மட்டன் சொட்டா

தேதி: November 24, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மட்டன் (எலும்பில்லாதது) - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 15
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு இன்ச் அளவு
ஏலக்காய் - இரண்டு
மல்லிதழை - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

கறியை நன்கு சுத்தம் செய்து விட்டு அதை சிறிய குக்கரில் போட்டு அதனுடன் உரித்த சின்ன வெங்காயம், கழுவிய கடலைபருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி வேகும் அளவு (சிறிதளவே) தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும்.
திறந்து பார்த்தால் தண்ணீர் சுண்டி நன்கு வெந்து இருக்க வேண்டும்.இல்லையென்றால் அடுப்பில் வைத்து தண்ணீரை நன்கு சுண்ட விடவும்.
பின்பு அதை ஆற வைத்து மிக்ஸியில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமலே அரைக்கவும். அரைத்தவற்றில் பொடியாக நறுக்கின மல்லிதழை சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், சிறு சிறு வடையாக தட்டி மிதமான தீயிலேயே பொரித்து எடுக்கவும். (எண்ணெய் அதிக சூடாக வைத்து பொரிக்க கூடாது.)
மிகவும் சுவையான மட்டன் சொட்டா ரெடி. இதை சாம்பார், ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சலாம் , உங்கள் மட்டன் சொட்டா சூப்பர்.கட்லெட் போன்று உள்ளது.

சமையலில் 3 ரோசசில் ஒருத்தர் நீங்க.

ஹசீன்

அன்பு அப்சரா, மட்டன் சொட்டா மிகவும் வித்தியாசமான குறிப்பு, மிகவும் எளிமையானதாகவே உள்ளது. இது போன்று சிக்கனில் செய்தால் நன்றாக இருக்குமா பா? நான் காங்கோ வருவதற்கு முன்பு மட்டன் சாப்பிட்டு கொண்டிருந்தேன். இங்கு வந்த பிறகு விட்டு விட்டேன். எங்கள் வீட்டுக்கு கீழேயே ஆடு அறுப்பதை பார்த்து மட்டன் சாப்பிடுவதையே விட்டு விட்டேன் :( அதற்கு மாற்றாக சிக்கனில் செய்து பார்க்கிறேன் :) வாழ்த்துக்கள். தொடர்க உங்களின் சுவையான சமையல் பணி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அப்சரா மட்டன் சொட்டா மிகவும் வித்தியாசமான குறிப்பு நான் சிக்கனில் செய்வேன்
மட்டனில் செய்ததில்லை செய்துட்டு சொல்கிறேன் என் விருப்பபட்டியில் சேர்த்தாச்சு

வாவ்.... அப்சரா... சூப்பரா இருக்குங்க. நம்ம வீட்டில் யாருக்கும் மட்டன் அவ்வளவு விருப்பம் இல்லை.... சிக்கனில் செய்யலாமா சொல்லுங்க. உடனே செய்துடலாம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தோழி lulu....உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றிங்க.
எதேதோ சொல்லி இருக்கீங்க....மிகவும் சந்தோஷம்.இந்த அருசுவையில் என்னை விட அதிக திறன் படைத்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.என்னை நீங்கள் நீங்கள் அதில் ஒருவராக பாராட்டியிருப்பது எனக்கு பெருமையே.....
ரொம்ப ரொம்ப நன்றிங்க...

கல்பனா நலமா?உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.
ஒ...தாராளமாக சிக்கனில் செய்யுங்கள்.நன்றாகவே இருக்கும்.
இந்த தடவை ஊருக்கு போய் இருந்த போது நானும் அக்காவும் சிக்கனில் தான் செய்தோம்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க கல்பனா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ஹமீத்ஃபாத்திமா....நலமா?
தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
நிச்சயம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க சரியா...

வனி எப்படி இருக்கீங்க.....?
உங்கள் பின்னூட்டம் கண்டு நான் மிக்க மகிழ்ச்சி.
எலும்பில்லாத சிக்கனிலும் செய்யலாம்.ஆனால் குக்கரில் வைக்க தேவையில்லை.
வெறும் பாத்திரத்திலேயே எல்லாவற்றையும் சேர்த்து வேக வைக்க வேண்டியதுதான்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
மிக்க நன்றி வனி...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அக்கா சூப்பரா இருக்கு...........உடனெ சமசுட்டென்.......

அஸ்ஸலாமு அலைக்கும் ஷமிலா...,
எப்படிமா இருக்கீங்க?அண்ணன்,பிள்ளை எல்லோரும் நலம்தானே?
உடனே சமைத்து பார்த்து மறக்காமல் பின்னூட்டம் தந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
மிக்க நன்றி ஷமிலா.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் அஸ்ஸலாமு அழைக்கும் அப்சர நலமா உங்க மட்டன் சொட்டா பார்க்க ரொம்ப நல்லா இருக்கு கட்லட் மாதிரியே இருக்கு

வ அலைக்கும் சலாம் நஸ்ரின்.எப்படி இருக்கீங்க?
நான் நல்லா இருக்கேன்.
உங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
மிகவும் நன்றி நஸ்ரின்.
முடிந்தால் செய்து பாருங்க.டேஸ்ட்டும் பிடிக்கும்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா... நேற்று வாங்கிய சிக்கனில் கொஞ்சம் எலும்பில்லாம எடுத்து ட்ரை பண்ணேன். ரொம்ப சுவையா வித்தியாசமா இருந்தது. அப்பறம் தான் வருத்தமா போச்சு... பேசாம 1 கிலோ எலும்பில்லாமலே வாங்கி வந்து எல்லாம் இப்படியே செய்திருக்கலாமோ'னு.... அவ்வளவு நல்லா இருந்தது சுவை. அதனாலென்ன... இனி ஒரு முறை வாங்கி செய்துடுவோம். :) மிக்க நன்றி அப்சரா. இவ்வளவு சூப்பரா சமைக்கும் உங்க வீட்டுக்கு வந்து உட்கார்ந்து சாப்பிட போறேன்... அப்பவாது எடை கூடுறனா பார்ப்போம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி சிக்கனில் செய்து பார்த்துட்டீங்களா.....ரொம்ப சந்தோஷம்.
ம்ம்ம்.... சரி எப்ப எங்க வீட்டுக்கு வர்றீங்க.... நான் ஆவலோடு வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்.
உங்களை நினைத்தால் எனக்கு பொறாமையா இருக்கு வனி.சும்மா பார்க்க சக்குன்னு இருப்பீங்களோ.... :)
ஹூம்...உங்களுக்கு எடை ஏறலையேன்னு கவலை.எனக்கு என் சதையில் இருந்து யாருக்காவது கொடுக்க மாட்டோமான்னு கவலை.அப்பைட் வெய்ட் கூடி கொண்டே போகுது.
அது போதாதுன்னு \\\\\(இவ்வளவு சூப்பரா சமைக்கும்)///// இப்படியெல்லாம் வேற சொல்லி சந்தோஷத்தில் பூரிக்க வைக்கிறீங்களே.....நல்ல வேலை என் ஹஸ் பக்கத்தில் இல்ல.இருந்தாருன்னா நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போயிருப்பார். :)

உங்கள் வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிகவும் நன்றி வனி....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

உங்களின் மட்டன் சொட்டா செய்தேன் ..நன்றாக இருந்தது ..
அனைவரும் விரும்பி சாப்பிட்டோம்.. வாழ்த்துக்கள் ..அப்சரா..

வாழு, வாழவிடு..