மேத்தி ரொட்டி

தேதி: November 29, 2010

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

வெந்தயக்கீரை - ஒருகட்டு
கோதுமை மாவு - 2 கப்
கடலை மாவு - அரைக்கப்
ஓமம் - அரை டீஸ்பூன்
கரம் மசாலாபொடி - ஒருஸ்பூன்
காரப்பொடி - அரை ஸ்பூன்
மஞ்சபொடி - அரைஸ்பூன்
பெருங்காயப்பொடி - அரைஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - ஒரு கிண்ணம்


 

கீரையை மண்போக கழுவி பொடிசாக நறுக்கிக்கொள்ளவும்.
அதனுடன் கோதுமை மாவு,கடலைமாவு,ஓமம், பொடிவகை
கள் உப்பு சேர்த்து மிருதுவாகப்பிசையவும்.
தவாவை அடுப்பில் வைத்து, பிசைந்தமாவை சப்பாத்திகளாக இட்டு போடவும்.
எண்ணெய் ஊற்றி,இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும்.
சூடாகப்பரிமாறவும்.


ஜாம், வெண்ணெயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்