தோழிகளே களங்கி உள்ளேன் வழி சொல்லுங்கள்

எனக்கு இப்பொழுதுதான் கொழுந்தை பிறந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அந்த சந்தோஷத்தை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
என் கொழந்தை சுத்தமாக உற்ங்குவதே இல்லை இரவிலும் சரி பகலிலும் சரி விளையாடுவதும் இல்லை
ஒன்று பால் குடிக்கனும் இல்லை அழவேண்டும் நானும் சரி ஆகிவிடும் என்று இவ்வள்வு நாளாக இருதேன்
ஆனால் இன்னும் அதிகமாக ஆகிவிட்டது.எனக்கு பாலும் நன்றாகவே உளள்து ஆனால் அவலுக்கு என்ன பிரச்சனை
என்று தெரியவில்லை மடியில் இருந்தால் துகுகிரால் கீழே பொட்டல் முழித்து அழுகிரால்.அது
மட்டும் இல்லை என் பெரிய பெண்ணூக்கு 2 வயது ஆக போகிரது அவலுக்கு வயிற்று போக்கு 3 நாலாக
உள்ளது அவலுக்கு இது போல் முன்பு பல முரை வந்து உள்ளது வந்தல் 2 அல்லது 3 மாதம் வரை கூட நீடிக்கும்
பாவமாக இருக்கும் சாப்பாடு என்ன சாப்பிட்டாலும் உடனே வந்துவிடும் இப்பொழுது அப்படிதன் வந்துள்ளது
4 நாட்களாக வாந்தி பேதி நிக்கவில்லை டாக்டரிடம் சென்றால் infection சொல்கிறார்கல் ஆனால் மருந்து கொடுத்தும்
நிக்கவில்லை என்னால் சிறீது நேரம் கூட ஒய்வு எடுக்க முடியவில்லை எனக்குoperation வேரு
எனக்கு யாராவது அனுபவசாலிகள் வழி சொல்லுங்கள் கெஞ்சி கேட்கிரென்

எனக்கு இப்பொழுதுதான் கொழுந்தை பிறந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அந்த சந்தோஷத்தை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
என் கொழந்தை சுத்தமாக உற்ங்குவதே இல்லை இரவிலும் சரி பகலிலும் சரி விளையாடுவதும் இல்லை
ஒன்று பால் குடிக்கனும் இல்லை அழவேண்டும் நானும் சரி ஆகிவிடும் என்று இவ்வள்வு நாளாக இருதேன்
ஆனால் இன்னும் அதிகமாக ஆகிவிட்டது.எனக்கு பாலும் நன்றாகவே உளள்து ஆனால் அவலுக்கு என்ன பிரச்சனை
என்று தெரியவில்லை மடியில் இருந்தால் துகுகிரால் கீழே பொட்டல் முழித்து அழுகிரால்.அது
மட்டும் இல்லை என் பெரிய பெண்ணூக்கு 2 வயது ஆக போகிரது அவலுக்கு வயிற்று போக்கு 3 நாலாக
உள்ளது அவலுக்கு இது போல் முன்பு பல முரை வந்து உள்ளது வந்தல் 2 அல்லது 3 மாதம் வரை கூட நீடிக்கும்
பாவமாக இருக்கும் சாப்பாடு என்ன சாப்பிட்டாலும் உடனே வந்துவிடும் இப்பொழுது அப்படிதன் வந்துள்ளது
4 நாட்களாக வாந்தி பேதி நிக்கவில்லை டாக்டரிடம் சென்றால் infection சொல்கிறார்கல் ஆனால் மருந்து கொடுத்தும்
நிக்கவில்லை என்னால் சிறீது நேரம் கூட ஒய்வு எடுக்க முடியவில்லை எனக்குoperation வேரு
எனக்கு யாராவது அனுபவசாலிகள் வழி சொல்லுங்கள் கெஞ்சி கேட்கிரென்

என்ன பா உங்கள நம்பி பதிவு போட்டா யாருமே பதில் தரல
என் நிலமை உங்களுக்கு புரியல கெஞ்சி கேக்குரன் pls

ரீமா உங்க அவசரம் புரிகிறது. ஆனால் யாரும் இப்போது பார்த்திருக்க மாட்டாங்க. நீங்க குழைந்துகக்கு எலக்ட்ரான் பவுடர் குடுத்திங்களா. அப்புறம் சின்ன குழைந்தையை தூளியில் கடத்திப்பாருங்க.

வாழு இல்லை வாழவிடு

ராதிகா,
உங்க சனா குட்டி,மடியில் வைத்திருந்தால் தூங்குகிறாள்,கீழே படுக்க வைத்தால் எழுந்து கொள்வதாக சொல்லி இருக்கீங்க.அங்கு கிளைமேட் எப்படி இருக்கு?குழந்தைகள் கொஞ்சம் வெது,வெதுப்பான,அரவணைப்பான சூழலை எப்பவும் விரும்புவாங்க.ஒரு வேளை,நீங்கள் இருக்கும் இடத்தில் இப்போ குளிர்காலமாக இருந்தால் குழந்தைக்கு நன்றாக ஷால் போட்டு போர்த்தி தூங்க வைத்துப் பாருங்கள்.மடியின் கத,கதப்பில் தூங்குவதால்,ஸ்வெட்டர்,மெல்லிய,உறுத்தாத கம்பளி போர்த்தி நன்றாக தூங்கியதும்,கீழே படுக்க வைத்து பாருங்கள்.இது என் அனுபவத்தில் தெரிந்து கொண்டது.ஒரு முறை,என் மகனும் இப்படி தான் செய்தான்.

ரேயா குட்டிக்கு,
dehydrate ஆகாமல் பார்த்துக்கோங்க.வெது,வெதுப்பான நீர் அடிக்கடி கொடுத்துடே இருங்க.ஜூஸ் கொடுக்கலாம்.கொஞ்சம் சரியானதும் வயிற்றுப்போக்கு நிற்க,மைதா கரைத்து தோசை வார்த்து கொடுக்கலாம்.இதனால் வயிற்றுப்போக்கு நிற்குமென்று அம்மா சொல்லுவாங்க.

விவரம் அறிந்த தோழிகள் வந்து பதில் சொல்லுவாங்க.

என்னுடைய குழந்தையும் இதே போல் தான் இருந்தாள். பால் குடிப்பாள், அழுவாள், மடியில் இருந்தால் தூங்குவாள். நீங்கள் குளிர் நாட்டில் இருந்தால் அவளுக்கு குளிர் தெரியாதபடி நல்லா பொதிந்து தூங்க வையுங்கள். நமக்கு குளிர் தெரியாது ஆனால் பாப்பாக்கு கொஞ்சம் குளிர் கூட கஷ்டமாக இருக்கும் அம்மா மடியில் இருந்தால் கதகதப்பாக இருக்கும் அது தான் கீழே வைத்ததும் அழுகிறது. கை,கால் எல்லாம் நல்லா மூடி வைங்க.
வயிற்று போக்குக்கு அரிசி வறுத்து பொட்டுக்கடலையுடன் பொடித்து கஞ்சியாக வைத்து கொடுங்கள். ஜவ்வரிசி கஞ்சியும் குடுங்கள்

என் பையன் கூட இப்படிதான் தூங்கவே மாட்டான்.நானும் எனது கணவரும் இரவு முழுதும் மாற்றி மாற்றி மடியில் வைத்து கொண்டே இருப்போம்.நீங்க தூளி கட்டி குழந்தையை தூங்க வைங்க. நாள் ஆக ஆக சரியாகிடும். உங்க பொண்ணுக்கு எலக்ட்ரானை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து தண்ணீருக்கு பதிலாக அதையே தொடர்ந்து கொடுங்க. முக்கியமாக வயிற்றுபோக்கு சரியாகும் வரை பால் சேர்க்காதீர்கள். பால் குடித்தால் வயிற்று போக்கு அதிகமாகும் என்று டாக்டர் எனது குழந்தைக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டபோது கூறினார்.Nestum rice OR Eesum rice medical-ல் வாங்கி சுடு நீரில் கலந்து உணவுக்கு பதிலாக தொடர்ந்து கொடுங்கள். 4 அல்லது 5 நாட்களில் சரியாகி விடும். கவலை வேண்டாம்.

அன்பு ராதிகா

சனாவுக்கு கதகதப்பு தேவையாக இருக்குன்னு நினைக்கிறேன். அதனால்தான் கீழே போட்டதும் முழித்து அழுகை வருகிறது போல. நிறைய குழந்தைகள் இந்த மாதிரி அழத்தான் செய்யும். ஒண்ணும் பயப்படாதீங்க. அவ நல்லா தூங்கினதும், மெதுவாக, அணைத்தாற்போல வைத்து, கீழே படுக்க வைங்க. உடனே கைய எடுக்காதீங்க. ஒரு 5 நிமிஷத்துக்கு, அவள் மேல் உங்க கைகளை வைத்திருங்க. அப்புறம் மெதுவாக கைகளை எடுங்க. நன்றாகப் போர்த்தி விடுங்க. அவளுக்கும் பழகி விடும். லேசாகத் தட்டிக் கொடுத்துக் கொண்டே மெல்லிய குரலில் ஏதாவது பாடுங்க, அல்லது பேசக் கூட செய்யலாம். ரிதமிக் ஆன குரல் கேட்கும்போது, குழந்தைக்கு நல்லா தூக்கம் வரும்.

பெரிய பெண்ணுக்கு வாந்தி, பேதின்னு சொல்லியிருக்கறது உடனே, கவனிக்க வேண்டிய விஷயம். வெறும் வயிற்றுப்போக்கு என்றாலே சீக்கிரம் உடலில் நீர் சத்து வற்றி விடக்கூடும். வாந்தியும் இருக்குங்கறீங்க. உடனே டாக்டரை கன்சல்ட் செய்யுங்க.

சுத்தமான தேன் இருந்தால், 1 ஸ்பூன் கொடுக்கலாம். வயிற்றுப் போக்கு நிற்கும், வாந்தியைத் தடுக்கும். இது டாக்டர் கொடுக்கும் மருந்துகளுடன், நாம் அடிஷனலாக செய்யலாம்.

ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் கொதிக்க விட்டு, அதில் சமைத்த சாதத்தை ஒரு கரண்டி அளவு போட்டு, கொதிக்க விடுங்கள். அந்தத் தண்ணீரை கொஞ்சம் தெளிவாக எடுத்து, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து, அவளுக்கு அவ்வப்போது குடிக்கக் கொடுங்க. அல்லது டாக்டர் சிபாரிசு செய்யும் எலக்ட்ரால் வகை லிக்விடையும் குடிக்கக் கொடுக்கலாம். இது டிஹைட்ரேட் ஆகாமல் தடுக்கும்.

அடிக்கடி இப்படி ஆகிறதுன்னு சொல்லியிருக்கீங்க. வயிற்றில் அந்த இன்ஃபெக்‌ஷன் இருந்தால், அது சரியாகிற வரைக்கும் அப்படி இருக்கும். அதே சமயம், ஒரு மாதம், இரண்டு மாதம் வயிற்றுப் போக்கு என்றால், குழந்தை மெலிந்து போய் விடுவாளே, உடம்பு தேறணும் இல்லையா. அதனால், அவள் விளையாடும்போது, எதுவும் பேப்பர் வாயில் போடாமல் கவனித்துக் கொள்ளுங்க. விளையாட்டுப் பொம்மைகளை வாயில் வைத்துக் கடிக்கும் பழக்கம் இருந்தால், இதமாக சொல்லி, அந்தப் பழக்கத்தை மாற்றுங்க. ஒரு வேளை, பொம்மைகளில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசி வயிற்றினுள் போவதால் கூட வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.

நீங்க அவளுக்குக் கொடுக்கும் உணவில், எந்த வகை உணவு கொடுத்த பின்னால், இப்படி ஏற்படுதுன்னு பார்த்து, அதையும் கூட மாற்றிப் பாருங்க. சில வகை உணவுகள் அவளுக்கு சாப்பிடப் பிடித்தமாயிருக்கும், ஆனால் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல், ஜீரணம் ஆகாமல் இருக்க வாய்ப்பு இருக்கு.

எப்பவும் கொதிக்க வைத்து ஆறின வென்னீர் கொடுங்க அவளுக்கு.

சீக்கிரமே நலமடையப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

நான் இருந்த நிலையில் தான் நீங்களும் இப்போது இருக்கீங்க...உங்களை போல் என் மகளுக்கு இரண்டு வயது நிரம்பும் முன் இரண்டாவது குழந்தை பிறந்து விட்டது......அவள் பிறந்த போது என் முதல் பெண்ணிற்கு இப்படி தான் உடம்பு சரியில்லாமல் போனது....வயிற்று போக்கு ஒரு நாளைக்கு 10-15 தடவை போகும். இரவு தூங்கிட்டே இருப்பாள் அப்பாவும் போகும். பச்சை பச்சையாய் போகும். கிட்ட தட்ட ஒரு மாதம் ஆனது....டாக்டரும் அவைக்கு இன்பெக்ஷன் என்று சொன்னார்.....அப்படி இருக்கும் போது பாலை அறவே தவிர்த்திடுங்கள்.....தயிர் தான் எதற்கு உதவும். சாதம் மோர் விட்டு கொடுங்கள்.....(சொல்வது ரொம்பவே ஈசி...அவர்கள் சாப்பிடவே மாட்டார்கள்...இருந்தாலும் கட்டாயம் படுத்துங்கள்)......கோதுமை கூடவே கூடாது.....அரிசி மட்டும் தான்....ஆப்பிலை நறுக்கி சிறிது நேரம் விட்டு பிரவுன் ஆன பிறகு கொடுங்கள்....பழங்கள் நிறைய கொடுங்கள்....பிரெஷாக பிழிந்த பழச்சாறு கொடுக்கலாம். மருத்துவரிடம் காட்டி கண்டிப்பாக அவர்கள் கொடுக்கும் மருந்தை தவறாமல் கொடுக்க வேண்டும். அவர்களின் ஆலோசனை படி செய்யுங்கள். அடிக்கடி எப்படி ஆவது சரி இல்லை. என்னவென்று ஒருதரம் நன்றாக செக் செய்ய சொல்லுங்கள்.

என் இரண்டாவது குழந்தை பிறந்தபோது ஓரளவேனும் தூங்கும். 8 மாதம் கழித்து தான் தூங்குவதே கிடையாது. என் முதல் குழந்தை உங்களின் சனா போல் தான். மடியில் இருந்தால் தூங்குவாள்.....நானும் அவளை தூங்க செய்து பின் சீத்தாமா சொல்வது போல் கிரிப்பில் போட்ட பின்னர் கையை எடுக்காமல் அப்படியே 5 நிமிஷம் வைத்து மெதுவாக முதலில் தலைக்கடியில் இருக்கும் கையை எடுத்துவிட்டு நன்றாக போர்த்தி கீழே இருக்கும் கையை எடுப்பேன்....உங்களின் கதகதப்பு மட்டும் இல்லாமல் அவர்களுக்கு உங்களின் வாசனை வேண்டும்....அதனால் கீழே உங்களின் ஷால் போட்டு படுக்க வைத்து பக்கத்துலே உங்களின் ஷால் அல்லது எதாவது நீங்கள் உபயோக படுத்தும் துணி போட்டு வையுங்கள்....முடிந்த வரை ரூம் இருட்டாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.....மெல்லிய இசையை ரூமில் ஒழிக்க செய்யலாம்....ரேயவின் சத்தம் கேட்டால் முழித்துக் கொள்வாள்.....பார்த்துக்கொள்ளுங்கள்....குழந்தையின் கை கால் வழியே தான் சூடு வெளி ஏறும் அதனால் எப்பொழுதும் மூடியே வையுங்கள். அவர்களின் உள்ளங்கை உள்ளங்கால் எப்பொழுதும் வார்மாக இருக்க வேண்டும். குழந்தை பால் குடித்து முடித்து அவளாக விலக்கி கொள்கிறாளா?? இல்லை நீங்கள் விளக்கி விடுறீங்களா? அவளாக விலக வேண்டும். பால் குடித்து ஒரு சந்தோஷ புன்கையுடன் இருந்தால் அவர்களுக்கு வயறு நிறைந்திருக்கு என்று அர்த்தம். குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்து வாக்கிங் கூட்டி செல்லுங்கள். உங்கள் மடியில் இருக்கும் போதே விளையாட்டு காட்டுங்க....அப்புறம் தூங்க வைங்க....கை கால் உதைத்து விளையாடினால் தான் நல்லது. உங்கள் குழந்தை ஆக்டிவாக இருக்கீராளா என்று பாருங்கள்.

முதலில் உங்களை பார்த்துகோங்க....இதையே நினைத்து கவலை படவேண்டாம் (முடியாது தான் இருந்தாலும்....)கவலை பட்டால் பால் சுரப்பு குறைந்து விடும். இதுவும் கடந்து போகும்....There is always light at the end of the tunnel.

ஆல் தி பெஸ்ட்
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

முதலில் எனக்காக பதிவு போட்ட அனைவருக்கும் நன்றி.
நீங்கள் சொன்னது போல் ரேயாவுக்கு எல்லாமே செய்துவிட்டேன் ஆனால் ஒன்ரும்
பலன் இல்லை.டாக்டர் சொன்ன மருந்து எல்லாமே கொடுத்து விட்டு ஏமாற்றம் அடைந்து விட்டேன்
2 நாட்களாக அவளூக்கு high fever suppositry கொடுத்தும் குரையவில்லை.ஏன் கடவுள் என்னை
இவ்வளவு சோதிக்கிரார்னு தெரியல எனக்கு என் பொண்ண பார்த்து அழ கூட முடியல
அவலுக்கு diaper rash வேரு ஆகி நடக்க முடியாமல் அழும் போது கடவுலே இல்லைனு தோணூது
என் கஷ்டம் வெலில இருந்து பார்க்கிரவர்கலுக்கு புரியது எனக்கு என்ன type பண்றதுனே தெரில

லாவண்யா உங்கள் பொண்ணுக்கும் வயிற்று போக்கு வந்ததுனு சொன்னிங்க 1 மாதம் வரை
இருந்ததுனு சொன்னிங்க அப்பறம் எப்படி சரி பண்ணிங்க சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்