பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

//நடுவரே என்ன எதிரனி தோழி குழந்தை மாதிரி பேசிக்கொண்டிருக்கிரார்கள் திட்டங்களை போடுவதே அரசியல் வாதிகள் தானே . அது நல திட்டங்கள் அல்ல நடுவரே மக்கள் கிட்ட இருந்து எடுக்கப்படுகின்ற காசுல தான் அவங்க அத பன்ராங்க அதுலயும் முக்கா வாசி அரசியல் வாதிகளே சுருட்டிக்கராங்க//

திட்டம் போடுவதும் அவனே சுருட்டுபவனும் அவனே எல்லாம் எல்லாமும் அவனேன்னு சொல்லிட்டாங்கப்பா ஸ்ரீமதி. இதுக்கு சரியான பதில் வந்து சொல்லுங்கப்பா முடிஞ்சா :)
எல்லாரும் தண்ணி இல்லா காட்டுக்கு போக விரும்பாமத்தான் அதிகாரிகள் அரசியல்வாதிக்கு ஜால்ரா தட்டறாங்களாம். பாவம்ப்பா அரசு ஊழியன். அவனுக்கும் குடும்பம் இருக்குல்ல.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெ இப்படி ஒரே வார்த்தையில் முடிச்சுட்டீங்களே! வந்து விரிவா சொல்லுங்க. நடுவர் மண்டை குழம்பி போய் இருக்காருல்ல :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//சட்டமன்றம், நாடாளுமன்றம் கூடுது. கூடும்முன்பே என்ன சதி செய்து இதை நடக்கவிடாமல் பண்ணலாம்னு எதிர்கட்சி செயற்குழு கூட்டம் கூட்டி முடிவெடுக்கும்.... இப்படி கூட்டம் கூட்டி எப்பவாவது அரசு ஊழியர்கள் வெளிநடப்பு பண்ணியிருக்காங்களா?/

எப்படி முடக்குவதுனு கூட கூட்டம் கூடி முடிவெடுகறாங்களா? இப்படி என்னிக்காச்சும் அரசு அதிகாரிகள் கூட்டம் போட்டு பணி நடக்காமல் முடங்கச் செய்கிறார்களா சொல்லுங்கள் எதிரணியினரே!

ஆமினா எங்கெல்லாம் இந்த அரசியல்வாதிகள் டகால்டி வேலைகள் எல்லாம் காட்டறாங்கன்னு அக்கு வேறா ஆணிவேறா பிச்சு பிச்சு வச்சுட்டாங்க. இதுக்கப்புறமும் எதிரணியால் ஏதாச்சும் பேச முடியுமா?

ஏய் ஸ்டாப் ஸ்டாப் நோ பேட் வேர்ட்ஸ்! முடிஞ்சா வந்து சொல்லுங்கப்பா கேட்டுக்கறேன். அதுக்கேன் இப்படி............. :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//குழப்பவில்லை நடுவரே..
நீங்கள் பெட்டி ஏதும் எதிரணியிடம் வாஙி விடக்கூடாது அல்லவா.

அதான் தெளிவா இருக்கிங்களான்னு பாத்தேன்.
ரொம்ப தெளிவா இருக்கிங்க.. சும்மா ஹி ஹி ஹி ஹி....//

நான் தான் மாட்டுனேனாஆஆஆஆஆஆ :)

//இவர்கள் வழி எவன் எக்கேடு கெட்டால் என்ன ..
நாம் நல்லாயிருக்கனும் என்றுதான் ஒவ்வொறு அரசியல் வாதியும் நினக்கிறான் .//

மொத்தத்துல அரசியல்வாதின்னா சுயநலவாதின்னு சொல்லிட்டாங்க ருக்சானா! அரசு அதிகாரிங்க எப்படீனு வந்து சொலுங்க கேட்டுக்கறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஏன் சிறுகுழந்தைகளுக்கு அங்கன்வாடி பள்ளிகள் அமைது சத்துவுணவு கொடுக்க சொல்லுகிறார்கள்.ஆனால் சத்தாண உணவு கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறிர்களா? இல்லை. மாறாக சத்துணவு ஊழியர்கள் தான் சத்தாகயிருக்கிறார்கள்.;)//

சமைக்கறதுக்கு அவங்களுக்கு தெம்பு வேண்டாமாப்பா?!

//இப்படி பட்ட அரசு ஊழியர்கள் இருக்கும் வரை நாடு சீரழிந்து கொண்டேதான் இருக்கும்.//

என்னங்க இது இப்படி பயம் காட்டறாங்க! அரசு ஊழியர்களே திருந்துங்க ப்ளீஸ்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//நடுவரே இதை நான் மருக்கவில்லை ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் கொடுமையான விஷயம் இது அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் ஏன் பிச்சைகாரங்களுக்கு கூட தெரிந்து இருக்கும் ஆனா நம்ம ஊர் அரசியல்வாதிங்களுக்கு மட்டும் தெரியவே தெரியாதது போல இருந்தால் அவன் என்ன செய்வான் . அவங்க ஒரு வாட்டி தட்டி கேட்டா போதும் எல்லாரும் அடங்கி விடுவார்கள்.//
தட்டிக் கேட்கவேண்டியவன் கேட்கலேன்னா அது தப்புதானே! அரசியல்வாதி ஒழுங்கா இருந்தா அரசு அதிகாரியால் வாலாட்ட முடியுமா? கேட்கறாங்கல்ல வந்து பதில் சொல்லுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பட்டி ஏன் தூங்குது? சூடு பத்தலியே! பெண்களுக்கு அரசியல் ஆர்வம், அறிவு போதாதுன்னு சொல்ற குற்றச்சாட்டை உண்மையாக்கி விடாதீர்கள் தோழிகளே! வந்து சூடான சுவையான வாதத்தை அள்ளி வையுங்கள்.
அப்படியே இந்தாங்க இளநீர் மோர் ஜூஸ் ஜிகர்தண்டா எல்லாம் உங்களுக்குத்தான் குடிச்சு குளிர்ச்சி ஆயிடுங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பட்டியில் இன்னும் வயலும் வாழ்வும் ஆரம்பிக்கலியேன்னு நினைச்சேன் கல்பனா ஆரம்பிச்சுட்டாங்க :). ஏம்பா மரத்துக்கு தேவையான உரம் கொடுத்தாத்தானே அது வலரும் அதை இந்த அரசு அதிகாரிகள் ஒழுங்கா செய்ய வேண்டாமா?

நகைச்சுவையா சொன்னாலும் கட்டிடம் இடிஞ்சு விழுந்ததில் இந்த அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை நச்சுன்னு சொல்லிட்டாங்க கல்பனா! எல்லாவற்றிலும் காசு பார்க்க நினைக்கும் இவர்கலை என்னவென்று சொல்வது? வந்து சொல்லுங்க எதிரணியினரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

************அரசியல்வாதிகளின் பதவிக்காலம் அதிகமா இல்லை அரசு ஊழியர்களின் பதவிக்காலம் அதிகமா**********
5 வருட அரசியலில் இருப்பவர்கள் எத்தனை ஆயிரம் ஊழியர்களையும் நொடியில் பணியில் இருந்து விளக்கி விடுகிறார்கள் . இதில் எங்கு பலம் இருக்கிரது . இதில் பதவி காலம் ஏன் வருகிரது நடுவரே.
**********பெருந்தலைவரையே தோற்கடிச்ச மக்களாச்சே நம்ப மக்கள். ஜனநாயகத்தை புரிஞ்சுக்காம பேசறாங்களே இந்த எதிரணியினர் ****************
மக்கள் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் இவங்க நல்லவங்களா இருக்கனும் அப்படின்னு நினைத்து தான் ஓட்டு போடராங்க . ஆனா எல்லா தேலும் ஒரே மாதிரி தான் விஷம் இருக்கும் என்று புரிவதில்லை இந்த அப்பாவி மக்களுக்கு.

அன்புடன்
ஸ்ரீ

அந்த அரசியல்வாதியே ஒரு அரசு ஊழியன் தானே!!! இல்லைன்னு சொல்வீங்களா???

ஒரு குப்பை எடுக்க வருபவர் கூட தன் வேலையை சரியா செய்யுறது இல்லை. அவனுக்கும் தீபாவளி, அது இதுக்கு சம்திங் கொடுத்தா தான் அன்னைக்கு மட்டுமாது குப்பையை சுத்தம் பண்றான். ஊர் முழுக்க குப்பை, சாக்கடை.... இதுல எங்கங்க அரசியல்வாதிக்கு பங்கு வந்துச்சு??? அரசு உத்யோகம்'னு ஒன்னு கிடைச்சா உடனே காலத்துக்கும் தன்னை அசைக்க முடியாதுன்னு உக்கார்ந்து சம்பலம் வாங்கறாங்க. வேலை பார்க்கலன்னு எவன் கேக்க போறான்??? அப்படியே கேட்டு, சம்பலம் குறைச்சா, போனஸ் கட் பண்ணா, வேலை நீக்கம் செய்தா ஸ்ட்ரைக். எவ்வளவு பெரிய ஆயுதம்???? ஒரு ஆட்சியையே தூக்கலாம்.... அத்தனை பலம் பெற்றவர்கள் அரசு ஊழியர்கள்.

அதென்னவோ சொல்வாங்களே.... சாமி வரம் கொடுத்தா பூசாரி தட்டிவிட்டார்'னு... அது மாதிரி அரசு எந்த சலுகை, எந்த திட்டம் கொண்டு வந்தாலும் நடுவுல அரசு ஊழியர்கள் அதை தப்பா பயண்படுத்தறாங்க. வீட்டு வீடு டிவி முதல் எல்லாமே வேண்டப்பட்டவங்களுக்கு கொடுத்தது அரசு உழியர்கள் தான். எந்த அரசியவாதியும் நேரில் வந்து இதெல்லாம் கொடுக்கல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்