எட்டு மாத குழந்தைக்கு சலி இருமல்

எட்டு மாத குழந்தைக்கு சலி இருமல்.இங்கு ஹாச்பிடலில் வெரும் பெனொடல் சிரப் தான் குடுதிருகாங்க. யாராவது என்ன செய்யால்ல்ம்னு சொல்லுஙபா pls

தோழியே, கொழுந்து வெற்றிலை1,துளசி2,கற்பூரவள்ளி சிறியதாக1,தூதுவளை1 மிளகு 1, சீரகம் சிறிது எடுத்து கொண்டு இலைகளை எல்லாம் சுத்தமாக தண்ணீரில் அலசி விளக்கின் தணலில் வாட்டி சாறு எடுத்துக்கொள்ளுங்க. மிளகு, சீரகத்துடன், மிகவும் சிறிதளவே சுக்கையும் எடுத்து லேசாக வறுத்து பொடித்து இந்த சாற்றுடன் கலந்து வடிகட்டி கொண்டு ஒரு கால் சங்கு புகட்டி விடுங்கள். சளி உடனே கரையும். இதை அடிக்கடி தர கூடாது. அதிக சூடானது. வீட்டு வைத்தியம் செய்யும் போது ஆங்கில மருந்துகள் தர வேண்டாம். நான் என் குழந்தைகளுக்கு அப்படி தந்தது கிடையாது. எங்களுடைய குழந்தைகள் நல மருத்துவர் குழந்தைகளுக்கு சளி பிடித்திருந்தால் T-minic மருந்தை தருவார். மூன்று நாட்கள் தொடர்ந்து தந்த பிறகு சளி குணமாகும். நீங்கள் உங்கள் குழந்தையின் மருத்துவர் ஆலோசனையின்படி கேட்டு இந்த மருந்தை தரவும். மூக்கு அடைத்திருந்தால் Naso-Clear மருந்தை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் சளி கரைந்து மூக்கின் வழியாகவோ, மலத்தின் வழியாகவே வெளியேறும். கவலை வேண்டாம். சளி பிடிப்பது குழந்தைகளுக்கு சகஜமே. மருந்துகளை தவறாமல் தந்தால் குணமாகும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழி பானு...,தாங்கள் எந்த ஊரில் இருக்கின்றீர்கள் என்று எனக்கு தெரிய வில்லை.வெறும் பெனடால் சிரப் மட்டும் தான் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.ஆச்சர்யமாக உள்ளது.சரி போகட்டும்.கை வைத்தியம் கொஞ்சம் நாமே செய்யலாம்.

உங்களுக்கு துளசி இலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று எனக்கு தெரிய வில்லை.
அது கிடைத்தால் நான்கு,ஐந்து இலையுடன்,ஒரு பல் பூண்டு,நான்கு முழு மிளகு,கால் ஸ்பூனுக்கும் குறைவாக ஓமம் இவற்றை எல்லாம் ஆறிய வெண்ணீரை சிறிது தெளித்து நன்கு மைய்ய நசுக்கி சாறு பிழிந்து வடிக்கட்டி(ஒரு ஸ்பூன் அளவு வர வேண்டும்.)அதில் சிறிது தேனை ஒன்று சேர கலந்து குழந்தைக்கு காலையில் வெறும் வயிற்றில் ஊற்றுங்கள்.சில குழந்தை நன்கு அழும்.உடனே தண்ணீரோ ஏதும் கொடுக்க வேண்டாம்.அரை மணி நேரம் விட்டு விடுங்கள்.
சில குழந்தைகள் இதை கொடுத்த உடனேயே வாந்தி எடுப்பார்கள்.அதனால் உடனே பயப்பட வேண்டாம்.அந்த வாந்தியில் நன்கு தொண்டையில் சிக்கி இருக்கும் சளி எல்லாம் வந்து விழும்.இதே போன்று மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது.அதன் பிறகு நிறுத்தி விடலாம்.நல்ல பலன் தெரியும்.இது என் மூன்று குழந்தைகளுக்கும் நான் கை குழந்தையிலிருந்தே கொடுத்து வருவேன்.
இல்லை துளசி கிடைக்க வில்லை என்றால் வெறும் தேனை காலையும்,இரவும் ஒரு ஸ்பூன் கொடுங்கள்.குழந்தைகளுக்கு இது மிகவும் உகந்த மருந்து.
முயன்று பார்த்து சொல்லுங்கள்.நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

எனக்கு தெரிந்ததை நான் என் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மருந்தை உங்களுக்கு சொல்லி விட்டேன்.மற்ற தோழிகளும் அவர்களுக்கு தெரிந்த நல்ல வைத்தியங்களை வந்து உங்களுக்கு சொல்லுவார்கள். கவலை வேண்டாம்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

என் பிள்ளைக்கு அடிக்கடி பயங்கரமான சளி பிடிக்கிறது. குளுமைக்கும் தேன் கொடுக்கலாமா? எந்தவகையான தேன் கொடுக்கலாம். என்னிடம் வெறும் பூக்கள் தேன் தான் உள்ளது.

shagila

மிக்க நன்றி கல்பனா

நீங்க சொல்ற துளசி, கற்பூரவள்ளி எனக்கு கிடைகாதுப்பா. நீங்க சொன்ன மெடிசின்ஸ் பத்தி டாக்டர்கிட்ட கேக்குறேன். உங்களுக்கு நியாபகம் இருக்கா எனக்கும் இரட்டை குழந்தைகள் தான் (பெண்கள்). பெரியவலுக்கு தான் சளி, சின்னவலூக்கு வெரும் பிவர் தான் உங்க குழந்தைகள் நலமா?

மிக்க நன்றி அப்சரா.

நான் குவைத்தில் இருக்கென்.துளசி இலை கிடைக்க வாய்ப்பு இல்லைபா. நீங்க சொன்ன தேன் டிரை பன்ரேன். பாலில் கலந்து தரலாமா?
துவா செய்யுங்கபா

இந்த லிங்கு பாருங்கள்
http://arusuvai.com/tamil/node/13814
http://arusuvai.com/tamil/node/16324
http://arusuvai.com/tamil/node/7803

ஷபானு, உங்களை நினைவிருக்கிறது பா. சரி குழந்தைக்கு சளி என்று வைத்தியம் கேட்கும் இடத்தில் சவகாசமான விசாரிப்புகள் வேண்டாமே என்று விசாரிக்கவில்லை பா. மன்னிக்கவும். என் குழந்தைகள் நலமே பா. உங்கள் இரண்டு குழந்தைகளின் பால் பாட்டிலையும் தனிதனியாகவே பருக கொடுக்கவும். ஏனென்றால் சளியுள்ள குழந்தை குடித்ததை இன்னொரு குழந்தையும் குடித்தால் சளி பிடிக்கும். கூடுமானவரை குழந்தைகளை தனிதனியாகவே வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். சிறிது காலம் சிரமமாக தான் இருக்கும். வளர வளர சரியாகும்.

குழந்தைகளுக்கு ஒரு வயதானபிறகு 'சோம்வா' என்ற 34 மூலிகைகள் கலந்த மூலிகை பொடியை தினமும் காலையில் இரண்டு சிட்டிகை எடுத்து சிறிதளவு பாலில் கலந்து சங்கில் புகட்டுங்கள். சளியும், மற்ற வியாதிகளும் பக்கம் நெருங்காது. நான் என் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுப்பேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

just give only solid item.

மேலும் சில பதிவுகள்