மைசூர் பாகு

தேதி: November 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (25 votes)

 

கடலை மாவு - ஒரு கப்
சீனி - ஒரு கப்
எண்ணெய் - 2 கப்
நெய் - 5 ஸ்பூன் + ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 6 ஸ்பூன்


 

மைசூர் பாகு செய்ய தேவையான பொருட்களை தயார் நிலையில் எடுத்து வைக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மாவை லேசாக வறுக்கவும்.
வறுத்த கடலைமாவை மற்றொரு பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொண்டு, அதே கடாயில் சீனியுடன் தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும்.
சீனி கரைந்ததும் அதனுடன் எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி கலக்கவும்.
கலவை கொதிக்க ஆரம்பிக்கும் முன்பு வறுத்த மாவை கொட்டி கைவிடாமல் கிளறவும்.
கடலைமாவு கலவை கெட்டியாகி சட்டியில் ஒட்டாமல் எண்ணெயை வெளியிடும்போது அடுப்பை அணைக்கவும்.
இதனை ஒரு சதுரமான தட்டில் கொட்டி சமப்படுத்தி விடவும். லேசாக ஆறியதும் துண்டுகள் போடவும்.
சுவையான, சூப்பரான மைசூர் பாகு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ரஸியா...
சூப்பர் சூப்பர் குறிப்பாக கொடுத்து அசத்துறீங்க.
நான் சரியான இனிப்பு பைத்தியம்.இனிப்பு ஐயிட்டம்னா ரசிச்சு சாப்பிடுவேன்.
இப்போது உங்க மைசூர் பாக்கு குறிப்பும் மிகவும் அசத்தலா இருக்கு.
பார்க்கவே நா ஊறுகின்றது.இன்னும் நிறைய குறிப்பு கொடுத்து அசத்துங்க.
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ரஸியா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மைசூர் பாக் அருமையாக இருக்கு ரஸியா.
ஜலீலா

Jaleelakamal

மைசூர் பாக் அருமையாக இருக்கு ரஸியா.
ஜலீலா

Jaleelakamal

மைசுர் பாகு சுப்பராக இருக்கு, கொஞ்சம் தண்ணிர் அளவு (in cup)சரியாக சொல்ல முடியுமா,

ஹாய் ரசியா உங்க ஐடம் பார்க்கும் போதே நாக்கு ஊருது.

LIVE ND LET LIVE

ஹாய் நான் புதியவள்.அனைவரும் நலமா?

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

மைசூர் பாக் சூப்பரா இருக்கு.சிம்பிள் அன்ட் சூப்பர்

ஹசீன்

அஸ்ஸலாமுஅலைக்கும்,ரஸியா..

பார்க்கவும் சாப்பிடத்தோனுது....
என்னால செய்ய முடியுமானு ட்ரைப்பன்றேன்..

கலக்குங்க ரஸியா..

வாழு, வாழவிடு..

எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். பார்க்கவே அழகாக உள்ளது. உடனே செய்யப்போகிறேன். சீனியுடன் எவ்வளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.6 ஸ்பூன் தண்ணீர் எதற்கு. ப்ளீஸ் உடனே விளக்கவும். ஆசையாக இருக்கிறது .

ஹாய் நான் நலம். நீங்க நல்லா இருக்கீரிங்கலா மஹேஷ்

LIVE ND LET LIVE

சூப்பராரசிக்கும்படியான குறிப்புகளை அடுத்தடுத்து கொடுக்கறீங்க ....பாகுபதம் பார்க்காமலே செய்துள்ளது வித்யாசமாய் எளிமையாய் உள்ளது
வாழ்த்துக்கள்

ரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அலைக்கும் அஸ்ஸலாம் அப்புஃபர்!முதலில் இந்த குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,தாளிக்கா மேடத்துக்கும் என் நன்றிகள் பல!இது தாளிக்கா மேடத்தின் குறிப்பு,அவர்கள் குறிப்பும் மட்டும் கொடுத்ததால் அதை பார்த்து நான் விளக்கப்படத்துடன் கொடுத்துள்ளேன்,நானும் இனிப்புக்கு அடிமை,செய்த மைசூர் பாகில் பாதியை நான் தான் சாப்பிட்டேன்,முதல் செய்முறையிலேயே நன்றாக வந்தது.உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

Eat healthy

உங்களின் பாராட்டுக்கு நன்றிகள்!தண்ணீர் ஊற்றுவது சீனி கரைவதற்குதான்,பாகு பதம் எல்லாம் தேவையில்லை,சீனி கரைந்ததும் உடனே எண்ணெய் & நெய் ஊற்றனும்,அதனால் 5 ஸ்பூன் நீர் போதும்.

Eat healthy

சரேஹா உங்க பெயர் நல்லா இருக்கு,செஞ்சி சாப்பிட்டு நாக்கில் எச்சில் ஊறிய பின் பதில் கொடுங்க!நன்றி!
ஸ்ரீமஹேஷ் உங்களை அருசுவைக்கு நாங்க எல்லோரும் அன்புடன் வரவேற்கிறோம்,நாங்கள் அனைவரும் நலமே!

Eat healthy

நன்றி லுலு!!!!!!!!!!!!!
அலைகும் அஸ்ஸலாம் ருக் ஷானா,ட்ரை பன்னுங்க,முயற்சி திருவினையாக்கும்.நன்றி

Eat healthy

hello mariam!சீனி கரைவதற்கு தான் தண்ணீர் சேர்க்கனும்,மற்றபடி பாகெல்லாம் செய்ய தேவையில்லை,நிறைய தண்ணீர் ஊற்றினால் தொரதொரவென இருக்கும்,அதனால் 5 ஸ்பூன் போதும்,செஞ்சி பார்துட்டு சொல்லுங்க.

Eat healthy

நான் அடுத்தடுத்து குறிப்புகள் கொடுக்க உங்களை போன்றோரின் பாராட்டுக்களும் வாழ்த்தும் தான் என்னை உற்சாகப்படுத்துகிறது,பல பேர் மைசூர் பாகு செய்வது கடினம் என்று சொல்லியிருக்கிறார்கள்,நானும் செய்து தான் பார்போமே என்று செய்தேன்,10 நிமிடம் தான் ஆனது செய்வதற்கு,உடனே உடனே எல்லாத்தையும் போட வேண்டும்,கிண்டுவதும் எளிது,அவ்ளோதான்.தாளிக்கா மேடத்திற்கு தான் நன்றி சொல்லனும்.

Eat healthy

ரசியா ரொம்ப நன்றிபா

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

சரீகா ரொம்ப நன்றிபா

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

ரஸியா கூவை, வட்டலாப்பம், மைசூர் பாகுனு விதவிதமான ரெசிப்பியா கொடுத்து அசத்திக்கிட்டு இருக்கீங்க. 10 நிமிஷத்துல செஞ்சுவிடலாம் சொல்லிருக்கீங்க. தண்ணியோட அளவுதான் ரொம்ப கம்மியா இருக்கோமோனு தோணுது. நீங்க சொன்ன அளவுல செஞ்சு பார்த்துட்டு இப்படி இருக்குது சொல்றேன்.

மைசூர் பாகு பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு. ஆனால் எண்ணெயின் அளவை பார்த்தால் தான் அதிகமா இருக்குமோனு தோணுச்சு. நான் இதுவரை செய்ததில்லை அதான் கேட்டேன். நிச்ச்யம் செய்ய போகிறேன் செய்துட்டு சொல்றேன் ரசியா.

சலாம் ரசியா மைசூர்பாக் சூப்பரா இருக்கு செய்த்துட்டு சொல்றேன்

பாக்கும் போதே சாப்பிடணூம்போல இருக்கு!

அழகா அழங்காரம் பண்ணியிருக்கீங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

u welcome pa

Eat healthy

கண்டிப்பா 10 நிமிஷம் தான் ஆகும்,சீனி கரைவதற்கு மட்டும் தான் தண்ணீர் சேர்க்கிறோம்,மற்றபடி பாகெல்லாம் செய்ய தேவையில்லை,சீனி போட்டவுடன் தண்ணீர் ஊற்றனும்,சீனி கரைந்தவுடனே எண்ணெய் & நெய் ஊற்றனும்,இவை கொதிவரும் முன்னே மாவைக்கொட்டனும் அவ்ளோதான்,செஞ்சி பார்துட்டு சொல்லுங்க,நன்றி

Eat healthy

நான் தாளிக்கா மேடத்தின் குறிப்பை பார்த்து தான் செஞ்சேன்,நல்லா வந்திச்சி,இந்த அளவெல்லாம் அவர்கள் கொடுத்தது தான்,நிச்சயம் நல்லா வரும்,செய்து பார்த்துட்டு சொல்லுங்க கௌரிலக்ஷ்மி!

Eat healthy

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஃபாத்திமா!
உங்களுக்கும் நன்றி ஆமினா!2 பேரும் செய்து பாருங்கள்.

Eat healthy

அன்பு ரசியா.... சூப்பர் மைசூர் பாகு ;) இப்பவே செய்துடனும் போலிருக்கு. கண்டிப்பா செய்துட்டு சொல்றேன்.

தளிகா குறிப்புன்னா ருசியில் சந்தேகமே இல்லை. நன்றி தளிகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க பாராட்டுக்கு நன்றி!செய்து பார்துட்டு சொல்லுங்க!
தளிக்காவை தவிர அனைவரும் அட்டன்டன்ஸ் குடுத்தாச்சி!தளிக்கா எங்கே போனீங்க?சீக்கிரம் வந்து உங்க குறிப்பை பாருங்க,எனக்கு கிடைத்த பாராட்டுக்களில் பாதி உங்களுக்குதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

Eat healthy

என்ன நடக்குது இங்க..நான் பார்க்கவே இல்லை..குறிப்பை பார்த்து ஜொள்ளு விட்டுட்டு யார்டா நம்மை போலவே கொடுத்திருக்கான்னு யோசிச்சேன்..இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல..செஞ்சது நீங்கன்னா பாராட்டெல்லாம் எனக்கும் சேத்து கெடச்சுடுச்சு..நன்றி ரசியா.இது புது ரசியாவா.

வனிதா பக்கத்துல வாங்க என்ன வேணும்னாலும் கேளுங்க..ரொம்ப சந்தோஷப்பட்டேன் உங்க கமென்ட் பார்த்து;-)

ஆமா ரசியா எனக்கொரு சந்தேகம் இதுக்கு முன் எத்தனையோ பேருக்கு செஞ்சு கொடுத்திருக்கேன் ஆர்வமா குறிப்பு கேப்பாங்க என்னென்ன போடனும்னதும் சந்தேகத்தில் ஓடிடுவாங்க..அதிலிருந்க்கும் எண்ணை நெய் அளவு சந்தேகப்பட வைக்கும்..நீங்க எப்படி தைரியமா செஞ்சீங்க..நன்றி ரசியா

தோழிகளே இதில் உங்கள் உடல்நலன் கருதி எண்ணை சேர்க்கப்பட்டிருக்கிறது முழுக்க நெய் சேர்த்தால் சுவை அபாரமாக இருக்கும் நீங்க எங்கயோ போயிடுவீங்க(ஜிம்முக்கு)

உங்க பாராட்டை படித்து சந்தோஷம் பட்ட எனக்கு" யார் இது புது ரஸியாவா"னு கேட்டதும் ஷாக்காயிட்டேன்.நான் அருசுவையில் 3 வருடங்களாக இருக்கிரேன்,என்னை நீங்க கண்டுக்கவே இல்லையா?!so sad!

Eat healthy

தலைப்பை பார்த்ததும் என்னை தைரியசாலி என நினைக்க வேண்டாம்,ஆர்வமான வேலைகளை துணிந்து செய்வேன்,அதான் என்னுடைய ப்ளஸ் பாய்ண்ட்,சரியாக வரவில்லையென்றாலும் விடமாட்டேன்,ஆனால் முதல் முயற்சியே எனக்கு வெற்றி!நன்றிகள் பல தங்களுக்கு!உங்க குறிப்பை பார்த்துவிட்டு உங்களுக்கு கருத்து எழுதியிருந்தேனே,பார்க்கலியா?

Eat healthy

ரஸியா,மைசூர் பாகு சாப்பிட்டிருக்கேன்.ஆனால் இதுவரை செய்ததில்லை.எனக்கு மிகவும் பிடித்த சுவீற்.
இப்போது செய் முறையும் கிடைத்து விட்டது. செய்து பார்த்து விட்டு சொல்லுகின்றேன்.

பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ரஸியா.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

தப்பா நெனச்சுக்காதீங்க ரசியா.என்னுடைய தோழி ரசியா நம் பழைய உறுப்பினர் தான் நீங்க என்று குழம்பிவிட்டேன் இவ்வளவு நாளும் அவர் தான் வேறு பெயரில் வரார்னு நினைச்சுட்டேன்..நான் பொதுவா சில குறிப்பிட்ட இழைகளை மட்டும் படிப்பதால் யார் என்ன எதுன்னு சரியா தெரியாது.அரட்டை பக்கம் போவதே இல்லை

இருங்க வந்துடறேன்..நீங்க என் குறிப்பில் கேட்டிருந்தீங்க என் பதில் எப்படி இருக்குமோ அப்படி தான் செஞ்சிருக்கீங்க..இருங்க வறேன் அவசரம்.

நானும் இதற்கு முன் மைசூர்பாகு செய்ததில்லை,அது செய்வது கடினம் என்று சொல்வார்கள்,ஆனால் முதல் செய்முறையிலேயே நல்ல பாரட்டுக்களை வாங்கி கொடுத்துவிட்டது.நன்றி!

Eat healthy

தப்பா எல்லாம் நினைக்கல,ரசியாவை எனக்கும் தெரியும்,அவரும் ஃப்ரான்ஸில் தான் இருக்கிறார்,அவருடன் நான் ஃபோனில் பேசியுள்ளேன்,என் பெயரும் ரஸியா தான்,ஏற்கனவே ஒருவர் இந்த பேரில் இருப்பதால்தான் நான் என் பேருடன் என் மகள் பெயரையும் (நிஸ்ரினா) சேர்த்து வைத்துள்ளேன்,மீண்டும் சந்திப்போம்,நன்றி!

Eat healthy

HAI RASIA MADAM, உங்களு​டைய மைசூர்பாகு இப்பொழுதுதான் செய்தேன். ரொம்ப அருமையாக இருந்துச்சு. நானா பண்ணிணேன் என்னால் நம்பவே முடியவில்லை. அதற்கு காரணம் உங்களுடைய சூப்பரான குறிப்புதான். என்னுடைய பையனும் , கணவரும் ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க. இது இந்தியா போய்தான் சாப்பிட முடியும் என்று நினைததேன். என்னை சவுதிலேயே சாப்பிட வைத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி . நன்றி நன்றி.

நான் நேற்று உங்களின் மைசூர் பாகு செய்தேன் ரொம்ப நல்லா வந்தது.கணவரின் பிறந்த நாளுக்கு அருமையா செய்து அவரின் பாராட்டுகளை பெற்று கொண்டேன்.நன்றி

அஸ்ஸலாமு அலைக்கும்!எப்படி இருக்கீங்க?உங்க பாராட்டை பார்த்து நான் ரொம்ப சந்தோஷம் அடைந்தேன்,மிக்க நன்றி!நம் ஊர்களில் நாம் கடைகளில் தான் ஸ்வீட்ஸ் எல்லாம் வாங்குவோம்,ஆனால் வெளிநாடுகளில் அப்படி முடியாது,அப்பொழுது நம் கைகளால் செய்து அதை நம் குடும்பத்தினர்கள் சுவைத்தால் தனி சந்தோஷம் தான் நமக்கு,மீண்டும் சந்திப்போம்.

Eat healthy

உங்க கணவரின் பிறந்தநாளுக்கு என் குறிப்பை செய்து பாராட்டை நீங்களும் வாங்கி கொண்டு,எனக்கும் உங்களிடமிருந்து பாராட்டும் கிடைத்ததற்கு மிக்க நன்றி.

Eat healthy

ஹாய் ரசியா மைசூர் பாகு பார்க்கும் போதே ரொம்ப சூப்பரா இருக்கு செய்முறை ரொம்ப சுலபமா இருக்கு வாழ்த்துக்கள்

நன்றி மேடம்,செய்து பாருங்க,உங்களுக்கும் பிடிக்கும்.

Eat healthy

மைசுர் பாகு தயாரிகும் முறையில் நீர் 5ஸ்பூன் என குறிப்பிட்டீர்கள்.அதனை கிராம் அல்லது மில்லியில் குறிப்பிடவும் ப்ளீஸ்

IDUVUM KANDANDU POGUM

நீங்க கொடுத்த மைசூர் பாகு ரெசிபி இன்னைகு செஞ்சு பார்த்தேன்.SUPER-A வந்தது.நான் செய்து பார்த்த முதல் சுவிட் itemae நல்லா வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம இருக்கு.இதுகெல்லம் உங்களுகு தான் நன்றி சொல்லனும்.

IDUVUM KANDANDU POGUM

சலாம் ,நான் மைசூர் பாக் செய்தேன்,எல்லாம் நல்லா வந்தது ,ஆனால் லைட்டா பச்சை வாடை அடிக்குது .மாவை நல்லா வறுக்கணுமா ,அப்புறம் கொஞ்சம் தளர்வாய்தான் இருக்கு,நான் முன்னாடியே எடுத்து இருப்பேனோ,கொஞ்சம்
பதில் சொல்லுங்க

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

சலாம் ரசியா,நான் இந்த மைசூர் பாகு நேற்று செய்தேன் அல்ஹம்துலில்லாஹ் நன்றாக வந்தது,உங்கள் குறிப்பு மட்டுமல்ல,நீங்கள் அனைவருக்கும் பொறுமையாக பதில் அளித்ததும் அருமை.நான் அந்த பதில்களிலிருந்துதான் நிறைய சந்தேகங்களை தீர்த்துக்கொண்டேன்.மிகவும் நன்றி

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

Mysore bahu didn't come very good. I think oil measurement is wrong. Next time I put oil+ghee =1cup. It came very good.

மைசுர் பாகு செய்தேன்.ஆனால் மிகவும் கருப்பாக வந்தது.மேலே என்னெய் அப்படியே இருந்தது.மாவு மிகவும் கருகி விட்டது.எதனால்?

எல்லாம் நன்மைக்கே