பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

//வெற்றி பெற்ற அணியினரே இதற்காகவாவது நடுவருக்கு ஒரு பொட்டியைத் தரக்கூடாதா :)//

குப்பைக்குள் இருக்கு மாணிக்கம் மாதிரி நாங்கள் எல்லோரும் நேர்மையான அரசியல்வாதிகள்.. அதனால் பொட்டி எல்லாம் எதிர்பார்க்காதீங்க நடுவரே!! ;)
அப்படிதானே எமதணி தோழிகளே!!

எதிர்பாராத தீர்ப்பா இருந்தாலும் சரியான தீர்ப்பா சரியான விதத்துல சொல்லி இருக்கீங்க! மிக்க மகிழ்ச்சி.. :)) ஆனா எனக்கு அதிகாரிகளோட/அரசியல் வாதிகளோட அதிகார வரம்பு பற்றி சில சந்தேகங்கள் இருக்கு.. கூகுள்ல தேடிப் பார்த்தேன் ஒன்னும் விவரம் கிடைக்கல.. கவி சொல்லி இருக்கிற மாதிரி அரசு திட்டங்கள்,விவரங்கள் எதுவுமே அரசு வலைத்தளத்தில சரியா அப்டேட்டும் செய்யல.. யாராவது விவரம் தெரிந்தவர்கள் இருந்த சொல்லுங்கப்பா.. அறுசுவைல இது தொடர்பா விவாதம் செய்யக் கூடாதுன்னா தனியா மெயில்ல கேட்டு தெரிஞ்சுக்கிறேன்.. இல்லை ஏதாவது லின்க் இருந்தாலும் கொடுங்க.. நான் சரியாகத் தேடாமல் கூட இருந்திருக்கலாம்..

உங்களுக்கு எந்த மாதிரி விவரங்கள் வேணும்னு சொன்னீங்கன்னா ரெஃபரன்ஸ் அப்பாவிடம் கேட்டுத் தருகிறேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி கவிசிவா..

காவல் மற்றும் சட்டம் பற்றியது எனது சந்தேகம்..
காவல் துறையின் உயரதிகாரி என்பவர் யார்?

(முன்பெல்லாம் IG என்று ஒரு பதவி இருந்ததே. அது இப்போது 4 ஆகி விட்டது என நினைக்கிறேன்.) அந்த உயரதிகாரி(கள்) தவறு செய்யும் போது அவர்(கள்) மேல் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யார் யாருக்கு இருக்கிறது?

அன்பு நடுவருக்கு- நீண்டநாட்களாக மனதில் ஓடிய ஓர் தலைப்பு. நல்ல வாதங்கள் .ந்ல்ல ஒரு தீர்ப்பு. அரசியல்வாதியாவது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மக்களை சந்திக்கவேண்டும். ஆட்சி மாறினால் விசாரணை கமிஷனை சந்திக்கவேண்டியது வரலாம். அரசு அதிகாரிகள் 30 35 வருடங்கள் பணியிலிருந்து மக்களை ஒட்டுண்ணி போல் உறிஞ்சி கொல்லும் வியாதி. நானும் அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவன். சில உண்மைகளை நேரில் கண்டவன். உங்கள் தீர்ப்பு நல்ல அதிகாரிகளுக்கு ஊக்கமாகவும் மற்றவர்களுக்கு திருந்த வாய்ப்பாகவும் அமையட்டும்

கவிசிவா பட்டியை முழுதா படிச்சேன்னு பொய் சொல்ல விரும்பல, இப்பத்திக்கு படிக்க முடியலை. ஆனால் தீர்ப்பு படிச்சிட்டேன். எதிர்பார்த்த தீர்ப்பு இல்லை, ஆனால் படிச்ச பிறகு இதுதான் சரின்னு தோன்றுது, அருமையா விளக்கி இருக்கீங்க. இந்த சப்ஜெக்டில் நான் கொஞ்சம் வீக், இந்த பட்டியை ஆங்காங்கே படிச்சு பயனுள்ளதா நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி & வாழ்த்துக்கள்.

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்