சமைத்து அசத்தலாம் - அசத்தலான பகுதி - 2

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

sanravi - 29
Shanthi - 29
mahisri - 28
rasia_nisrina - 28

இவற்றில் இருந்து வரும் Nov 29ஆம் தேதி முதல் Dec 06அம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

இம்முறை நமது கணக்குபிள்ளை யாழினி.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

அன்பு வனிதா, அன்பு யாழினி

குறிப்புகளைப் பார்த்து, எந்தக் குறிப்பு செய்யலாம்னு யோசிச்சு வச்சாச்சு. ரெடியாகிட்டே இருக்கோம்!

அன்புடன்

சீதாலஷ்மி

வனிதா,கணக்குபிள்ளை யாழினி நலந்தானே,
இந்த நால்வரின் சமையல் குறிப்புக்களும் பார்த்தேன். அருமையான குறிப்புக்கள் நிறைய இருக்கு.சமைக்க ஆரம்பிதிட வேண்டியதுதான்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அடடே வனி சமைத்து அசத்தலாம்-2 ஆரம்பிச்சாச்சா1!!!!!!!!
இந்த முறை நானும் கலந்துக்கலாமுன்னு இருக்கேன்.
முடிந்தவரை செய்து வந்து சொல்கிறேன் வனி.
தலை உங்களுக்கும்,கணக்கு புலி யாழினிக்கும் எனது வாழ்த்துக்கள்.
யாழினி நோட்டு பேனாவும் ரெடிதானே...?

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சீதாலஷ்மி.... அதுக்குள்ள ரெடியா??? கலக்குங்க. :)

யோகராணி.... சூப்பர். சமைங்க, முடிஞ்சா படமும் அனுப்புங்க. நன்றி. :)

அப்சரா.... ரொம்ப சந்தோஷம். முடிந்தவரை சமைச்சு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சமைத்துஅசத்தலாம் 2-வது பகுதியும் ஆரம்பம் ஆயாச்சா. நானும் இந்தவாட்டி
கலந்துக்கலாம்னு அவங்க குறிப்பில் தேடிகிட்டு இருக்கேன்.

சமைத்து அசத்தலாம் 2வது பகுதியில் நானும் கலந்து கொள்கிறேன் செய்த உணவுகளின் குறிப்பை அட்மினுக்கு (கண்டிப்பாக) அனுப்பனுமா???

கலந்து கொண்டு படத்துடன் அனுப்ப ஆசை தான் ஆனால். நேரம் தான் இடம் கொடுக்க மாட்டுங்கிரது,. சுமதி அக்காவின் சமையலை செய்து வந்து பதிவு போடுவதற்குள் அடுத்ட்தவாரம் வந்து விட்டது,
எப்ப எந்த வாரம் முடியுதோ அப்ப செய்கிறேன்.

ஜலீலா

Jaleelakamal

கோமு மாமி... அவசியம் கலந்துக்கணும். தேடி எடுத்து விருப்பமான குறிப்புகளை செய்யுங்க. :) மிக்க நன்றி.

பாத்திமா.... நீங்க அவசியம் கலந்துக்குவீங்கன்னு நானும் காத்திட்டு இருந்தேன். படம் கண்டிப்பா அனுப்பனும்'னு கிடையாது. நீங்க விரும்பினா ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்து குறிப்பை அனுப்பலாம். இல்லன்னா சமைச்சுட்டு இங்க சொன்னாலே போதும். ரொம்ப நன்றி. நாளை முதல் இங்கே சமைக்கும் குறிப்பை சொல்லுங்க... கணக்கு எடுத்துடலாம். :)

ஜலீலா... போன வாரமே பதிவு போட்டுட்டு போயிட்டீங்க... இந்த வாரம் விட மாட்டோம்... ;) கண்டிப்பா வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,அடுத்த பகுதி தொடங்கிட்டீங்களா?போனதடவையே கலந்துக்கனும்னு ஆசையா இருந்தேன்.முடியலை.இந்த தடவையாவது கலந்துக்கனும்.இந்த பகுதியை சிறப்பாக கொண்டு செல்கிற உங்களுக்கும்,யாழினிக்கும் வாழ்த்துக்கள்.அசத்தவிருக்கிற அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

//அசத்தவிருக்கிற அனைத்து தோழிகளுக்கும்// - அந்த லிஸ்ட்'ல நித்திலாவையும் சேர்த்துக்கங்க. ;) அவங்க கண்டிப்பா வருவாங்க இம்முறை. ரொம்ப நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்