பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

நடுவரே,
\\பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்\\
இது பொன்மொழி யென்னாலும் உண்மை அல்லவா நடுவர் அவர்களே!

இன்றைய செய்திதாள்களில் நாம் படிக்கவில்லையா? அரசு ஊழியர்கள் கையும் களவுமாக படிக்க படுகிறார்கள்.

இதிலும் கொடுமை என்னா தெரியுமா? மக்களிடமும் பணத்தையும் பிடிங்கிகொண்டு எங்களுக்கு போனஸ் வேண்டும். சம்பளத்தை உயர்த்தவேண்டும். என்று ஆர்பாட்டம் நடத்துகிறார்கள்.
இது அராஜகம் இல்லையா?

உன்னை போல பிறரையும் நேசி.

நடுவர் அவர்களுக்கு முதலில் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

நடுவர் அவர்களே எதிர் கட்சினர் அரசியல்வாதிங்க ரவுடி என்று சொல்லுகின்றனர்.

ஆனால் இந்த அரசு அதிகாரிகள் கொலைகாரர்கள், பணத்துக்கு ஆசைப்பட்டு கிட்னியை கூட திருடி விற்கிறார்கள்.

அப்புறம் பச்சிளங்குழைந்தைகளை கூட விடுவதில்லை அதையும் திருடி விற்றுவிடுகிறார்கள், இதையே பிசினஸ் ஆக ஒரு கூட்டம் அலைகிறது.

அப்புறம் இந்த அரசு ஊழியர்கள் நினைத்தால் தப்பு செய்தவன் தண்டனையில் இருந்து தப்பிவிடலாம், ஆனால் தப்பு செய்யாதவனை தப்பு செய்தவன் மாதிரி மாத்திடமுடியும்.

இவ்வள்ளவு ஏன் நடுவர் அவர்களே இந்த அரசியல்வாதி தப்பு செய்தால் அவர்களை தண்டனையில் இருந்து யார் காப்பற்றுகின்றனர் இந்த அரசு ஊழியர்தானே பொய் சான்றிதழ் கொடுத்து காப்பற்றிவிடுகின்றனர்.

அரசியல்வாதி தப்பு செய்தால் அது எல்லோர்கண்ணில் படும் ஆனால் இந்த அரசு அதிகாரி தப்பு செய்தால் அது யாருக்கும் தெரியாது.

எனக்கு தெரிந்த ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கிவிட்டு இப்போது கேஸ் நடக்கிறது, ஆனால் அவருக்கு மாதா மாதம் அவர் வாங்கி கொண்டியிருந்த சம்பளத்தில் பாதி சம்பளம் இப்போதும் வருகிறது.

இதிலிருந்து உங்களுக்கே தெரியும் யாரால் இந்த நாடு சீரழிகிறது என்று.

வாழு இல்லை வாழவிடு

அரசு அலுவலர்களே

நேற்று செய்தி பார்த்தீர்களா ஒரு IAS அதிகாரி minstry of interior ல் high rank ல் இருப்பவர் காசவாங்கிகிட்டு நக்சல்களுக்கு உளவு சொன்னத பற்றி
இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்

ponni

உங்களுக்கு என் வணக்கங்கள்
அரசியல்வாதிகள் குற்ற்த்தின் தலைவர்கள், சீர்கேட்டின் மன்னர்கள், அப்பாவிகளை வதைக்கும் அரசர்கள் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் போய் பார்த்தால் ஒரு கைய்யெழுத்துக்கு 1000த்துக்கும் மேலே பணம் தர வேண்டும் அப்போதுதான் அங்கு வேலை நடக்கும் . அதில் கால் பங்கு ஊழியருக்கு முக்கால் வாசி அரசியல் வாதிகாரர்கலுக்கு . அந்த பணம் போதாதென்று மனை வரி, வீட்டு வரி , நில வரி, தண்ணி வரி இன்னும் எத்தனையோ லொட்டு லொசுக்குன்னு சொல்ல முடியல அப்படி யெல்லாம் மக்களிடமிருந்து எடுத்து பணத்தை பதுக்கி கொல்கிரார்கள்.
வருகிரேன் ஒரு குட்டி வேலை முடித்துவிட்டு தொடர்கிரேன்.
அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
ஸ்ரீ

நன்றி நடுவரே..
என்ன சொல்ல வருகிறார்கள் எதிரணியினர்..
அரசு ஊழியர் ரவுடி என்றா. இல்லை. நினத்து பாருங்கள் எதிரணி சகோதரிகளே.
நம் நாட்டில் மதிய உணவுதிட்டம் கொண்டுவந்ததும் அரசியல் வாதிதான் ..
உடம்பு சரியில்லாமல் வேறு மருத்துவமனைக்கு போகாமல் அரசாங்க மருத்துவமனையிலேயே கிடந்த அரசியல் வாதிகள் இருந்த இடத்தில் இப்போ எப்படி இருக்கிறது நம் நாடு...
இவர்களால்தானே கெட்டு சீரழிந்து கிடக்கிறது நம் நாடு.
மீண்டும் வருகிரேன்!!..
அன்புடன் ருக்சானா.....

வாழு, வாழவிடு..

நடுவர் அவர்களுக்கு வணக்கம்.நாட்டின் சீரழிவுக்கு முக்கிய காரணம் வகிப்பவர்கள் அரசு ஊழியர்களே.இதற்கு உதாரணங்கள் பல கூற முடியும் எங்களால்.கண்ணுக்கு தெரியாத அரசியல் வாதிகளைவிட நாம் அன்றாடம் ஒவ்வொரு தருணத்திலும் சந்திக்கும் புல்லுரிவிகள் இந்த அரசு அதிகாரிகள்

இதற்கு உதாரணமாக அரசு பள்ளிகளை எடுத்துக்கொள்வோம்.எல்லாவற்றிலும் சிறந்தது கல்வி என நம் அனைவருக்கும் தெரியும்.அந்த கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்கிற நல் எண்ணத்தில் தான் அரசாங்கம் அரசாங்கம் அரசுப்பள்ளிகளை நியமித்துள்ளது.இங்கு பணிபுரியும் டீச்சர் பண்ணும் அழும்பு இருக்கு பாருங்க ஏதோ சம்பளம் வாங்காம சும்மா சொல்லிகொடுப்பது போல பில்டப் வேறு.காலையில் பள்ளிக்கு வருவதே லேட்டாக அதிலும் பக்கத்து வகுப்பு டீச்சர் உடன் அரட்டை வேறு.இதிலும் தப்பி தவறி நல்ல படிக்கும் பிள்ளைகள் சிலர் தான் முன்னேறி மேல் படிப்புக்கு வருகிறார்கள்.தனியார் பள்ளியை விட அரசு பள்ளியில் படிப்பின் தரம் குறைந்து காணப்படுகின்றன என்றால் அதற்க்கு காரணம் இது போல ஆசிரியர்களால் தான்.மேலும் பாடம் படிக்கும் ஏழை பிள்ளைகள் பசியுடன் இருக்க கூடாது என்கிற நல் எண்ணத்தில் நம் பெரும் தலைவர் காமராஜர் மதிய வுணவு திட்டத்தை ஏற்படுத்தினால் அங்கு நடக்கும் கொடுமை சொல்லி மாளாது.ஏழை பிள்ளைகளுக்கு தண்ணி சாம்பாரும், அழுகிய காய்கறிகளும்.அதே அங்கு வேலை பார்க்கும் ஆயாவிலிருந்து சத்துணவு டீச்சர் வரை அரிசி பருப்பு போன்ற பொருட்கள் அவர்கள் வீட்டிற்க்கு தான் போகிறது.இதை இல்லை என்று யாராலாவது மறுத்து கூற முடியுமா.எதிரணி தோழி அரசியல் வாதிகளின் ஊழல்களை பட்டியலிட்டு காட்டியுள்ளார்.இதை பற்றியெல்லாம் அந்த ஏழை மக்களுக்கு ஏதாவது தெரியுமா.அன்றாடம் தன் வாழ்வில் ஒரு வேளை உணவாவது உருப்படியாக கிடைக்கவேண்டும் என்பது மட்டுமே அடிப்படை வசதி கூட இல்லாத ஏழை மக்களின் கவலை. இந்த கோடி கோடியான உழல் பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியாது கூட. இந்த சின்ன சின்ன கொசுக்கள் போன்ற அரசு அதிகாரிகள் ஏழை மக்களை பிய்த்து தின்று விடுகிறார்கள்.

உணவு , உடை ,உறைவிடம் இது மூன்றும்தான் மனிதனின் அத்தியாவசிய தேவைகள்.இவையே இன்னும் நம் நாட்டு ஏழை மக்களுக்கு சரியாக கிடைப்பதில்லை.நம் தமிழக அரசு கிராமங்களில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க சமத்துவ புரம் என்கிற பெயரில் வீடு கட்டி கொடுத்தார்கள்.அங்கு நடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.இந்த அரசு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் இந்த வீடுகளை தன் சொந்த காரர்களுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இந்த வீடு கிடைக்க வருட வருமானம் மிகக்குறைவாக இருக்க வேண்டும்.இதற்கென்றே
இருக்கும் வருமான சான்றிதழ் கொடுக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு குறைந்த வருமானம் என சான்றிதழ் வழங்கிவிடுகிறார்கள்.சமத்துவ புறத்தில் போய் பார்த்தீர்களானால் எல்லாரும் வாடகைக்கு இருப்பவர்களே.ஆச்சர்யமாக இருக்கிறதா ஆம் ஏற்க்கனவே வீடு இருப்பவர்கள் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு அவர்கள் அவர்களின் சொந்த வீட்டில் இருக்கிறார்கள்.இப்படியிருந்தால் இன்றைய நிலையில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் எப்படி முன்னேற முடியும். இதிலிருந்து என்ன தெரிகிறது அரசியல் வாதிகள் நாட்டை முன்னேற்ற முயற்ச்சித்தாலும் இந்த அரசு உழியர்கள் விடுவதில்லை.இன்னும் இருக்கிறது இவர்களின் அட்டூழியங்கள்.

நடுவரே முதலில் யாராவது ஒரு தவரு செய்தால் நீ மனுஷனா இல்ல மிருகமா என்று தான் கேட்பார்கள் . ஆனா இப்போ இருக்கின்ர நிலைமயில் நீ மனுஷனா இல்ல அரசியல்வாதியா என்று தான் கேட்க்கிரார்கள்.
இன்றைய இந்தியாவில் கூட்டமாக கொலை செய்யும் முறை தலைதூக்கி இருக்கின்றது. சட்டத்தினை தன் கையில் எடுத்து அரசியல்வாதிகளால் ஆரம்பித்து வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம்
ரேசன்கடையில் மக்களுக்கு வழங்க வரும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கள்ள மார்க்கெட்டுக்கு செல்கின்றன. தடுக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்க்கின்றது. எம் எல் ஏவுக்கு பங்குபணம் செல்லுகின்றது.
நாட்டின் சீர்கேடிர்க்கு காரணம் அரசியல் வாதிகளே.
அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
ஸ்ரீ

ஒரு அவசர சிகிச்சை என்று ஆம்புலன்சில் போய்க்கொண்டிருந்தால் எதிரே ஒரு முக்கிய பதவியில் இருக்கும் அரசியல்வாதி வந்தால் அவ்லோ தான் ஆம்புலன்சின் கதி அதில் இருந்த அந்த உயிறின் நிலைமை அவ்லோ தான் இது எவராலும் மருக்க முடியாத உண்மை.
அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
ஸ்ரீ

சுனாமியால் நாட்டில் ஏற்பட்ட பதிப்புக்கள்,உயிரிழப்புகள் பற்றி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.மேலும் உங்களுக்கு தெரியாத விஷயங்கள் பல உள்ளன.அரசு இந்த சுனாமியால் பாதிக்க பட்டவர்களுக்கென எவ்வளவே சலுகைகள் செய்தார்கள்.அவற்றில் முழுவதும் அவர்களுக்கு போய் சேர்ந்ததா என்றால் இல்லை.உடை,உணவு,அவர்களுக்கு பாத்திரங்கள்,சோப்,துண்டு,எமர்ஜென்சி லைட்,பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் எவ்வளவோ அரசாங்கம் அனுப்பி வைத்தார்கள்.இங்கு வந்து இறங்கியதும் இப்பொருட்களில் பாதி அரசு உழியர்களில் கடை நிலை உழியன் வீடு வரை இந்த பொருட்கள் சென்றிருப்பதை நான் கண் கூடாக பார்த்த உண்மை.பதிக்கப்பட்ட மக்களோ வீடு வாசல் இல்லாமல் அல்லல் படுகிறார்கள் அவர்களுக்கு சொந்த மானதயுமா எடுத்துக்கொள்ள வேண்டும் மனசாட்சியே இல்லாத மனிதர்கள்.அவர்களுக்கு வந்த உணவை கூட விட்டு வைக்காதது தான் கொடுமையிலும் கொடுமை.இதையெல்லாம் செய்யும் முன்பு ஒரு தடவை கூட அவர்களின் மனது உறுத்தாமல் இருக்கிறது.இவர்களுக்கெல்லாம் சங்கரின் அந்நியன் வந்தால் தான் திருந்துவார்களோ என்னமோ.

இந்த இடத்தி கவர்ன்மென்ட் பஸ் ஊழியர்கள் பற்றி கூறகடமைபட்டுள்ளேன்.இந்த கவர்ன்மன்ட் பஸ் நடத்துனருக்கும் ஓட்டுனருக்கும் பஸ்ஸில் ஏறியது ஏரோப்ளேன் ஏறியது போல நினைப்பு.ஓட்டுனர் இருக்கார் பாருங்க அவர் கரெக்டா ஸ்டாப்பிங்க தாண்டி தான் பஸ் ஐ நிறுத்துவார் ஏன் என்று கேட்பவர்களுக்கு வாயில் வந்ததை சொல்லிவிடுவார்.தவறு தன் பக்கமே இருந்தாலும் ரோடில் வந்தவர் போனவரெல்லாம் சாவுகிராக்கி ஆகிவிடுவார்.இதற்க்கும் ஒரு படி மேல் நடத்துனர் இருக்கார் பாருங்க மந்திரித்துவிட்டவர் போல வந்தார் போவறேள்ளரையும் வசை மாறி பொழிந்து விடுவார். சில்லறை இல்லாமல் வருபவர் கிடைத்துவிட்டால் இவருக்கு கொண்டாட்டம் தான்.ஏன்னா மீதி கொடுக்க வேண்டாமில்லையா.பஸ்சில் வரும் பயணிகளின் வரிப்பணத்தில் தான் தன் சம்பளமே வருகிறது என ஒரு நாளாவது நினைத்திருப்பாரா.பஸ்ஸில் வரும் பயணிகளை மரியாதை கொடுக்க வேண்டாம் மனிதனை மனிதனாக கூட நினைப்பதில்லை.நம் பணத்தை கொடுத்து பயணம் செய்தும் நமக்கு மரியாதை இல்லா தனம் தான் மிஞ்சுகிறது.இன்னும் கொஞ்சம் நாளில் கார்ட் சிஸ்டத்தில் பஸ்கள் ஓடப்போகிறது அப்ப தான் இந்த கொடுமையிலிருந்து விமோசன்

இது ஒரு தொடர் கதை நடுவர் அவர்களே இன்னும் இருக்கு நம் அரசு உழியர்களால் நாடு எவ்வாறெல்லாம் சீரழிகிறது என்று.

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்..

என் வாதம் சீரழிவுக்குக் காரணம் அரசு ஊழியர்கள் தான் என்பதே!!

”அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்பது மன்னர் ஆட்சிக் காலத்தில் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம்.. அந்தக் காலத்தில் ஆளும் மன்னனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் இல்லை எனவே மன்னனை பின்பற்றி மக்கள் இருந்தனர்.. ஆனால் அப்படிப்பட்ட காலமெல்லாம் மாறி மக்கள் தான் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனும் நிலை இருக்கும் போது இன்றும் அதையே கூறிக்கொண்டும் புலம்பிக் கொண்டும் இருக்க முடியாதே!

அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் இருக்கிறது.. எனவே மக்களின் ஆதரவு கண்டிப்பாக அரசியல்வாதிகளுக்கு வேண்டும்.. எனவே அவர்கள் மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களைப் போட்டே ஆகவேண்டும்.. பண ஒதுக்கீடு செய்தே ஆகவேண்டும்.. ஒதுக்கப்படும் பணத்தை அரசியல்வாதியே சுருட்டிக் கொள்வதாக வைத்துக் கொண்டால் கூட அதற்கு துணை போவது இந்த அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தான்..அவர்களின் துணை இல்லாமல் அரசியல்வாதியால் ஒன்றும் செய்ய முடியாது..

அரசியல்வாதி 5 வருடத்திற்குப் பின் திரும்ப அதே பதவிக்கு வரலாம் அல்லது வராமலும் போகலாம் ஆனால் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் அப்படி அல்லவே! நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளின் பதவிக்காலம் அதிகமா இல்லை அரசு ஊழியர்களின் பதவிக்காலம் அதிகமா?

”சிட்டிசன்” என்றோரு படம் வந்ததே அதில் அப்பாவி மக்களைக் கொண்ட ஒரு கிராமத்தையே அழித்தது மூன்றே மூன்று பேர் கொண்ட அரசு அதிகாரிகள் குழுதான்.. அங்கு அரசியல்வாதிக்குத் தேவையே ஏற்பட வில்லையே!அரசியல்வாதியின் துணை இல்லாமல் அதிகாரியால் எவ்வளவு தூரம் கொடுமை செய்ய முடியும் என்பதை எடுத்துக் கூறவில்லையா அந்தப் படம்..

எலக்‌ஷன் கமிஷன் என்ற ஒன்று பல காலமாக இருந்து வருவது தான்.. ஆனால் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது அந்தப் பதவிக்கு வந்த திறமையான ஒரு அதிகாரிதான்.. அவர் அந்தப் பதவிக்கான அதிகாரத்தைக் கையில் எடுத்து அதன் வலிமையை மக்களுக்கும் அரசியலவாதிகளுக்கும் உணர்த்தினார் என்றால் அது மிகையாகாது.. அது போல் பல துறைகளும் அவர்களின் அதிகாரத்தைச் சரியான முறையில் மட்டுமே பயன்படுத்தினால் நன்றாக இருக்குமே!

தன் சுயநலத்திற்காக சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பான ஒரு வேலையை முடித்துக் கொள்ள அன்பளிப்பு என்ற பெயரில் ஆரம்பம் ஆனது தான் லஞ்சம்.. இன்று சட்டத்திற்குப் புறம்பான என்பது கூட இல்லாமல் நியாயமான தேவை என்றால் கூட லஞ்சம் தர வேண்டும் என்ற நிலை அரசு ஊழியர்களால் தானே இருக்கிறது.. தனக்கு மேல இருக்கிறவன் வாங்கினா தானும் வாங்கனுமா... சுய புத்தி என்பது கிடையாதா?.. சுய புத்தி இல்லை எனினும் சொல்புத்தியாக ”எது நல்லது எது கெட்டதுன்னு” படிச்சிட்டுதானே பதவிக்கு வராங்க அரசு ஊழியர்கள்?
எப்பேர் பட்ட அரசியல் வாதியாக இருந்தாலும் தப்பு செய்தால் நீதித்துறையிடம் தான் போயாக வேண்டும்.அங்கு இருக்கும் நீதிபதி அரசு ஊழியரே ஒழிய அரசியல்வாதி அல்ல!!

அரசு ஊழியர்கள் அவங்கவங்களோட அதிகாரங்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காம இருந்தா அரசியல்வாதிகளால் ஒன்றும் செய்ய முடியாது.. ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் அதிகாரிகள் இட மாற்றம் நடக்குதே ஏன்? தனக்கு உடன் படும் ஆட்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதால் தானே..

ஆனால் எந்த அதிகாரியை மாற்றினாலும் அந்த அதிகாரி அரசியல்வாதிக்கு உடன் படாமல் நீதிக்கு மட்டுமே உடன் படுபவராக இருந்தால் தவறான அரசியல் வாதியால் என்ன செய்துவிட முடியும்?

எனவே சீரழிவுக்குக் காரணம் ஒரு பக்கம் தப்பான அரசியல்வாதிக்கு ஒத்து ஊதிக் கொண்டும், மறு பக்கம் ஒட்டு மொத்த மக்கள் நலனைப் பற்றியே யோசிக்காமல் சுயநலனையும் தன்னைச் சார்ந்தவர்கள் நலனைப் பற்றியும் மட்டுமே யோசிக்கும் அரசு ஊழியர்கள் தான் என்பதே என்வாதம்..

மேலும் சில பதிவுகள்