பீட்ரூட் ரசம்

தேதி: November 27, 2010

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீட்ரூட் - 1
காரட் - 1
பிரொக்கோலி - ஒரு சிறிய பூ
துவரம் பருப்பு - 1 tbsp
எலுமிச்சைச் சாறு - 3 tsp
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/4 tsp
காய்ந்த மிளகாய் - 1
பூண்டு - 6 பல்
மிளகு - 1 tsp
சீரகம் - 1 tsp
கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

காரட், பீட்ரூட் மற்றும் பிரொக்கோலியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதனுடன் துவரம் பருப்பையும் சேர்த்து இரண்டு ஸ்டீம் விட்டு இறக்கவும்.
ஆறவைத்து மிக்சியில் ஒரு சுத்து சுத்தி வடிக்கடி அதனுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிளகு சீரகத்தை பொடித்து வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் தாளிக்க கூறியவற்றை போட்டு தாளிக்கவும்.
நசுக்கிய பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கினால் தக்காளி நன்றாக குழைந்து விடும்.
வடிக்கடி வைத்திருக்கும் தண்ணீரை சேர்த்து தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நுரை கட்டி வரும்போது பொடித்த பொடியை தூவி இறக்கவும்.
கொத்தமல்லி தழை எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து பிறகு பரிமாறவும்.
சுவையான சத்தான பீட்ரூட் ரசம் ரெடி.


சில குழந்தைகள் காய்கறி சாப்பிட அடம் பிடிப்பார்கள். இப்படி செய்து கொடுத்தால் அவர்களுக்கு தேவையான சத்தும் சேரும். என் பிள்ளைகளிடம் இதற்க்கு எப்பொழுதுமே வரவேற்ப்பு உண்டு. ரசம் கலராக இருப்பதால் பார்க்கவே அழகாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பீட்ரூட்டில்ரசமா.வித்யாசமாஇருக்கே. செய்து பார்க்கனும்.

திருமதி கோமு,
என் குழந்தைகள் காய்கறிகளே சாப்பிடுவதில்லை. அதனால் சூப் மாதிரி செய்தேன் அதையும் சாப்பிடலை. அதனால் இப்படி ரசம் மாதிரி செய்தேன். விரும்பி சாப்பிட்டனர். வேலையும் மிச்சம் அவர்களுக்கு பிடித்ததை கொடுத்தமாதிரியும் ஆச்சு....செய்து பார்துவிட்டு பின்னூட்டம் தாங்க....

நன்றி
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!