மொறு மொறு தோசை எப்படி பன்னனும்னு சொல்லுங்கலேன் தோழிகழே.அவசரம்

மொறு மொறு தோசை எப்படி பன்னனும்னு சொல்லுங்கலேன் தோழிகழே.அவசரம் கொஞ்சம் சீக்கிரம்சொல்லுங்கல்.உங்களையெல்லாம் நம்பித்தான் கேக்கிரேன்.அதுக்கு என்னெல்லாம் போடனும்னும் சொல்லுங்கோ,pls help me

http://www.arusuvai.com/tamil/node/16147 இதுல பாருங்க...

இப்படி செய்தா எனக்கு மொறுமொறுப்பா வருது

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கேள்வி நான் கேட்க வில்லை எனினும்.. பதில் தேடித்தந்ததற்கு நன்றி.. :)
புதிய ஒரு குறிப்பைத் தெரிந்து கொள்ள முடிந்தது...

குறிப்பு மட்டும் போதாது நல்ல தோசை தவாவும் வேண்டும்..நல்ல இரும்பு கல் இருந்தால் தோசை அருமையாக மொறுகலாக வரும்

நன்றி ஆமினா,தளிகாம்மா.கேள்வி கேட்டது இனியா

அன்பு ஆமினா,

லிங்க் கொடுத்ததற்கு நன்றி. விருப்பப் பட்டியலில் சேர்த்து விட்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

நான் துபாயில் இருக்கிறேன், நான் royal chef இட்லி அரிசி தான் இட்லி, தோசைக்கு போடுவேன். பச்சைஅரிசி என்றால் எந்த அரிசி போடுவது , உளுந்து எவ்வளவு போடுவ்து, இட்லி வெண்மையாக பூ போலவர என்ன சேர்க்க வேண்டும் ,இட்லி , தோசை இரண்டுக்கும் இந்த ஒரே மாவு பயன்படுத்தலாமா, அப்படி என்றால் என்ன விகிதத்தில் என்னென்ன அரிசி , உளுந்து சேர்க்க வேண்டும், எவ்வள்வு நேரம் ஊற வைக்க வேண்டும் உதவுங்கல் தோழிகளே

தோசையை பற்றி இங்கு பேசுவதால் நான் இந்த கேள்வியை இங்க கேட்கிறேன். அம்மா முந்தினநாள் ஒரு தோசைகல் வாங்கிட்டு வந்திருக்காங்க அது இத்தாலியமாம் வெள்ளி நிறத்தில் இருக்கு பார்க்க. புது தோசைக்கல் என்பதால் தோசை ஊற்றவே வரவில்லை அதை எப்படி முதலில் பழக்கப்படுத்த வேண்டும். இல்லை தோசை ஊற்ற ஊற்ற தான் பழகுமா? அப்படினா நிறைய மாவு வேஸ்ட் ஆகுமே. யோசனை சொல்லுங்கள்.

தோசை தவாவில் சாதம் வடித்த கஞ்சி,(அ) அரிசி கழுவிய தண்ணிர் உற்றி வைத்தால் தோசை நல்லா வரும்.இப்படி தான் என் அம்மா தோசை கல்லை பழக்கினாங்க,நான் கூட அப்படி தான் பழக்கினேன்

எதுவும் கவலை படவேண்டாம் தோசைக்கல் நன்றாக சூடான பிறகு சிறிது உப்பு தூவி வெங்காயத்தை முனையில் வெட்டி எண்ணெயில் தொட்டு கல்லின் மீது தேய்க்கவும். முதல் நான்கு ஐந்து தோசைகள் சுட்ட பிறகு நன்கு முறுவலாக வரும்.

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

பானு மேடம் நிச்சயம் நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன். அம்மாகிட்டயும் சொல்றேன். அம்மாகூட அதான் சொன்னாங்கனு நினைக்கிறேன். செய்துட்டு சொல்றேன். ரொம்ப நன்றி

புவனா மேடம் நன்றி. செய்து பார்த்துட்டு வந்து சொல்றேன். முதலில் பானு மேடம் சொன்னது போல செய்துட்டு அடுத்து நீங்க சொன்னத் போல செய்து பார்க்க போறேன் இன்னும் தோசை நல்லா வரும்ல அதான்.

மேலும் சில பதிவுகள்