பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

அரசு அதிகாரியாவது பொண்டாட்டி புள்ளைக்காகத்தான் வாங்கறான் அரசியல்வாதி தலைமுறைக்கே இல்ல சம்பாதிக்கறான். அதுவும் வெளிநாட்டில் இல்ல சேர்த்து வைக்கரான். இதுக்கு என்ன சொல்றீங்கப்பா ஹசீனா கேட்கறாங்அ இல்ல!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் வணக்கம்.

அருமையான தலைப்பு ஐயா,

நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
இரண்டு வர்க்கத்தினருமே தான்.ஏனெனில் கண் இரண்டாக இருந்தாலும் பார்வை ஒன்றகத்தான் தெரிகின்றது.அதுபோல தான் ஐயா,இரு வர்க்கத்தினராகவே இருந்தாலும் செயல் ஒன்றாகத்தான் இருக்கின்றது ஐயா.

இருவருமேஇருவருமே என்று இரண்டு முறை கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.மீண்டும் சந்திப்போம்...

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

நடுவர் அவர்களுக்கு,வணக்கம்.பட்டிக்கு தாமதமாக வருவதற்கு முதலில் மன்னிக்கவும்.பவர் பிரச்சனையால் முதலிலேயே பங்கு பெறமுடியவில்லை.நல்ல தலைப்பு,நல்ல நடுவர்.நான் பேசவிருப்பது அரசு ஊழியர்கள்பற்றி,விரைவில் வாதங்களுடன் வருகிறேன்.(நடுவரே,உங்களுக்கு பெரிய பதிவா போட்டாத்தான் பிடிக்கும்னு நாட்டுக்குள்ள பேசிக்கறாங்களே! நிறைய பதிவுகளோட கொஞ்சம் லேட்டாவே வர்றேன்.)

அன்புடன்
நித்திலா

அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் எத்தனை குடும்பங்கள் அவல நிலையில் உள்ளன தெரியுமா? கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் தன் குடும்பத்தையும் காப்பாற்ற முடியாமல் எத்தனை இளைஞர்கள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இதற்கு யார் காரணம் அரசு அதிகாரகளே சீனியாரிட்டிபடி ஒரு இளைஞனுக்கு கிடைக்க வேண்டிய வேலையை லஞ்சம் வாங்கிக் கொண்டு தன் சொந்தகாரங்களுக்கோ தெரிந்தவர்களுக்கோ கொடுத்துவிடுகின்றனர். இவர்கள் சம்பாதிக்க மற்றொருவரின் வாழ்க்கையே அல்லவா பறிபோகிறது. இது யாரால்?
மக்களுக்கு வந்து சேர வேண்டிய அத்தியாவசிய தேவைகளை அடிப்பவர்கள் யார் நியாய விலை கடைகளில் வேலை செய்யும் அரசு அதிகாரிகளே. மக்களுக்கு வரும் அரிசி பருப்புகளை ஹோட்டல், கல்யாண வீடுகளுக்கு கணிசமான ஒரு தொகைக்கு விற்றுவிட்டு. மக்களிடம் இந்த அரிசி ஸ்டாக் இல்லை என்ற போர்ட்டை தானே காண்பிக்கிறார்கள்.
ஒரு அரசியல்வாதி தப்பு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே கைதி செய்யவோ காவல்துறை ஒன்றிற்கு மட்டும் தான் உரிமையும் அதிகாரமும் இருக்கு. ஆனால் நமக்கு தெரிந்து எத்தனை காவல் அதிகாரிகள் தம் கடமையை ஒழுங்காக செய்து இருக்கின்றனர். எல்லாருமே கூன கும்பிடு போடும் வேலையாட்களே. சட்டத்தை காப்பாற்றும் உரிமை தம்மிடயே இருக்கும் போது பணத்திற்காக அதை விற்வர்கள் எத்தனை பேர் தெரியுமா?
முன்பெல்லாம் ஓட்டுநர் உரிமம் வாங்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது ஆனால் இப்பொழுதெல்லாம் கொடுக்கும் அப்ளிகெஷனோட ஒரு காந்தி நோட்டும் வைத்தாலே போதும் உரிமம் உங்கள் வீடு தேடி வரும் நீங்க கண்தெரியாவதராக இருந்தால் கூட உங்களுக்கு உரிமம் உண்டு அந்த நிலையில் தான் உள்ளது நம் அரசு அலுவலகங்கள்.
இப்படிப்பட்ட அரசு அதிகாரிகள் இருக்கும் வரை நம் நாடு சீரழிவை மட்டுமே சந்திக்க நேரிடும்.

நல்ல குறிப்பு

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

//என்ன கலர் டிவி தந்தீங்களா.. அதில் மொத்தம் எத்தனை கோடிகள் சுருட்டினீங்கன்னு அதையும் சொல்லியிருக்கலாமே..//

எங்க வீட்டுக்கு டிவி கிடைக்கலியே! அதை யாரு சுட்டாங்கன்னு எனக்கு இப்போ உண்மை தெரிஞ்சாகணும்

//நீங்க ஜெயிக்க தருகிற பிரியாணியும் தண்ணீரும் எதுக்கு தெரியுமா?.

நாங்கள் ஜெயித்து விட்டால். இனி ஐந்து வருடத்துக்கு உங்களுக்கு அல்வாதான்...
அப்டிங்கறதை மறைமுகமாக சொல்ரிங்க//

அப்போ அடுத்த எலக்ஷனுக்குத்தான் அடுத்த பிரியாணியா அதுவரைக்கும் வாயில் போட்டால் வாயைத் திறக்கவே முடியாத அல்வாதானா அரசியல்வாதி கொடுக்கறான். இது தெரியாம அல்வாக்கு வாயை திறந்துக்கிட்டு நிற்கறீங்களே நியாயமா எதிரனியினரே!

//வாங்குவது ஒரு ரூபாய் சம்பளம்.. சொத்துக்கள் கோடிக்கனக்கில்...//

ஹி ஹி எனக்கு சம்ப்பளமே வேணாம் என்னை அமைச்சராக்கிடுங்களேன் நாட்டுக்கும் (என்) வீட்டுக்கும் நன்றாகவே தொண்டு செய்வேன் :)

வோட்டு கேட்டு வரும்போது நடந்துதான் வரான் ஆனா ஆட்சியில் அமர்ந்ததும் காரும் பங்களாவும் வந்துடுது. ஓட்டு போட்டவன் மட்டும் ஓட்டாண்டியாகவே இருக்கான். இப்படீல்லாம் இருக்கற அரசியல்வாதியை சப்போர்ட் பண்றது நியாயமா எதிரணியினரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பட்டிக்கு வருக தோழி ஸ்ரீமகேஷ்! ஹி ஹி நடுவர் ஐயா இல்லை. நடுவர் தோழிதான் :)

அய் இப்படீல்லாம் பட்டியில் சொல்லப்படாது. ஏதாச்சும் ஒரு பக்கத்துக்குத்தான் பேசனும். யாரால் நாடு அதிகம் சீரழிகிறதுன்னு வந்து சொல்லுங்க.

தோழி இன்னொரு விஷ்யம் இங்கே பட்டிமன்ர வாதத்தை தவிர அரட்டையோ அல்லது குறிப்புகான பின்னூட்டமோ போடக் கூடாது ஓகேவா!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க நித்திலா! உங்களைக் காணோமேன்னு நினைச்சேன். நீங்களும் அதிகாரிகளைத்தான் குற்றம் சொல்றீங்களா. வாங்க வாங்க சூடான வாதத்தை எடுத்து வையுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

யாழினி அதிகாரிகளுக்கு எதிரே பொங்கி எழுந்து விட்டார்கள்.

//முன்பெல்லாம் ஓட்டுநர் உரிமம் வாங்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது ஆனால் இப்பொழுதெல்லாம் கொடுக்கும் அப்ளிகெஷனோட ஒரு காந்தி நோட்டும் வைத்தாலே போதும் உரிமம் உங்கள் வீடு தேடி வரும் நீங்க கண்தெரியாவதராக இருந்தால் கூட உங்களுக்கு உரிமம் உண்டு அந்த நிலையில் தான் உள்ளது நம் அரசு அலுவலகங்கள்//

இதெல்லாம் ரொம்ப அநியாயமுங்க. நாட்டுல எத்தனை சாலை விபத்துக்கள் உயிரிழப்புகள்?! காரணம் தகுதியில்லாதவனுக்கும் லைசன்ஸ் கொடுக்கறதுதானே! இதுக்கு என்னப்பா சொல்றீங்க எதிரணி? இதுக்கு பின்னாடியும் அவன் இருக்கானா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தோழிகளுக்கு ஒரு வேண்டுகோள். பட்டிமன்ற வாதங்கள் லஞ்சத்தை மட்டுமே சுற்றிவருவதாக இருக்கிறது. அதைத்தாண்டிய பலவிஷயங்களிலும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அலட்சியமும் ஈடுபாடின்மையும் இருக்கிறது. அவையும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தடையாக இருக்கின்றன. தோழிகள் அவற்றைப் பற்றியும் விவாதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்