பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

எதிரணித்தோழிகள் அரசியலை சாக்கடை என்று சொல்வது முற்றிலும் சரிதான்…
நாங்களும் ஊழல் மிக்க அரசாங்கத்தை சந்தனம் என சொல்லவில்லை…….

ஊழல்மிக்க அரசு சாக்கடை என்றால் அதில் உயிர் வாழும் ஊழல் நோய் பரப்பும் கொசுக்களாகத்தான் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள்…..

இப்போது நடுவரே நீங்களே நியாயம் சொல்லுங்கள் ஊழல்நோய் தாக்கப்பட்டு நம் சமுதாயம் சீரழிய காரணம் கொசுக்களா ?சாக்கடையா? எதிரணி கொசுக்களை(லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்) கொல்லவேண்டும்……அதுதான் பிரச்சனை என்கிறார்கள் ..நாங்கள் இல்லை சாக்கடைதான் காரணம் அதுதான் பிரச்சனை என்கிறோம்

நடுவரே அரசியல் கட்சிகளின் ஊழல் பட்டியல் இதோ உங்கள் கவனத்திற்கு..

(பத்திரிக்கையில் வெளியான செய்தி)…

பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி

சர்க்கரை ஊழல் 650 கோடி

. போபர்ஸ் ஊழல் 65 கோடி

. ஹவாலா ஊழல் 65 கோடி

. எம்.பி., டிரேடிங் 32 கோடி

. உர ஊழல் 133 கோடி

. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி

. இந்தியன் வங்கி 1,336 கோடி

. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி

. நில ஊழல் (பீகார்) 400 கோடி

வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி

நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி

இப்படி கோடி கோடியா ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும் இல்லையா நடுவர் அவர்களே..

இதுமட்டுமா..? : ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேட்டின் மூலம், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக சொல்லப்படுகிறதே…அதற்கு மூலக்காரணம் என்ன? அரசாங்கத்தின் அலட்சியப்போக்கால் அனுபவம் இல்லாத "..." நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் , முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படாததும்தானே..

சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு ஒரு அயல்நாட்டு வீராங்கனை சுகாதரமற்ற நோய் பரவும் ஒரு பகுதியில் போட்டி நடப்பதால் தன்னால் வர இயலாது என புறக்கணித்ததும்,அப்படி வந்த அயல்நாட்டு விளையாட்டு வீரர்கள்
நம் சுகாதரகுறைவை வன்மையாய் கண்டித்ததும் கேவலமான நாடறிந்த விஷயமல்லவா?
சுகாதரத்துறையின் அலட்சியம்.....போதுமான கவனிப்பும் ,நிதியும் ஒதுக்காததும்தானே....
ஏராளம் இருந்தாலும் எல்லாவற்றையும் ஒருசில நிமிடத்துளீகளில் கொட்ட முடியவில்லை

மறுபடியும் அவகாசமிருக்கும்போது வருகிறேன்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அரசியல்வாதிகலால் லஞ்சம் மட்டுமா தலைவிரித்து ஆடுகிறது .ரௌடிசம்,அராஜகம்,வன்முறைகள்......
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.தேர்தல் நடந்தால் ஒட்டு போடா வெளியே வர மக்கள் பயபபுடுகிறார்கள்.
"கட்சித்தொண்டர் இறந்தால் ரோட்டில் குண்டர்கள் தொல்லை".கடை அடைப்பு பஸ் கண்ணாடி உடைப்பு என்று.
மக்களை பாதுகாக்க வேண்டிய அவர்களே மக்களை கொடுமைபடுத்துகிறார்கள்.
இது எல்லாம் அரசு ஊழியர்களிடம் இருக்கிறதா?
அப்படி இருந்தாலும் பயம் இல்லை மக்களுக்கு.
அரசியல்வாதிகளை பார்த்து மக்கள் பயப்புடுகிரார்கள் தெரியுமா நடுவரே.

மீண்டும் வாதத்துடன் வருகிறேன்.............ஹசீனா.

ஹசீன்

வாங்க ருக்சானா லேட்டா வந்தாலும் லெட்டஸ்டா வந்துட்டீங்களே :)

எரியற கொள்ளியில பிடுங்கின வரை லாபம்னு இருப்பவன் தான் அரசியல் வாதின்னி கொட்டித் தீர்த்துட்டாங்க ருக்சானா. உண்மைதானே சுடுக்காட்டு ஊழலும் நடந்த நாடுதானே இது :(. என்னப்பா எதிரணி பதில் இருக்கா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//காலையில் எழுந்து நீட்டாக தயாராகி கிளம்பிவிடவேண்டியது.அலுவலகத்திலோ ஒரே அரட்டை வேறு. ஏழை எளியவர்கள் என்றால் நையாண்டி.அவர்களின் வேலையை இவர்கள் முடித்து தர லஞ்சம் வேறு தரவேண்டும்.நம் நிலையோ ஒரு வேலை ஆக வேண்டுமென்றாலும் அரசு உழியர்களையே சார்ந்திருக்கிறோம்//

ம்ம்ம் இவனுங்களை என்ன செய்யலாம். அந்நியன் ஸ்டைலில் கொதிக்கற எண்ணெயில தூக்கிப் போட்டாத்தான் சரி வருவானுங்க படுபாவிங்க :(

//நியாயம் கிடைப்பதற்குள் போலீஸ் அதிகாரிகளிடம் நாம் பணத்துடன் சேர்த்து நம் குடும்ப மானத்தையும் அல்லவா இழக்க வேண்டியுள்ளது.இழந்த நம் பொருள் கிடைப்பதற்குள் அதற்க்கும் மேலல்லவா செலவாகிறது//

ஆமாமா பரம்பரையவே இழுத்து நாறடிப்பாங்க :( கேள்விப்பட்டிருக்கேன்.

அரசியல்வாதியா இதையெல்லாம் செய்யறான்னு நான் கேட்கலீங்க இதோ இவங்கதான் கேட்கறாங்க. என்ன பதில் சொல்லணுமோ வந்து சொல்லிப்போடுங்க. நானு அப்பாவிங்க :). அடுத்த மாசம் ஊருக்கு போகணுங்க. ஆட்டோ எல்லாம் அனுப்பிப் போடாதீங்க :(

//அந்த மருத்துவத்தை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க தான் நம் அரசாங்க உழியர்களுக்கு மனசில்லை.//

ஹி ஹி அப்புறம் நாங்க படிக்க செலவழிச்ச காசை எங்கிட்டு எடுக்கறது. பிரைவேட் க்ளினிக்ல கூட்டம் வந்தாத்தானே போட்ட காசை எடுக்க முடியும். உலகம் தெரியாத புள்ளையளா இருக்காகளே!

//வெறும் இரண்டு அரசு அலுவலகங்களை பற்றிதான் இங்கு பார்த்தோம்.அதற்கே இவ்வளவு நேரம் என்றால்.இன்னும் எவ்வளவோ செய்திருக்காங்க அவங்க அதையெல்லாம் எழுத ஒரு வாரம் போதுமான்னு தெரியல//

ரெண்டு அலுவலகங்களை சொன்னதுலயே இம்பூட்டு இருக்குன்னா இன்னும் இருக்கறதையெல்லாம் சொன்னா.... ஒன்னும் ஆகாது எதிரணி டப்பா டான்ஸ் ஆடிடும் அம்புட்டுதான் :). நடுவருக்கு இருக்கற நாலு முடியும் கொட்டிப்போகும் அம்புட்டுதான் :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//நம் நாட்டில் எந்த காவல் துறை அதிகாரியையாவது ஒழுங்காக வேலை செய்யவிடுகிறார்களா..
அவர்களை நேர்மையாக நடக்கவிடாமல் தடுப்பது இந்த அரசியல் வாதிகளே...
அவர்கள் ஆட்டி வைக்கிறார்கள் இவர்கள் ஆடுகிறார்கள் //

ஏன் எதிரணியினரே எய்தவன் இருக்க அம்பைப் போய் குற்றம் சொல்றீங்களே நியாயமா இது? ஒரு நேர்மையான அதிகாரியை ஒழுங்க செயல்பட விடுவானா இந்த அரசியல்வாதி?

இதுவும் நானா கேட்கலீங்க. அவங்க சொல்றாங்க நான் உங்ககிட்ட நியாயம் கேட்கறேன் அம்பூட்டுதான் :)

//எத்தனை கொடிகள் ..எத்தனை விளக்குகள் .எத்தனை ஆடம்பரம்... அந்த பணத்தை.. எத்தனை மின்வசதி இல்லாத கிராமங்களுக்கு ...மின் வசதி ஏற்
ப்படுத்தி கொடுக்கலாமே...//

ஏனுங்க இப்படி ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசு அதிகாரியா செய்யறான் அரசியல்வாதிதானே செய்யறான். அப்பாவி அதிகாரிகளைப் போய் குறை சொல்றீகளே நியாயமா இது?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாங்க பொன்னி. அரசு அதிகாரிகள்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்றீங்களா?
லஞ்சத்தோட ரிஷிமூலமே அரசு அலுவலகங்கள்னும் அதிகாரிகள்தான் லஞ்சத்தை உருவாக்கிய பெற்றோர் அதிகாரிகள்னும் சொல்றாங்க நம்ப பொன்னி. ஹி ஹி லஞ்சத்தோட பெர்த் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டீங்களா? எம்பூட்டு லஞ்சம் கொடுத்தீங்க?

அரசியல் வாதி கோடி கோடியா வாங்கினாலும் இருக்கப்பட்டவன்கிட்டதானே வாங்கரான். ஆனா இந்த அதிகாரிங்க இல்லாதபட்டவனையும் சேர்த்துல்ல வதைக்கறாங்க பாவமில்லையா? குற்றமில்லையா? யோசிங்க எதிரணியினரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அரசு அதிகாரியே அரசியல்வாதிக்கிட்ட லஞ்சம் கொடுத்துதான் வேலை வாங்கறான். அவனைப் போய் குற்றம் சொல்றீங்களேன்னு கேட்கறாங்க தேன்மொழி! நியாமாத்தானே இருக்கு :)

அரசியல்வாதி வைக்கற விளம்பர போர்டுனால எம்பூட்டு விபத்துகள் நடக்குது. விளம்பர போர்டு வச்சான்னு ஒரு அரசு அதிகாரிய சொல்லுங்க பார்ப்போம். செய்யறது எல்லம் அரசியல்வாதிதானாம். எதிரணி பதில் இருந்தா வந்து சொல்லுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//இந்த யந்திரம் சரிவர இயங்குகிறதா என்று கண்காணிப்பது, நன்றாக நடக்க ஊக்குவிப்பது, தவறுகள் நடந்தால், கண்டித்து, தண்டிப்பது – இதெல்லாம் யாருடைய பொறுப்பு? யாருக்கு இந்த அதிகாரம்?//

அதானே மேய்க்கறவன் ஒழுங்கா இருந்தாத்தானே மந்தையும் உருப்படியா இருக்கும். வேலியே பயிரை மேய்ஞ்சா என்ன பண்றது? கஷ்டம்தான்.

//நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நம் பிரதிநிதிகளாக நாம் அனுப்பிய அரசியல்வாதிகள், நம்முடைய பணத்தையே அல்லவா கொள்ளையடிக்கிறார்கள்?? திருடன் கூட சொந்த வீட்டில் கன்னக்கோல் போட மாட்டானே? இவர்களை என்னவென்று சொல்வது, தெரியவில்லையே? வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய விஷயம் இது//

ஹி ஹி ஓட்டுப் போட காசு வாங்கும் போது மக்கள் யோசிச்சிருக்கணும். இப்போ அனுபவிக்கிறோம். எதிர்த்து கேட்க முடியுதா? பிரியாணி பொட்டலம் வாங்கித் தின்ன வாயாச்சே :(. எலும்பித் துண்டை மக்களுக்கு போட்டுக்கிட்டு மொத்த கறியையும் பதுக்கிடறாங்க அரசியல்வாதிங்க. என்னப்பா சொல்றீங்க எதிரனி? ஏதாச்சும் சமாளிஃபிகேஷன் இருக்கா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//ஊழல்மிக்க அரசு சாக்கடை என்றால் அதில் உயிர் வாழும் ஊழல் நோய் பரப்பும் கொசுக்களாகத்தான் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள்…..//

அதானே கொசுவை ஒழிக்கனும்னா மருந்தடிச்சா போதுமா சாக்கடையை சுத்தப் படுத்தணுமே!

கோடி கோடியா ஊழல் பட்டியலை கொடுத்துட்டாங்க இளவரசி. எதிரணிகிட்டே இப்படி அரசு அதிகாரிகள் செய்த ஊழல் பட்டியல் இருக்கா ஹை இருக்கா? கேட்கராங்கல்லா சொல்லுங்க :)

இப்படி கோடி கோடியா பணத்தை சேர்த்து என்ன செய்வாங்க? எனக்கெல்லாம் தீபாவளிக்கு வாங்கும் கோடித் துணியும் தெருக்கோடியும்தான் தெரியும் :(

கமென்வெல்த் போட்டியில் நடந்த குளறுபடிகளால் உலக அரங்கில் தலைகுனியும் நிலை வந்தது யாரால்? அரசியல்வாதிதான்னு அடிச்சு சொல்றாங்க இளவரசி! எதிரணி என்ன சொல்றீங்க? வந்து சொல்லுங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அரசியல்வாதின்னாலே ரௌடிங்கன்னு ஒத்தை வார்த்தையில் சொல்லிட்டாங்க ஹசீனா? அதிகாரிகளை அப்படி சொல்ல முடியுமா எதிரணியினரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்