பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

வாங்க லுலு! நீங்களும் அரசியல்வாதிகளைத்தான் காரணமா சொல்றீங்களா? சீக்கிரமா வந்து வாதங்களை எடுத்து விடுங்க. காத்துக்கிட்டு இருக்கோம்ல :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்னதிது நம்ப ஊர் அரசு அதிகாரிகள் எல்லாம் அம்பூட்டு நல்லவங்களா? எதிரணியில் ஒரு ஈ காக்காயை கூட காணோம். இல்லை அரசியல்வாதிகளுக்கு பயந்து எல்லாம் வெளிய வராம உட்கார்ந்து இருக்கீங்களா? வாங்க வாங்க நாட்டாமை இருக்கறப்போ உங்களுக்கு என்ன பயம்? (ஆமாமா நாட்டாமைதானே பயப்படணும். சரி சரி பயப்படாத மாதிரியே மெய்ண்டெய்ன் பண்ணு நாட்டாமை. இல்லேன்னா அந்த நாட்டாமைப் பதவிக்கே அவமானம்)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஆணவம்,அகங்காரம்,ஆடம்பரம்- இத்தனையின் மொத்த உருவம் அரசியல்.
நம்பதான் உருக்குலைந்து அவதி அடைகிறோம்//

இந்த வள்ளுவர் அரசியல்னு நிறைய குறளில் விளக்கம் கொடுத்திருக்காரே அதெல்லாம் அரசியல் இல்லையா? புரியுது புரியுது நீங்க சொல்லியிருப்பது நவீன அரசியலின் விளக்கம்தானே :).

ஆமாப்பா இவனுங்ககிட்ட மாட்டிக்கிட்டு நாமதான் அவதிபடறோம். இது புரிஞ்சுதான் எதிரணி கமுக்கமா இருக்குதோ?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே நல்ல தலைப்பு, எந்த பக்கம்னு ஒரு முடிவுக்கு வருவது சிரமம்தான். உங்களுக்கும் தலைப்பை கொடுத்த அப்பாவுக்கும் வாழ்த்துக்கள். என்னால் இந்த பட்டியில் கலந்து கொள்ள முடியுமான்னு தெரியலை :(((( வலது கை தோள் வரை சரியான வலி, மருத்துவர் ரொம்ப டைப் பண்ண கூடாதுன்னு அட்வைஸ் :( கண்டிப்பா எல்லார் வாதங்களையும் படிப்பேன், சைலன்ட் ரீடர் தான். பட்டி நன்கு நடக்க வாழ்த்துக்கள்.

இந்தமுறை என் தொல்லை பட்டிக்கு கிடையாது :), யாரும் ரொம்ப சந்தோஷப்படாதீங்க, கை சரியாயிடுச்சுன்னா என் அறுவையை எல்லோரும் தாங்கிதான் ஆகனம் :)

இதுவும் கடந்து போகும்.

நடுவருக்கு அன்பான வணக்கம். இது மழைக்காலம் என்றாலும் நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பால் எல்லோரும் தங்கள் ஆதங்கத்தை தீர்த்து குளிரை போக்கிக் கொள்ளவார்கள் என்று நினைக்கிறேன். அவ்வளவு சூடான தலைப்பு. எதிரணி இல்லாமல் ஒரு பட்டிமன்றமா? புரிந்திருக்குமே நான் வாதாடும் தலைப்பு எது என்று. //என்னதிது நம்ப ஊர் அரசு அதிகாரிகள் எல்லாம் அம்பூட்டு நல்லவங்களா?// அப்படி மாறிட்டாலும் உலகம் அழிஞ்சு புது உலகத்தில் வாழ்வது போல் இருக்கும். சிறிது நேரம் கழித்து வாதோடு வருகிறேன்.

நடுவரே

வேர் சரியாக மண்ணில் பதியவில்லை என்றால் ஆலமரம் ஏது? சொல்லுங்க

பத்து பேர் கொண்ட குழுவுக்கு மாணவ தலைவன் எதற்காக? அந்தமாணவ தலைவனின் பேசுக்கு அனைவரும் கட்டுபட்டு நடக்க தானே? அந்த கேப்டனே தவறான செயல்களில் ஈடுபட்டாலோ,அல்லது ஒன்னுமே கட்டளையிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாலோ அதை பின்பற்றி தானே மற்ற 9 பேரும் செயல்படுவார்கள். அது போல தான் நடுவரே இந்த அரசியல்வாதிகளும்.இவங்க சரியா இல்லைன்னா ஏன் சமுதாயம் இந்த அளவுக்கு போச்சு?

நமக்கு மேலே உள்ளவனே வாங்குறான். அப்ப நாம்ம வாங்குனா தப்பே இல்லைன்னு அதிகாரிகள் நினைக்கிறாங்க. தலை இல்லாமல் வால் ஆடாதே! அதுனால தான் அரசுஅதிகாரிகள் தாராளமாகவே லஞ்சம் வாங்குகிறார்கள். அதனால் தான் நலப்பணி திட்டங்கள் செயல்படாமல் சீரழிகிறது.

ஒரு பாலம் கட்டணும்னு கையெழுத்தாகி அதிகாரிக்கு தள்ளப்படுது. கையெழுத்துபோட்டவன் ஒழுங்கா பணம் கொடுத்தாதானே அவன் அங்கே பாலம் கட்டுவான். பாதி பணத்த அமுக்கி மிச்ச பணத்த தூக்கி போட்டா? அதான் கட்டுன 2 வருஷத்துலையே பாலம் இடிஞ்சு போயிடுது.

சமீபத்துல டெல்லில நடந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிழுந்த சம்பவம் நமக்கு தெரியும். விடியவிடிய தோண்ட தோண்ட பிணங்கள் தான். காரணம் பேஸ்மெண்ட் சரியில்லையாம். தப்பு கட்டுனவன் மேலையா? அவளவு பெரியகட்டடத்த கட்டி குடியிறுக்க வச்சு அதுல பணம் சம்பாதிக்கலாம்னு நெனச்ச அந்த ஓனர் ஏனோதானோன்னு கட்டிட்டா போதும்னு விட்டுட்டான்.

அதுனால தான் நடுவரே நான் சொல்றேன் நம் நாடு முன்னேறாததுக்கு காரணம் அரசியல்வாதிகள் தான்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்ல தலைப்பு கொடுத்த நடுவருக்கு வாழ்த்துக்கள். அணியை தேர்ந்தெடுப்பதில் சிரிது கஷ்டம் இருந்தாலும் நான் வாதாட தேர்ந்தெடுத்த அணி அரசியல் வாதிகளே. எனது வாதத்துடன் வருகிரேன்.

அன்புடன்
ஸ்ரீ

நடுவரே! சீரழிவுக்கு காரணம் அரசே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை நடுவர் அவர்களே!

எல்லாத்துக்கும் காரணம் அரசியல்வாதிகள் என்று கூறும் எதிரணியினரே, காந்தி ஜெயந்தியன்று காந்தியின் இல்லத்திலேயே அமர்ந்து மது அருந்திய அரசியல்வாதிகளை என்னவென்று சொல்லுவது.

இன்று நாட்டில் பாதி பேர் அரசு வேலைக்கு ஆசைப்படறாங்க என்றால் காரணம் மக்களுக்கு சேவை செய்யவா, இல்லையே, அவங்ககிட்டயே கேட்டா அவங்க தரும் பதில் அது ஜாலியான வேலையாம், பாத்தீங்களா நடுவரே நம் நாட்டின் நிலையை.

அதுவும் இந்த அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இருக்காங்களே அப்பப்பா சொல்லி மாளாது. குழந்தைகள் பள்ளிக்கு 9 மணிக்கே வந்திடுவாங்க, ஆனா இவங்க வருவது மதியம் தான். அதுமட்டுமின்றி தன்னிடம் தனியாக டியூசன் படிக்க வரும் மாணவனுக்கே மார்க், என்ன கொடுமை நடுவரே இது.

எதிரணியில்லாமல் இல்லை என்று கூற வழியில்லாமல் தன் வாதத்தை அளித்த வினோஜாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட நான் வந்திட்டேன், நடுவரே இப்போதைக்கு இருவர் அணி என்றாலும் கண்டிப்பா நாங்கள் அணியை தாங்கிப் பிடிப்போமுல்ல

அன்புடன்
பவித்ரா

சர்வதேச ஊழல் மதிப்பீட்டு அமைப்பு உலகத்திலேயே அரசியல் கட்சிகள்தான்(4.6) அதிக அளவில் ஊழல் புரிகின்றன என்று சுட்டிகாட்டியுள்ளது..

பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 1 முதல் 5 புள்ளிகள் வரையிலான மதிப்பீட்டு முறையை அது கடைபிடித்திருக்கிறது. அதாவது ஒரு புள்ளிக்கு நெருக்கமாக இருந்தால் ஊழல் குறைவு

ஒரு புள்ளியிலிருந்து 2.3.4 மற்றும் 5 புள்ளியை நோக்கிச் செல்லச் செல்ல ஊழல் அதிகம் என்று அர்த்தம்….அரசியல் கட்சிகள் எவ்வளவு பெருமையாய் முன்னிலை வைக்கிறது பார்த்தீர்களா நடுவரே :(

ஊழலை உள்ளடக்கிய ஐபி எல் கேளிக்கை கூத்துக்கு 10000 அரசாங்க போலீசாரை இலவசமாக பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சாங்களே..செலவழிந்தது எல்லாம் நம்முடைய வரிப்பணமல்லவா….!!இந்த ஊழலுக்கும் ஏற்பாட்டுக்கும் முக்கிய காரணம் அர்சியல்வாதிங்கதானே....

பிரிட்டனிடம் ஏராளமாக கல்வி உதவித்தொகை பெறுவது இந்தியாதானாம்...ஆனால் கோடிகளாக உதவித்தொகை வந்தும் அதை சரியாக
பயன்படுத்தாமல் தனது ஆடம்பர செலவுக்காக அரசாங்கம் பயன்படுத்திகொண்டதால்..பீகார் போன்ற மாநிலங்களில் இன்றும் மரத்தடி பள்ளிகூடங்கள்....கட்டிடங்களின்றி...பரிதாபமாய காட்சியளிக்கின்றன...

லஞ்சம் வாங்காமல் சரியான நபரை பள்ளி வேலையில் நியமிக்கவும் சட்டங்களை கண்டிப்பாகவும் போடாதது அரசாங்கமே..

என்னுடைய பதிவு நாளை தொடரும்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

எதிரணி பலமா இருந்தா ஏன் தாங்கிப் பிடிக்கணும்?கட்சி ஆரம்பம் சொல்லி,ஆளு சேர்க்கறதிலிருந்தே அ.வாதி(அரசியல்வாதி) தொல்லை(அவதி) ஆரம்பம் ஆயிடுது.எத்தனை வாகனங்கள்...வகை,வகையாக. ஃபுல்ல் லோடு.எங்க ?உள்ளயும்.வெளியையும்தான்.காசையும் குடுத்து,பிரியாணியும் போட்டு தண்ணியும் ஊத்திகூட்டம் சேர்க்கிற இந்தக் கூட்டம் இருக்கற வரை,'நிம்மதி'ங்கற பேச்சுக்கே இடம் இல்லை
{மன்னிக்கவும்.மின்சாரம் இப்போதுதான் வந்தது. சில வேலை முடித்து,பின்னர் தொடர்கிறேன்

சிரிப்பே சிறந்த மருந்து

மேலும் சில பதிவுகள்