சளி & தும்பல்

வணக்கம், எனக்கு தினமும் சளியும் தும்பலும் பிடிக்கின்றது இதற்கு எதாவது வீட்டு வைத்தியம் கூறவும்..நான் அடிக்கடி சளி மாத்திரை எடுத்துக் கொள்வதால் என்னமோ குழந்தை பாக்கியம் இதுவரை இல்லை..திருமணமாகி 2 வருடம் ஆகிறது..

இந்திராசுரேஷ்,
மலேசியா..

தினமும் காலையில் துளசி சாப்பிட்டா சளி போயிடும்.

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

எனக்கும் இதே போல் உள்ள பிரச்சனை இருக்கிறது. கடந்த 3 மாதங்களாக. மருத்துவரை கண்டேன் அவர் சில மருந்துகள் எழுதிக்கொடுத்தார் அதை சாப்பிடும் போது இது வருவதில்லை. தூசியால் தான் இருக்கும் என்று அவர் சொன்னதால் ரூமில் இருந்த கார்பெட் வரை எடுத்து வீசிவிட்டேன். ஏசியால் இருக்கும் என்று நினைத்தாலும் பல வருடங்களாக ஏசியில் தானே தூங்குகிறேன். அலுவலகத்திலும் ஏசி. சரி ஏசி இல்லாமல் ஒரு இரவு தூங்கி காலையில் எழுந்து பார்த்தால்,அதே நிலமை தான் மாற்றம் இல்லை.

அதாவது காலையில் எழுந்ததும் தொடர்ந்து ஒரு 5 முதல் 10 தும்மள் வருகிறது அதே நேரம் மூக்கில் இருந்து தண்ணியாக வருகிறது. (சளியாக அல்ல) போன மாதம் நான் தாயகம் சென்றிந்தேன் இதை விட தூசு அதிகம் இருந்தும் அங்கே இந்த பிரச்சனை எனக்கு வரவில்லையே. பைக்கில் பல இடங்கள் சுற்றினாலும் அந்த தூசியில் இல்லாத தும்மல் இங்கே எப்படின்னு தெரியவில்லை.

XYZAL இந்த மாத்திரையில் ஒரு மாத்திரை சாப்பிட்டால் ஒரு இரண்டு நாள் இல்லாமல் இருக்கிறது மீண்டும் அதே பிரச்சனை வந்து விடுகிறது.

நம் நண்பர்கள் கூறும் வழி என்ன.

மருத்துவர் எனக்கு எழுதிக்கொடுத்திருக்கும் மருந்து
LEVOCETRIZINE 5Mmg - 100 tab ( for three months )
MONTELUKAST SODIUM 10mg - 100 tab ( for three months )
NASONEX SPRAY - 0.05%

இன்னும் முழுவதும் வாங்கவில்லை. நான் இந்த மாத்திரைகளை தொடரலாமா?

தண்ணீர் நல்லா கொதிக்கவைத்து அதுல கோடாரி தைலம் ஊற்றி (கொஞ்சமா)ஆவி பிடிங்க உடனே பலன் கிடைக்கும்.

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

srimahes, இந்த கருத்து எனக்கா? இல்லை Ms.இந்திராசுரேஷுக்கா?

சளி இருமல் தும்மல் தொடர்ந்து இருந்தால் தண்ணீர்ரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சித்தரத்ட்தை போட்டு குடிகவும். நல்ல பலன் கிடைக்கும். சித்தரத்ட்தை நாட்டு மருந்து கடைகளில் கிடைகும். என் 4 வயது மகனுக்கு இப்டிதான் செய்கிரேன். சளி இருமல் வருவதே இல்லை.

sivagami

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

சிவகாமி அவர்களே..

சித்தரத்தை என்பது நன்னாரிவேர் போல் குச்சியாக இருக்கும். அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்துவிடவேண்டுமா? இல்லை பொடியாக செய்து கொதிக்கும் தண்ணீரில் கலக்கவேண்டுமா? பின் அதை எப்போது குடிக்கவேண்டும். வெறும் வயிற்றிலா அல்லது தாகம் எடுக்கும் போதெல்லம் குடிக்கலாமா?

சித்தரத்தையை கொதிக்கும் வென்னீரில் பொட்டு எடுத்து விட வேண்டும். பொடி செய்ய தேவை இல்லை. தாகம் எடுக்கும் போதெல்லம் குடிக்கலாம்

புன்னகையுடன்..
சிவகாமி.

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

மிக்க நன்றி. ஒரு முறை உபயோக்கப்படுத்தியதை எத்தனை முறை உபயோகப்படுத்தலாம்.

முதல் நாள் இரவே தயார் செய்து மறு நாள் தேவைக்கு வைத்துக்கொள்ளுங்கள். சித்தரட்த்த்தை கொஞ்சம் போட்டாலே போதுமானது.
புன்னகையுடன்..
சிவகாமி.

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

//இன்னும் முழுவதும் வாங்கவில்லை. நான் இந்த மாத்திரைகளை தொடரலாமா?// ;))) டாக்டர் ஒருத்தர் உங்களை செக் பண்ணி மருந்து கொடுத்து இருக்காங்க. நம்பிக்கை இல்லாம இங்க இருக்கிற எங்களைப் போன்ற எக்ஸ்பர்ட்ஸ்ட அட்வைஸ் கேக்கிறீங்களா? ;)

ஹெல்ப் பண்ணப் பார்க்கிறேன். ;) முதல்ல மருந்தை ஒழுங்கா எடுங்க. சரிவராட்டா அதே டாக்டர்ட்ட போய் சொல்லுங்க. அவங்களுக்கும் கண்டுபிடிக்க டைம் கொடுக்கணும்ல. அதே வேளை நீங்களும் 'ரிசர்ச்' பண்ணணும். ;)

ஆன்டிஹிஸ்டமைன் (சிட்ரஸின்) கொடுத்து இருக்காங்க. போடுங்க. நேசல் ஸ்ப்ரேயும் ஹெல்ப் பண்ணும். (நான்ஸ்டாப்பா ஓடுற அந்த அருவியை நிறுத்தத் தற்காலிக வழி அதுதான். எனக்கு நல்லாவே வேலை செய்யுது ரெண்டும். இன்னொரு வழி இருக்கு. எனக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு அறுசுவை வீஐபீ சொன்னது. ;))) கேட்டுட்டு திட்டாதீங்க. ;) 'மூக்கை வெட்டிக் காக்காக்கு போட்டுருங்க.)

எது ஒத்துவரவில்லை என்பதைக் கண்டுபிடிங்க. கண்டுபிடிச்சு முடிஞ்சவரை அவாய்ட் பண்ணுங்க. உங்களுக்கு ஊரில் இல்லாத வேறு ஏதாவது இங்கு ஒத்துவராதது இருக்கலாம். அயலில் ஏதாவது பூத்து இருக்கிறதா? என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இல்ல... சாப்பாடு ஏதாவது ஒத்துக்கலயா? ஏஸீ ஃபில்ட்டர் சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறதா? தலையணை, போர்வை, மெத்தை கூட புதிது மாற்றிப் பார்க்கலாம். தலை வேர்க்குமா உங்களுக்கு? ஹெல்மட் போடுற வேலை!! ஏர்ஃப்ரெஷ்னர்! சென்ட்! முன்பு பிரச்சினை இல்லாத ஏதாவது இப்போது சரிவராமல் போகலாம். கவனிச்சுப் பாருங்க. குட் லக். ;)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்