அலர்ஜியால் ஏற்பட்ட கலர் மாற

அருசுவை தோழிகள் அனைவருக்கும் வணக்கம் என் குழந்தைக்கு 1 வயது 6 மாதம் ஆகிறது பிறந்தபொழுது கலராக இருந்தால் ஆனால் உறவினர் ஒருவர் பேபி லோஷன் போடு 10 -20 நாள் கருப்பாக நிறம் மாறுவாள் அப்புறம் நன்கு கலராகிவிடுவாள் என்று கூற நானும் அதை உபயோகித்தேன் ஆனால் முதல் இரண்டு நாட்களிலேயே அலர்ஜியால் மிகவும் கருப்பாக மாறிவிட்டால் ஆனால் அது தெரியாமல் நான் தொடர்ந்து உபயோகிக்கவே ரொம்பவே கறுப்பாக மாறிவிட்டால் இதனால் என் குழந்தையை என் உறவினர்களே கிண்டல் செய்கின்றனர் பெண் குழந்தை என்பதாலும் நானே என் குழந்தையின் நிறத்தை மாற்றி விட்டேனே என்ற மன உளைச்சலிலும் மிகவும் அவதிபடுகிறேன் தோழிகளே என் குழந்தை இயற்கையிலேயே கருப்பு அல்ல இப்பொழுதும் அவளுடைய கழுத்து பகுதி, அக்குள், தொடையின் உட்பகுதி,காது போன்றவை நன்றாகவே பளிச் என கலராக உள்ளது ஆனால் லோஷன் பட்ட இடமெல்லாம் மிகவும் கருப்பாக மாறிவிட்டது தோழிகளே என் கவலை இதுதான் அலர்ஜியால் ஏற்பட்ட கலர் மாறுமா? என் குழந்தைக்கு இயற்கை நிறம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தயவு செய்து பதில் கூறுங்கள் நான் படும் மன வேதனையை தீர்த்து வையுங்கள் தோழிகளே.நான்கு ஐந்து வருடங்கள் ஆன பின்பாவது அலர்ஜியால் ஏற்பட்ட நிறம் மாறுமா? இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன் ஆனால் அதில் அலர்ஜியால் நிறம் மாறிவிட்டது என்று குறிப்பிடாததால்தான் இந்த பதிவு தவறாக இருந்தால் மன்னிக்கவும் என்னையும் உங்கள் தோழியாக நினத்து பதில் போடவும் ப்ளீஸ்
அன்புடன் உங்கள் அனிதா

அனிதா, உங்கள் குழந்தை மிகவும் சிறியவள் என்பதால் நல்ல தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள்பா. பிறக்கும் போது நல்ல நிறமாக இருந்தாள் என்பதால் அந்த நிறம் மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. மேலும் புதிது புதிதாக நாமே பலரிடம் கேட்டு அது இது என்று போடுவதால் மேலும் அதிகமாகி விடக்கூடாது இல்லையா.

மருத்துவர் என்றால் குழந்தையை பரிசோதித்து அதற்கான சரியான கிரீமும் லோஷனும் கொடுப்பார். குழந்தைக்கு குறைந்தது 12 வயதாகும் வரை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கிரீம் லோஷன் எல்லாம் பயன் படுத்தாதீர்கள்.

விரைவில் குழந்தையின் அலர்ஜி மாறி அவளது உண்மையான நிறத்தைப் பெறுவாள் கவலைப்படாதீங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு அனிதா,

ஜான்சன்ஸ் கிரீம் பலருக்கு கருமையான நிறம் கொடுப்பது உண்மைதான். அது கிரீமின் கோளாறு அல்ல. அவங்களுக்கு அது ஒத்துக் கொள்ளலை, அவ்வளவுதான்.

இப்போதைக்கு குழந்தைகளுக்கு தேய்த்துக் குளிக்க விட, ஒரு பௌடர் சொல்றேன், கொஞ்சமாக தயார் செய்து வச்சு, உபயோகிச்சுப் பாருங்க.

பாசிப்பயறு அல்லது பாசிப்பருப்பு 500 கிராம்
வெந்தயம் 50 கிராம்
பூலாங்கிழங்கு பௌடர் 250 கிராம்
வசம்பு பௌடர் 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்

நீங்க எந்த ஊரில் இருக்கீங்கன்னு தெரியல. பாசிப்பயறு, பாசிப்பருப்பு, வெந்தயம் இதெல்லாம் மளிகைக்கடையிலேயே கிடைக்கும். பூலாங்கிழங்கு பௌடர், வசம்பு பௌடர், கஸ்தூரி மஞ்சள் பொடி, இதெல்லாம் சென்னையில் மயிலாப்ப்பூரில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மதுரையில் தேர் முட்டி தெருவில் நிறைய நாட்டு மருந்து கடைகள் இருக்கு. அங்கே கிடைக்கும்.

பாசிப்பயறு/பாசிப்பருப்பு இத்துடன் வெந்தயத்தை கலந்து, மிஷினில் கொடுத்து, நைசான பொடியாகத் திரிச்சு வச்சுக்கோங்க. இத்துடன், மற்ற பொடிகளைக் கலந்து வச்சுக்கோங்க. வசம்பு, பூலாங்கிழங்கு பௌடர், கஸ்தூரி மஞ்சள் பொடி இதெல்லாம் இப்போதைக்கு கிடைக்கலன்னா பரவாயில்ல. கிடைக்கும்போது கலந்து வைங்க.

குழந்தைக்கு, ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது ஜான்ஸன்ஸ் பேபி ஆயில், கொஞ்சமாக எடுத்து, மென்மையாக தேய்த்து, மிகவும் லேசாக மசாஜ் செய்து விடுங்க. இது உங்க வீட்டு வழக்கப்படி - தினமுமோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ, வாரத்துக்கு ஒரு முறையோ, எப்படி செய்வதுன்னு வீட்டுப் பெரியவங்ககிட்ட கேட்டுகிட்டு செய்யுங்க.

பிறகு, குளிக்க விடும்போது, இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, குழைத்து, அதை உடலெங்கும் தேய்த்து, குளிக்க விடுங்க. இதை தினமுமே செய்யலாம்.

இந்தப் பொடி தயாரிப்பு முறை இங்கே அறுசுவையில் தேவா சொன்னதை வைத்துத்தான் நாங்க எங்க வீட்டில் தயார் செய்து வைத்திருக்கிறோம்.

சின்னக் குழந்தைகளிலிருந்து, பெரியவங்க வரைக்கும் எல்லோருமே உபயோகிக்கலாம். நல்ல மாற்றம் தெரியும். ஆண்களுக்கு கஸ்தூரி மஞ்சள் கலக்காம வைத்துக் கொள்ளலாம். ஆனால், ஆண் குழந்தைகளுக்கு(ஒரு வயது வரை) கஸ்தூரி மஞ்சள் பொடி கலந்ததையே உபயோகிக்கலாம்.

ஒரு மாதத்திலேயே நல்ல வித்தியாசம் தெரியுது. நீண்ட நாட்களாக, முழங்கை, முழங்கால்களில் இருக்கும் கருப்பு திட்டு கூட கொஞ்சம் லேசாகி, மறைய ஆரம்பிக்குது. சின்னக் குழந்தைகளுக்கு, தவழும்போது முழங்கால் முட்டிகளில் கறுப்பாவது எல்லாம், இந்தப் பொடி யூஸ் பண்றதால, சரியாகிடுது.

அதே சமயம், உங்க குழந்தைக்கு ஒரு வேளை, சென்ஸிடிவ் ஸ்கின் ஆக இருந்து, ஒத்துக் கொள்ளாத மாதிரி தெரிஞ்சா, கவனமாக செய்யுங்க. அனேகமாக, இந்தப் பொடி, எல்லோருக்குமே ஒத்துக் கொள்ளுகிறது. அலர்ஜி எதுவும் வராது.

அன்புடன்

சீதாலஷ்மி

என் உயிரினும் மேலான தோழிகள் கவிசிவா,சீதாலக்ஷ்மி மேம் அவர்களே நான் கேட்டதும் எனக்காக பதிவு போட்ட உங்களுக்கு முதலில் என் நன்றிகள் சமர்ப்பணம்.

கவிசிவா மேம் டாக்டர் அட்வைஸ் இல்லாமல் கெமிக்கல் ஐட்டம் உபயோகித்ததுதான் தவறாகிவிட்டது எனது டெலிவரிக்கு முன் அருசுவை பற்றி தெரிந்திருந்தால் உங்களை போன்ற இனிய தோழிகளின் உதவியால் கண்டிப்பாக இது போன்ற தவறு நடந்திருக்காது

சீதாலஷ்மி மேம் நான் சேலம் அருகில் உள்ளேன் மேம் வெந்தயம் எதற்கு இதையும் பாசிபயறு மாவுடன் கலக்கலாமா? நான் இப்பொழுது கடலை மாவு,பயறு மாவு கலந்து குளிக்க வைக்கிறேன் இங்கு வசம்பு பூலாங்கிழங்கு எல்லாம் அப்படியே கிடைக்கின்றன அதை வாங்கி பவுடர் பண்ணிக்கலாமா?தேங்காய் எண்ணை தேய்த்தால் கருப்பாகிவிடுவாள் என்கின்றனர் உன்மையா? இந்த பவுடர் உபயோகிக்கும் பொழுது சோப் போடலாமா?நான் தற்பொழுது பேபி சோப் போடுகிறேன் இதையே போடவா இல்லை பியர்ஸ் போடலாமா? மேம் நான் கடலை மாவு உபயோகிப்பதால் வியற்குரு போல் சிறு கொப்புளங்கள் உள்ளது அதனால் ப்ராப்ளம் ஒன்றும் இல்லை அதனால் கடலைமாவு போட்டு குளிக்க வைக்கலாமா?அதிகமாக கேள்வி கேட்டுவிட்டேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பதில் போடவும் ப்ளீஸ்.

எங்கள்பகுதியில் 10-12 பவர் இல்லாததால் என்னால் உடனடியாக பதில் போடமுடியவில்லை தவறாக நினைக்க வேண்டாம்.

மீண்டும் உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன் உங்கள் அனிதா.

அனிதா சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் எதற்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை! வேண்டாமே! எனக்குத் தெரிந்தவரை தேங்காய் எண்ணெய் சருமத்தை கருப்பாக்காது. கடைகளில் கிடைக்கு எண்ணெயில் கலப்படம் இருக்கும்னு நினைச்சீங்கன்னா தேங்காயை துருவி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கெட்டியக பால் எடுத்துக் கொண்டு அதை இரும்பு வாணலியில் வைத்து சூடாக்கினால் முதலில் பால் பொங்கி வரும். அப்போது கரண்டியால் கிளறிக்கொண்டே இருந்தால் கொஞ்ச நேரத்தில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். எண்ணெய் பிரிந்து கசடுகள் அடியில் தங்கியதும் அணைத்து ஆறவைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு அதை பயன் படுத்தலாம். இதையே குழந்தையின் தலைமுடிக்கும் பயன்படுத்தினால் முடி நன்றாக கரு கருவென வளரும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா மேம் நீங்கள் எனது கேள்விக்கு உடனே பதிவு போட்டதற்க்கு நன்றி.என்னால் தான் குழந்தையை வைத்துகொண்டு உடனடியாக பதிவு போடமுடிவதில்லை தவறாக நினைக்க வேண்டாம்.
நட்புடன் அனிதா

அன்பு அனிதா,

மதியம் சிஸ்டத்தில் இந்தப் பதிவைப் பார்த்தேன், முழுதும் படிக்க நேரமில்லாததால், வேலைகளை முடிச்சுட்டு, இப்பதான் படிச்சேன்.

கவி சொன்னது போல, மன்னிப்பெல்லாம் வேணாம். எங்க கருத்துக்கள் உங்களுக்கு உதவியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே.

வெந்தயம் கசப்பு சுவை உள்ளது. பாக்டீரியாக்களை அழிச்சுடும், அதோட குளிர்ச்சியும் கூட.(கொஞ்சமாகத்தானே சேர்க்கிறோம், அதனால் சளியெல்லாம் பிடிக்காது). கஸ்தூரி மஞ்சள் கிருமிநாசினி. இந்தப் பொடி கலந்து தேய்ப்பதால், உடம்பில் தேவையில்லாத முடி வளர்ச்சி கட்டுப்படும். வசம்பு மருத்துவ குணம் உள்ளது. பூலாங்கிழங்கு மாவு நல்ல வாசனையாக இருக்கும். வசம்பும், பூலாங்கிழங்கும் அங்கே கிடைக்குதுன்னா தாராளமாக வாங்கி, மிஷினில் திரிச்சுக்கலாம். ஆனால், அது ஒரிஜினல் வசம்பு, கிழங்குதானான்னு வெரிஃபை செய்துக்குங்க.

தேங்காய் எண்ணெய் தேய்க்கறதால எல்லாம் நிச்சயம் சருமம் கருப்பாகாது. தேங்காய் எண்ணெய் தேய்க்கறதால, கண்ணுக்குத் தெரியாத ராஷஸ் எல்லாம் குணமாகிடும். சருமம், மென்மையாக, வழவழப்பாக, இருக்கும்.

எப்பவும் போல சோப் உபயோகிச்சுட்டு, இந்தப் பௌடர் தேய்த்துக் குளிக்க விடுங்க. பியர்ஸ் சோப் இப்ப வேணாம். தரமான பேபி சோப் போதும். பேபி சோப்பில் இருக்கும் நுரை, லேசாக வாஷ் செய்ததுமே போய் விடும். குழந்தைக்கு சருமத்தில் சோப் நுரை தங்காது. சுத்தமாக வாஷ் பண்ணிடலாம்.

பியர்ஸ் சோப், பெரியவங்க யூஸ் பண்றப்பவே, கூட ஒரு தடவை, நிறைய தண்ணீர் ஊற்றி, குளிக்க வேண்டியிருக்கும் இல்லையா.

தேவா மேடம் கொடுத்திருக்கும் குறிப்பில் கடலை மாவும் சேர்த்துதான் கொடுத்திருக்காங்க. தாராளமாக கடலை மாவும் கலந்து வைக்கலாம். அதுவும் ஒரு நல்ல ஸ்கர்ப்பர்தான்.

கொப்புளங்கள் கடலை மாவினால்தான் வருதுன்னு ஃபீல் செய்தீங்கன்னா, கொஞ்ச நாளைக்கு அதை உபயோகிக்க வேணாம், அவ்வளவுதான்.

அன்புடன்

சீதாலஷ்மி

Intha powderai apdiyae mugathil thaeithu kaluvanuma...sila naeram vuravidanuma....plz solluga thozigale..........

அன்பு சீதாலஷ்மி மேம் அவர்களே உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி நேற்று உறவினர்கள் வந்திருந்ததால் என்னால் உங்கள் பதிவுக்கு உடனடியாக பதில் போடமுடியவில்லை தவறாக நினைக்க வேண்டாம் இன்றும் 10-2 பவர் கட் என்பதால் தான் பதிவு போட இவ்வளவு தாமதம் என்றும் உங்கள் இருவரின் உதவியையும் நான் மறக்கவே மாட்டேன் உங்களின் பதிலால் என் மனம் சற்று ரிலாக்ஸ் ஆகி உள்ளது தேங்க்யூ சோ மச்.

என்றும் நட்புடன் அனிதா

குழந்தைக்கான குளியல் பொடி தயாரிக்கும் முன்பு முதலில் கஸ்தூரி மஞ்சள் உங்க குழந்தைக்கு ஒத்துகுமானு பார்த்துட்டு அப்புறமா சேர்த்துகோங்க.ஏன்னா சில குழந்தகளுக்கு மஞ்சள் ஒத்துக்காது.அத மட்டும் விட்டுட்டு பொடி தயாரிக்கலாம். என் பொண்ணுக்கு சென்சிட்டிவ் ஸிகின்.அவளுக்கு மஞ்சள் ஒத்துக்கலை.உங்க குழந்தைக்கு அலர்ஜி இருக்கறதுனால பார்த்துட்டு சேருங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

குழந்தைக்கான குளியல் பொடி தயாரிக்கும் முன்பு முதலில் கஸ்தூரி மஞ்சள் உங்க குழந்தைக்கு ஒத்துகுமானு பார்த்துட்டு அப்புறமா சேர்த்துகோங்க.ஏன்னா சில குழந்தகளுக்கு மஞ்சள் ஒத்துக்காது.அத மட்டும் விட்டுட்டு பொடி தயாரிக்கலாம். என் பொண்ணுக்கு சென்சிட்டிவ் ஸிகின்.அவளுக்கு மஞ்சள் ஒத்துக்கலை.உங்க குழந்தைக்கு அலர்ஜி இருக்கறதுனால பார்த்துட்டு சேருங்க.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்