ஒவரியில் கட்டி...உதவுங்கள்!!

தோழிகளே எனக்கு உதவுங்கள்.
என் அம்மாவிற்க்கு வயது 47...இன்னும் மாதவிலக்கு நிற்கவில்லை....இப்போது ஒவரியில் கட்டி இருப்பதாக டாக்டர் சொல்கிறார்..நீர்கட்டி. அதை ஆபரேஷன் செய்து எடுத்தாலும் மறுபடியும் கட்டி உருவாகும் என்று சொல்கிறார்..அதனால் கற்பப்பை,ஒவரிஸ் எல்லாம் எடுக்க சொல்கிறார்..
இப்படி செய்வதால் பக்கவிளைவுகள் வருமா...என்னென்ன பிரச்சனை வரும்...இதில் அனுபவம் உள்ளவர்கள் பதில் சொல்லி உதவுங்கள்.

தோழிகளே எனக்கு உதவுங்கள்.

Kalai

அன்பு கலா,

அம்மாவுக்கு ஓவரியில் கட்டி என்று குறிப்பிட்டு இருக்கீங்க. ஓவரியிலா, யூட்ரஸிலா?

சாதாரணமாக கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட் எனும் கட்டிகள் தோன்றுவதுண்டு. இவற்றை சில சமயம் மாத்திரைகளில் கரைக்க முடியும்னும், சில சமயம் கட்டிகளை மட்டும் ஆபரேட் செய்து எடுக்க முடியும்னும் சொல்றாங்க.

கர்ப்பப்பை ரிமூவ் செய்வது பற்றி நிறைய அபிப்ராயங்கள் சொல்றாங்க. சில பேர் அதைத் தவிர்க்கணும்னும், சில பேர் யூட்ரஸ் எடுத்து விடுவதே நல்லதுன்னும் சொல்றாங்க. ஆனால் ஓவரி ரிமூவல் பற்றி பெரும்பாலான கருத்துக்கள் -அவற்றை எடுப்பத்தை தவிர்க்கணும் என்பதே. ஓவரிகளை எடுத்து விட்டால் ஹார்மோன் சுரப்பது தடைப்படும், அதன் காரணமாக எலும்பு மெலிவு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் இதற்கான காரணமாக சொல்றாங்க.

நாற்பது வயது ஆகிடுச்சுன்னாலே, டாக்டரிடம் கர்ப்பப்பை கோளாறுகளுக்கான செக் அப் செய்து கொள்வது நல்லது.

நீங்க இன்னுமொரு டாக்டரிடம் செகண்ட் ஒபீனியன் கேளுங்க. அவரும் ஓவரி, கர்ப்பப்பை எடுத்துடணும்னு அம்மாவுக்கு அட்வைஸ் கொடுத்தாங்கன்னா, அதன்படி செய்யலாம். ஏன்னா, கட்டிகளின் அளவு, அவை இருக்குமிடம், அவற்றின் குரோத் எந்த அளவுக்கு வேகமாக இருக்கு, இவற்றையெல்லாம் பொறுத்தான் அவங்க முடிவு எடுப்பாங்க. மேலும் பெரும்பாலான டாக்ட்ர்கள் யூட்ரஸ், ஓவரி ரிமூவலுக்கு சொல்லும் காரணம் - இப்ப சாதாரணமான கட்டியாக இருந்தாலும், பின்னர் எதுவும் சிரமம் வரக்கூடாதுங்கறதுதான். அத்துடன் இந்த நீர் கட்டிகள் உடம்பில் ஹீமோக்ளோபின் குறையறதுக்கும் காரணமாகி விடுகிறது. (அம்மாவோட ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்டில் ஹீமோக்ளோபின் அளவு எவ்வளவு இருக்கு, அது போதுமானதா, குறைஞ்சிருக்கான்னு பாருங்க)

இனி, அப்படி ரிமூவ் செய்தால், ஏற்படும் பின் விளைவுகள் பற்றி -

முதலிலேயே மனதளவில் அம்மாவை தயார் செய்யுங்கள். இதனால் வேறு பாதிப்புகள் எதுவும் பெரிய அளவில் இருக்கப் போவதில்லைன்னு எடுத்து சொல்லுங்க.

முக்கியமாக, இனி மாதாந்திர தொந்தரவு இல்ல, நினைத்த நேரம் டிராவல் செய்யலாம், பூஜைகள், கோவில்கள் விசிட் எல்லாம் மனம் போல செய்து கொள்ளலாம் என்று சொல்லி, உற்சாகப் படுத்துங்க.

சர்ஜரி ஆன பிறகு, ஒரு ஆறு மாசத்துக்கு அவங்க நல்ல ரெஸ்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்க. எதுவும் வெயிட் தூக்க வேண்டாம்.(கிரைண்டர் குழவி, தண்ணீர்க் குடம் இது மாதிரி).

நிறைய காய்கறிகள் சேருங்க சாப்பாட்டில். வெயிட் போட்டு விடும் வாய்ப்பு இருக்கறதால, அரிசி சாப்பாடு குறைத்து, காய்கள், பழங்கள் நிறைய சேருங்க.

கால்சியம் பற்றாக்குறையை ஓரளவு ஈடு செய்ய, நிறைய பால் குடிக்கலாம்.

வெளியில் தினமும் வாக்கிங் போய்ட்டு வரணும். வேற கடுமையான உடற்பயிற்சிகள் செய்வது தவிர்க்கலாம்.

பிரச்னைகள் என்று சொன்னால் -

பல பேருக்கு ஹாட் ஃப்ளஷ் என்று சொல்லப்படும் அதிக வியர்வை, உடலில் சூடு இருந்துகிட்டே இருக்கற மாதிரி உணர்வு இதெல்லாம் ஏற்படலாம். அவங்க பெட் ரூமில் நல்ல காற்றோட்டம், ஃபான், ஏ.சி. இந்த வசதிகளை செய்து கொடுங்க. இது மிக மிக அவசியம்.

டிப்ரஷன், FRUSTRATION ஏற்படலாம் சிலருக்கு. இதைத் தவிர்ப்பது அவங்க கையில் மட்டுமில்லை, குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஒத்துழைப்பும் தேவை. வீட்டில் அப்பா, மற்ற சகோதர, சகோதரிகள் எல்லோருமே அம்மாவுக்கு அதிக கோபம் வராமல் பாத்துக்கோங்க. அவங்க ஏதேனும் கோபப்பட்டாலும், மற்றவர்கள் அனுசரிச்சுப் போகணும். பிடித்தமான இசை கேட்பது, தோட்ட வேலை, பிடித்த் சினிமா, டி.வி.ப்ரோகிராம், உறவினர்கள்/நண்பர்கள் சந்திப்பு, நல்ல உடைகள், பசி வர்றதுக்கு முன்னால கவனிச்சு சாப்பாடு கொடுப்பது இப்படி அவங்களை ரிலாக்ஸ்டாக வைத்திருங்க.

சர்ஜரிக்குப் பிறகு ஹார்மோன் இம்பாலன்ஸ் தெரபியை இப்பல்லாம் டாக்டர்கள் சிபாரிசு செய்யறாங்க. இதற்கான மாத்திரைகள் அதிக விலை கிடையாது. மேல் நாடுகளில் அனேகமாக ஐம்பது வயதான பெண்கள் இந்த தெரபியை அவசியமாகவே எடுத்துக்கறாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப் பற்றியும் உங்கள் டாக்டரிடம் டிஸ்கஸ் செய்யலாம்.

டாக்டர் அட்வைஸ்படி, ரெகுலர் செக் அப்/ரிவியூ செய்து கொள்ள சொல்லுங்க.

எனக்குத் தெரிந்த வரை சொல்லியிருக்கேன். இன்னும் மற்ற தோழிகளும் வந்து சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.

சீக்கிரமே அம்மா குணமைடைய பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

கலா நீர்க்கட்டி இருப்பது ஓவரியிலா இல்லை கர்ப்பப்பையிலா? கர்ப்பப் பையில் இருந்தால் சீதாம்மா சொல்வது போல் அதை ஃபைப்ராய்ட் என்பார்கல். அது இருக்கும் இடம் மற்றும் அளவைப் பொறுத்து அது உடலில் விளைவுகளை ஏற்படுத்தும்.

இது ஃபிப்ராய்ட் என்றால் பயப்படத் தேவையில்லை. அதன் அறிகுறிகள்
1.அடிவயிறு வீங்கியது போல் இருக்கும்(கட்டியால் கர்ப்பப்பை பெரிதாவதால் இப்படி இருக்கும்)
2.மாதவிடாய் காலங்களில் அதிக வலியுடன் கூடிய ரத்தப் போக்கு மற்றும் நீடித்த ரத்தப் போக்கும் இருக்கும்
3. சில நேரங்களில் வயிற்றினுள் ஏதோ இழுப்பது போல் வலி ஏற்படும். உட்கார்ந்திருக்கும் அல்லது படுத்திருக்கும் பொசிஷனை மாற்றினால் வலி போய்விடும்.
மேற்சொன்ன எந்த அறிகுறியும் இல்லாமலும் இக்கட்டிகள் இருக்கும். இக்கட்டிகள் கேன்சர் கட்டிகளாகும் வாய்ப்பு 1சதவீதத்துக்கும் குறைவு. அதனால் அதிகம் பயப்பட வேண்டாம்

அம்மா மெனோபாஸ் வயதை நெருங்கி விட்டதால் முடிந்த வரை அறுவை சிகிச்சை, அது கர்ப்பப்பை நீர்க்கட்டியாக இருக்கும் பட்சத்தில் தேவைப்படாது. மெனோபாஸ் நிலையை அடைந்ததும் இக்கட்டிகள் தானாகவே சுருங்கி விடும்.

அம்மாவுக்கு அதிக ரத்தப்போக்கும் வலியும் இருந்து கட்டியின் அளவும் மிகப்பெரிதாக இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும். மாத்திரைகளால் கட்டியை கரைக்க முடியாது. ஆனால் சுருங்கச் செய்ய முடியும் . அதுவும் தற்காலிகமாக மட்டுமே. மாத்திரையை நிறுத்திய உடன் மீண்டும் வளர ஆரம்பிக்கும். சில பக்கவிளைவுகள் அதனால் இருக்கும். மாதவிடாய் தற்காலிகமாக வராது. அதாவது மாத்திரை எடுக்கும் மாதங்களில் மாதவிடாய் வராது. இப்போது மார்க்கெட்டில் மாதம் ஒருமுறை போடும் ஊசிகளும் உள்ளன. விலை சற்று அதிகம். ஒரு ஊசியின் விலை 7000 ரூபாய் முதல் 10000ரூபாய் வரை ஆகும். அதிலும் விளைவுகள் இதேபோல்தான். ஹாட் ஃப்ளஷ் மற்றும் சில உடல் உபாதைகள் இருக்கும். மருந்தை நிறுத்திய உடன் மீண்டும் சில காலங்களில் கட்டி வளர்ந்து விடும்.

கட்டிகளை மட்டும் நீக்கும் அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால் மீண்டும் கட்டிகள் வரும். அதனால்தான் அம்மாவின் வயதைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் கர்ப்பப்பையயே நீக்கிவிடலாம் என்று சொல்லி இருப்பார்கள்.

நீங்கள் இன்னொரு மருத்துவரையும் கலந்து ஆலோசித்து விட்டு முடிவெடுங்கள். ஹோமியோபதியிலும் இக்கட்டியை சுருங்கச் செய்ய மாத்திரைகள் இருக்கிறது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கலா ஃபைப்ராய்ட் கட்டியாக இருந்தால் அதற்கு நிரூபிக்கப்படாத ஆனால் பக்க விளைவுகள் இல்லாத ஒரு வைத்திய முறை இருக்கிறது. COLD PRESSED CASTOR OIL என்று கிடைக்கும். அதை தினம் மூன்று வேளை வயிற்றில் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக்வைசில் 20 முதல் 30 முறை லேசாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். 6 மாதங்களுக்குள் கட்டியின் அளவு சுருங்குவதாக சொல்கிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சீத்தாம்மா,கவிசிவா உங்கள் இருவருக்கும் ரொம்ப நன்றி எனக்காக நேரம் செலவிட்டு பதிவு போட்டதற்க்கு.கட்டி ஒவரியில் தான் உள்ளது,அதனால் கட்டாயமாக ஆப்பரேஷன் செய்து ஒவரி,uterus எடுக்கனும்னு டாக்டர் சொல்லிட்டாங்களாம்.3 டாக்டரும் அதேதான் சொல்கிறார்களாம்.அது நீர்கட்டிதானாம்,அது வளர்ந்துகொண்டேதான் இருக்குமாம்.அதனால் பின் விளைவுகள் வராதுனும் சொல்றாங்களாம்.நான் US- ல் இருப்பதால் என்னால் டாக்டரிடம் பேசமுடியலை.எனது அக்கா தான் அங்கிருந்து பாத்துகறாங்க..இந்த நிலையில் அம்மாவ பக்கதில் இருந்து பாத்துக்க முடியல்னு நினைச்சா இன்னும் கஷ்ட்டமா இருக்கு..எனக்கு குழந்தை பிறந்து 4மாசம்தான் ஆகுது,அடுத்த மாசம்தான் இந்தியா போரேன்......மீண்டும் உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்..

Kalai

தோழி கலா அவர்களுக்கு...,கவலைபடவேண்டாம்.
இறைவன் அம்மாவிற்க்கு லேசாக செய்ய வேண்டும் நாம் அனைவரும் வேண்டி கொள்வோம்.
நேற்றே உங்கள் பக்கம் கண்டேன்.ஆனால் பதில் போட உள்ளே நுழைய முடியவில்லை.எனவே தான் தாமதமாக உங்களிடம் பேச முடிகிறது.
டாக்டரின் ஆலோசனைபடி ஆப்ரேஷன் செய்வதுதான் நல்லது.
இந்த கட்டியனை வைத்து கொண்டு இருப்பது மிகவும் சிரமத்தை உண்டாக்கும்.
எனது நாத்தினாருக்கு நீங்கள் சொல்லும் இதே ப்ராப்ளம் தான்.
அவரும் இரண்டு வருடங்கள் மாத்திரை எவ்வளவோ எடுத்து பார்த்தார்கள்.
டாக்டரும் அவசரபடவேண்டாம்.பார்த்துக் கொள்ளலாம் என சொன்னதால் என் நாத்தனாரும் வெறும் மாத்திரையில் சரியாகி விடும் என பெரிதும் நம்பி இருந்தார்.

ஆனால் நாளுக்கு நாள் இரத்தபோக்கு அதிகமாகி விட்டது.அவருக்கு அல்சர் பிரச்சனையும் இருந்து வந்ததால் அதற்க்கென பார்க்கும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார்.அவர் குடல் சம்பந்தமாக பார்க்க இண்டோஸ்கோபி டெஸ்ட் எடுத்து பார்க்கும் போது இந்த கட்டியின் கடுமையையும் பார்த்து விட்டு உடனே தஞ்சாவூர் மருத்துவரை அணுகும்படி எழுதி கொடுத்து அனுப்பி விட்டார்.அவர்கள் உடனே லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை செய்யலாம்.பக்கவிளவுகள் ஏதும் இல்லை.கவலைவேண்டாம்.என மிகுந்த ஆறுதல் சொல்லி நல்ல படியாக செய்தும் விட்டார்.இப்போது இது முடிந்து இரண்டு வருடத்திற்க்கும் மேலாகிவிட்டது.நல்லபடியாகி விட்டார்.
அந்த பிரச்சனைகள் எதுவும் தற்போதுஇல்லை.

இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்றால் அதன் வலியும் வேதனையும் மிக அதிகம்.உடம்பையே வீணாக்கி விடும்.அதற்க்கு ஆப்ரேஷன் செய்வதுதான் பெஸ்ட். ஏதும் பயமில்லை.எனவே நீங்களும் பயபடாமல்,அம்மாவிற்க்கும் நீங்கள் தான் தைரியமும்,ஆறுதலும் தர வேண்டும்.ஆப்ரேஷனிற்க்கு பிரகு அம்மாவிற்க்கு நல்ல சத்துள்ள ஆகாரங்களை மட்டும் நிறைய கொடுங்கள்.(முக்கியமாக பழங்கள்...)

கடவுளிடம் வேண்டினால் நிச்சயம் அம்மவிற்க்கு நல்வழி காட்டுவார்.வருத்தபடாதீர்கள்.
வெளிநாட்டில் வாழும் நம்மை போன்றவர்களால் பெற்றவர்களை பக்கத்தில் இருந்து கவனிக்க முடிவதில்லையே.....நம்மால் முடிந்ததெல்லாம் இறவனிடம் இறைஞ்சுவதுதான்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா நீங்கள் சொல்வதும் சரிதான். கடவுளைத்தான் நம்பவேண்டும்.. டாக்டர் அடுத்த வாரம் ஆபரேஷன் செய்ய சொல்லிவிட்டார்..

Kalai

அப்படியா கலா....நீங்களும் கவலைபடாமல் தைரியமாக இருந்து அம்மவிற்க்கும் தைரியம் சொல்லுங்கள் சரியா....எல்லாம் நல்லபடியாக முடிந்து அம்மா உடல் நிலை தேறிவர இறைவனிடம் நீங்கள் மட்டும் இல்லை நானும் வேண்டி கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ennaku pcod pls help me tamil

ஹாய் நீங்க இப்பக்கத்தின் கீழே தமிழ் எழுத்துதவியை தட்டி தமிழில் பதிவுபன்னலாம் மற்ற தோழிகள் பதில் தர இலகுவாக இருக்கும்

மேலும் சில பதிவுகள்