மைதாமாவு பக்கோடா

தேதி: November 25, 2010

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - கால்கிலோ
வெங்காயம் - 200 கிராம்
கேரட் - ஒன்று
கோஸ் - 50 கிராம்
பீன்ஸ் - 10
உருளைக்கிழங்கு - ஒன்று
இஞ்சி - ஒருசிறிய துண்டு
பச்சைமிளகாய் - 5
டால்டா - ஒருஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் - ஒருசிறியகட்டு
எண்ணெய் - 300 மில்லி


 

காய்கறிகள் இஞ்சி மிள்காய்,கொத்துமல்லியைசுத்தம் செய்து மிகவும் பொடிசாக நறுக்கிக்கொள்ளவும்.
மைதாவில் உப்பு டால்டா சேர்த்துமிருதுவாகப்பிசைந்து கொள்ளவும்.
மைதாக்கலவையுடன் காய்களைப்போட்டு சேர்த்து ஒன்றுபோல பிசையவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் காய், மைதாக்கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி போடவும்.
நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் வடிதட்டியில்போடவும், சூடாகப்பரிமாறவும்.


மிகவும் க்ரிஸ்பியாக அதிக ருசியுடன் இருக்கும். அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்