பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

நடுவருக்கு,வணக்கம்.நடுவரே,மனுசன் இங்க படாதபாடு படறது ஒரு வேளை நிம்மதியா சாப்பிடத்தான்.ஆனா,இங்க இப்ப நிம்மதியா சாப்பிட முடியுதா?நடுவரே,இங்க எப்படியெல்லாம் கலப்படம் பண்றாங்க,அதனால என்னென்ன பாதிப்புகள் வருதுனும் பார்ப்போம்.நான் சொல்லியிருப்பது சில பொருட்களின் கலப்படமும்,பாதிப்பும்தான்.

மஞ்சள் தூள்-லெட் க்ரோமேட்

மசாலாத்தூள்-மரத்தூள்

சமையல் எண்ணெய்-மினரல் ஆயில்(பெட்ரோல்,டீசல் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கும் தாது எண்ணெய்),ரப்பர் எண்ணெய்,இன்னும் பல பொருட்கள்.

டீத்தூள்-காயவைத்து வறுத்து அரைத்த இலவம்பஞ்சு இலை

கடலைப்பருப்பு-கேசரிப்பருப்பு(தடைசெய்யப்பட்ட பொருள் இது)

துவரம்பருப்பு-மெட்டானில் யெல்லோ

கடுகு-ஆர்ஜிமோன் விதைகள்

சாம்பார் பொடி-செங்கல்,கலர்பொடிகள்,இன்னும் பல பொருட்கள்

காபித்தூள்-ஈச்சங்கொட்டைத்தூள்

இன்னும் பல உணவுப் பொருட்களில் கலப்படம் செய்கிறார்கள்.அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில் தான் அதிக கலப்படம்.நெய்யிலும்,தேனிலும்கூட கலப்படம் செய்கிறார்கள்.

பாதிப்புகளின் பட்டியல் மிக நீளம்,உங்களுக்காக சிலது மட்டும்.

கிட்னி பாதிப்பு
கல்லீரல் பாதிப்பு
குடல்புற்று நோய்
குடல் புண்
முடக்குவாத நோய்
இருதய அடைப்பு
முகம் வீங்குதல்
நெஞ்சு வலி
வயிற்றுப் போக்கு
பார்வைக்குறைவு
புற்றுநோய்
இன்னும் பல நோய்கள்....

நடுவரே,காய்கறிகளையாவது விட்டு வைச்சிருக்காங்களா,அதுவும் கிடையாது.நடுவரே,ஆக்சிடோசின்ங்கற ஊசியை செடிகளுக்கு போடறாங்க.சீக்கிரமா காய்க்கவும்,பெரிய காயா இருக்கிறதுக்கும்.இது தடைபடுத்தப்பட்ட ஊசி.நடுவரே,இந்த காய்களை சாப்பிட்டோம்னா உடனே பாதிப்பு தெரியாது.ஆனா,கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு நோயா என்ட்ரி ஆகும்.

சரி நடுவரே,இதையெல்லாம் தடுக்கிறதுக்கு யாருக்கு அதிகாரம் இருக்கு,நகராட்சி பகுதிகளில் இருக்கிற நகராட்சி உணவு ஆய்வாளர்,நகராட்சி ஆணையர்,கிராமப்புறங்களில் நிகழ்பவதை தடுக்கும் அதிகாரம் கொண்ட துணை இயக்குநர் பொது சுகாதாரம்,நோய்த்தடுப்புத்துறை இவங்கெல்லாம் யாரு?உணவு ஆய்வாளர்கள்னெல்லாம் இருக்காங்களே, அவங்கெல்லாம் என்ன செய்யறாங்க?

Prevention Of Food Adulteration Act அப்படீனு ஒன்னு இருக்குதா,அது ஏன் ரொம்ப காலமா தூங்கிட்டு இருக்குதுனு எனக்கு சொல்லுங்க,நடுவரே.

நடுவரே,சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி கலப்படப் பொருள்,காலாவதிப் பொருள் எல்லாத்தையும் கண்டுபிடிக்க முடியும்தானே?அவங்க என்ன செய்யறாங்க?இவங்க வேலையே அதானே,வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்ய வேண்டியதுதானே?

நடுவரே,நல்ல சுகாதாரமான உணவு மக்களுக்கு கிடைச்சா,அவங்க ஏன் நோய்நொடினு கஷ்டப்படபோறாங்க?மக்கள் நோயாளியா இருந்தா நாடு எப்படி இருக்கும்?

நடுவரே,கலப்படம் பண்றவங்க குற்றவாளிகளா?அந்த கலப்படத்துக்கு கைகொடுத்து மனுசன் உசுரோட விளையாடுற அதிகாரிகள் குற்றவாளிகளா?நடுவரே,கலப்படப்பொருள் மக்களைச் சென்றடைந்தது எப்படி?மாம்பழம் சாப்பிட்டு ஒரு குழந்தை உயிர் இழக்க காரணமானவர்கள் யார்,நடுவரே.

அன்புடன்
நித்திலா

//அரசியல் வாதி கெட்டவனா இருந்தா அவனை தண்டிக்கிற உரிமை யார் கிட்ட இருக்கு?
காவல் துறை கிட்ட தானே! காவல் துறை ஏன் கையைக் கட்டிகிட்டு நிக்கனும்... அரசியல்வாதியை பகைத்துக் கொண்டால் தண்ணியில்லா காட்டுக்கு
மாத்தறாங்கனு எதிரணி சொல்றாங்களே.. இன்னைக்கு தமிழ்நாட்டுல எந்த ஊர் நல்ல தண்ணி வசதியோட செழிப்பா இருக்கு?//

காவல்துறை அரசியல்வாதியின் ஏவல்துறையா மாறியதற்கு காரணமே முதுகெலும்பில்லாத காவல்துறை அதிகாரிகள்தான்னு சொல்லாம சொல்லிட்டாங்க சாந்தினி! அட ஆமாப்பா இப்பல்லாம் தண்ணியில்லா காட்டுக்கு மாட்திடுவேன்னு மிரட்ட முடியாது. ஏன்னா எல்லா இடமுமே அப்படித்தான் இருக்கு. சும்மா பழசையே பேசிக்கிட்டு இருக்காம புதுசா சொல்லுங்க எதிரணியினரே!

//தேர்தல்ல தோற்றால் கூட ஜெயித்ததாக அறிவிக்கிற கொடுமைலாம் நடந்துதே!! கள்ள ஓட்டுப் போடறது எல்லாம் அரசு ஊழியர்கள் துணை இல்லாமையா
நடக்குது//

அம்மாடியோவ் அது பெரிய இடத்து விவகாரம் சாந்தினி! வீட்ட்க்குள்ள கவனமா இருந்துக்கோங்க ஆட்டோ வந்துடப் போகுது :). எதிரணியினரே நீங்க தைரியமா சொல்லுங்க அத்காரி துணையில்லாமலா இந்த கேவலம் நடந்துச்சு? கேட்கராங்கல்ல சொல்லுங்க.

//அரசு வங்கில என் தொலைப் பேசி எண்ணை மாற்றனும்னு ஒரு விண்ணப்பம் கொடுத்து மாசக் கணக்காகுது.. இன்னும் ஒரு மாற்றத்தையும் காணோம்... //

விண்ணப்பத்துக்கு கூட முக்கியமான பேப்பர் கொடுத்தீங்களா?!

இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்கும்வரை நாடு உருப்படுமாய்யா?! வந்து பதில் சொல்லுங்கப்பா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுந்தரி சிறிய இடைவெளிக்கு பின் வந்தாலும் சூடாகவே வந்திருக்கீங்க :)

ஆமாப்பா அரசுத்துறையின் கீழ் உள்ள கோவில்களில்தான் இதுபோன்ற முறைகேடுகள் எல்லாம். கடவுளை தரிசிக்க கட்டணம் நிர்ணயிக்க இந்த அதிகாரிகள் யார்? யார்கிட்ட போய் கேட்கறது புலம்பிக்கிட்டு இருக்க வேண்டியதுதான் :(. பெரும்பாலான தனியார் கோவில்களில் இந்த பிரச்சினை எல்லாம் கிடையாது.

கடவுள் சந்நிதியில் கூட க்கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பணம்பறிக்கும் கூட்டமான அரசு அதிகாரிகளா நாட்டை முன்னேற்றுவார்கல்னு கேட்கறாங்க. ம்ம்ம் கஷ்டம்தான்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கலப்படத்தை கண்டு பிடித்து தடுக்க வேண்டிய அதிகாரிகள் தன் கடமையை செய்ய மறந்ததால் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதால் மக்கள் நலனில் ஏற்படும் பிரச்சினையைப் பற்றி ரொம்ப சூடாகவே கொஞ்சம் கூட கலப்படம் இல்லாமல் கொட்டித் தீர்த்துட்டாங்க நித்திலா! இதுக்கெல்லாம் கூடவாப்பா அரசியல்வாதி காரணம்.

தக்க பதிலடி கொடுக்க ஓடி வாருங்கள் அரசியல்வாதியே அணியினரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இரு அணிகளும் பேசுவதற்கு இன்னும் பல முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. நாளை ஒருநாள் மட்டுமே இருக்கிறது. அதற்குள் உங்கள் வாதங்களை அள்ளி வீசுங்கள்.

நடுவர் நாளை தீபாவளி விழாவுக்கு செல்வதால் நாளை இரவுதான் பட்டிக்கு வரமுடியும். முடிந்தால் இடையிடையே பார்வையிடுவேன். நாளை மறுநாள் இந்தியநேரம் மதியம் 12மணிக்குமேல் தீர்ப்பு வெளியாகும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தீபாவளி கொண்டாட்டமா போய்ட்டு வாங்க, இங்க பட்டியில் வைக்கும் வெடி பத்தலைன்னு அங்க வேறு போறீங்களா, ம்ம்.

நடுவரே, முதலில் தொலை தொடர்பு துறை பத்தி பேசனும் நடுவர் அவர்களே,உலகத்திலே ப்ராட்பேண்ட் வச்சிருக்கவன் எல்லாம் நல்லாருக்கான், இந்த நெட் கனெக்‌ஷன் கார்டை வாங்கிட்டு நான் படற பாடு, அய்யூய்யயோ, கேட்டா நண்பேண்டா மட்டும் வாய் கிழிய சொல்லுவாங்க. எதிரணியில் சொன்னாங்க தொலை தொடர்பு துறையில் அதிகாரிகள் கையில் எதுவும் இல்லைன்னு (எதிரணி தோழி போல சில நல்லவர்கள் இருக்கலாம்) ஆமாங்க நடுவரே, அங்க இருக்கும் போன் கனெக்‌ஷன் கூட அவங்க கையில் இருப்பதில்லைன்னா பார்த்துக்கோங்களேன். ஒரு கம்ப்ளெயிண்ட் பண்ணுவதற்கு நாம் படும் பாடு இருக்கே, சொல்லி மாளாது. போன் ரிங் அடிச்சுட்டே இருக்கும், யாருமே வந்து பிக் அப் பண்ண மாட்டாங்க, கேட்டா வேலையில் பிஸியா இருக்காங்களாம் :((

அப்படியே, யாராவது போனை எடுத்திட்டாலும், அதை நான் பார்க்கதில்லை மேடம், நான் உங்களுக்கு ஒரு நம்பர் தரேன் நீங்க அதுக்கு கூப்பிடுங்கனு சொல்லுவாங்க, ம்ம் சரி கொடுத்து தொலைங்கனு திட்டிக்கிட்டே நம்பரை வாங்கி வாங்கி இதே மாதிரி ஒரு 5 நம்பருக்கு மாத்தி மாத்தி போன் பண்ண வேண்டியிருக்கும். ஒரு கம்ப்ளெயிண்ட் பண்ண ஒம்போது கால் பண்ணி அப்பவும் சரியான பதில் இல்லைன்னா எப்படி இருக்கும் யோசித்து பாருங்க நடுவரே!!

அப்புறம், இந்த வங்கிகள் இருக்கு பாருங்க அப்பப்பா;(( ஒரு முறை ஒரு தேசியமயமாக்கப்பட்ட மிகப்பெரிய வங்கியில் அக்கவுண்ட் ஓபன் பண்ண ஆசை வந்து, சரி மதியத்தில் போனால் சிறிது ஃப்ரீயா இருப்பாங்களேன்னு போனேன், போய் அக்கவுண்ட் ஒப்பனிங் ஃபார்ம் கேட்கிறேன், ஃபார்ம் இல்லைன்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு, எனக்கு வந்தது ஆத்திரம், ஆனா என்ன பண்றது வேலை ஆகணுமே, ஏன் மேடம், ஃபார்ம் கூட இல்லையா, நெட்டில் இருந்து டவுன்லோர்ட் பண்ணி ஃபில் பண்ணி தரலாமானு கேட்டேன், அதுக்கு சும்மா ஏதாவது கேட்டுட்டே இருக்காதீங்கனு சொல்லிச்சு, நாம விடுவோமா, நேரா மேனேஜர்க்கிட்ட போனேன். ஏன் சார் உங்க பேங்கில் ஒரு ஃபார்ம் கூட இல்லையான்னு கேட்டேன்,அதுக்கு அந்த மனுஷன் ரொம்ம்ம்ம்ம்ம்ப பவ்யமா, மேடம் அந்த செக்‌ஷன் பார்க்கும் ஆள் இன்னிக்கு வரலை அதான் உக்காருங்க நான் ஃபார்ம் தரேன்னு சொன்னாரே பார்க்கனும், உங்க பேங்கில் எனக்கு கணக்கே வேண்டாம்னு சொல்லிட்டு நடையை கட்டிட்டேன்.

இன்று பல அரசு துறையில் உள்ளவர்கள் யாரூம் அதிகாரியை பார்த்து பயப்பட தேவையில்லை. கீழ் இருப்பவர்களை பார்த்து தான் மேலதிகாரிகள் பயப்படறாங்க, இப்படி இருக்கும் போது வாடிக்கையாளர்களின் நிலையை யோசித்து பாருங்க நடுவரே!! அரசு வங்கிகள் இப்படியிருக்க, மக்கள் பாவம் எல்லாத்துக்கும் சார்ஜ் பண்ணினாலும் பரவாயில்லைன்னு தனியார் வங்கிகளை நாட வேண்டியுள்ளது.

அன்புடன்
பவித்ரா

நடுவரே.... இந்த காலத்துல பயிறு வைக்க வேண்டிய நிலம் எல்லாம் வீடா போச்சு. பணத்தாசையில் ஒருத்தன் பணம் கொடுத்து அதுக்கு வீடு கட்ட அப்ரூவல் கேட்டா உடனே கிடைக்குது. இதைவிட பெரிய அழிவு நம்ம நாட்டுக்கு இருக்க முடியுமா??? இதுக்குலாம் அரசியல்வாதி காரணம் இல்லை. லஞ்சம். அரசு அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகள். நீர்நிலை எல்லாம் வீடாகி, ஒரு நாள் தரமட்டமாகுது.

ஷேர்ஸ் வாங்குறது விக்குறதுல கூட ஏமாத்து வேலை. நாடு முன்னுக்கு எப்படி வரும்??? இதெல்லாம் எந்த அரசியல்வாதியும் பண்றது இல்லை.

ஏதோ 1000 ஊழல் இருக்கு, அதுல நானும் கொஞ்சம் சம்பாதிச்சுட்டு போறனே'னு நடுவுல வந்தவனை ஏங்க கை காட்டணும்???

தரமான, மருத்துவ வசதி இல்லை, தரமான கல்வி நிறுவனம் இல்லை.... எல்லாத்துலையும் பணம், ஏமாத்து வேலை. இங்கலாம் செக் பண்ண போர அரசு ஊழியர்கள் பணபெட்டி வாங்கிட்டு போயிடறாங்க. பல போலி மருத்துவர்களை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கல.... உயிர்களுக்கு மதிப்பு இல்லை.

இதெல்லாம் பெரிய பிரெச்சனையா தெரியல நமக்கு... ஆனா இதெல்லாம் கூட நாடு முன்னுக்கு வராம இருக்க காரணம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்கங்க யாரையும் காணோம்.... வாங்க வாங்க. இன்று ஒரு நாள் தானே இருக்கு. நடுவர் நாளைக்கு தீர்ப்பு சொல்லிடுவாங்க. அப்பறம் நாமே நினைச்சாலும் பொலம்ப இயலாது. வாங்க. இழையை தூக்கி விட தான் இந்த பதிவு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே,ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை,பாஸ்போர்ட் இதெல்லாம் எங்க போனாலும் கேட்கறாங்க.ஆனால், மக்களுக்கு தேவையானதெல்லாம் உடனடியா கிடைக்கிறதில்லை.ரேஷன் கார்டை நம்பி எவ்வளவோ குடும்பங்கள் இருக்குது.ஆனா,வர்ற சரக்கெல்லாம் உடனே காணாமப் போகுது!!எங்க போகுது?இதையே நம்பி இருக்கிறவங்க கதி என்ன?அதுவும்,இந்த ரேஷன் கார்டு வாங்கிறது இருக்கே உலகத்திலேயே மிக கடினமான விஷயம்!!

ரேஷன் கார்டு வாங்கிறத்துக்குள்ளே மக்கள் படறபாடிருக்கே!வாக்காளர் அட்டை வாங்கறதும் இங்க அவ்வளவு சுலபம் கிடையாது.ரேஷன் கார்டும்,வாக்காளர் அட்டையும் எவ்வளவு முக்கியம்,அதுக்கே மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டா என்ன பண்றது, நடுவரே.

நடுவரே,நாம ஒரு நிலம்,வீடு தொல்லை இல்லாம வாங்க முடியுதா?பலவழிகளில் ஏமாற்று வேலை நடக்குது.நாம ஒரு நிலத்தை வாங்கி வீடு கட்டிட்டு இருந்தோம்னா,பாதி சுவர் வைச்சவுடனே,இன்னொருத்தர் அதுக்கு உரிமை கொண்டாடிட்டு வருவாரு.வில்லங்க சர்டிபிகேட் எல்லாம் கொடுப்பாங்களே,அப்பவும் எப்படி இப்படி நடக்குது?அதுக்கு யாரு பொறுப்புனு சொல்லுங்க.ஏரி,குளத்துலகூட பில்டிங் கட்டறாங்க,அதுக்கு யார் காரணம்?அப்பறம்,மழை வந்திட்டா ரோட்டிலயே படகுல போக வேண்டியதுதான்!!

நடுவரே,மலையை காப்பாத்தறோம்,மரத்தை காப்பாத்தறோம்,யானையை பார்க்கிறோம்,புலியை பார்க்கிறோம்னு சொல்றாங்களே,அப்புறம் ஏன் காடுகள் அழிஞ்சிட்டே வருது?மரத்தைதான் காப்பாத்தலைனு பார்த்தா மனுசங்களையும் பாடுபடுத்தறாங்க.நடுவரே,நீங்களே படிச்சிருப்பீங்க ஒரு குடும்பத்திற்கு இவர்கள் செய்த கொடுமை என்னனு,என்ன பயங்கரம்!!இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள்?!!நம் புண்ணிய பூமி,இவர்களால் பாவ பூமியாக மாறி வருகிறது,நடுவரே.

அன்புடன்
நித்திலா

அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் பொறுப்பற்றத்தன்மையை கோபத்துடன் கொட்டிட்டாங்க பவித்ரா. உண்மைதான் சில வங்கிகளில் எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது :(.

//இன்று பல அரசு துறையில் உள்ளவர்கள் யாரூம் அதிகாரியை பார்த்து பயப்பட தேவையில்லை. கீழ் இருப்பவர்களை பார்த்து தான் மேலதிகாரிகள் பயப்படறாங்க, இப்படி இருக்கும் போது வாடிக்கையாளர்களின் நிலையை யோசித்து பாருங்க நடுவரே//

யோசிக்கறேன் யோசிக்கறேன் இப்பவே மண்டை காய்ஞ்சு போ இருக்கேன் யோசிக்க வேற சொல்றீங்க கஷ்டம்தான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்