பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?

அறுசுவை என்னும் அன்புச்சங்கிலியில் இணைந்திருக்கும் எம் அருமைத் தோழிகளுக்கு அன்பான வணக்கங்கள்.

எல்லா தோழிகளும் இணைந்து நடுவராக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டதால் இம்முறை நான் பட்டிமன்ற நாட்டாமையாகி விட்டேன் :).

இம்முறை நான் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு இன்றைய நம் நாட்டு சூழலில் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விஷயம். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் அதிகாரங்களில் இருக்கும் இரு வர்க்கத்தினர்தான் மிக முக்கியமான காரணம்.

எந்த ஒரு நாடும் முன்னேறுவதும் சீரழிவதும் இந்த இரு வர்க்கத்தினரின் கைகளில்தான். இந்த இரண்டு பேரில் யாரால் நம் நாடு அதிகம் சீரழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

சரி சரி யார் அந்த இரண்டு வர்க்கத்தினர்னு கேட்கறீங்களா? அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்தான் அவர்கள்.

இவ்வார பட்டிமன்ற தலைப்பு இதுதான்

###################
"நம் நாட்டில் இன்று நிலவும் பல சீரழிவுகளுக்கு மிக முக்கிய காரணம் யார்? அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா?
###################

தலைப்பை கொடுத்து உதவிய திரு.M.B.குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :) ஹி ஹி மகள் தந்தைக்காற்றும் உதவின்னு நினைச்சுடாதீங்க. நான் நடுவராக இல்லாமல் வாதாட வேண்டும் என்று நினைத்த தலைப்பு இது. ஆனால் இன்றைய சூழலில் இதைப்பற்றிய விவாதம் வேண்டும் என்பதால் நானே தேர்ந்தெடுத்து விட்டேன் அவ்வளவுதான்:)

பட்டிமன்றத்தின் பொதுவான விதிமுறைகளோடு இப்பட்டிமன்றத்திற்கு என மேலும் சில விதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் தோழிகள் கவனத்தில் கொண்டு வாதாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பட்டியின் விதிமுறைகள்
*******************************
1. பட்டியில் வாதிடுபவர்களை பெயரிட்டு வாதிடக்கூடாது
2. எந்த ஜாதி - மதம் - கட்சி குறித்தும் பேசக் கூடாது
3. இந்த பொதுமன்றத்தில் நாகரீகமான பேச்சே அவசியமான ஒன்று.
4. தமிழில் தரப்படும் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
5. பட்டியில் வாதங்கள் மட்டுமே ஏற்கப்படும். அரட்டைகளை அல்ல.
6. நடுவரின் தீர்ப்பே இறுதியானது. அதை குறித்து வாதங்கள்
இருக்கக் கூடாது. கருத்துக்கள் இருக்கலாம்.
7. அறுசுவையின் பொது விதிமுறைகள் பட்டிக்கும் பொருந்தும்.

முக்கியமான விதிமுறை
******************************
தனிப்பட்ட அரசியல்கட்சியைக் குறிப்பிட்டோ தனி நபரைக் குறிப்பிட்டோ அல்லது தனிநபர் வாழ்க்கையை குறிப்பிட்டோ பேசக் கூடாது. பொதுவாக அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.

அனைவரும் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு அனல் பறக்கும் சிந்திக்க வைக்கும் வாதங்களை அள்ளி வீசுங்கள். அள்ளிக் கொள்ள மனக்கூடையுடன் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்த வார நாட்டாமை
கவிசிவா :)

பட்டியை ஆரம்பித்துள்ள கவிசிவா அவர்களே... தலைப்பை கொடுத்த எங்கள் நாட்டாமையின் அருமை தந்தையார் அவர்களே... பட்டி மன்றத்தை துவக்கி வைக்க என்னை அன்புடன் அழைத்தார் நாட்டாமை கவி அவர்கள். அமேரிக்காவில் பிரசிடென்டை சந்திக்க போய் விட்டு வந்து கொண்டிருந்த வேளையில் நடு வானில் ப்ளைட்டின் டயர் பஞ்சர் ஆகி ஒட்டுவதற்கு நேரம் ஆகிவிட்ட காரணத்தால் துவக்கி வைக்க வர முடியவில்லை அதனால் எனது வாழ்த்துக்களை மட்டும் சொல்லி இப்போதைக்கு விடை பெறுகிறேன்... ஹி... ஹி... பொன்னாடை வேற போர்திட்டீங்களா... குமார் சார்.

அன்புடன்
THAVAM

***எதிரணி கொசுக்களை(லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்) கொல்லவேண்டும்……அதுதான் பிரச்சனை என்கிறார்கள் ..நாங்கள் இல்லை சாக்கடைதான் காரணம் அதுதான் பிரச்சனை என்கிறோம்****

எதிரணியிணரே சாக்கடைதான் காரணம் என்பதற்காக அதை ஒழிக்க முடியுமா என்ன.. சாக்கடை அவசியமான ஒன்று.சாக்கடை இல்லைனா நம் வீட்டுக் கழிவுகளை வெளியேற்ற முடியுமோ? :D..ஆனா இந்த கொசுக்கள் இருக்கு பாருங்க அதைதான் ஒழிக்கனும்.. சாக்கடை இருப்பதால் பிரச்சினை ஒன்னும் இல்லை.. ஆனால் அதில் கொசுக்கள் உருவாவதால் தான் பிரச்சினை..
கொசுக்கள் எப்போ உருவாகும்? சாக்கடை சரியாக பராமரிக்கப் படாத போதுதானே!!வாழ்வில் நிஜ சாக்கடையை பராமரிக்கிறது கூட அரசு ஊழியரகள் தான்.. அட அதை அவங்க ஒழுங்க செய்யுறாங்களா சொல்லுங்க.. சாக்கடை சுத்தம் செய்ய வரங்களுக்கு தீபாவளி பொங்கல்னா தனியா கவனிக்கனும் இல்லைனா அவ்ளோதான்..நம்ம வீட்டுப் பக்கம் சாரு எட்டிக் கூட பார்க்க மாட்டாரு.. அரசியல் சாக்கடையும் அப்படித்தான்.. அதை சரி செய்ய வேண்டியதும் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கைகளிலும் தான் இருக்கு.தெரிஞ்சுக்குங்க!

அப்புறம் அரசியல்வாதிகள் எல்லோரும் ரௌடிக் கும்பலா இருக்காங்களாம்..

ரௌடிகளை அடக்கி ஒடுக்கத்தானே காவல் துறை இருக்கு.. அவங்க அரசு ஊழியர்கள் தானே.. காவல்துறை தன் கடமையை உண்மையாலுமே ஒழுங்க செய்தா ரௌடி்கள் இருப்பார்களா இந்த நாட்டில்? அரசியல்வாதிக்கு கூஜா துக்கிற அதிகாரிகள் இருக்கிற வரை நாட்டில சீரழிவும் இருக்கவே செய்யும்..

\\\\\அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்பது மன்னர் ஆட்சிக் காலத்தில் வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம்.. அந்தக் காலத்தில் ஆளும் மன்னனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களிடம் இல்லை எனவே மன்னனை பின்பற்றி மக்கள் இருந்தனர்.. ஆனால் அப்படிப்பட்ட காலமெல்லாம் மாறி மக்கள் தான் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனும் நிலை இருக்கும் போது இன்றும் அதையே கூறிக்கொண்டும் புலம்பிக் கொண்டும் இருக்க முடியாதே!/////
அட் ஆமாங்க நடுவரே மக்கள் தான் தேர்ந்தெடுக்கின்றனர் . ஆனால் அவர்கள் ஆட்ச்சிக்கு வந்ததுக்கு பிறகு அவங்க கிட்ட போய் வாய தொரக்கவே முடியல இதுல வேர அவங்க சொல்ரத கேக்காம இருந்தா அந்த ஊழியரின் நிலைமை என்ன நடு ரோடு தான் .
அரசியல் வாதிகள் தேர்தலின் போது கொடுக்கும் அரிக்கையிலேயே மயங்கி போய் விடுகின்றனர் இந்த அப்பாவி மக்கள் யாராலயாச்சும் இந்த நாட்டுக்கு நல்லது நடக்காதா என்று காத்துக்கொண்டிருக்கின்ரனர்.ஒவ்வொரு ஏமாருவதே மிக கொடுமை.

அன்புடன்
ஸ்ரீ

\\\\ரௌடிகளை அடக்கி ஒடுக்கத்தானே காவல் துறை இருக்கு.. அவங்க அரசு ஊழியர்கள் தானே.. காவல்துறை தன் கடமையை உண்மையாலுமே ஒழுங்க செய்தா ரௌடி்கள் இருப்பார்களா இந்த நாட்டில்? அரசியல்வாதிக்கு கூஜா துக்கிற அதிகாரிகள் இருக்கிற வரை நாட்டில சீரழிவும் இருக்கவே செய்யும்..////
யாரும் விரும்பி கூஜா தூக்குவது இல்லை . அப்படி பேசினால் தான் இந்த அரசியல் வாதிகளின் மத்தியில் மாட்டி உயிர் வாழ முடியும் என்னும் போது வேர என்னத்த பன்ன . கண்டிப்பா ரெளடிகளை ஒடுக்கதான் காவல் துரை ஆனா அந்த காவல் துரையை தன் சுய நலத்துக்காக அரசியல் வாதிகள் தானே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அன்புடன்
ஸ்ரீ

எதிரணியினர் இவ்லோ பேசராங்களே ஏன் அவங்க பசங்கள நான் ஒரு மந்திரி ஆகனும்ன்னு நினைத்தேன் என்னால ஆக முடியல நீ கண்டிப்பா ஆகனும்ன்னு யாரும் சொல்ல மாட்ராங்க .எல்லாரும் ஏன் நீ ஒரு டாக்டர் ஆகனும் நீ ஒரு வக்கீல் ஆகனும் இஞ்சினியர் ஆகனும்ன்னு ஊக்கம் கொடுக்கராங்க ஏன்னா அரசியல் யாரும் விரும்ப மாட்ராங்க அதுல நடக்கர கொடுமையை என்ன வென்று சொல்ல நடுவரே.
நல்லா நடுவீட்ல சப்பலங்கால் போட்டு உக்காந்து நாட்டு நடப்ப யோசிச்சு பாருங்க நடுவரேரேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
ஸ்ரீ

பட்டியில் தாமதமாக நுழைவதற்கு நடுவர் அவர்கள் பெரிய மனதோடு மன்னிக்க வேண்டும். அருமையான தலைப்பு, அற்புதமான நடுவர். வாழ்த்துக்கள் நடுவர் அவர்களே. நான் எடுத்துக் கொண்டு வாதாடப் போகும் தலைப்பு அரசு ஊழியர்களே !!!

என் வாதங்களுடன் வெயிட்டாக வந்து கொண்டே இருக்கிறேன். அதுவரை நடுவர் அவர்களே ரெஸ்ட் எடுத்துக்குங்க :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பட்டிமன்ற தோழிகளிடம் நடுவரின் அன்பான வேண்டுகோள். சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் நாளை மதியம் வரை பதிவுகள் இட முடியாது. ஆனால் எல்லோருடைய வாதங்களையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பேன்.

தோழிகள் என் பதிலை எதிர்பாராமல் தொடர்ந்து தங்கள் வாதங்களை அள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அரசியல் அந்தகாலத்தில மன்னராட்சியிலையும் சரி இப்போ மக்களாட்சியிலையும் சரி மன்னர்களுக்குன்னோ, அரசியல்வாதிகளுக்குன்னோ எதும் basic qualification நிர்ணயம் செய்யவில்லை.
மன்னராட்சி வாரிசுபடி வந்தது நல்ல மன்னன் எல்லாம் அறிந்தவன் மன்னனாக வாய்த்திருந்தால் நாடும் வீடும் சுபிட்சமாஇருந்திருக்கும் 23ம் புலிகேசிபோல் வாய்தால் அது மக்கள் துரதிஷ்டம் அவனால் ஏற்படும் எல்லா விளைவுகளுக்கும் அவனுடைய அறியாமையே காரணம்
அது போல் தான் இந்த காலத்து அரசியல்வாதிகளும்.
அனால் அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி அரசு அதிகாரிகள் அவர்களுடைய படிப்பறிவின் அடிப்படையில்தான் வேலையில் சேர்க்கப்படுகிறார்கள்
அவர்களுக்கு அவர்கள் செய்கிற வேலையின் எல்லா நிலைகளும் தெரியும் நல்லது கெட்டது தெரியும்.பின் விளைவுகள் தெரியும்
சொல்லுங்க நடுவர் அவர்களே தெரிந்து செய்கிறவன் குற்றவாளியா?? தெரியாமல் செய்கிறவன் குற்றவாளியா??

ponni

அரசியல் வாதிங்க ரௌடிங்களை வளர்கிறார்கள்ன்னு எதிர்அணியிணர் சொல்றாங்க

”போலிஸ்ஸோட துணையில்லாம் எவன்னலையும் ரௌடியா தலையெடுக்கமுடியாது”

அரசியல்வாதிங்க ஒரு இடத்துக்கு போனா traffic close பண்றதைபத்தி சொல்றாங்க

ஒரு நிமிஷம் cross பண்ணபோற ஒரு அரசியல்வாதிக்காக ஒருமணிநேரம் traffic close பண்றது யாருங்க போலிஸ்காரவங்கதானே. அந்த ஒரு மணிநேரத்தில ஒருநிமிஷம் இந்த ஆம்புலன்ச அனுமதிச்சா அந்த அரசியல்வாதிக்கு தெரியவாபோகுது அப்படியே தெரிந்தாலும் கண்டிப்பா இன்னோரு போலிஸ்காரன் தான் போட்டுகொடுப்பான். எல்லாம் சுயநலம் தன்னேட சுயநலனுக்காக நாட்டை சீரழிக்கிறாங்க இந்த அரசு அதிகாரிங்க.
ponni

ஒரு மந்திரி கெட்டவனா இருந்து அவனுக்கு கீழ வேலை செய்கிற அதிகாரிகள் நல்லவங்களா இருந்தா அவங்களோட புத்திசலிதனத்தாலையும்,நேர்மையாலையும் அந்த மந்திரியையும் மாற்றி எல்லா நலத்திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கிறமாதிரி செய்யலாம்
ஆனா ஒரு மந்திரி நல்லவனா இருந்து கீழ வேலை செய்யிற அரசு அலுவலர்கள் கெட்டவங்களா இருந்தா குட்டிச்சுவருதான்
அதுனால தான் பெத்தவங்க புள்ளைங்கள நல்ல டாக்டராவோ,இஞ்சினியராவோ, வக்கிலாவோ உருவாக்கனும்னு ஆசைபடுவாங்க நல்ல டாக்டரால இஞ்சினியரால வக்கிலால தான் ஒரு நல்ல சமுதாயத்த உருவாக்கமுடியும்
பொன்னி

மேலும் சில பதிவுகள்