பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

நடுவரே தேர்தல் நடக்கும்போது நன்றாக கவனித்து பார்த்தீர்கள் என்றால் தெரியும் முக்கியமான பொது துறை, காவல்துறை, அரசு போக்குவரத்து ஊழியர்கள், அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் இவர்களுக்கு திடீர்ரென்று ஜாக்பாட் குறிப்பிட்ட சதவிகிதம் ஊதிய உயர்வு, போனஸ் என்று பல சலுகைகள் அறிவித்துவிடுகின்றன. அதுமட்டுமா தற்போது எம்.பிகளின் சம்பளத்தை மத்திய அரசு 300% சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறது. எம்.பிகளின் சம்பளம் அப்போது ரூபாய் 16,000, தற்போது உயர்த்தப்பட்டது ரூ50,000, அலுவலக செலவு, தொகுதிக்கான செலவு தனித்தனியாக 20,000 என்றால் உயர்த்தப்பட்டது ரூ40,000, வட்டி இல்லா வாகன கடன் ரூ1,00,000 உயர்த்தியது ரூ 4,00,000 இது மட்டுமல்லாமல் பார்லிமெண்ட்க்கு நடக்கும் போதும், பார்லிமெண்ட் கமிட்டி கூட்டங்கள் நடக்கும் போது ஒவ்வொரு நாளுக்கும் தனி அலவன்ஸ் உண்டு. இந்த அரசியல்வாதிகளுக்கு விமானம், ரயில் இலவச பயணம் என்று நிறைய சலுகைகள் கொடுக்கின்றன. இத்தனைக்கும் அரசியல்வாதிகளால் வருமானவரி கட்டமுடியாதாம் அதையும் நீக்கி கோரி போராடிக்கின்றனர். இவர்கள் வாங்கும் லஞ்சம் பத்தாது என்று இப்படி சம்பளத்தை உயர்த்தினால் இவர்களுக்கு கீழ் வேலை செய்யும் அரசு அதிகாரிகள் அவங்க ஒரு பங்குக்கு உதிய உயர்வு வேண்டி தனியா போராடிக்கிட்டு இருக்காங்க. இந்த அரசு அதிகாரிகள் கிட்டடேயும், அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது ஏழை மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும்தான்.

டெல்லியில் காமன்வெல்த் போட்டி நடக்கும்முன்பு இடிந்த பாலத்தை அரசியல்வாதிகள் பார்வையிடுவதற்கு அவர்கள் நடந்து வருவதற்காக சிகப்பு கம்பளத்தால் ஆன பாதைகள். மேம்பாலம் இடித்துவிழுந்தற்கு அந்த துறைக்கு சம்பந்தமான பெண் அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்டபோது இந்தமேம்பாலம் சாதாரண பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டது என்று அலட்சியமான பதில் அளித்து உள்ளார். அந்த பொதுமக்கள் மடிந்துகிடந்தாலும் கவலைப்படாத கல்நெஞ்சம் கொண்ட அரசு அதிகாரிகளாகவே இருக்கின்றனர். நம் வீட்டில் வெளியூரிலிருந்து விருந்தினர்கள் வந்தாலே டாய்லெட், பாத்ரூம்லிருந்து வீட்டை சுத்தப்படுத்தி, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துதருவது வழக்கம். ஆனால் நம்தாய்நாட்டில் எத்தனை நாடுகள் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்தார்கள். அவர்களை நல்லவிதமாக கவனித்து தேவையான உதவிகளை செய்து தரவேண்டிய கடமை அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளிடம்தானே ஒப்படைத்து இருந்தார்கள். அதை சரியாக செய்தார்களா ஒரு பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள் வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பெட்ரூம்மையும், டாய்லைட்டையும் படம்பிடித்து போட்டு இருந்தார்கள். அவ்வளவு கேவலமாக இருந்தது.

நேற்றைய செய்தியில் வங்கிக்கடன் வழங்குவதில் பலகோடி ரூபா மோசடி. ஊழல் நடந்து இருப்பதாக இப்ப சி.பி,ஐ விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கு. இந்த பணியில் இருப்பவர்கள் எல்லாம் அரசு அதிகாரிகளே. இன்னைக்கு ரோடு காண்ட்ராக்ட்ர்கள் அரசியல்வாதிகள் வலம் வரும் பாதையில் மட்டும் ரோடு போட்டுவிட்டு செல்கின்றனர்(கூடவே நமக்கு நாமம் தான்). ஒரு வார்த்தை ஓகோனு வாழ்க்கை சொல்றமாதிரி, இந்த அரசியல்வாதிகள் வருவதற்காக இரவோடு இரவாக ஒரு நாளில் ரோடு போட்டுகின்றனர். ஒரு நாள் ரோடு ஒரே வாரத்தில் காலி என்று சொல்லுகிற நிலைமையில் உள்ளது. இந்த அதிகாரிகள் பணத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு என்னதான் செய்வார்களோ என்று தெரியவில்லை. மத்திய அரசு மூலமா வேலை செய்யும் போஸ்ட்மேன்கள் முதியோர் பணத்தையும் விட்டு வைப்பத்தில்லை. அவர்கள் வாங்கும் 400 ரூபா பணத்தையும் 50 ரூபா மொய் வைக்க வேண்டியதா இருக்கு. ஏன்னா மாசம் மாசம் வர பணத்தையும் கொடுக்கமா போயிட்டா. இந்த அரசு அரசு அதிகாரிகளுக்கு எல்லாம் வாரி வாரி சலுகைகள் வழங்கினாலும் தனியா(லஞ்சம்) சம்பாதிச்சாதான் மனசு நிம்மியா இருக்கும் போல.

***************வேலை நீக்கம் செய்தா ஸ்ட்ரைக். எவ்வளவு பெரிய ஆயுதம்???? ஒரு ஆட்சியையே தூக்கலாம்.... அத்தனை பலம் பெற்றவர்கள் அரசு ஊழியர்கள்.****************
நடுவரே எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் ஊழியர்கள் ஸ்ட்ரைக் செஞ்சு அரசியல்வாதிகளை காலி பன்னது இல்ல அரசியல் வாதிகள் தான் பல ஊழியர்களை கொடுரத்தனமான மனசாட்ச்சி துளியும் இல்லாமல் செய்வது எல்லாருக்குமே தெரிந்த விஷயம் தானே .
*******அந்த அரசியல்வாதியே ஒரு அரசு ஊழியன் தானே!!! இல்லைன்னு சொல்வீங்களா?*****
எதிரணி தோழியே இங்கே நடந்து கொண்டு இருக்கும் விவாதம் அரசியல்வாதிகளினால் இந்த நாடு சீரழிகிரதா இல்லை ஊழியர்களாலா நல்லா புரிந்துகொள்ளுங்கள் நாரதர் நடுவரே.

அன்புடன்
ஸ்ரீ

//அரசியல் வாதிகள் கைககளில் சிக்கி நாடு படும் பாடை சொல்ல வேண்டுமா என்ன.. அரசாங்கம் வழஙகும் பணிகளை செவ்வனே .மக்களுக்கு செய்வதை விட்டு .இவர்கள் பார்க்கும் வேலை என்ன தெரியுமோ//

நடுவர் அவர்களே, எதிரணிக்காரர்கள் நிறைய போலிகளை கண்டு குழப்பத்தில் உள்ளனர். இதோ நான் தெளிய (??) வைக்கிறேன். அரசியல்வாதிகளாகிய நாங்கள் நாட்டை அமைதியாக நல்ல முறையில் கொண்டு செல்லாவிட்டால் என்னாகும்? யோசித்தீர்களா? இன்று அண்டை மாநிலங்களிலும், அண்டை நாடுகளிலும் வன்முறை டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறது. அதனால் மக்கள் உயிருக்கு பயந்து சொந்த வீட்டிலேயே திருடர்கள் போல வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். நம் நாட்டில் அதுபோல பயந்து வாழும் சூழ்நிலையிலா இருக்கிறார்கள். யோசித்து பாருங்கள். நடுஇரவு 12 மணிக்கு கூட ஒரு இளம்பெண் உடல் முழுவதும் தங்கத்தை போட்டுக்கொண்டு செல்லலாம். அந்த அளவிற்கு சுதந்திரத்தை கொடுத்து காப்பாற்றி வருகிறோம். மகாத்மா காந்தி அவர்கள் இருந்திருந்தால், மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். (???)

//அதிலிருந்து எப்படி நாம் ஆதாயம் காண்பது என்கிற வேலையைதான்.... அதாவது ஒரு பழமொழி உண்டு ...எரிகிற கொல்லியில் பிடுங்கும் வரை லாபம் என்று........ இவர்கள் ஒழுங்காக இருந்தால் நம் நாடு என்றோ முன்னேறி இருக்கும் ..... ஏழை எழிய மக்களுக்கோ அடுத்த வேலை சோறு எங்கு கிடக்கும் என்கிற கவலை....//

நடுவர் அவர்களே நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். கணவன் ஊதாரியாக இருந்தால் மனைவி தான் புத்திசாலியாக இருந்து பிள்ளைகளின் எதிர்காலத்திற்க்கு சேமிக்க வேண்டும். அந்த வேலையை தானே நாங்கள் செய்கிறோம். நாங்கள் எடுத்து வைக்கும் (சுருட்டும்) பணமெல்லாம் எங்கள் வீட்டுக்கா செலவு செய்கிறோம்? எங்கள் ரத்தின் ரத்தங்களுக்கும், உடன்பிறவா சகோதரர்களுக்கும்,எங்களை ஈன்றெடுக்காத பெற்றோருக்கும் தானே செலவு செய்கிறோம். நல்ல தரமான ரோடாக போட்டால் அது நாளாக நாளாக பழையதாகி விடும் என்பதற்காக ரெடிமேட் ரோடு போடுவோம். அது மழை வந்து போன பிறகு காணமல் போகும். திரும்ப புது ரோடு போட்டு தருவோம். பள்ளிக்கூடம், பாலங்கள்,வீடுகளையும் அப்படீத்தான் இடிந்து விழுந்த பிறகு கட்டி தருவோம். இப்படி புதிது புதிதாக வசதிகள் செய்து தரும் எங்களை போயி........ அவ்வ்வ்வ்.... நெஞ்சு பொறுக்குதில்லையே... இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்..... ஆவ்வ்வ்வ்வ்வ்...அடுத்த முறை கட்டிடங்களை கட்டி தரும் போது அது இடிந்து விழும் நேரம், காலத்தை சரியாக கணித்து தந்து விடுகிறோம். அந்த சமயத்தில் பொதுமக்கள் தங்கள் உடமைகளோடு பாதுகாப்பான இடங்களில் சிறிது நாட்கள் தங்கியிருக்கவும். அதற்குள் ஓரிரு நாட்களில் நாங்கள் வீடு கட்டி தந்து விடுகிறோம்.இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருத்த பொருட் சேதமும், உயிர்சேதமும் தடுக்கப்படும்.

//எரிகிற கொல்லியில் பிடுங்கும் வரை லாபம் என்று........ இவர்கள் ஒழுங்காக இருந்தால் நம் நாடு என்றோ முன்னேறி இருக்கும் ..... ஏழை எழிய மக்களுக்கோ அடுத்த வேலை சோறு எங்கு கிடக்கும் என்கிற கவலை....//

இந்த பழமொழியெல்லாம் சொல்லுவீங்கன்னு தான் எங்களுடைய இந்த ஆட்சியில் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்கு கேஸ் ஸ்டவ் தந்துள்ளோம். உழைத்து களைத்து வரும் ஏழை தொழிலாளி கண்டு களிக்க கலர் டிவி வழங்கியுள்ளோம். கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்குகிறோம். 50 ரூபாய்க்கு ஆயிரம் மளிகைப் பொருட்கள் வழங்குகிறோம். தீபாவளி, பொங்கலுக்கு பட்டுப்புடவை - பட்டுவேட்டி தருகிறோம். தேர்தல் நேரத்தில் பிரியாணியும்,தண்ணீரும் (???) பொழுதுபோக்கு வேடிக்கைகளுக்காக பணமும் தருகிறோம். இவ்வளவையும் அனுபவித்து விட்டு நன்றியில்லாமல் பேசலாமா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவர் அவர்களே,
என்னமா வாதிடுகிறார்கள் எதிரணிக்காரர்கள் ...இந்த அரசியல் வாதிகள் இருக்கிறார்களே,L .K .G ,U .K .Gகூட போய் இருக்கமாட்டர்கள்.காசை கொடுத்து M .A .,MBA ,............இப்படி படிப்பை வாங்கி கொண்டு படித்த அரசு அதிகாரிகளை என்ன பாடு படுத்துகிறார்கள் தெரியுமா.
பட்டு சேலை,பட்டு வேட்டி,கலர் டிவி,இதுல்லாம் எதற்கு?
'அதில்' எவ்வளவு சம்பாரிக்கலாம் என்பதற்கும்,அடுத்த முறை வெற்றிபெறவும் தான்.சுயநலம் ஜாஸ்தி நமவருக்கு.
"அவர்களாவது தான் பொண்டாட்டி,பிள்ளைகுனு எதோ சுருடினாலும் இவர்கள் தன் வம்சத்துக்கே சுருட்டுகிரார்கள்.இங்கு பாங்கில் இடம் பத்தவில்லையாம் வெளி நாட்டிலெல்லாம் போட்டு வைக்கிறார்கள்.
நம் நாட்டு பணத்தால் மற்ற நாடுகள் வளர்ச்சி அடைகிறது தெரியுமா?இன்னும் நம் நாடு இதனால் தான் முன்னேறாமல் உள்ளது.
மீண்டும் வருவேன்...................ஹசீனா.

ஹசீன்

// ஆனா அவங்களுக்கெல்லாம் இன்னும் போலீஸ் பாதுகாப்பு, அரசு செலவில் பராமரிப்பு. இன்னும் பத்திரிக்கையில் ஹீரோவா வலம் வருவார்//
நடுவர் அவர்களே, நாங்க எவ்வளவோ நல்லது (கெடுதல்) பண்ணியிருப்போம். அதை புரிஞ்சுக்காம எங்களை தாக்க கையில் சைக்கிள் செயின்,ஆசிட் சகிதமா (இதெல்லாம் முன்னாடி நாங்க பண்ணினது,எங்ககிட்ட அடிபட்ட புலிங்க எத்தனை சுத்துதோ?) யார் நின்னுட்டு இருப்பாங்களோ? அதுக்கு தான் நாங்க முன்னேற்பாட்டோட இருக்கோம். இதை ஒரு குத்தமுன்னு சொன்னா எப்படிங்க?ஹீரோ மாதிரி தைரியம் (சும்மனாங்காட்டியும் ரீல் விடுறது) உள்ள எங்களை மாதிரி ஆளுங்களுக்கு தான் ஆபத்து தேடி வரும்.

//தைரியமா நான் குத்தமே பண்ணலன்னு சொல்ல்வார். இதுவே தாலுகா ஆபிஸில் தாசில்தார் 1000 ரூபாய் வாங்கிட்டா அவர் பதவி அப்பவே போயிடும். முகத்துல கருப்பு துணி போட்டு பேப்பரில் பொஸ் கொடுப்பாங்க//
எங்களுக்கு அன்னைக்கு ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு கிடையாது. எப்பவும் ஒரே பேச்சு தான். எங்க வாக்கு சுத்தம், நாக்கு சுத்தம் (கைதான் கண்ட நோட்டை வாங்கி கப்பு நாறும்) ஒரு அரசு ஊழியர் அவர் வாங்கிய லஞ்சப்பணத்தை மறைத்து வைப்பதற்குள் வருமான வரி அதிகாரிகள் வந்துவிட்டதால் லஞ்சப்பணத்தை சுருட்டி வாயில் போட்டு முழுங்க நினைத்தார். அதற்குள் அவர் குரல்வளையை பிடித்து ரத்தக்கறையுடன் பணத்தை மீட்டனர். பணமுழுங்கி முதலைகள் நாங்களா? அரசு அதிகாரிகளா? நீங்களே சொல்லுங்க நடுவரே !

பலகோடி ரூபாய்களை நாங்கள் மக்கள் நலப்பணிக்காக ஒதுக்கி வைத்த (கொள்ளையடித்த) போதிலும் சரி, சில,பல காரண காரியங்களுக்காக அன்பளிப்பாக பெற்றாலும் சரி சிகப்பு கையோடு பிடிபட மாட்டோம். வெள்ளை கையோடு வெள்ளை மனதாக, வெள்ளை பற்களை காட்டியபடி வெள்ளந்தியாக சிரித்தபடியே எங்கள் மேல் சுமத்தப்பட்ட முறைகேடான வழக்குகளை சந்திக்க சிறைச்சாலை செல்வோம். அது எங்களுக்கு பெருமை அளிக்கும் விஷயமே. நம் தேசத்தலைவர்கள் சிறைக்கு செல்லவில்லையா? அன்று அவர்களை போற்றிய மக்கள் இன்று மட்டும் ஏன் எங்களை தூற்ற வேண்டும்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாங்க எதிரணியினரே.
. ஒருநாள் வரவில்லை ... அதற்க்குள் இத்தனை வாதங்களா..
இதோ வருகிறேன்.

என்ன கலர் டிவி தந்தீங்களா.. அதில் மொத்தம் எத்தனை கோடிகள் சுருட்டினீங்கன்னு அதையும் சொல்லியிருக்கலாமே..

நீங்க ஜெயிக்க தருகிற பிரியாணியும் தண்ணீரும் எதுக்கு தெரியுமா?.

நாங்கள் ஜெயித்து விட்டால். இனி ஐந்து வருடத்துக்கு உங்களுக்கு அல்வாதான்...
அப்டிங்கறதை மறைமுகமாக சொல்ரிங்க ...

இது தெரியாத மக்கள் உங்களுக்கு மாலை மரியாதை எல்லாம் செய்றாங்க..

//அடுத்தமுறை கட்டிடம் கட்டும்போது இடிந்து விழும் நேரத்தை சரியாக கணித்து சொல்கிறோம்..//

என்ன ஒரு கண்டுபிடிப்பு நடுவரே...
என்ன கொடுமை நடுவரே இது.
அவர்கள் வீடுகளை இப்படித்தானா கட்டுவார்கள்.. நடுவரே...
இந்த அரசியல்வாதிகள்..
இவர்கள் சொத்து சேர்க்கிரேன் என்கிற பெயரில் தன் நண்பர்களை பினாமியாக்கி ..அவர்கள் பிடிபட்டால் கம்பி எண்ண வேண்டும் ...

இப்படி தன் சுயனலத்துக்காக ..இன்னும் சொன்னால் சொகுசு வாழ்க்கை ..

வாங்குவது ஒரு ரூபாய் சம்பளம்.. சொத்துக்கள் கோடிக்கனக்கில்...

இவ்வளவு பணத்தை சுருட்டி வைத்து என்ன பண்ணப்போகிறார்கள் இவர்கள்...

,சுடுகாடு, முதல் ,ஸ்பெக்ட்ரம், வரை எத்தனை ஊழ்ல்கள்..
.இதன் முடிவு ..
ஏழை எழிய மக்களின் வாழ்வு ப்ளாட்ப்பாரங்களில்.. இவர்கள் இருப்பார்களா?

இந்த அரசியல்வாதிகளை ,களை. எடுக்க வேண்டும்
.. இதர்க்கு முன்னால் வாழ்ந்த சுயனலமற்ற நல்ல அரசியல்வாதிகள போல் ஒருவரேனும் உண்டா..

வருடம் முழுவதும் தேடினாலும் கிடைப்பார்களா?....

.. சொல்லுங்க நடுவரே....

வாழு, வாழவிடு..

அட அரசியல்வாதியே அரசு ஊழியன் தானேப்பா. அப்புறமும் ஏன் அரசியவாதின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்கறாங்க வனிதா! நியாயமான கேள்விதான்.

//அப்படியே கேட்டு, சம்பலம் குறைச்சா, போனஸ் கட் பண்ணா, வேலை நீக்கம் செய்தா ஸ்ட்ரைக். எவ்வளவு பெரிய ஆயுதம்???? ஒரு ஆட்சியையே தூக்கலாம்.... அத்தனை பலம் பெற்றவர்கள் அரசு ஊழியர்கள்//

ஆமாமா எங்கேயாச்சும் யாராச்சும் ஒரு டிரைவரை சொந்த தகறாரில் அடிச்சுட்டா கூட சென்னை நகரமே ஸ்தம்பித்து விடுமே!

இம்பூட்டு அநியாயம் செய்யறவங்களையா எதிரணி அப்பாவின்னு சொல்லுது கொடுமைதான் போங்க!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அரசு அதிகாரி ஆயுசுக்கும் சம்பாதிக்கறதை விட அதிகமா அரசியல்வாதி 5வருஷத்துல சம்பாதிச்சுடுவானே இதுல பதவிக்காலம் குறைஞ்சிடுச்சுன்னு சொல்றதுல அர்த்தமே இல்லைன்னு சொல்றாங்க ஸ்ரீமதி! நடுவருக்கு இது நியாயமாத்தான் இருக்கு.

//நடுவரே எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் ஊழியர்கள் ஸ்ட்ரைக் செஞ்சு அரசியல்வாதிகளை காலி பன்னது இல்ல//

ஏம்பா எதிரணியினரே இல்லாததையெல்லாம் சொல்றீங்க! அரசு ஊழியனா ஆட்சியை கவுத்தான். விளக்கமா என்ன நடந்ததுன்னு புரிஞ்சுகிட்டு சொல்லுங்கப்பா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

// மேம்பாலம் இடித்துவிழுந்தற்கு அந்த துறைக்கு சம்பந்தமான பெண் அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்டபோது இந்தமேம்பாலம் சாதாரண பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டது என்று அலட்சியமான பதில் அளித்து உள்ளார்//

பொதுமக்கள் உயிர் அவ்வளவு கேவலமாவா போச்சு இந்த அதிகாரிகளுக்கு :(

//ஒரு பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள் வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பெட்ரூம்மையும், டாய்லைட்டையும் படம்பிடித்து போட்டு இருந்தார்கள். அவ்வளவு கேவலமாக இருந்தது//

ஆமாமா நானும் பார்த்தேன். வெட்கி தலைகுனிந்தேன் :(

//நேற்றைய செய்தியில் வங்கிக்கடன் வழங்குவதில் பலகோடி ரூபா மோசடி. ஊழல் நடந்து இருப்பதாக இப்ப சி.பி,ஐ விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கு. இந்த பணியில் இருப்பவர்கள் எல்லாம் அரசு அதிகாரிகளே//

ஹி ஹி இப்போ மக்கள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் பின்னாடி போனதுல இந்த செய்தி அடிபட்டு போச்சு போல.

மணிஆர்டர் வந்தா கூட போஸ்ட்மேனுக்கு டிப்ஸ் கொடுக்கணுமாம். இதெல்லாம் அநியாயம் இல்லையா சொல்லுங்க எதிரணியினரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கல்பனா நடுவரைப் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா! நீங்க எந்த அணிக்கு பேசறீங்கன்னு நடுவர் மண்டையை பிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கேன். எல்லாம் ஒரே வஞ்சப்புகழ்ச்சியாவுல்ல இருக்கு :(

மாமியோட இளநி குடிக்காமலேயே நடுவர் குழம்பிப் போய் கிடக்கிறார் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்