி இல்லைன்னா சொல்றீங்க? எதிரணி கொஞ்சம் நியாயமா பேசுங்கப்பா :). இல்லைன்னா உங்க பக்கத்து நியாயத்தை சொல்லுங்கப்பா :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஆனால் அவர்கள் ஆட்ச்சிக்கு வந்ததுக்கு பிறகு அவங்க கிட்ட போய் வாய தொரக்கவே முடியல//

ஆமாமா ஜெயிச்ச பின்னாடி வார்டு கவுன்சிலரைக் கூட பார்க்க முடியறதே இல்லை
//அந்த காவல் துரையை தன் சுய நலத்துக்காக அரசியல் வாதிகள் தானே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.//

ஆமாமா அரசியல்வாதிக்கு சல்யூட் அடிக்கலேன்னா இங்கே குப்பை கொட்ட முடியுமா? அவன் பொழைப்பைத்தானே முதலில் பார்க்கணும். அரசியல்வாதியை ஒழுங்கா இருக்கச் சொல்லுங்கபா. நாடே திருந்திடும்.

//நல்லா நடுவீட்ல சப்பலங்கால் போட்டு உக்காந்து நாட்டு நடப்ப யோசிச்சு பாருங்க நடுவரேரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ//

நடுவீட்டில் சப்லாங்கால் போட்டு உட்காரும் நிலையிலயா ரெண்டு அணியினரும் நடுவரை விட்டு வச்சிருக்கீங்க. நடுவர் மண்டையைப் பிராண்டியதில் மண்டையெல்லாம் புண்ணாகி இப்போது சுவரைப் பிராண்டி கொண்டிருக்கிறார் :(. பட்டி முடியும் போது அநேகமாக பாயை பிராண்டுவார் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//நடுவர் அவர்களே தெரிந்து செய்கிறவன் குற்றவாளியா?? தெரியாமல் செய்கிறவன் குற்றவாளியா?? //

தப்புன்னு தெரிஞ்ச அப்புறமும் செய்தா அது தப்புதாங்க. தப்ப தப்பு இல்லாம பண்ணினாலும் தப்பு தப்புதாங்க. தப்ப தப்பு தப்பா பண்ணினாலும் தப்பு தப்புதாங்க :)

//”போலிஸ்ஸோட துணையில்லாம் எவன்னலையும் ரௌடியா தலையெடுக்கமுடியாது”//

இது வேற பண்றாங்களா இந்த போலீஸ் காரங்க. நான் போலீஸ் ட்ரெயினிங் காலேஜ் மட்டும்தான் இருக்குன்னு நிஅனிச்சென். ரவுடி ஆலேஜும் அவங்கதான் நடத்தறாங்களா! (கவி பட்டி முடியறதுக்குள்ள உனக்கு ஆட்டோதான். சீக்கிரமா தலைமறைவாயிடு)
//ஆனா ஒரு மந்திரி நல்லவனா இருந்து கீழ வேலை செய்யிற அரசு அலுவலர்கள் கெட்டவங்களா இருந்தா குட்டிச்சுவருதான்//

இதை நானே பார்த்திருக்கேனுங்க. எந்த நல்ல திட்டத்தையும் செயல்படுத்த விடமாட்டானுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஆனால் ஒரு பெண்ணால் காவல் நிலையம் சென்று அவள் கற்போடு வரமுடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. காவல்துறை அதிகாரிகளாக இருந்து கொண்டு அவர்களை பார்த்து இன்று ரவுடிகள் பயப்படுவதில்லை நடுவர் அவர்களே, பொது மக்கள் தான் பயப்பட வேண்டியுள்ளது.//

ரவுடிதானே மாமூல் கொடுக்கறான் நீங்களா கொடுக்கறீங்க :). ஹி ஹி இன்னிக்கு ஒரு பொண்ணு இல்லை ஒரு ஆணாலும் காவல் நிலையத்துக்குள் விசாரணைக்கு என்று போனால் உயிரோடு திரும்பி வருவானான்னு யோசிக்க வேண்டி இருக்கு

//டீக்கடைக்கு போனா காசு கொடுக்க வேண்டாம். இன்னும் பேருந்தில் சொல்லவே வேண்டாம் போங்க, எல்லாமே ஃப்ரீ தான், டிக்கெட்டும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.//

அப்படியா எப்போ போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கராங்கன்னு சொல்லுங்க :).

//ஆனா அந்த காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் மக்களுக்கு உதவாமல் நடக்கும் சண்டைகளை வேடிக்கை பார்க்கும் பொருளாக தானே இன்று இருக்கிறார்கள். இதை டிவியில் படமெடுத்து போட்டும் அவர்கள் திருந்தியபாடில்லை//

நானும் பார்த்தேன் :(

இப்படீல்லாம் அரசு அதிகாரி இருந்தா எப்படீங்க நாடு முன்னேறும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஆரம்பம் ஆவது பெரிய தலையிடமிருந்து. முடிவது சின்ன தலையிடம்..//

நல்ல வேளை குட்டித்தலைன்னு என்னை சொல்லாம விட்டாங்களே தப்பிச்சேன் :)

//ஒரு மசோதா நிறை வேறிய உடன் . அதை எப்படி நன்றாக செய்யவேண்டும் என்கிற எண்ண்த்தைவிட ,அதில் எவ்வளவு நாம் அடிப்பது என்றுதான்.நினைக்கிறார்கள்..//

நிறைவேறுவதற்கு முன்பே கூட பணப்பட்டுவாடா நடக்குதாம் சொல்றாங்க நியூசில :( இப்படீல்லாம் அரசியல்வாதி இருந்தா நாடு உருப்படுமா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி நிஜமாவே அவர் என் அப்பாதான் :)

//நல்லா யோசிச்சு பாருங்க ஒரு அரசியல்வாதி தனி ஆளா கோடி கணக்கான ரூபாய் மோசடி செய்ய முடியுமா???!!! வாய்ப்பே இல்லை. அவனுக்கு துணை போக ஒவ்வொரு இடத்திலும் அவனுக்கு தேவையானதை செய்து கொடுக்க, தப்பு பண்ண ஆளிருந்திருக்கனும்... அது யாரு??? நிச்சயம் அரசு ஊழியர்கள் தான்//

ஆமாமா அரசு அதிகாரி கையெழுத்துப் போட்டாதானே வேலை நடக்கும். அரசு அதிகாரி துணை இல்லேன்னா அரசியல்வாதி வெறும் டம்மி பீசுதானா?!

//சட்டம் கூட குற்றவாளி அரசியல்வாதின்னா கண்ணை கட்டிக்குது.//

இப்போ சட்டம் கொஞ்சமா முழிச்சிருக்குக்குது. ஆனா எப்போ மீண்டும் தூங்கப் போகும்னு தெரியாது :)

//எல்லா இடத்திலுமே இப்போ லஞ்சம் வளருது. இதை வாங்குறது... காவல் துறை, ரெஜிஸ்டர் ஆபீஸ், ரெயில்வே, இப்படி அடுக்கடுக்கா எல்லாமே அரசு ஊழியர்கள்//

எல்லா இடத்துலயும் புரோக்கர்களும் இருக்காங்களாம்

அரசியல்வாதிக்கு புரோக்கர் இருக்காங்களாப்பா வந்து சொல்லுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

**************அதை கொண்டு செல்வதே அரசு ஊழியர்கள் தானே.அங்கே வேலை செய்யும் அதிகாரி தன் கடமையை சரியாக செய்துயிருந்தால் இப்படி நடக்குமா?****************
கடைமையை செய்தால் அவன் வீட்டுக்கு வெரும் கைய்யை வீசிகிட்டு , தலையை தொங்க போட்டுகுட்டு போக வேண்டியது தான் . எல்லாரும் அவர்கள் வாழ்க்கையை தானே முதலில் பார்ப்பார்கள்.

********இவ்வளவு ஏன். ரேசன் கடைகளில் வேலை செய்யும் அதிகாரி ரேசன் கார்டுகளில் பொய் கணக்கு எழுதுகிறார்கள்.1 கிலோ சக்கரை கொடுத்துவிட்டு 2 கிலோ என்று எழுதுகிறார்கள். அதை அவர்கள் வீட்டில் பயன்படுத்துகிறார்கள்.ஏன்! இன்னும் சொல்லபோனால் அதை அதிக விலையில் விற்க்கிறார்கள்********
நடுவரே இதை நான் மருக்கவில்லை ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் கொடுமையான விஷயம் இது அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் ஏன் பிச்சைகாரங்களுக்கு கூட தெரிந்து இருக்கும் ஆனா நம்ம ஊர் அரசியல்வாதிங்களுக்கு மட்டும் தெரியவே தெரியாதது போல இருந்தால் அவன் என்ன செய்வான் . அவங்க ஒரு வாட்டி தட்டி கேட்டா போதும் எல்லாரும் அடங்கி விடுவார்கள்.

அன்புடன்
ஸ்ரீ

//அரசியல்வாதி ஊழலோடு அதிகார துஷ்பிரயோகமும் செய்யும்போது அரசு

அதிகாரிகள் துணை போகிறார்கள்……..அவ்வளவே….ஊழலின் அரிச்சுவடி

தொடங்குவதே அர்சியல்வாதியிடமிருந்துதான் :-)//

அரசியல்வாதி தன் அதிகாரத்தை செலுத்தும் போது மாசச்சம்பளக்காரன் பாவம் என்னப்பா செய்வான்.

முதல்வன் படம் அர்ஜுன் போல யாராச்சும் வரமாட்டாங்களான்னுதானே எதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம். அந்த அரசு அதிகாரி மாதிரி யாராச்சும் வந்தா நல்லா இருக்கும்னா நினைக்கறோம். அரசியல்வாதி சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்குமாம் சொல்றாங்கப்பா :)

//எந்த அரசியல் வாதி வந்தாலும் நேர்மையாகவும் ,கண்டிப்பாகவும் நிர்வாகம்

செய்தால் எந்த அரசு ஊழியர்களும் வாலாட்ட முடியாது//
உண்மைதான். அமைச்சர் வராருன்னாலே ஒன்பது மணி ஆஃபீசுக்கு ஆறு மணிக்கே போய் நிற்பானே அதிகாரி. அப்போ அரசியல்வாதி சரியா இருந்தா அதிகாரியும் சரியா இருப்பான்னுதானே அர்த்தம்.

//வேலியே பயிரை மேய்ந்தால் வேறென்ன இருக்கிறது சொல்ல..:(//

ஒன்னும் சொல்ல முடியாதுதான் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்