உங்கள் பதிலை எதிபார்க்கும்

ஹாய் தோழிகளே எல்லோருக்கும் வணக்கம் நான் அருசுவைக்கு புதுசு.எனக்கு உங்கள் உதவி தேவை. நான் இப்போ 40 நாள் கன்சிவா இருக்கன்.எனக்கு 1 1/2 வயசில மகன் இருக்கான். அவர் இன்னும் தாய்பால் குடிக்றான் நான் எவ்வலவோ மருந்து போட்டுப் பார்தேன் அவன் விடமாட்டனாம்.னான் இங்க டென்மார்க்ல தனியாக இருக்றேன் எனக்கு என்ன செய்வது என்ருபுரியல . இது வையிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தா.நான் எப்படி இதை நிறுத்துவது தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் தோழிகளே

நன்றியுடன் உங்கள் பதிலை எதிபார்க்கும்
தோழி
பானு

ஒரேடியா நிறுத்த்தாமல் ஒரு 2 மாதம் சமயம் எடுத்து நிறுத்துங்கள்...இதனால் கெடுதல் எல்லாம் இல்லை என்றே நினைக்கிறேன்..ஆனால் நீங்கள் போதிய அளவு சத்தான ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெரிய பிள்ளைக்கும் பால்புகட்டி வயிற்றில் உள்ள குழந்தைக்கும் உங்கள் சத்துக்கள் எல்லாம் போனால் நீங்க டயர்ட் ஆகிடுவீங்க..நல்ல சத்தான ஆகாரமா சாப்பிட்டு தினசரி ஒரு வேளை குறைச்சு மெல்ல நிறுத்திடுங்க..
தூங்க வைக்க ,மற்ற பால் கொடுக்க மற்றவருடைய உதவியை கேளுங்க.

ரொம்ப நன்றி தாளிகா
எனக்கு உடனே பதில் போட்டதற்க்கு

அன்புடன்
பானு

Neem oil use பண்ணுங்க. குழந்தை பாலுக்காக அழும் சமயத்தில் Biscuit அல்லது குழந்தைக்கு பிடித்தமான உணவை கொடுங்கள். கூடுமானவரையில் இரவில் உறங்கும் போது உங்கள் கணவருடனேயே குழந்தையை உறங்க செய்யுங்கள்.முடிந்தவரையில் பால் தருவதை விரைவில் நிறுத்தி விடுங்கள். அப்பொழுதுதான் இரண்டாவது குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

நானும் கருவுற்றுந்த போது என் முதல் குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு தான் இருந்தேன்.....அப்படி நீங்கள் தொடர விரும்பினால் உங்களுக்கு தான் ஸ்ட்ரெஸ் அதிகம் என்றும் மருத்துவர் கூறினார்.....ஆனால் அதனால் தவறொன்றும் இல்லை. அப்படி இருந்தால் தேவையான ஊடச்ச்சதை நாம் உட்கொள்ள வேண்டும். நீங்கள் பால் கொடுப்பதை நிறுத்த விரும்பினால் உடனே நிறுத்த கூடாது. முதலில் அவன் எப்போபோ பால் கேட்கிறான் என்று ஒரு வாரம் பாருங்கள். அடுத்த வாரம் அவன் பால் கேட்கும் முன்பே கொடுங்கள். அடுகடுத்த வாரம் அவன் கேட்கும் முன்பே கொடுங்கள் ஆனால் நேரத்தை கம்மி செய்யுங்கள். இப்படியே தொடர்ந்து செய்யுங்கள். அப்படியே நேரத்தை குறைத்து ஒரு வேளையை நிறுத்துங்கள். அதவாது ஒரு நாளைக்கு 4 தடவை என்றால் முதலில் மூன்று பிறகு இரண்டு என்று குறைத்து கொள்ளுங்கள். படிப்படியாக தான் நிறுத்த வேண்டும் அப்போ தான் அவர்களும் மறப்பார்கள் அப்புறம் பாலும் கட்டாது.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நான் விசாரித்த வரை கருத்தரித்து விட்டால் பால் சுரக்காது என்று தான் பலரும் சொல்கிறார்கள். எனவே அது பற்றி நீங்கள் கவலை பெற்று கொண்டு இருக்காமல், சுரக்கும் வரை குழந்தை க்கு கொடுங்கள். ஆனால் உங்களது ஆரோக்யத்தையும் பார்த்து கொள்ளுங்கள்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஹாய் புஸ்பா உங்கள் பதிலுக்கு நன்றிப்பா நீங்கள் சொன்னது போல் இரவு மகனை கணவருடன் தான் உறங்க செய்தேன் ஒரே அலுகை தான் பாவமக இருந்தது

அன்புடன்
பானுஜா

ஹாய் vr scorp உங்க பெயர் புரியல.உஙலுக்கும் எனது நன்றிகள் .என் மகன் இரவில் தான் அதிகம் குடிப்பான். இதனால் என்னல் தூங்க முடிவதில்லை.னீங்கள் சொன்னது போல் கொஞ்சம் கொஞ்சமக குறைத்து பார்கிரேn

அன்புடன்
பானுஜா

ஹாய் அனிதாசுஜி உங்கள் பதில்லுக்கு ரொம்ப நன்றிப்பா
அன்புடன்
பானுஜா

பதில் போட்ட அனைத்து தோழிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

அன்புடன்
பானுஜா

மேலும் சில பதிவுகள்